ஸ்பாய்லர் அலெர்ட்
சம்பவம் 1 - களப்பிரர் ஆட்சிக்காலத்தில் சைவம் , வைணவம் இரு சமயத்தவரிடையே போட்டி இருந்தது . சிவனை வணங்குபவர் பெரியவரா? விஷ்ணுவை வணங்குபவர் பெரியவரா? என்ற சண்டை நடந்துகொண்டே இருந்தது , பொன்னியின் செல்வன் ல கூட அப்படி ஒரு காட்சி இருக்கும் . நெற்றியில் திருநீறு பூசக்கூடாது என சட்டம் இயற்றப்பட்டது , அப்போது சிவனடியார்கள் நெற்றியில் மட்டுமல்ல உடம்பு பூரா நீறு பூசுவோம் என சொல்லி மன்னருக்கு எதிர்ப்பைக்காட்டும் நோக்கில் உடம்பு பூரா திருநீறு பூசி வந்தனர் . அப்படி பூசியவ்ர்கள் பூச்சாண்டி என அழைக்கப்பட்டனர். அப்படி ஒரு ஆளை சங்கிலியால் கட்டி கடலில் வீசி விடுகின்றனர். மன்னரின் உத்தரவை மீறிய குற்றத்துக்காக . 1000 ஆண்டுகளுக்குப்பின் அந்த ஆத்மாவுக்கு உயிர் வருகிறது
சம்பவம் 2 - ஒரு அறையில் மூன்று நண்பர்கள் தங்கி இருக்காங்க. அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி , இவர் பழங்கால நாணயங்கள் சேகரிப்பவர். இவர் கைக்கு சோழர் கால நாணயம் கிடைக்குது . அது வந்த பின் அந்த நாணயத்தை வைத்து ஆவியுடன் பேச முய்ற்சி பண்றாங்க . மல்லிகா என்ற ஆவியுடன் பேசுகிறார்கள் . மல்லிகா 23 வயசு ஆன பெண் . ஒரு நதியில் தன் மர்ணம் நிகழ்ந்ததாக கூறுகிறது . தன் மரணத்துக்கு காரணமானவர்களைப்பழி வாங்க வேண்டும் என்கிறது
சம்பவம் 3 - மல்லிகா இப்போது தன் கணவருடன் வீட்டில் வசித்து வருகிறார். அவர் காலேஜ் படிக்கும்போது ஒரு இடத்தில் ஒரு சோழர் கால நாணயம் கண்டெடுக்கிறார். அதற்குப்பின் அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. ஏதோ ஒரு உருவம் அவரைத்தொடர்ந்து கொண்டே இருக்கிரது. எதற்கு வம்பு என அவர் அந்த நாணயத்தை எடுத்த இடத்துலயேவெச்சுடலாம்னு தன் நண்பரிடம் தந்து வைக்கச்சொல்கிறார்
மேலே சொன்ன 3 சம்பவங்களையும் இணைக்கும் புள்ளி தான் திரைக்கதை . சம்பவம் 2ல் முன்று நண்பர்கள் இருந்தாங்களே அதில் ஒருவர் மர்ம மரணம் அடைகிறார். அந்த மரணத்துக்குக்காரணம் யார்? என்பது க்ளைமாக்ஸில் தெரிகிறது
இது ,பெரும்பாலும் மலேசியாவில் படமாக்கபட்ட படம் . எல்லாருமே புதுமுகங்கள்
நாயகி மல்லிகாவாக வரும் ஹம்சினி பெருமாள் குடும்பப்பாங்கான முகம் கொஞ்சம் சமந்தா , கொஞ்சம் பிந்து மாதவி என முக சாயலில் நினைவுபடுத்துகிறார். இயல்பான நடிப்பு . இவரது போர்சன் தான் திகில் ஊட்டும் காட்சிகள் . நளீனி , ஜீவிதா இருவரும்தான் தமிழ் சினிமாவில் அதிகமான பயப்படும் காட்சியில் சிறப்பாக நடித்தவர்கள் , அந்த பட்டியலில் இவரும் சேர்கிறார்
மாற்றுத்திறனாளியாக வரும் லோகநாதன் அபாரமான நடிப்பு . ஒரு நாள் என்னை மாதிரி இருந்து பாரு . ஒன் பாத்ரூம் போகக்கூட இன்னொருவர் உதவி தேவைப்படும் கொடூரம் என புலம்பும் இடத்தில் பரிதாபத்தை அள்ளுகிறார்
குண்டான தோற்றத்தில் நடித்த தினேஷ் தான் அதிக காட்சிகளில் வருகிறார். கிட்டத்தட்ட நாயகன் போல
முருகனாக வரும் மிர்ச்சி ரமணா மட்டும் தான் தமிழ் நடிகர் , மற்ற அனைவரும் மலேசியர்கள்
புதுமுகங்கள் என தெரியாத வண்ணம் அனைவரும் இயல்பான நடிப்பு
சபாஷ் டைரக்டர் ( ஜே கே விக்கி )
1 மொத்தமே ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் தான் படம் என்பதால் எடிட்டிங் கனகச்சிதம் , ஆனாலும் முதல் 40 நிமிடங்கள் இழுவைதான் , ஆனாலும் சாமார்த்தியமாக கதையைன்நகர்த்துகிறார்
2 பேய்க்கதையாக ஆரம்பித்து திகில் காட்சிகள் காட்டி , கொலை கதை போல் கொண்டு போய் வரலாற்று சம்பவங்களை இணைத்த விதம் அருமை
3 பாடல் காட்சிகளோ , மொக்கை காமெடி டிராக்கோ இல்லாத விதம்
4 பிஜிஎம் பல இடங்களில் பயமுறுத்துகிறது ஜஸ்டின் ரிடுன் ஷா தான் இசை . மிரட்டி இருக்கிறார். அசாலிசம் பின் மொகமத் ஒளிப்பதிவு இருட்டான காட்சிகளில் வீச்சு காட்டுகிறது . டைரக்டரே எடிட்டர் என்பதால் கச்சிதமாக கதை சொல்லி இருக்கிறார்
ரசித்த வசனங்கள்
1 எல்லாருமே கடையைத்திறந்து பொருட்களை வித்துட்டு இருக்காங்க , நீ வாங்கிட்டு இருக்கே
இதோட ,மதிப்பு உனக்கு இப்போத்தெரியாது . புராதன பொருட்கள விலை மதிப்பில்லாதவை
2 வாடி வாசல் திறக்காம வீடு வாசல் போக மாட்டோம்னு சொன்ன அலங்காநல்லூர் இந்த ஊருதான்
3 ஒவ்வொரு தடவை பதில் கிடைக்கும்போதெல்லாம் ஒரு புதுக்கேள்வி முளைக்குது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பேய் நம்ம கிட்டே பேச வரனும்னா ரத்தம் காட்டனும்னு சொன்னதும் ஒரு ஆளு தன் கை விரலை ஊசில குத்தி ரத்தம் 2 சொட்டு போடறாரு.பின் மீண்டும் ரத்தம் வேண்டும் என்றதும் அதே இட்த்தை அழுத்துனா போதாதா? ரத்தம் வராதா? மீண்டும் ஊசியால எதுக்கு குத்தனும்? ஃப்ரெஷ் ரத்தம் வேண்டுமோ?
2 பேய் நேரடியா பேசாது . மணலைக்கூட்டி வெச்சு நம்ம கையை அங்கே வெச்சா கை ஆட்டோமேடிக்கா மூவ் ஆகி சில எழுத்துக்களை எழுதும். அது என்ன வார்த்தைனு பேப்பர்ல நாம எழுதிப்பார்த்து புரிஞ்சுக்கலாம், கொஞ்சம் கூட அப்டேட் ஆகாத பேயா இருக்கே? லேப் டாப் முன்னால உக்காந்தா கீ போர்ட்ல டைப் அடிக்காதா? வேலை ஈசியா முடியுமல்ல?
4 மல்லிகா வாழும்பொது நகம் எல்லாம் கச்சிதமா கட் பண்ணி நீட்டா விரல்களை மெயிண்ட்டெயின் பண்ணுது , ஆனா பேய் ஆன பிறகு நகம் வெட்டாம சுத்திக்கிட்டு இருக்கு , ஒரு நெயில் கட்டர் கூடவா அவ்ளோ சக்தி வாய்ந்த பேய் கிட்டே இருக்காது ?
5 நாயகியிடம் மார்க்கெட்ல ஒரு பெரியவர் முதல் முறையா சந்திச்சு நாளை என்னைக்கோவிலில் வந்து பார் அப்டீங்கறார். நாயகி சரினு சொல்லுது. ஊர்ல 1008 கோயில் இருக்கு. அம்மன் கோவிலா? சிவன் கோவிலா? பெருமாள் கோவிலா? எதுவுமே சொல்லாம எப்படி கரெக்டா பாப்பா அங்கே போகுது ?
6 நாயகி ஒரு புராதான நாணயத்தை ஒரு இடத்துல இருந்து எடுத்துட்டு வந்ததுதான் பிரச்சனை., அதை எடுத்த இடத்துலயே கொண்டு போய் வெச்சிடுனு சாமியார் சொல்றாரு, எப்வ்ளோ முக்கியமான விஷயம், நாயகி தான் அதை செய்யாம தன் பாய் ஃபிஎரண்ட் கிட்டே சொல்லி செய்யச்சொல்றா. அவனுக்கு நாயகி எங்கே இருந்து அதை எடுத்தா?னு எப்படித்தெரியும் ? அவன் ஒழுங்கா அந்த வேலையைச்செய்வான் என்பதற்கு என்ன உத்தரவாதம் ?
7 மந்திரிச்சு திருநீறை நாயகி கைல இருந்து கீழே கொட்டிடுது . பேய் அதை எடுத்து நெத்தில பூசிக்குது ., பேய் பட்டை சாராயம் அடிக்கும் ., திருநீறு பட்டையும் அடிக்குமா? ரொம்ப பக்தியான பேயா இருக்குமோ?
8 முருகர் வேலை நாயகி கைல இருந்து வாங்கி வளைக்குது .பேய். நல்ல வேளை , வேலை இல்லாதவதான் வேலை வளைச்சவதான் வீரமான வேலைக்காரினு பாட்டு பாட்லை
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - டைட்டிலைப்பார்த்து இது ஏதோ டம்மி படம் என நினைக்காமல் மாறுபட்ட கதை அம்சம் உள்ள படம் எனப்தை உணர்ந்து பார்க்கவும் ரேட்டிங் 3 / 5
0 comments:
Post a Comment