சம்பவம் 1 - ரோபோக்களை உருவாக்கும் கம்பெனில நாயகன் முக்கியப்பொறுப்பில் இருப்பவன். நாயகனின் தங்கையை ஒருவன் லவ் ப்ரப்போஸ் பண்றான், இன்னொருத்தன் ப்ரப்போஸ் பண்ணலாம்னு வெயிட்டிங்ல இருக்கான், முந்தினவனுக்குத்தான் பந்தி என்ற ஃபார்முலாவில் முதல்ல காதலைச்சொன்னவனுக்கு அந்தப்பொண்ணு ஓக்கே சொல்லிடுது . இதனால காண்டு ஆன இன்னொருத்தன் கம்பெனில ரோபோ மூலமா அவனை போட்டுத்தள்ளிடறான். செக்யூரிட்டி ஆஃபீசரை சஸ்பெண்ட் பண்ணுனதோட இந்த கேஸ் க்ளோஸ் ஆகுது ., கொலைகாரனுக்கு தண்டனை கிடைக்கலை . அது ஏதோ ஆக்சிடெண்ட்னு போலீஸ் நினைக்குது
சம்பவம் 2 - யுனிகார்ன் கம்பெனியோட 50 வது ஆண்டு விழா கொண்டாடப்படுது, அந்த விழாவில் பதவி உயர்வுக்காக நாயகன் , வில்லன், காமெடியன் மூணு பேரும் வெயிட்டிங். அந்த விழாவில் கம்பெனியின் சீஇ ஓ நாயகனை பதவி உயர்வுக்கு தகுதியானவன்னு அறிவிக்கிறார். இதனால வில்லன், காமெடியன் இருவருக்கும் செம கடுப்பு. அது போக சி ஈ ஓ தன் மகள் நிச்சயதார்த்தம், திருமணம் இரண்டையும் அறிவிக்கிறார். நாயகன் தான் மாப்பிள்ளை. கம்பெனில பலரும் நாயகனை பொறாமையா பார்க்கிறாங்க
சம்பவம் 3 - கம்பெனி செக்ரெட்டரி கூட நாயகனுக்கு ஒரு கனெக்சன் இருக்கு . கிட்டத்தட்ட லிவ்விங் டுகெதர் லைஃப் வாழ்றாங்க . இந்த கல்யாண அறிவிப்பு வந்ததும் நாயகனுக்கு மோனிகா மூலமா பிளாக்மெயில் வருது. ஃபிளாட் வேணும், ப்ணம் வேணும் இப்படி.. . நாயகனுக்கு என்ன பண்றதுன்னே தெரியலை , மோனிகா சொன்னபடி செய்யலைன்னா பதவி உய்ர்வு , பெரிய இடத்து சம்பந்தம் எல்லாம் போய்டும்
சம்பவம் 4 - நாயகனைப்பார்த்து பொறாமைப்பட்ட வில்லன் , காமெடியன் இருவரும் நாயகன் கூட ஒரு மீட்டிங் போடறாங்க . அப்போதான் ஒரு அதிர்சி தகவல் தெரியுது . அவங்க ரெண்டு பேரையும் இதே மாதிரி மிரட்டி பணம் கேட்டிருக்கா . வடிவேலு பட காமெடி மாதிரி இந்த மோனிகா எத்தனை பேரைத்தான் வளைச்சு போட்டிருப்பா?னு ஆச்சரியம் வருது அவங்களுக்கு . வில்லன் மோனிகாவை கொலை பண்ணலாம்னு திட்டம் போடறான். அந்த திட்டப்படி அக்ரிமெண்ட் சைன் ஆகுது . மோனிகாவைக்கொலை செய்வது வில்லன், பாடியை வேற ஏரியாவுக்கு ட்ரான்ஸ்ஃபர் ப்ண்றது நாயகன் , அதை டிஸ்போஸ் பண்றது காமெடியன். இதன்படி செய்ய தீர்மானம் போடறாங்க
சம்பவம் 5 - அடுத்த நாள் கம்பெனில நாயகனுக்கு அதிர்ச்சி காத்திருக்கு , மோனிகா உயிரோட இருக்கா , ஆனா வில்லன் ஆள் அவுட் , காமெடியனும் சில தினங்களுக்குப்பின் ஆள் அவுட்
சம்பவம் 6 - இந்தக்கொலைகளை நாயகன் தான் செய்திருப்பான்னு போலீஸ் சந்தேகபப்டுது. விசாரணை நடக்குது விசாரணை நடக்கும்போது ஒரு பெரிய திருப்பம் நடக்குது
மேலே சொன்ன 6 சம்பவங்களும் படம் போட்டு முதல் அரை மணி நேரத்தில் முடிஞ்சிடுது . இதுக்குப்பின் திரைக்கதையில் நிகழும் திருப்பங்கள் தான் படம்
நமக்குத்தெரிந்த பெண் முகம்னா ராதிகா ஆப்தே தான் , போலீஸ் ஆஃபீசர் ஏசிபி ஆக வருகிறார் ., இவரது கேரக்டர் டிசைன் காமெடியா கொண்டு போலாமா? சிரியசா காட்டலாமா? என்பதில் இயக்குநருக்கு ஒரு குழப்பம் இருந்திருக்கு
மோனிகாவாக ஹூமோ க்ரோஷி படம் முழுக்க வரும் வாய்ப்பு . கிட்டத்தட்ட வில்லி ரோல் . ஒரு வேளை இவர்தான் கொலையாளியோ என எதிர்பார்க்கும்போது அவரும் கொலை ஆவது திடுக் திருப்பம்
நாயகனாக ராஜ் குமார் ராவ் கச்சிதமான நடிப்பு . விஜய் ஆண்ட்டனி மாதிரி முகத்தில் அதிகம் உணர்ச்சி காட்டாமல் உடல் மொழியில் பதட்டம் காட்டும் பாணியில் நடித்திருக்கிறார்
காமெடியனாக பகவதிப்பெருமாள் கலக்கி இருக்கார் , நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம்ல அசத்தி இருந்தாரே அந்த அசத்தல் இதிலும் தொடர்கிறது
முதல் பாதி திரைக்கதை விறு விறுப்பாகப்போனாலும் பின் பாதியில் தடுமாறுகிரது . போலீஸ் டீம் நாயகனை சந்தேகப்படுவதோடு சரி ., மற்றபடி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை
சபாஷ் டைரக்டர் ( வாசன் பாலா)
1 கொலை செய்வதற்கு பார்ட்னர்ஷிப் போட்டு அக்ரிமெண்ட் ஃபார்ம்ல சைன் பண்ற மாதிரி சீன் வெச்சது இந்திய சினிமாவுக்கே புதுசு
2 கொலை நடக்கும்போது அதற்கான முஸ்தீபுகள் போகும்போது ப்ழைய ஒயிட் அண்ட் பிளாக் பட கால பிஜிஎம் ஓட விட்டது நல்லாருந்தது
3 அச்சின் தாக்கரின் இசை படம் முழுக்க ப்ரபரப்பா இருக்கு அதனு முகர்ஜியின் எடிட்டிங் நறுக் சுருக் ஒளிபதிவும் கனகச்சிதம் யோகேஷ் சந்தேகரின் திரைக்கதை முதல் பாதியில் நல்லாருக்கு , பின் பாதியில் ஸ்லோ
ரசித்த வசனங்கள்
1 பணக்காரங்க தப்பா யோசிச்சா/ தப்பான முடிவெடுத்தா ஏழைகளால வாழ முடியாது
2 ஃபோன் அடிக்குது பாரு எடு
ம் ம்
ரெஸ்பான்ஸிபிலிட்டிதான் எடுத்துக்க மாட்டேங்கறே , ஃபோனையாவது எடுக்கலாமில்ல?
3 நீங்க எப்போ வேணா எனக்கு கால் பண்ணலாம், ஆனா நைட் 10 மணிக்கு மேல ஃபோன் பண்ண வேணாம் நான் ஃபேமிலி மேன்
4 மனுசங்க பண்ற சின்ன சின்ன தப்புகள் தான் அவங்களை அழகாக்குது , அடையாளபடுத்துது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கொலை பண்ணுன டெட் பாடியை 175 கிமீ ட்ரக்ல கொண்டு போறது எவ்ளோ அபாயகரமானது . கொலை பண்றதை விட அபாயம்
2 பொதுவா ட்ரக்ல டெட் பாடியக்கொண்டுபோகும்போது வழில போலீஸ் செக்கிங் நடந்தா சும்மா சமாளிக்கவாவது டெட்படியை கவர் பண்ற மாதிரி வைக்கோல் புல்லோ , ஆஃபோ, குவாட்டரோ மேல போட்டு கவர் பண்ணனும், ஆனா பெப்பரப்பேனு ஓப்பனா டெட் பாடியை மட்டும் கொண்டு போவது என்ன தைரியத்துல ?
3 மோனிகா 3 பேரையும் ஒரே காரணத்துக்காக மிரட்றா என்பதற்கு ஆதாரம் இருக்கு , செல் ஃபோன்ல மெசேஜ் இருக்கு , அதை வெச்சே மோனிகாவை லாக் பண்ணி கார்னர் பண்ணி இருக்கலாமே?
4 மோனிகாவால் பாதிக்கப்பட்ட 3 பேரும் சேர்ந்து அவரைக்கொலை செய்ய திட்டம் தீட்டுவதற்குப்பதிலா மூணு பேருமே சேர்ந்து ஏம்மா மின்னல் , உன் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடுச்சு, எங்களையா பிளாக் மெயில் பண்ணப்பார்க்கறே? என மிரட்டி இருக்கலாமே? போலீசில் ப்கார் கொடுத்திருக்கலாமே? கொலை செய்வதால் வரும் ரிஸ்க்கை விட இதில் ரிஸ்க் கம்மி
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் -த்ரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கும் . லைட்டா காமெடியும் அங்கங்கே இருக்கு . ரேட்டிங் 2.75 / 5
Monica, O My Darling | |
---|---|
Directed by | Vasan Bala |
Written by | Yogesh Chandekar |
Produced by | Sarita Patil Sanjay Routray Dikssha Jyote Routray Vishal Bajaj |
Starring | |
Cinematography | Swapnil S. Sonawane Sukesh Viswanath |
Edited by | Atanu Mukherjee |
Music by | Achint Thakkar |
Production company | Matchbox Shots |
Distributed by | Netflix |
Release date |
|
Running time | 130 minutes |
Country | India |
Language | Hindi |
0 comments:
Post a Comment