Saturday, November 05, 2022

BEYOND THE UNIVERSE (2022) - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ் ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


இதயத்தைத்திருடாதே  ( கீதாஞ்சலி  தெலுங்கு  டப்பிங்க்) படத்தின்  ஒன் லைன்  ,   தில்  பேச்சாரா  (  ஹிந்தி )  படத்தின்  கேரக்டர்  டிசைன் ,  நெஞ்சில்  ஓர்  ஆலயம்  படத்தின்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  மூன்றையும் நினைவு படுத்தும்  கண்ணியமான  காதல்   கதை  இது 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  பியானோ  கலைஞி. பியானோ  ஆர்க்கெஸ்ட்ரா , போட்டிகளில்  கலந்து  கொள்வதில்  ஆர்வம்  உள்ளவள் . ஆனா  சின்ன  வயசுல  இருந்தே  அவளுக்கு  ஒரு  மெடிக்கல்  கம்ப்பெளெயிண்ட்  இருக்கு . சிறுநீரகம்  பாதிக்கபட்டிருக்கு .  வாரம்  3  முறை  டயாலிசிஸ்  செய்ய  வேண்டி  இருக்கு 


 நாயகன்  ஒரு  டாக்டர் .  ஹாஸ்பிடலில்  அட்மிட்  ஆகும்  பேஷண்ட்ஸ்  குணம்  ஆகி  வீடு  திரும்பறாங்களோ  இல்லையோ  இருக்கும்  நாட்களில்  அவங்க  சந்தோஷமா  இருக்கனும்னு  நினைப்பவர். இதற்காக  ஹாஸ்பிடல்  ரூல்ஸை  மீறத்தயங்காதவர் 


எல்லாக்காதல்  கதைகளிலும்  வருவது  போல  மோதலில்  தான் இவர்கள்  முதல்  சந்திப்பே  நிகழ்கிறது . நாயகி  சாலையோரம்  அமர்ந்திருக்கும்  சோலையாய்  பியானோ  வாசித்துக்கொண்டிருக்கும்போது  அவளது  அழகில்  மயங்கி  நாயகன்  சைக்கிளில்  வந்து  பியானோவை  இடித்து  விடுகிறான்


  பின்  வரும்  சந்திப்புகளில்  நாயகி  ட்ரீட்மெண்ட்க்கு  வரும்  ஹாஸ்பிட்லில்தான்  நாயகன் டாக்டர்,  பழக்கம்  நெருக்கம்  ஆகிறது


நாயகியின்  மருத்துவப்பிரச்சனை அவள்  கற்கும்  பியானோ  ஸ்கூல்  நிர்வாகத்துக்குத்தெரிந்து   அடிக்கடி  சிகிச்சைக்காக  ஸ்கூலுக்கு  வராமல்  ஆப்செண்ட்  ஆகிறாள்  என  காரணம்  சொல்லி நிர்வாகம்  அவளை  சஸ்பெண்ட்  செய்கிறது 


 ஹாஸ்பிடலில்  நாயகன்  ஒரு  பியானோ  ரெடி  பண்ணி  நாயகி  வாசிக்க  உதவுகிறான் . போட்டி  நடக்கும்  நாள்  நாயகிக்கு  உடம்பு  சரி  இல்லாமல்  போக போட்டியில்  கலந்து  கொண்டும்  தொடர  முடியாத  நிலை  நாயகிக்கு 


நாயகனின்  தந்தைதான்  அந்த  ஹாஸ்பிடலின்  எம் டி . நாயகன் நாயகிக்காக  ஹாஸ்பிடல்  ரூல்சை  மிறி அவளை  லவ்  பண்ணுவது  பிடிக்கவில்லை 


 ஹாஸ்பிடல்  நிர்வாகம்  என்கொயரி  வைக்கிறது 


தன்னால்  நாயகனின்  வேலை  பறி போய்விடக்கூடாது  என  நாயகி  பிரேக்கப்  செய்கிறாள் 


இதற்குப்பின்  நாயகன்  நாயகி  காதல்  நிறைவேறியதா? இல்லையா? என்பது  க்ளைமாக்ஸ் 

நாயகியாக க்ளூலியா பே   தேவதை  மாதிரி  அழகு . அந்தக்காலத்து  சரோஜாதேவிகள்  இந்தக்காலத்து  கேரளப்பெண்கள்  கண்  இமைகளில்  மீன்  டிசைனில்  மை  இடுவது  போல  மேக்கப்  போட்டுக்கொள்ளும்  அழகே  அழகு .இந்தியாவிலேயே  கண்  மைக்கு  அதிக  முக்கியத்துவம்  தருவது  கேரளப்பெண்கள்  தான்,  எனவே  ஒரு   அனு சித்தாராவோ . நித்யாமேனனோ  இமை  மை  டெக்ரேஷன்  செய்வது  பெரிய  ஆச்சரியம்  இல்லை , ஆனா  ஹாலிவுட்  ந்டிகை  இந்தியப்பெண்ணைப்போல்  மை  இடுவது  ரசிக்க  வைக்கிறது .  உணர்ச்சி  பொங்கும்  காட்சிகளில்  கலக்கி இருக்கார் . காதல்  காட்சிகளில்  சோகக்காட்சிகளில்  ஸ்கோர்  செய்கிறார்


  நாயகனாக   ஹென்றி.  பிளஸ்  ஒன்  படிக்கும்  மாணவன்  போல்  குணால்  சாயலில்  இருக்கிறார். இளமைத்துள்ளலான  நடிப்பு அப்பாவிடம்  கோபப்படும்  காட்சியிலும் ,  கண்களாலேயே  மகிழ்ச்சியை  வெளிப்படுத்தும்  காட்சிகளிலும்  நன்கு  ந்டித்திருக்கிறார்


 நாயகனின்  அப்பாவாக  வருப்வர்  வில்லன்  போல்  ஆரம்பத்தில்  வந்தாலும்  பின்  அவர்  நடிப்பு  குணச்சித்திரமாக  மாறி  விடுகிறது 


நாயகிக்காக  கிட்னி  டொனேட்  பண்ண  நாயகன்  முன்  வருவது  ஆனால்  மேட்ச்  ஆகாமல்  போவது   என  ஆங்காங்கே  பல  சுவராஸ்ய  முடிச்சுகள் 


 ஒளிப்பதிவு  பிரமாதம் . பிரம்மாண்டமான  செட்கள்  கண்  முன்  பிரமிப்பாக  விரிகிறது .  கதையின்  முக்கிய  அங்கமாக  பியானோ  இசை  வருவதால்  இசையில்  முக்கியத்துவம்  காட்ட  வேண்டிய  நிர்ப்பந்தம் , இசை  குட் 



  ரசித்த  வசனங்கள் 


1   உன்னால்  முடியுமா? முடியாதா? என்பதற்கான  பதிலை  உன்னைத்தவிர  வேறு  யாராலும்  சொல்ல  முடியாது 


2  சூரிய  அஸ்தமனம்  தான்  என்  வாழ்க்கையில்  தினமும்  எனக்குக்கிடைக்கும்  பரிசு (  தில்சே  -  உயிரே  பட  டயலாக்  சுஜாதா  வசனம் -  நான்  பார்க்கும்  கடைசி  சூர்யோதயம் iஇதுதான்  என்ற  வசனம்  நினைவு  வருது ) 


3   பேஷ்ண்ட்டை  குணப்படுத்துவதை  விட  என்  கவனம்  இருக்கும்  காலம்  வரை  அவங்களை  சந்தோஷமா  வெச்சுக்கனும்  என்பதில் தான்  இருக்கு 


4  தன்னோட  மகனை  எவ்ளோ  அக்கறைப்பார்த்துக்கொள்ளும்  அப்பாக்கள்  அவரவர்  மனைவியை  ஏன்  அவ்ளோ  கேர்  எடுத்துப்பார்த்துக்கறதில்லை ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1    டயாலிசிஸ்  செய்பவர்கள் கை  மணிக்கட்டுப்பகுதியில் சில  தழும்புகள்  இருக்கும்  , அதைப்பார்த்து  மற்ற  மாணவர்கள்  பயப்படறாங்க  என  காரணம்  சொல்லி  ஸ்கூல்  நிர்வாகம்  நாயகியை  நீக்குகிறது .  அடிக்க்டி  சிலர்  அவரிடம்  கையைக்காட்டி  ஏன்  அப்டி  இருக்கு  ? என  தர்மசங்கடமாக  கேட்கிறார்கள்  இதை  தவிர்க்க  கையை  ஃபுல்லா  கவர்  பண்ற  மாதிரி  ஆடை  அணியலாமே?  (  படம்  ஃபுல்லாவே  அவர்  ஃபுல்லா  கவர்  பண்ணாம  கிளாமராதான்  வர்றார்  அது  வேற  விஷயம் )


2  நாயகி  சாதாரண  குடும்பம் மாதிரிதான்  காட்றாங்க ,  அம்மா, அப்பா இல்லை  தாத்தா  மட்டும் தான்  , வாரம்  3  முறை  டயாலிஸிஸ்  பண்ண  லட்சக்கணக்கில்  செலவாகுமே? ஏது  துட்டு ? 


3  இந்தக்காலத்துல்   ஃபோட்டோ  எடுப்பது  ரொம்ப  ஈசி .  காதலியுடன்  ஜோடியா  எடுத்துக்கிட்ட  ஃபோட்டோ  காத்துல  பறந்து  போய்  கீழே  விழுதுன்னா  வேற  ஃபோட்டோ  எடுக்க  முடியாதா? அவ்ளோ  ரிஸ்க்  எடுத்து  மலைல  இறங்குவாங்களா? 


4  மலைக்கு  ட்ரெக்கிங் போறவங்க  ரெகுலரா  உயரமான  இடத்துல  காற்று  அதிகமா  வீசும்னு  தெரிஞ்சுதான்  இருப்பாங்க .,  ஃபோட்டோவை  கல்  மீது  வைக்கும்  ஹீரோ  அதுக்கு  வெயிட்  குடுக்க  மேலே  ஒரு  சிறு  கல்  கூடவா  வைக்க  மாட்டார்? 

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தென்றலே  என்னைத்தொடு  படம்  போல  முழுக்க  முழுக்க  ஜாலியான  லவ் ஸ்டோரியும்  அல்ல ,  தழுவாத  கைகள்  மாதிரி  ரொம்ப  உருக்கமான  படமும்  அல்ல ,   காதல்  நெருக்கம்  பாதி   உருக்கம்  மீதி  என  கலந்து கட்டிய  ப்டம் 


காதல்  ஜோடிகள்  சேர்ந்து விடும்  காதல்  கதைகள்  ஆயிரம்  உண்டு  , ஆனா  சேராத  காதல்  கதைகள்  தான்  காவியம்  ஆகின்றது  . மனதில்  தங்கி  விடுகிறது   ரேட்டிங்  3 / 5 


0 comments: