Thursday, November 03, 2022

வானம்பாடி (1963) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் )


 பரங்கிமலை  ஜோதி  தியேட்டர்  புகழ்  பெறும் முன்பே  நடிகை  ஜோதி  லட்சுமி  செம  ஹிட்  ஆனார் . அவர்  அறிமுகம்  ஆன  முதல்  படம்  இது . டி  ஆர்  ராஜகுமாரி  நடித்த  கடைசிப்படம்  இதுவே . கவிஞர்  கண்ணதாசனின்  சொந்தப்படம் .  சேஸ்  பரிச்சய்  எனும்  வங்காள  மொழிப்படத்தின்  அஃபிஷியல்  ரீமேக்  இது  .  கமர்ஷியலாக  ஹிட்  அடித்தது . இது  பின்னாளில்  ஹிந்தியிலும்  ரீமேக்  ஆனது . இதில்  இடம்பெற்ற   எட்டு  பாடல்க்ள்  அத்தனையும்  செம  ஹிட்டு . க்மல்ஹாசன்  இதில்  குழந்தை ந்ட்சத்திரமாக  வருகிறார்  என்பது  கூடுதல்  தகவல் 


 ஹீரோ  டூயல்  ரோலில்  நடிப்பது  பெரிய  அதிசயம்  இல்லை . மீசை  வெச்சா  இந்திரன் , மீசை  இல்லைன்னா  சந்திரன்  அப்டினு  ஈசியா  சமாளிக்கலாம், ஆனா  நாயகி  டூயல்  ரோலில்  நடிக்கும்போது  நடிப்பில்  வெரைட்டி  காட்டிதான்  கவர  முடியும்.1973ல்  ஜெ  இரு  வேட்ங்களில்  வந்தாளே  மகராசி  யில்  நடித்தார் ., 1974ல்  ரிலீஸ்  ஆன  வாணி  ராணி  யில்  வாணி  ஸ்ரீ  இரு  வேடங்களில்  நடித்திருந்தார்  (  இது  ஹிந்திப்படமான  சீதா  அவுர்  கீதா  படத்தின்  ரீமேக் ) 1995ல்  ரிலீஸ்  ஆன  ராணி  மகாராணி  படத்தில்  ராதிகா  மாறுபட்ட  இருவித  பரிமாணம்  காட்டி  இருந்தார் . 1992ல் ரிலீஸ்  ஆன  காவியத்தலைவன்ல  பானுப்ரியா  டபுள்  ரோல் ல  அசத்தி  இருந்தார் 1995ல்  ரிலீஸ்  ஆன  நாடோடி  மன்னன்ல  மீனா  டபுள்  ரோல்  நல்லா  பண்ணி  இருந்தார்.1998ல  ஜீன்ஸ்  ல்  ஐஸ்வர்யா ராய்  கலக்கி  இருந்தாங்க ,2001;ல   ஷமீதா  பாண்டவர் பூமில  நல்லா  பண்ணி  இருந்தார்.2012ல்  ரிலீஸ்  ஆன  சாருலதா  எனும்  க்ரைம்  த்ரில்லர்ல  ப்ரியாமணி கலக்கி  இருந்தார் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு  வயதான  தம்பதி  ரயில்வே  டிராக்ல  தற்கொலை  முய்ற்சியில்  ஈடுபட்டிருந்த  ஒரு  பெண்ணை  தங்கள்  வீட்டுக்குக்கூட்டி  வருகின்றனர். அந்தப்பெண்  அவர்களது  காலம்  சென்ற  மகளின்  சாயலில்  இருப்பதால்  அவளை  வளர்ப்பு  மகளாக  வளர்க்க  முடிவு  எடுக்கின்றனர் 


இறந்து  போன  மகளின்  காத்லன்  3  வருடங்களுக்குப்பின்   ஃபாரீனில்  இருந்து  தாயகம்  திரும்புகிறான்.   அவனுக்கு  தன்  காதலி  இறந்த  விஷயம்  தெரியாது .  காதலியின்  முக  சாயலில்    இருக்கும்  பெண்ணைப்பார்க்கிறான்


 இருவருக்கும்  திருமணம்  நடைபெற  இருக்கும்போது  அவளது  முன்னாள்  கணவன்  என  சொல்லிக்கொண்டு  திருமண  புகைப்பட  ஆல்ப  ஆதாரத்துடன்  ஒருவன்  வருகிறான் 


 கோர்ட்டில்  கேஸ்  நடக்கிறது . க்ளைமாக்சில்  ஒவ்வொரு  முடிச்சாக  அவிழ்கிறது 


சுமதி , ராணி , உமா ,  கவுசல்யா  தேவி    என  நான்கு  விதமான  தோற்றங்களில்  தேவிகா . ஈரோடு  மாவட்ட  கனகா  ரசிகர்  மன்றம்  சார்பாக  இவருக்கு  ஒரு  பூங்கொத்து . பிரமாதமான  நடிப்பு . எனக்குத்தெரிந்து  வேறு  எந்தத்தமிழ்  நடிகையும்  நான்கு  கதாபாத்திரங்களில்  ஒரு தமிழ் படத்தில்  நடித்ததில்லை  . இது  ஆள்  மாறாட்டக்கேசா?  ட்வின்ஸ்  சகோதரிகளா? என்பதை  படம்  பார்த்துத்தெரிந்து  கொள்ளுங்கள் . சொன்னா  சஸ்பென்ஸ்  போயிடும் 


  நாயகனாக  எஸ் எஸ் ஆர்.  எம் ஜி ஆர் , சிவாஜி  ,  ஜெமினி  இவர்களிடம்  இல்லாத  ஒரு  பிளஸ்  பாயிண்ட்  இவருக்கு  உண்டு  அது  கணீர்க்குரலில்  தெளிவான  தமிழ்  உச்சரிப்பு . ஆனா  காதல்  காட்சிகளில்  சுமார்தான். புரட்சிகரமான  வசனங்கள்  பேசும்  ரோல்  எனில்  கலக்கி  விடுவார் 

க்ளைமாக்சில்  வரும்  கோர்ட்  காட்சிகள்  அருமை . 


கே  வி  மகாதேவன்  இசையில்  கண்ணதாசன்  பாடல்  வரிகளில்  எல்லாப்பாடல்களுமே  செம  ஹிட்டு 




செம  ஹிட்டு  பாட்டு  லிஸ்ட் 


1  கங்கைக்கரைத்தோட்டம்  கன்னிப்பெண்கள்  கூட்டம்  கண்ணன்  நடுவினிலே  (  தேவிகா  ஓப்பனிங்  சாங் ) 


2  ஏட்டில்  எழுதி  வைத்தேன்  எழுதியதை  சொல்லி  வைத்தேன் , கேட்டவளைக்காணோமடா  ( எஸ் எஸ்  ஆர்  ஃபிளாஸ்பேக்  சாங் ) 


3   ஆண்  கவியை  வெல்ல  வந்த  பெண்  கவியே  வருக ,  (  ஹீரோ -ஹிரோயின்  போட்டி  ;பாட்டு ) 


4  நில்  கவனி  புறப்படு ( பிக்னிக்  கலாட்டா  பாட்டு ) 


5  கடவுள்  மனிதனாகப்பிறக்க  வேண்டும் அவன்  காதலித்து  வேதனையில்  வாட  வேண்டும்  (  ஹீரோ  சோகப்பாட்டு)


6  யாரடி  வந்தார்? என்னடி  சொன்னார்? ஏனடி  இந்த  உல்லாசம்?  (  கிளப்  டான்ஸ் ) 


7   ஊமைப்பெண்  ஒரு  கனா  க்ண்டாள்  (  சோகப்பாட்டு) 


8 தூக்கணாங்குருவிக்கூடு    ( க்ளைமாக்ஸ்  சாங்) 





  ரசித்த  வசனங்கள் 


1 கடன்  வாங்குனவன்  சம்சாரம்  மாதிரியா  பேசறாங்க ? கடன்  கொடுத்தவன்  சம்சாரம்  மாதிரி  இல்ல  பேசறாங்க ?


  விடுங்க , இந்தக்காலத்துல  கடன்  கொடுத்தவங்க  ரோஷமே  படக்கூடாது 


2  ஒரு மனுசனுக்கு  படிப்பு  அதிகம்  தேவை  இல்லை  அவனுக்கு  மூளை  புத்திசாலித்தனம்  இருந்தாப்போதும்னு  ஒருத்தர்  சொன்னாரு  அதனால  நான்   அஞ்சாங்கிளாசோட  படிப்பை  நிறுத்திட்டேன் 


3 கோழைக்கு  வாழ்வில்லை  , வீரனுக்கு  தோல்வி  இல்லை 


4 சமையல்  ஒரு  கை  தேர்ந்த  கலை , அதில்  கரை  கண்ட  பெண்களை  ஆண்கள்  விடுவதில்லை


5  புத்தகம்  எழுதுனவங்களை  விட  அதுக்கு  முன்னுரை  எழுதறவங்களுக்கு  மூளை  அதிகம்  தேவை


6b திடீர்னு  அரேஞ்ச்  பண்ணாதான்  அது  பிக்னிக், நிதானமா  அரேஞ்ச்  ப்ண்ணினா  அது  கல்யாணம் 


6  ஒருத்தரை  ஒருத்தர்  புரிஞ்சுக்கும்  வரை  தான்  பேச்சு ., அதுக்குப்பின்  பேச்சுக்கு  வேலை  இல்லை 


7   நாணம்  அது  பெண்களின்  உடன்  பிறப்பு 


8   புருசன்  மனைவியை  நிராகரிக்கலாம், ஆனா  மனைவி  புருசனை  நிராகரிச்சதா  நம்ம  நாட்டின்  வரலாற்றில்  இல்லை 


9  நிரூபிக்கப்பட்ட  பொய்கள்  என்றும்  உண்மை  ஆகிடாது

   நிரூபிக்கபடாத  உண்மைகள்  என்றும்  பொய்  ஆகி  டாது 


10  நீங்க  என்னைக்காதலிச்சது  உண்மைன்னா  என்  தன்மை  என்னுன்னு  நான்  விளக்காமலேயே  உங்களுக்குப்புரிஞ்சிருக்கும் 





சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பாடல்  காட்சிகளுக்காகவும்  , க்ளைமாக்ஸ்  சஸ்பெண்ஸ்  ட்விஸ்ட்க்காகவும்  படம்  பார்க்கலாம் 


வானம்பாடி
இயக்கம்ஜி. ஆர். நாதன்
தயாரிப்புகே. முருகேசன்
கண்ணதாசன் (கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ்)
திரைக்கதைவலம்புரி சோமநாதன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
தேவிகா
ஆர். முத்துராமன்
ஷீலா
கமல்ஹாசன்
ஒளிப்பதிவுஜி. ஆர். நாதன்
வெளியீடுமார்ச்சு 9, 1963
நீளம்4455 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
a


நடிகர்கதாபாத்திரம்
எஸ். எஸ். ராஜேந்திரன்சேகர்
தேவிகாஉமா/மீனா/சுமதி/கௌசல்யா தேவி
ஆர். முத்துராமன்மோகன்
ஷீலாசித்ரா
கமல்ஹாசன்ரவி
எஸ். வி. சகஸ்ரநாமம்தணிகாசலம்
டி. ஆர். இராமச்சந்திரன்நித்யானந்தம்
இரா. சு. மனோகர்கோபால்
ஜாவர் சீதாராமன்சிவகரன்
டி. ஆர். ராஜகுமாரிபார்வதி தணிகாசலம்
புஷ்பலதாகல்யாணி நித்யானந்தம்
வி. எஸ். ராகவன்சோமசுந்தரம்
ஒ.ஏ.கே. தேவர்ஜமீன்தார் மார்த்தாண்டம்
எம்.இ. மாதவன்சுந்தரமூர்த்தி
a


எண்.பாடல்பாடகர்கள்பாடலாசிரியர்நீளம் (நி:வி)
1"கங்கை கரை தோட்டம்"பி. சுசீலாகண்ணதாசன்5:46
2"ஊமை பெண் ஒரு"4:03
3"தூக்கனா குருவி கூடு"4:21
4"ஆண் கவியை வெல்ல"டி. எம். சௌந்தரராஜன் பி. சுசீலா5:30
5"கடவுள் மனிதனை"டி. எம். சௌந்தரராஜன்3:20
6"ஏட்டில் எழுதி வைத்தான்"டி. எம். சௌந்தரராஜன் எல். ஆர். ஈஸ்வரி3:24
7"யாரடி வந்தார்"எல். ஆர். ஈஸ்வரி3:49
8"நில் கவனி புறப்படு"ஏ. எல். ராகவன் எல். ஆர். ஈஸ்வரி4:10

0 comments: