Thursday, November 17, 2022

MONICA , O MY DARLING - மோனிகா, ஓ மை டார்லிங் (2022) ( ஹிந்தி) -சினிமா விமர்சனம் ( பிளாக் ஹ்யூமர் காமெடி க்ரைம் டிராமா) @ நெட்ஃபிளிக்ஸ்

 


ஸ்பாய்லர்  அலெர்ட் ( கதையை    சொல்லப்போறேன், உஷார்  ஆகிக்க   குமாரு )

சம்பவம் 1 -  ரோபோக்களை   உருவாக்கும்  கம்பெனில  நாயகன்  முக்கியப்பொறுப்பில்  இருப்பவன். நாயகனின்  தங்கையை ஒருவன்  லவ்  ப்ரப்போஸ்  பண்றான், இன்னொருத்தன் ப்ரப்போஸ்  பண்ணலாம்னு  வெயிட்டிங்ல  இருக்கான், முந்தினவனுக்குத்தான் பந்தி  என்ற  ஃபார்முலாவில்  முதல்ல  காதலைச்சொன்னவனுக்கு  அந்தப்பொண்ணு  ஓக்கே  சொல்லிடுது . இதனால  காண்டு  ஆன  இன்னொருத்தன்  கம்பெனில  ரோபோ  மூலமா அவனை  போட்டுத்தள்ளிடறான்.  செக்யூரிட்டி  ஆஃபீசரை  சஸ்பெண்ட்  பண்ணுனதோட  இந்த  கேஸ்  க்ளோஸ்  ஆகுது ., கொலைகாரனுக்கு  தண்டனை  கிடைக்கலை . அது  ஏதோ  ஆக்சிடெண்ட்னு  போலீஸ்  நினைக்குது 


சம்பவம் 2 - யுனிகார்ன்  கம்பெனியோட   50 வது  ஆண்டு  விழா  கொண்டாடப்படுது, அந்த  விழாவில்  பதவி  உயர்வுக்காக  நாயகன் , வில்லன், காமெடியன்  மூணு  பேரும்  வெயிட்டிங். அந்த  விழாவில்  கம்பெனியின்  சீஇ ஓ  நாயகனை  பதவி  உயர்வுக்கு  தகுதியானவன்னு  அறிவிக்கிறார். இதனால  வில்லன், காமெடியன்  இருவருக்கும்  செம  கடுப்பு.  அது  போக  சி ஈ ஓ  தன்  மகள்  நிச்சயதார்த்தம், திருமணம் இரண்டையும்  அறிவிக்கிறார். நாயகன்  தான்  மாப்பிள்ளை. கம்பெனில  பலரும்  நாயகனை  பொறாமையா  பார்க்கிறாங்க 


  சம்பவம் 3 -  கம்பெனி   செக்ரெட்டரி  கூட  நாயகனுக்கு  ஒரு  கனெக்சன்  இருக்கு . கிட்டத்தட்ட  லிவ்விங்  டுகெதர்  லைஃப்  வாழ்றாங்க . இந்த  கல்யாண  அறிவிப்பு  வந்ததும்  நாயகனுக்கு  மோனிகா  மூலமா   பிளாக்மெயில்  வருது. ஃபிளாட்  வேணும், ப்ணம்  வேணும்  இப்படி.. .  நாயகனுக்கு  என்ன  பண்றதுன்னே  தெரியலை ,  மோனிகா  சொன்னபடி  செய்யலைன்னா  பதவி  உய்ர்வு  , பெரிய  இடத்து சம்பந்தம் எல்லாம்  போய்டும்


 சம்பவம்  4 -  நாயகனைப்பார்த்து  பொறாமைப்பட்ட  வில்லன் , காமெடியன்  இருவரும்  நாயகன்  கூட  ஒரு  மீட்டிங்  போடறாங்க . அப்போதான்  ஒரு  அதிர்சி  தகவல்  தெரியுது . அவங்க  ரெண்டு  பேரையும்  இதே  மாதிரி  மிரட்டி  பணம்  கேட்டிருக்கா . வடிவேலு  பட  காமெடி  மாதிரி  இந்த  மோனிகா  எத்தனை  பேரைத்தான்  வளைச்சு  போட்டிருப்பா?னு  ஆச்சரியம்  வருது  அவங்களுக்கு . வில்லன்  மோனிகாவை  கொலை  பண்ணலாம்னு  திட்டம்  போடறான். அந்த  திட்டப்படி  அக்ரிமெண்ட்  சைன்  ஆகுது . மோனிகாவைக்கொலை  செய்வது  வில்லன், பாடியை  வேற  ஏரியாவுக்கு  ட்ரான்ஸ்ஃபர்  ப்ண்றது  நாயகன் , அதை  டிஸ்போஸ்  பண்றது  காமெடியன். இதன்படி   செய்ய  தீர்மானம்  போடறாங்க 


 சம்பவம் 5 - அடுத்த  நாள்  கம்பெனில நாயகனுக்கு  அதிர்ச்சி  காத்திருக்கு , மோனிகா  உயிரோட  இருக்கா , ஆனா  வில்லன்  ஆள்  அவுட் , காமெடியனும்  சில  தினங்களுக்குப்பின்  ஆள்  அவுட்


சம்பவம் 6  - இந்தக்கொலைகளை  நாயகன்  தான்  செய்திருப்பான்னு  போலீஸ்  சந்தேகபப்டுது. விசாரணை  நடக்குது விசாரணை  நடக்கும்போது ஒரு பெரிய  திருப்பம்  நடக்குது 


 மேலே  சொன்ன  6  சம்பவங்களும்  படம்  போட்டு  முதல்  அரை  மணி நேரத்தில்  முடிஞ்சிடுது . இதுக்குப்பின்  திரைக்கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான்  படம் 


நமக்குத்தெரிந்த  பெண்   முகம்னா  ராதிகா  ஆப்தே  தான் ,   போலீஸ்   ஆஃபீசர் ஏசிபி  ஆக  வருகிறார் ., இவரது  கேரக்டர்  டிசைன்  காமெடியா  கொண்டு  போலாமா?  சிரியசா  காட்டலாமா? என்பதில்  இயக்குநருக்கு  ஒரு  குழப்பம்  இருந்திருக்கு 



மோனிகாவாக  ஹூமோ  க்ரோஷி   படம்  முழுக்க  வரும்  வாய்ப்பு .  கிட்டத்தட்ட  வில்லி  ரோல் . ஒரு  வேளை  இவர்தான்  கொலையாளியோ  என  எதிர்பார்க்கும்போது  அவரும்  கொலை  ஆவது  திடுக்  திருப்பம் 


  நாயகனாக ராஜ்  குமார்  ராவ்  கச்சிதமான  நடிப்பு . விஜய்  ஆண்ட்டனி  மாதிரி  முகத்தில்  அதிகம்  உணர்ச்சி  காட்டாமல்  உடல்  மொழியில்  பதட்டம்  காட்டும்  பாணியில்  நடித்திருக்கிறார்


 காமெடியனாக  பகவதிப்பெருமாள் கலக்கி  இருக்கார்  , நடுவுல  கொஞ்சம்  பக்கத்தைக்காணோம்ல  அசத்தி  இருந்தாரே  அந்த  அசத்தல்  இதிலும்  தொடர்கிறது 


முதல்  பாதி  திரைக்கதை  விறு விறுப்பாகப்போனாலும் பின்  பாதியில்  தடுமாறுகிரது . போலீஸ்   டீம்  நாயகனை  சந்தேகப்படுவதோடு  சரி ., மற்றபடி பெரிதாக  அலட்டிக்கொள்ளவில்லை 


சபாஷ்  டைரக்டர் ( வாசன்  பாலா)


1  கொலை  செய்வதற்கு  பார்ட்னர்ஷிப்  போட்டு  அக்ரிமெண்ட்  ஃபார்ம்ல  சைன்  பண்ற  மாதிரி  சீன்  வெச்சது  இந்திய  சினிமாவுக்கே  புதுசு


2  கொலை  நடக்கும்போது  அதற்கான  முஸ்தீபுகள்  போகும்போது  ப்ழைய  ஒயிட்  அண்ட்  பிளாக்  பட  கால  பிஜிஎம்  ஓட  விட்டது  நல்லாருந்தது


3   அச்சின்  தாக்கரின்  இசை  படம்  முழுக்க  ப்ரபரப்பா  இருக்கு அதனு  முகர்ஜியின் எடிட்டிங்  நறுக்  சுருக் ஒளிபதிவும்  கனகச்சிதம்  யோகேஷ்  சந்தேகரின்  திரைக்கதை  முதல்  பாதியில்  நல்லாருக்கு , பின் பாதியில்  ஸ்லோ 


  ரசித்த  வசனங்கள் 


1  பணக்காரங்க  தப்பா  யோசிச்சா/  தப்பான  முடிவெடுத்தா  ஏழைகளால  வாழ முடியாது 


2  ஃபோன்  அடிக்குது  பாரு   எடு


ம் ம் 


  ரெஸ்பான்ஸிபிலிட்டிதான்  எடுத்துக்க  மாட்டேங்கறே , ஃபோனையாவது  எடுக்கலாமில்ல? 


3 நீங்க  எப்போ  வேணா  எனக்கு  கால்  பண்ணலாம், ஆனா  நைட்  10  மணிக்கு  மேல  ஃபோன்  பண்ண  வேணாம்  நான்  ஃபேமிலி  மேன்


4  மனுசங்க  பண்ற  சின்ன  சின்ன  தப்புகள்  தான்  அவங்களை  அழகாக்குது , அடையாளபடுத்துது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கொலை  பண்ணுன  டெட்  பாடியை  175  கிமீ  ட்ரக்ல  கொண்டு  போறது  எவ்ளோ  அபாயகரமானது . கொலை  பண்றதை  விட  அபாயம்


2  பொதுவா  ட்ரக்ல  டெட்  பாடியக்கொண்டுபோகும்போது  வழில  போலீஸ்  செக்கிங்  நடந்தா  சும்மா  சமாளிக்கவாவது    டெட்படியை  கவர்  பண்ற  மாதிரி  வைக்கோல்  புல்லோ ,  ஆஃபோ, குவாட்டரோ  மேல  போட்டு  கவர்  பண்ணனும், ஆனா  பெப்பரப்பேனு  ஓப்பனா  டெட்  பாடியை  மட்டும்  கொண்டு  போவது  என்ன  தைரியத்துல ? 


3  மோனிகா   3  பேரையும்  ஒரே  காரணத்துக்காக மிரட்றா  என்பதற்கு  ஆதாரம்  இருக்கு , செல்  ஃபோன்ல  மெசேஜ்  இருக்கு , அதை  வெச்சே  மோனிகாவை  லாக்  பண்ணி  கார்னர்  பண்ணி  இருக்கலாமே?


4  மோனிகாவால்  பாதிக்கப்பட்ட  3  பேரும்  சேர்ந்து  அவரைக்கொலை  செய்ய  திட்டம் தீட்டுவதற்குப்பதிலா  மூணு  பேருமே  சேர்ந்து  ஏம்மா  மின்னல் , உன்  வண்டவாளம்  எல்லாம்  தண்டவாளம்  ஏறிடுச்சு,  எங்களையா  பிளாக்  மெயில்  பண்ணப்பார்க்கறே? என  மிரட்டி  இருக்கலாமே?  போலீசில்  ப்கார்  கொடுத்திருக்கலாமே? கொலை  செய்வதால்  வரும்  ரிஸ்க்கை  விட  இதில்  ரிஸ்க்  கம்மி 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -த்ரில்லர்  ரசிகர்களுக்கு  பிடிக்கும் .  லைட்டா  காமெடியும்  அங்கங்கே  இருக்கு .   ரேட்டிங்  2.75 / 5 



Monica, O My Darling
Monica, O My Darling poster.jpg
Official release poster
Directed byVasan Bala
Written byYogesh Chandekar
Produced bySarita Patil
Sanjay Routray
Dikssha Jyote Routray
Vishal Bajaj
Starring
CinematographySwapnil S. Sonawane
Sukesh Viswanath
Edited byAtanu Mukherjee
Music byAchint Thakkar
Production
company
Matchbox Shots
Distributed byNetflix
Release date
  • 11 November 2022
Running time
130 minutes
CountryIndia
LanguageHindi

0 comments: