ஸ்பாய்லர் அலெர்ட்
3 GEELI PUCCHI ( வெட்டுக்கிளி) - நாயகி டிகிரி முடிச்சவ, கம்ப்யூட்டர் நாலெட்ஜூம் இருக்கு , அவளுக்கு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் ஆகனும்னு ஆசை , ஆனா சூப்பர்வைசரா ஒரு கம்பெனில ஒர்க் பண்ண்ணிட்டு இருக்கா. பாஸ் கிட்டே முறையிட்டும் பயன் இல்லை
அப்போ அந்த கம்பெனிக்கு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டரா ஒரு புது பொண்ணு வர்றா. அந்த கம்ப்பெனில எல்லாருமே ஆண்கள் , இவங்க ரெண்டு பேரு மட்டும் தான் பெண்கள் , வேற வழியே இல்லாம இருவரும் தோழிகள் ஆகிடறாங்க
நாயகி ஒரு தலித். புதுசா வந்த பொண்ணு உயர் குலத்தைச்சார்ந்தவள். நாயகியின் சக பணியாள் ஒருவர் ஜாதியின் காரணமாத்தான் உனக்கு அந்த வேலை கிடைக்கலை , புதுசா வந்த பெண்ணுக்கு உன் அளவுக்கு திறமை இல்லை, ஆனாலும் பதவி கிடைச்சிருக்கு என்கிறார்
நாயகி இப்போ எப்படி திட்டம் போட்டு புதுப்பொண்ணைக்காலி பண்றா ( கொலை அல்ல ) என்பதுதான் கதை
நாயகியா நடிச்ச கொன்கொனா சென் சர்மா கிட்டத்தட்ட வில்லி ரோல் தான். பிரமாதமான நடிப்பு . விருது பெற்றிருக்கார் இதற்காக புதுப்பெண்ணாக அதிதி ராவ். அப்பாவித்தனமான முகம், சில இடங்களில் ஓவர் அப்பாவித்தனம் செயற்கை தட்டுகிறது
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 எங்க வீட்ல 11 பேர் இருக்கோம். தம்பதி சந்தோஷமா இருக்கக்கூட ஒரு தனி ரூம் இல்லை என சொல்வதெல்லாம் பயங்கர டுபாக்கூரா இருக்கு . வசனமா இப்படி வெச்சுட்டு காட்சியா வரும்போது பங்களா டைப் வீட்டைக்காட்றாங்க
2 அவ்ளோ பெரிய கம்பெனில லேடீஸ்க்கு தனி டாய்லட் இல்லைனு சொல்றாங்க . லேபர்ஸ் லா பற்றி தெரியல போல ., லைசென்சே கிடைக்காது
3 ஒரு டிகிரி படிச்ச பொண்ணுக்கு கூடல் எந்த சமயம் நிகழ்ந்தா பேபி ஃபார்ம் ஆகும் வாய்ப்பு அதிகம் இருக்கு என்ற விபரம் கூடத்தெரியாதா? நாயகி சொல்லித்தர்ற மாதிரி கட்றாங்க
4 AN KAHI ( சொல்லாதவை) - நாயகிக்கு காது கேட்காத ஒரு பெண் குழந்தை. கணவன் சரியா அன்பு செலுத்துவதில்லை . குழந்தை கூடவும் பாசமா இல்லை. அம்மா , நல்லா இருக்கும் உங்களையே ஒருவரால் லவ் பண்ண முடியலையே ? குறை இருக்கும் என்னை யார் லவ் பண்ணுவா? என அந்த சிறுமி கேட்குது
அந்தக்கேள்வி நாயகியின் மனசில் நல்லா பதிஞ்சிடுது. கணவனிடம் தனிமையில் இருக்கும்போது சொல்றா. அட்லீஸ்ட் குழ்ந்தை கிட்டேயாவது அன்பா இருங்க , அவ கிட்டே ஏதாவது டெய்லி பேசுங்க அப்டிங்கறா. அவன் அப்போதைக்கு தலையை மட்டும் ஆட்றான்
வாய் பேச முடியாத ஒரு ஓவியன் கூட நாயகிக்கு பழக்கம் ஆகுது மகள் கூட சைகை பாஷையில் பேசி பழக்கம் உள்ளதால் நாயகியால் சுலபமாக அவனுடன் பேச முடியுது. அவனுக்கு ஆச்சரியம், இருவர் மனதும் முதலில் இணைகிறது. ஒரு சுபயோக சுப தினத்தில் உடலும் இணைகிறது
நாயகி வீட்டுக்கே ஒரு நாள் ஃபாலோ பண்ணிட்டு காதலன் வந்துடறான். இதற்குப்பின் என்ன ஆச்சு ? என்பதே க்ளைமாக்ஸ்
நாயகியாக டெல்லி க்ரைம் வெப் சீரிஸ் புகழ் ஷ்ஃபாலி ஷா பின்னிப்பெடல் எடுத்திருக்கிறார் . க்ண்களாலேயே பேசுகிறார் , சைகை பாஷையில் அவர் பேசுவதைப்பார்த்து நானும் கண்னாடில அப்டி ட்ரை பண்ணிப்பார்த்தேன் . அவ்ளோ தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது அவர் நடிப்பு
2 KHILOUNA (பொம்மை) - நாயகிக்கு ஸ்கூலில் படிக்கும் வயதில் ஒரு தங்கை. வீட்டு வேலை செய்துதான் ஜீவனம் நடக்குது . நாயகன் துணி அயர்ன் பண்றவர்
ஒரு பணக்கார வீட்டில் நாயகி வேலை செய்கிறார்/. அந்த ஓனரம்மா கர்ப்பமா இருக்காங்க , கூட மாட ஒத்தாசையா இருக்கா. குழந்தை பிறக்குது. அதே ஏரியாவில் குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு லேடி இருக்காங்க .
அவங்க நாயகி கிட்டே என் வீட்ல தானே வேலை செஞ்சுட்டு இருந்தே? இப்போ வீடு மாறிட்டியா? என கேட்கும்போது உங்களுக்கும் ஒரு குழந்தை உண்டாகட்டும், நான் அங்கே வந்து வேலை செய்யறேன்னு சுருக்குனு தைக்கிற மாதிரி சொல்லிடறா
நாயகி வீட்டு வேலை செய்யும் ஓனர் அவளை தவறான பார்வையில் பார்க்கிறான். அப்போதைக்கு தப்பிடறா
அவங்க வீட்டில் நடந்த பார்ட்டில கரண்ட் போகுது . அந்த டைம்ல குழந்தையைக்காணோம்
குற்றவாளி யார்? நாயகியா? அவள் கணவனா? குழந்தை பாக்யம் இல்லாத அந்தப்பெண்ணா? அதான் க்ளைமாக்ஸ்
நுஷ்ரத் தான் நாயகி . ஒரு வேலைக்காரி அல்லது பணிப்பெண் போலவே இல்லை. மகாராணி மாதிரி இருக்கிறார். ஒப்பனையை அடக்கி வாசிச்சு இருக்கலாம்
அபிஷேக் பானர்ஜி தான் கணவன் ரோல், நல்லா பண்ணி இருக்கார் . போலீசிடமும் அடி வாங்குகிறார்.அ ந்த ஓனரிடமும் அடி வாங்குகிறார்
தங்கையாக வரும் சிறுமி பேபி ஷாலினி போல் ஓவர் ஸ்மார்ட்டா நடந்துக்குது ஆனா ரசிக்க வைக்கும் நடிப்பு
1 மஜ்னு - நாயகிக்கு மேரேஜ் ஆன அன்னைக்கே புருசன் சொல்லிடறான் உன் மேல எனக்கு எந்த ஆசையும் இல்ல வீட்ல கட்டாயப்படுத்துனாங்காட்டிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
அதுக்குப்பின் நாயகி கோடீஸ்வரனான கணவனைக்கண்டுக்கறதில்லை . அவ அழகில் மயங்கி யாராவது வாலாட்டினா கணவன் சும்மா விடறதில்லை. அவனை உண்டு இல்லைனு ஆக்கிடறான்
இப்பொ தான் நாயகன் எண்ட்ரி. நாயகனின் அப்பா நாயகியின் கணவரிடம் வேலை பார்த்தவர். ஒரு சின்ன தப்பு செஞ்சதுக்கு காலை உடைச்சவர் ஓனர். அதனால தன் மகன் தன்னைப்போல் கஷ்டப்படக்கூடாதுனு அவனை நல்லா படிக்க வைக்கிறார்
ஃபாரீன்ல வேலை கிடைக்குது நாயகனுக்கு . மாசம் 15 லட்சம் சம்பளம். இதை கேள்விப்பட்ட ஓனர் உன் பையன் என் கிட்டேயே வேலை செய்யட்டும் மாசம் 30 லட்சம் தர்றேனு வரசொல்றான்
நாயகனுக்கும் நாயகிக்கும் கனெக்சன் ஆகிடுது. இதுக்குப்பின் இந்தக்கதையில் நிகழும் திருப்பங்கள் தான் திரைக்கதை
ஃபாத்திமா ஷனா சாய் தான் நாயகி . அழகுதான் ஆனா அநியாயத்துக்கு கணவன் கண் முன்னாலேயே வேலைக்காரனிடம் அப்படி வழிவது ஓவரோ ஓவர் . தன் மனைவியைப்பற்றித்தெரிந்தும் புருசன் அவ்ளோ இளமையான ஜிம் பாடி பில்டரை தன் வீட்டில் வேலை செய்ய வரசொலவ்து மாங்கா மடையன் கூட செய்ய மாட்டான்
அதுக்கு கதைல அவங்க ஒரு சால்ஜாப் சொல்வாங்க பாருங்க ஹய்யோ அய்யோ செம சிரிப்பு
ரசித்த வசனங்கள்
1 ஆண்கள் ஏன் இவ்வளவு நயவஞ்சகமா இருக்காங்க ? நீங்க ஒருத்தரை ஏமாற்றும்போது நீங்க ஏமாறவும் தயாரா இருக்கனும்
2 இப்பவெல்லாம் ஜனங்களுக்கு எப்படி நாம சந்தோஷமா இருக்கனும்கறதே மறந்துடுச்சு
3 காது கேட்க முடியாத நீங்க ஏன் ஹியரிங் எய்டு வெச்சுக்கலை ?
உதடுகள் பொய் பேசும் , ஆனா கண்கள் உண்மையை மட்டும் தான் பேசும், அதனால எனக்கு அது தேவைப்படலை ., எதிராளியின் கண் பேசும் பாஷைகளே போதும்
4 கடைசில நீங்களும் கண்களால் பொய் பேசும் வித்தையைக்கத்துக்கிட்டீங்க போல
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - நான்கு கதைகளையும் பார்க்க விருப்பம் இல்லதவர்கள் அவசியம் 3 & 4 மட்டுமாவது பார்க்கவும் . ஒரு கதை 40 நிமிடங்கள் தான். ரேட்டிங் 2. 75 / 5
Ajeeb Daastaans | |
---|---|
Directed by | |
Written by | |
Produced by | |
Cinematography |
|
Edited by | Nitin Baid |
Music by |
|
Production company | |
Distributed by | Netflix |
Release date |
|
Running time | 142 minutes[1] |
Country | India |
Language | Hindi |
0 comments:
Post a Comment