ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லனோட மனைவி ஒரு மன நோயாளி .ஹிஸ்டீரியா பேஷண்ட் அவளைக்கொலை செஞ்ச வழக்கில் மாட்டின வில்லன் வக்கீல் கிட்டே சொன்ன சம்பவம்... ஒரு மழை நாளில் வில்லன் தன் மனைவி கிட்டே உனக்கும் எனக்கும் இனி ஒத்து வராது . இந்த விடுதலைப்பத்திரத்தில் கையெழுத்துப்போட்டுடு. நாம் இருவரும் பிரிந்து விடலாம் என சொல்லும்போது மனைவி அதற்கு ஒத்துக்கலை. இருவருக்குமான வாக்குவாதம் , தள்ளுமுல்லுல மனைவி மாடில இருந்து கீழே விழுந்து இறந்துடறா,இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி இருந்தும் வக்கீல் தன் வாதத்திறமையால் வில்லனை ரிலீஸ் ஆக வெச்சுடறார்
வில்லனுக்கு இன்னொரு மேரேஜ் நடக்க இருக்கு , ஒரு பெண்ணை மேரேஜ்ஜூக்கு ரெடி பண்றார். . ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்ட் வீட்டுக்கு வந்து வில்லனின் வருங்கால மனைவிக்கு இன்சூரன்ஸ் பாலிசி பத்திரத்தில் சைன் வாங்கிக்கறான். சில நாட்கள் கழித்து வில்லன் உடைய வருங்கால மனைவி பாத் டப் ல குளிக்கும்போது மர்மமான முறையில் இறந்துடறா. இந்த கேஸ்ல மீண்டும் வில்லன் மாட்டிக்கறான். முதல் கேஸ்ல காப்பாற்றுன அதே வக்கீல் இந்த கேஸ்க்கும் ஆஜர் ஆக இருக்கிறார்
இப்போ நாயகன் அறிமுகம். வில்லனைக்காப்பாற்றும் வக்கீல் உடைய தம்பி மகன் தான் நாயகன். . மகன்னா நேரடி வாரிசு இல்லை ., பெரியப்பானுதான் கூப்பிடறான். ஆனாலும் இருவருக்கும் அப்படி ஒரு பாண்டிங் . பெரியப்பா சொல் தட்டாத மகன்
நாயகனோட பெரியப்பா ஈகோ பிடிச்சவர் , தோல்வியைத்தாங்க முஜ்டியாதவர். நாயகனும், பெரியப்பாவும் செஸ் விளையாடும்போது தோல்வி ஏற்படும் நிலை வந்தாக்கூட அதைத்தாங்கிக்க முடியாதவர்
ஒரு கட்டத்தில் அப்பா , மகனுக்கு வாக்குவாதம் வந்து வீட்டை விட்டு வெளீல போனு சொல்லிட்றார் . காரணம் ஒரே கேசில் எதிர் எதிர் துருவங்களாக இருவரும் வாதாட முடிவு எடுத்ததே
இதற்குப்பின் அந்த கேசில் யார் ஜெயித்தார்கள் என்பதே க்ளைமாக்ஸ்
வில்லனாக மேஜர் சுந்தர்ராஜன். பசுத்தோல் போர்த்திய புலியாக பிரமாதமான நடிப்பு , ஆனா அவர் பிராண்ட் டயலாக் ஆன இங்க்லீஷ்ல ஒரு முறை தமிழில் ஒரு முறை ஒரே டயலாக்கை ரிப்பீட் பண்ற சீன் இல்லாதது ஒரு ஏமாற்றமே
நாயகனாக , நாயகனின் பெரியப்பாவாக இரு வேடங்களில் சிவாஜி கணேசன். பாரிஸ்டர் ரஜினிகாந்த்தாக இவர் பண்ணும் அலப்பறைகள் பிரமாதம் . ஆனா பிளட் பிரஷர் வந்த மாதிரி அவர் ஓவர் ஆக்ட் பண்றாரோனு தோணுது . நாயகனாக வரும் சிவாஜி அமைதியே உருவாக வருகிறார்
நாயகியாக உஷா நந்தினி , அதிக வாய்ப்பில்லை , ஒரே ஒரு டூயட்தான் மிச்சம்
பெரியம்மாவாக பண்டாரி பாய் . அந்தக்காலத்துல அம்மா ரோலுக்கு இவர்தான் நேர்ந்து விடப்பட்ட நைவேத்தியம்
இந்தப்படம் மெகா ஹிட்டாம். மெயின் கதையான அந்த கொலை வழக்கு பற்றிய பேச்சு மக்கள் மத்தியில் இல்லை , சைடு கதையான பாரிஸ்டர் ரஜினிகாந்த்தின் வறட்டு கவுரவம் , அப்பா மகன் ஈகோ மோதல் சம்பவம்தான் டாக் ஆஃப் த டவுனா இருந்ததாம்
நாகேஷ் , வி கே ராமசாமி , செந்தாமரை எல்லாரும் உண்டு . சும்மா சில காடசிகள் தான்
எம் எஸ் விஸ்வநாதன் இசையில் 5 பாடல்கள் அவற்றில் 2 பாடல்கள் மெகா ஹிட்
1 யமுனா நதி இங்கே
2 அதிசய உலகம்
3 பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்துப்பார்த்த கிளி
4 மெழுகுவர்த்தி எரிகின்றது
5 நீயும் நானுமா?கண்ணா நீயும் நானுமா
சபாஷ் டைரக்டர்
1 பாரிஸ்டர் ரஜினிகாந்த் கேரக்டர் டிசைன் எழுதப்பட்ட விதமும் அதற்கு உயிர் ஊட்டிய சிவாஜியின் நடிப்பும்
2 கோர்ட் ரூம் காட்சிகளில் வசனம்
ரசித்த வசனங்கள்
1 நாய் கடிச்சு சாவதை விட யானை மிதிச்சு சாவது உயர்ந்தது
2 வாழ்க்கைங்கறது பால் மாதிரின்னா காதல் என்பது சர்க்கரை போல
3 டாக்டர் கிட்டேயும் வக்கீல் கிட்டேயும் பொய் சொல்லக்கூடாது
அதாவது நாம அவங்க கிட்டே பொஉ சொல்லக்கூடாது , ஆனா அவங்க பொய் சொல்லலாம்
4 விளையாட்டிக்குக்கூட ஒரு விளையாட்டில் கூட என்னால தோல்வியைத்தாங்கிக்க முடியாது , அதே சமயம் விட்டுக்கொடுக்கப்பட்ட வெற்றியையும் ஏற்றுக்கொள்ள முடியாது
5 அடுத்தவங்க வாழ்க்கைல அக்கறை எடுத்துக்கொள்ளும் ஒரே ஜீவன் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் தான்
6 ஒருவரின் பலத்தோட போட்டி போட்டு ஜெயிக்க முடியலைன்னா அவரின் பலவீனத்தோட போட்டி போட்டு ஜெயிக்க வேண்டியதுதான்
7 அப்பா , உங்களை எதிர்த்து வாதாடி நான் ஜெயிச்சாலும் அது உங்களுக்குப்பெரும்னைதானே?
என்னை எதிர்த்து நீ ஜெயிச்சாலும், தோற்றாலும் அது எனக்கு அவமானம் தான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஃபிளாஸ்பேக் சீனில் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்தான் பாலிசி போடச்சொல்லி வற்புறுத்தறான் , ஆனா க்ளைமாக்ஸ்ல கோர்ட்ல ஜட்ஜ் கிட்டே அந்த ஏஜண்ட் வில்லன் தான் வற்புறுத்தி பாலிசி போட வெச்சார்னு பொய் சொல்றான்
2 ஓப்பனிங் சீன் கேஸ்ல ஜட்ஜோட நடிப்பு ரொம்ப ஓவர் ஆக்டிங்கா இருந்தது, சிவாஜி ரசிகரா இருக்கும் போல
3 ஓப்பனிங் சீன்ல கேஸ்ல குற்றவாளிக்கூண்டில் நிற்கும்போது வில்லன் சர்ட் பட்டன்கள் முதல் இரண்டைக் கழட்டிட்டு அசால்ட்டா நிற்கறார் கேஸ் முடிந்து கோர்ட் வளாகம் தாண்டி கூட்டிச்செல்லப்படும்போது பட்டன்கள் போடப்பட்டு இருக்கு
4 பாரிஸ்டர் சிவாஜி நைட் தூங்கி எழும் ஒரு காட்சியில் ஃபுல் ஸ்லீவ் சர்ட் போட்டு அயர்ன் பண்ணின மடிப்புக்கலையாம இருக்கார் , தூங்கும்போது நைட் டிரஸ் ல ஃப்ரீயா அல்லது பனியனோட இருப்பாங்களா? இப்படி ஆஃபீஸ் போற மாதிரி பக்காவா டிரஸ் பண்ணிட்டு இருப்பாங்களா?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் . ரெண்டரை மணி நேரப்படத்துல போர் அடிக்காம போகுது , பாடல்கள் ஹிட் என்பதாலும் கோர்ட் ரூம் வாதத்துக்காகவும் பார்க்கலாம் ., ரேட்டிங் 2.75 / 5
Gauravam | |
---|---|
Directed by | Vietnam Veedu Sundaram |
Written by | Vietnam Veedu Sundaram |
Based on | Kannan Vanthaan by Vietnam Veedu Sundaram |
Produced by | S. Rangarajan |
Starring | Sivaji Ganesan Ushanandini Pandari Bai |
Cinematography | A. Vincent |
Edited by | R. Devarajan |
Music by | M. S. Viswanathan |
Production company | Vietnam Movies |
Release date |
|
Running time | 136 minutes |
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment