Saturday, November 26, 2022

MY POLICE MAN ( 2022) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் ,மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்


  டைட்டிலைப்பார்த்ததும் வால்டர்  வெற்றிவேல் , காக்க  காக்க , சாமி, சத்ரியன்  மாதிரி  போலீஸ்  சப்ஜெக்ட்  படங்கள்  எல்லாம்  கண்  முன்  வந்து  போனது. அதனால  போன  மாசமே  ரிலீஸ்  ஆன  இந்தப்படத்தை  பெண்டிங் ல  போட்டு  வெச்சிருந்தேன்,  இது  லவ்  ஸ்டோரினு  தெரிஞ்ச  பின்  பார்த்துட்டேன்’ இது  இதே  பெயரில்  வந்த  நாவலில்   இருந்து  திரைக்கதை  எழுதப்பட்டது, பொதுவாகவே  நாவல், அல்லது  சிறுகதையிலிருந்து  தழுவி  எடுக்கப்பட்ட  பட்ங்களில்  உயிரோட்டம்  இருக்கும், அது  இந்தப்படத்துலயும்  மெய்ப்பிக்கப்பட்டதா? என்பதைப்பார்ப்போம்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  டாம்  ஒரு  போலீஸ்  . நாயகி மரியன்  ஒரு  ஸ்கூல்  டீச்சர் .  இருவரும்  ஆரம்பத்தில்  நண்பர்களா  பழகறாங்க  ஜோடியா  வெளில  போறாங்க , வர்றாங்க . அப்போ  அருங்காட்சியகம்  நடத்தும்  பாட்ரிக்  உடன்  பழக்கம்  ஆகுது , மூன்று  பேரும்  இப்போ  ஜோடியா  சுத்தறாங்க 


நாயகியின்  தோழி  நாயகி  கிட்டே  கேட்கறா. உனக்கு  யார்  மேல  இண்ட்ரஸ்ட்?  டாம்  மேலயா? பாட்ரிக்  மேலயா?  பாட்ரிக்கை  எனக்குப்பிடிக்கும்,  திறமையானவன், ஆனா  டாம்  தான்  என்  வாழ்க்கைக்கு  சரி  என்கிறாள்.


இப்போ  மேலே  சொன்ன  சம்பவங்கள்  எல்லாம்  1950 ;ல  நடந்தவை

 அப்படியே   கட்  பண்ணி  நிகழ் காலத்துக்கு  வர்றோம் அதாவது  2012  (  நாவல்  எழுதப்பட்ட  வருடம்  2012. படமாக்கம்  2022) 


பாட்ரிக் சமீபத்தில்  ரிலீஸ்  ஆன  அப்பன்  மலையாளப்பட  நாயகன்  மாதிரி  இடுப்புக்குக்கீழே  உடல்  உறுப்புகள்  செயல்  இழந்து  வீல்  சேரில்   செட்டில்  ஆகி  இருக்கான் , இப்போ  தான்  ஹாஸ்பிடலில்  இருந்து  டிஸ்சார்ஜ்  ஆகி  இருக்கான். அவனை  நாயகி  மரியான்  தான்  டேக்  ஓவர்  பண்ணிக்கறா. நாங்க  பார்த்துக்கறோம்கறா 


 இது  நாயகன்  டாம் க்கு பிடிக்கலை . நான்  பாட்ரிக்  முகத்துலயே  விழிக்க  விரும்பலை  அப்டினு  கோபமா  சொல்றான் , அதே  சமயம்  நாயகி  பாட்ரிக் கை  கவனித்துக்கொள்வதை  வலுவாக  எதிர்க்கவும்  இல்லை 


நாயகி  இப்போ  பாட்ரிக்கின்  டைரியை  எடுத்துப்படிக்கிறா


 கட்  பண்னா  1950 


நாயகன், நாயகி  இருவரும்  அவுட்டிங்  போறாங்க  , அப்போ  நாயகன்  நாயகியை  கிண்டல்  பண்றான்,  பாட்ரிக் கிற்கு  உன்  மேல  ஒரு  கண்ணு  இருக்கு .  உன்னை  அடிக்கடி  பார்க்கிறான்  அப்டிங்கறான். நாயகி  பெருசா  அலட்டிக்கலை   


யாரோ  ஒரு  ஆள்  போலீஸ்க்கு  மொட்டைக்கடுதாசி    எழுதிடறாங்க ,

அருங்காட்சியகத்துகு  வரும்  குழந்தைகள் , சிறுவர்களுக்கு   பாட்ரிக்கால் ஆபத்து  இருக்கு . அவன்  ஒரு   ஹோமோ 


1967ல்  தான்  தன்  பால் ஈர்ப்பு  திருமணங்கள்  சட்டம்  ஆச்சு  அது  வரை  அது  சட்டவிரோதம்

இதனால  பாட்ரிக்  கைது  செய்யப்படுகிறான். போலீஸின்  கடுமையான  விசாரணை  நடக்குது . பாட்ரிக்கின்  டைரி  கைப்பற்றப்படுது 


நாயகனுக்கு  ஒரு   பயம்.. தன்  மனைவியை அடைய  அல்லது  வேறு  எதற்கோ  தன்னை  அவன்  மாட்டி  விட்டுடுவானோ  என 


 பாட்ரிக்  போலீஸ்  விசாரனையில்  நாயகனை  மாட்டி  விட்டானா?

 மொட்டைக்கடுதாசி  எழுதியது  யார் ?


பாட்ரிக்   உடல்  நிலை  பாதிக்கப்பட்டு  வயோதிக  நிலையில்  ஆதரவற்று  இருக்கும்போது  நாயகி  ஏன்  அவனுக்கு  உதவுகிறாள் ?


 இதற்கெல்லாம்  விடை  படம்  பார்த்து  தெரிந்து  கொள்ளுங்கள் 


படத்தில்  மூன்றே  முக்கிய கேரக்டர்கள்  என்பதால்  சிலருக்கு   போர்  அடிக்க  வாய்ப்பு  இருக்கு 


நாயகனாக  இளம்  வயது டாம்  ஆக ஹாரி  ஸ்டைல்ஸ்  பேருக்கு  ஏற்றபடி  ஸ்டைலிஷாக  பண்ணி  இருக்கார் .  பாடெரிக்காக   டேவிட்  டாசன்  சவாலான  ரோலில் அசத்தி  இருக்கிறார்/ நாயகியாக    எம்மா  காமின்  உயிரோட்டமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்


இவர்கள்  வயதான  ரோல்களில்  வேறு  நடிகர்கள்    நடிக்க  வைத்திருக்கிறார்கள் 

ஒளிப்பதிவு  , பின்னணி  இசை , ஆர்ட்  டைரக்சன்  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  கச்சிதம் 


சபாஷ்  டைரக்டர்


1  இந்தப்படத்தை  நேரடியான  கதையாக  சொன்னால்  சுவராஸ்யம்  குறைவாக  இருக்கும்  என  நான்  லீனியர்  கட்டில்  திரைக்கதை   முன்னும்  பின்னும்  போய்  வரும்படி  அமைத்தது 


2   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டும்   , நாயகி  எடுக்கும்  முடிவும் 


  ரசித்த  வசனங்கள் 


 1  சாதாரணமானவங்களுக்கே   /  சாமான்யமானவர்களுக்கே அழகிய  முகம்  அமையும்


2  ரசனை  என்பது  நாம்  உணர்ந்ததின்  வெளிப்பாட்டை  அறிவதுதான்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 பாட்ரிக்கின்  டைரியைப்படிப்பது  மூலமாகத்தான்  ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  விரிகின்றன .அதில்  பாட்ரிக்  இருக்கும்  காட்சிகள்  மட்டும்  தானே  வரனும் ?  நாயகி  அவள்  தோழியுடன்  பேசுவது  ,  நாயகன்  நாயகி  தனியாக  விவாதிப்பது  இதெல்லாமா  பாட்ரிக்  டைரியில்  எழுத  முடியும் ? 


2  பாட்ரிக்கின்  டைரியை  நாயகி  படிப்பது  ஆபத்து  என்பது  தெரிந்தும்  நாயகன் ஏன்  அதை  தடுக்க  முயலவில்லை ?  அல்லது  டைரியை  மறைக்கவில்லை ? 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  இது  அனைத்துத்தரப்புக்குமான  ஜனரஞ்சகமான  படம்  இல்லை . நாயகியின் அழகும் , நடிப்பும்  பிரமாதம், அதை  ரசிப்பவர்கள்  மட்டும்  பார்க்கவும் . ரேட்டிங்  2.5 /5 . இதன்  திரைக்கதை  ஆஸ்கார்  அவார்டுக்கு  பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது 

0 comments: