ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு இண்ட்டர்போல் ஆஃபீசர் . கடத்தல்காரர்கள் , தாதாக்கள் , கேங்க்ஸ்டர்கள் எல்லாரையும் போட்டுத்தள்ளுவதுதான் அவரது மெயின் வேலையே . ஆனா பணி நேரத்தில் அவரால் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்சை ஃபாலோ பண்ண முடியறதில்லை , என்கவுண்ட்டர் தான் . அதனால வேலையை ரிசைன் பண்ணிட்டு காண்ட்ராக்ட் பேஸ் ல அப்பப்ப அவங்க கொடுக்கும் வேலையை செய்து வருபவர்
நாயகனோட அக்கா 20 வருடங்கள் முன்னால் ஒரு தொழில் அதிபரை லவ் மேரேஜ் பண்ணிட்டு போய்ட்டாங்க . அப்பா கூட பேசறதில்லை. 20 வருடங்கள் கழித்து ஒரு ஃபோன் கால் வருகிறது. நேரில் சந்திக்க வேண்டும், உடனே வா என்கிறார் தம்பியான நாயகனிடம்
நேரில் போனால் அக்காவின் ஃபிளாஸ் பேக் கதை . அவரது கணவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கணவரின் அப்பாவுக்கு 2 மனைவிகள் . இளைய மனைவியின் வாரிசுகள் சொத்துக்களை அபகரிக்க திட்டம் போட்டு இவங்களை தீர்த்துக்கட்ட நினைக்கறாங்க . இந்த ஏரியாவி விட்டே போய் விடு என மிரட்டல் கடிதம் வருகிறது. தன் ஒரே மகளுக்கு பாடிகார்டாக இருந்து பாதுகாக்கனும். இதுதான் அக்காவின் வேண்டு கோள்
நாயகன் அக்காவின் மக்ளை எப்படி பாதுகாக்கிறார்? வில்லன்களை எப்படி ஒழிக்கிறார் என்பதை ஆக்சன் பேக்கேஜில் தந்திருக்கிறார்கள்
நாயகனாக நாகார்ஜூன் .பட,ம் பூரா இவர் செய்யும் கொலைகள் மட்டும் 2300 இருக்கும்/ எல்லாம் கன் ஷூட் தான். இவருக்கு டூயட்டோ , சோலோ ஃபைட்டோ இல்லை . தெலுங்குப்படத்துக்கு இது புதுசு
இவருக்கு ஜோடியாக கொலீக்காக சோனால் சவுஹான். இவ்ரும் ஆக்சன் அவதாரம் தான் . இருவரும் ஓப்பனிங் சீனில் ஒரு தீவிரவாதக்கும்பல் 165 பேரை ஈசியாக முடித்துக்கட்டுக்கிறார்கள் , இவங்க மேல ஒரு கீறல் கூட விழலல. அந்தக்காட்சி மிஸ்டர் அன்ஸ் மிசஸ் ஸ்மித் ஹாலிவுட் படத்தை நினைவூட்டுகிறது
நாயகனின் அக்காவாக குல் பனக். தொழில் அதிபருக்கான கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறார். அக்கா மகளாக அனிகா சுரேந்திரன் முதல் பாதியில் சுட்டித்தனமான விளையாட்டுப்பெண்ணாகவும் பின் பாதியில் சொக முகமுமாக வருகிறார்
ஹாலிவுட் படமான ஜான் விக் மாதிரி ஆக்சன் அதகளமாகத்தர நினைத்திருக்கிறார்கள் / லாஜிக் ஓட்டைகள் மட்டும் 250 இருக்கலாம் . ரெண்டே கால் மணி நேரபடத்தில் ஓப்பனிங் ஆக்சன் சீன் மட்டும் 20 நிமிடங்கள் . க்ளைமாக்ஸ் ஆக்சன் அதகளம் 30 நிமிடங்கள் ., இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் போனால் போகுது என கதை சொன்ன மாதிரி இருக்கிறது
ரசித்த வசனங்கள்
1 நீ என் கூட வரனும்னு நான் கூப்பிடலை
நீயே போக வேணாம்னு நான் சொல்றேன்
2 பெண்களிடம் மன்னிப்புக்கேட்டா ஏதொ பெரிய லாஸ் ஆகிடும்னு சில ஆண்கள் நினைக்கறாங்க , இல்லையா?
3 பணமும், வெற்றியும் நமக்கு மகிழ்ச்சியை விட அதிகமா எதிரியைத்தான் சம்பாத்ச்சுக்குடுக்குது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஓப்பனிங் சீன்ல ஹீரோ மிஷின் கன் கைல வெச்சுக்கிட்டே 10 குட்டிக்கரணம் போட்டுக்கிட்டே உருண்டு மேல இருந்து கீழே மணலில் வர்றார். அதுக்கு சும்மா சறுக்கிட்டே வந்திருக்கலாம். 10 நிமிசம் முன்னாடியே ரீச் ஆகி இருக்கலாம்
2 ஒரு லட்சம் கோடிக்கு ,மேல் சொத்துள்ள ஒரு தொழில் அதிபரின் வாரிசை பிசாத்து 5 கோடி ரூபாய்க்கு பேரம் பேசும் வில்லனின் அடியாளிடம் பணிந்து போகும் ஆள் அந்த வாரிசிடம் நடந்ததைச்சொன்னாலே பல மடங்கு பணம் கிடைக்குமே?
3 தீ விபத்தில் இறந்தாலும் டெட் பாடி எரிந்த நிலையில் கிடைக்கனுமே? எதன் அடிபப்டையில் அதிதி இறந்ததாக வில்லன் க்ரூப் நம்பறாங்க ?
4 க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முன்னால் வரும் ஒரு ஃபிளாஸ்பேக்ல ஹீரோ கைல ஆயுதம் இல்லாம வில்லன் கிட்டே மாட்டிக்கறாரு, அந்த பேக்கு வில்லன் அப்போ அடியாளுங்க 287 பேரு கூட இருக்கான். இந்த போட்ல ரத்தம் சிந்துவதை நான் விரும்பலை அவனை வெளில எங்காவது கூட்டிட்டுப்போய் கொல்லுங்க அப்டிங்கறான். அய்யோ ராமா.. அப்பவே போட்டுத்தள்ளி இருந்தா அப்பவே படம் முடிஞ்சிருக்கும்
5 ஹீரோ ஒரே ஒரு கத்தி மட்டும் கைல வெச்சுக்கிட்டு நிக்கறாரு அவருக்கு முன்னால 96 அண்டர்வோர்ல்டு தாதாக்கள் கேங்க்ஸ்டர்ஸ் எல்லாரும் கைல மிஷின் கண்னோட இருக்காங்க. ஹீரோவை ஈசியா போட்டுத்தள்ளி இருக்கலாம், ஆனா கால்ல விழுந்து அத்தனை பேரும் மன்னிப்புக்கேட்கறாங்க
6 வில்லன் கூட ஹீரோ இருக்கும்போது அடியாளு ஃபோன் பண்றப்ப வீடியோ கால் பண்ணி இருந்தா உணமை தெரிஞ்சிருக்குமே? அப்டேட் ஆகுங்கடா அப்ரசிண்ட்களா
7 தோராயமா ஒரு 500 அடியாளுங்க துப்பாக்கி சகிதமா இருக்கற கோட்டைக்கு ஹீரோயின் போகும்போது புல்லட் ஜாக்கெட் போட்டுட்டுப்போக மாட்டாங்களா? அவங்க என்னடான்னா ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டுட்டுப்போய் மாட்டிக்கறாங்க . கிளாமர் காட்ட இடம் பொருள் ஏவல் இருக்கில்ல? ஏவாள்?
8 கைதி , விக்ரம் , கேஜிஎஃப் படங்களின் க்ளைமாக்சில் வருவது போல் [பீரங்கியால் சுட்டால் அந்த சீனை சுட்டால் படம் எப்படி சார் ஹிட் ஆகும் ? திரைகக்தை நல்லாருக்கனும் இல்ல?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தெலுங்கு ரசிக்ர்களுக்கு இது பொழுது போக்குப்படம் ., தமிழ் ரசிகர்களுக்கு இது பத்தோடு பதினொண்ணு , அத்தோடு இதுவும் ஒண்ணு ரேட்டிங் 1/ 5
The Ghost | |
---|---|
Directed by | Praveen Sattaru |
Written by | Praveen Sattaru |
Produced by |
|
Starring | Nagarjuna Sonal Chauhan |
Cinematography | Mukesh G. |
Edited by | Dharmendra Kakarala |
Music by | Bharatt-Saurabh and Mark K. Robin |
Production companies | Sri Venkateswara Cinemas North Star Entertainment |
Release date |
|
Running time | 138 minutes[1] |
Country | India |
Language | Telugu |
Box office | est. ₹9.05 crore[2] |
0 comments:
Post a Comment