Sunday, November 13, 2022

குலேபகாவலி (1955) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா)


  ஸ்பாய்லர்  அலெர்ட்


பூரொப்பு  எனும்  நாட்டின்  மன்னனுக்கும், மனைவிக்கும்  திருமணம்  ஆகி  பல  வருடங்கள்  ஆகியும்  குழ்ந்தை  இல்லை . மழலை  செல்வத்துக்காக  முதல்  மனைவியே   மன்னருக்கு ஒரு  பெண்ணைப்பார்த்து  கல்யாணம்  கட்டி  வைக்கிறாள். இப்போ  மகாராணி ,  சின்ன  ராணி  இருவருமே  கர்ப்பம்  ஆகிறார்கள் . ஒண்ட  வந்த  பிடாரி  ஊர்ப்பிடாரியை  விரட்ற  மாதிரி  இளைய  மனைவி  மூத்த  மனைவியை  கட்டம்  கட்ட  திட்டம்  போடறா. அரண்மனை  ஜோதிடர்  துணை  கொண்டு  சதி  செய்கிறாள். அதன்படி முதல்  தாரத்துக்குப்பிறக்கப்போகும்  குழந்தையால்  மன்னருக்கு  ஆபத்து  இருக்கிறது, குழந்தையின்  முகத்தில்  மன்னர்  விழித்தால் அவர்  கண் பார்வை  போய்  விடும்  என  அள்ளி  விடறாங்க .


 மன்னர்  அதை  நம்பி  மகாராணியை  ஒரு  குறிப்பிட்ட  எல்லைக்கு  அப்பால்  விட்டு வந்து  அரண்மனைக்கு  வர  தடை  போட்டு  விடுகிறார்.  20  வருடங்கள்  ஓடுது 


 இளைய  ராணிக்கு  இரண்டு  மகன்கள் .,  முதல்  ராணிக்கு  ஒரு  மகன் . அவன்  தான்  நாயகன் 


நாயகனுக்கு  இப்போதான்  தன்  ஃபிளாஸ்பேக்  கதை  சொல்லப்படுது . இப்போதே  மன்னரைப்போய்  சந்தித்து  நியாயம்  கேட்கிறேன்  என  கிள்மபும்போது  அம்மா  தடுத்து  விடுகிறாள்


  சில  நாட்கள்  கழித்து  மன்னர்  வேட்டையாட  அந்த  ஏரியாவுக்கு  வர்றார், ஒரு  ஆபத்தில்  மாட்டிக்கொள்கிறார். அவரை  நாயகன்  காப்பாற்றுகிறான்

அப்போது  ஒரு  விஷ  செடியின்  சாறு  பட்டு  மன்னரின்  கண்கள்  பார்வை  இழக்கின்றன. காக்கை  உட்கார  பனம்பழம்  விழுந்த  கதைதான் .

நாயகன்  கைது  செய்யப்படுகிறான். மன்னரின்  கண்  பார்வை  பறி  போனதுக்கு  காரணமாக  ஆனதுக்கு  தண்டனை  விதிக்கப்படுகிறது / அப்போது  அரண்மனை  வைத்தியர்  இதற்கு  ஒரு  பரிகாரம்  இருக்கிறது . நாகாவலி  எனும்  நாட்டில்  உள்ள  குலேப்  எனும்  மலரைகொண்டு  வந்தால்  அந்தச்சாறை  கண்களில்  விட்டு  பார்வை  பெறலாம்  என்கிறார்


  பொய்யான  ஜோதிடத்தைப்பொய்ப்பிப்பதற்காக  நாயகன்  அந்த  மலரைக்கொண்டு  வரக்கிளம்புகிறான்


நாயகன்  ஒரு  பாதையில்  போக    இரண்டாவது  ராணியின் மகன்கள்  இருவரும்  இதே  நோக்கோடு  பயணிக்கின்றனர் 


போகும்  வழியில்  லக்பேஷ்வா  எனும்  அழகி  நடத்தும்  சூதாட்ட  விடுதியில்   அடிமைகளாக  மாட்டிகொள்கின்றனர்  இளைய தாரத்து  மகன்கள் .  பகடை  விளையாட்டு  நடைபெறும் .  அதில்  டெபாசிட்  தொகையாக  10,000  பொன்கள்  வசூலிக்கப்படும் . கேட்ட  எண்கள்  சரியாகபோட்டு  விட்டால்  அழகி  ஜெயித்தவர்  ஆவார்.  போட்டி  இட்டவர்  அடிமை  ஆவார் .  பல  நாட்களாக  இந்த  விடுதியில்  அந்த  அழகி  தான்  வெற்றி  பெறுகிறார்


 இதில்  ஏதோ  சூது  இருக்கிறது  என  நாயகன்  அந்த  விடுதியில்   ஒளிந்திருந்து  வேவு  பார்த்து  ரகசியத்தை  க்ண்டு  பிடித்து  ஆட்டத்தில்  வெற்றி  பெறுகிறார். 


அந்த  அழகிக்கு  இரு  சகோத்ரிகள் , இருவரும்  வெவ்வேறு  தேசத்தின்  ராணிகள் . அவர்களையும்  ஜெயித்து  நாயகன்  எப்படி  மலரை  பெற்று  அப்பாவைக்காப்பாற்றுகிறான்  என்பதே  கதை 


மொத்த  படமான  ரெண்டே  முக்கால்  மணி  நேரத்தில் பகடை  சூதாட்டக்காட்சிகள்  மட்டும்  ஒரு  மணி  நேரம்  இழுத்து  விடுகிறது. சக்கரவர்த்தித்திருமகள்  படத்துல்  பாடல்  வரி  வடிவில்  கேள்விகள் , இதில்  நேரடியான  கேள்விகள் 



  நாயகனாக  எம் ஜி ஆர். வழக்கமான  எம்  ஜி  ஆர்  பட  டெம்ப்ளேட்  சீன்கள் குறைந்து வாண்டு  மாமா  எழுதும்  வீர  பிரதாபன்  கதை  ஃபார்முலாவில்  திரைக்கதை  பயணிக்கிறது


டி ஆர் ராஜகுமாரி , ராஜ  சுலோசனா , ஜி  வரலட்சுமி  மூவரும்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்கள் .


 சந்திரபாபு , கே ஏ  தங்கவேலு , , ஏ  கருணாநிதி காமெடிக்கு 


விஸ்வநாதன்  ராம  மூர்த்தி  இசையில்   12  பாடல்கள் , அதுல  சொக்கா  போட்ட  நவவாபு  செல்லாது  உன்  ஜவாபு  செம  ஹிட் 

சபாஷ்  டைரக்டர் ( டி ஆர்  ராமண்ணா)


1  திரைக்கதையில்  மசாலா  அய்ட்டங்கள்  கச்சிதமாக  சேர்த்து  போர்  அடிக்காமல்  சம்பவங்களை  கோர்த்து  சொன்னது 


2  பகடை  விளையாட்டு  ஒரு  டம்மி  சீன்  என்றாலும்  அதற்கான  பில்டப்  செம 


3  மூன்றாவது  ராணியின் கேள்விகளுக்கு  நாயகன்  அனாயசமாய்  பதில்  சொல்லும்  காட்சிகளில்  வசனகர்த்தா  உள்ளேன்  அய்யா  சொல்கிறார் 


  ரசித்த  வசனங்கள் ( அறிவுப்போட்டி  கேள்வி  பதிலகள் ) 


1 கடலின்  அலைகளை  எண்ண  முடியுமா?

 முடியும், பெண்களின்  மனதை  அளக்க  முடிந்தால் 


2  வெற்றிக்காக  போடப்படும்  பூ மாலை  அறிவுக்கா? அந்தஸ்துக்கா?

  சிங்காசனம்  மக்களுக்காகவா? மகாராணிக்காகவா?


2  நஞ்சினும்  கொடியது  எது?

 நயவஞ்சகம்  படைத்த  வஞ்சியர்  உள்ளம்


3  வாளை  விடக்கூரியது  எது ?


 மங்கையரின்  விழி அம்பு 


4  கவலைக்கு  மருந்து  எது ?


மது  மயக்கம்  கொண்டவனுக்கு  மது , மங்கையர்  பித்து  பிடித்தவனுக்கு  பெண் ,  வாரிசு  அற்றவனுக்கு  ம்ழலையின்  சிரிப்பு 


5  பெண்களூக்கு  எதிரி  ஆண்கள் தானே?


 இல்லை  அவர்க்ள்  இளமையும், அழகும்


6  கன்னிப்பெண்ணின்  சத்ரு ?


 நெருங்கி  வரும் கல்யாண  நாள் 


7  பெண்ணுக்கு  இன்பமும்  துன்பமும்  எப்போது  ஏற்படுகிறது ?


காதலிக்கும்போது 


8  பெண்களை  கோவைபப்ழம் , பூங்கொடி  என்  பலவிதமாக  வர்ணிக்கிறார்களே, ஆண்களை  ஏன்  வர்ணிப்பதில்லை ?

அழகுப்புகழ்ச்சியைக்கேட்டு ஆண்கள்  பூங்கொடி  போல  துவண்டு  விடுவதும்  இல்லை , கோவைப்பழம்  போல்  கண்ணிப்போவதும்  இல்லை 


9  கற்பு  என்பது  என்ன?


கற்பு  என்பது  ஒரு  விசித்திரமான  நெருப்பு  கணவர்  ஏற்றினால்  அது  தீபம், மற்றவர்  ஏற்றினால்  அது  தீ


10  ஒரு  பெண்ணை  ஆண்  எதற்கு  கல்யாணம்  செய்து  கொள்கிறான்?


ஊர்  விஷயங்களையும், உலக  விஷயங்களையும்  தெரிந்து  கொள்ள  ( ஊர்  வம்பை  ஓசில  தெரிஞ்சுக்க )


11  ஆட்சி   பீடத்துக்கு  ஏற்றவர்க்ள்  யார்? ஆண்களா? பெண்களா?


மக்கள்  ஆதரவு   எனும்  நூல்  மூலம்  விடப்படும்  பட்டம்  அது , யார்  வேண்டுமானாலும்  பறக்க  விடலாம்


12  அவனின்றி  ஒரு  அணுவும்  அசையாது  என்பது   வேதம் , விளக்கம் ?


 அனுபவம்  முந்தியது  , வேதம்  பிந்தியது 


?


ஆன்றோர்களின்  முது மொழியைக்கேட்டு  அவர்கள்  ஆசியைப்பெற்றவர்களுக்கு  அவன்  ஆண்டவன் , சிந்தித்துப்பார்த்து  தன்னை  சீர்  திருத்திக்கொள்ளும்  நாத்திகருக்கு   அவன்  அறிவாளி


 உலகத்தை  வெறூத்த  ஞானிகள்  சொல்வது  பொய்யா?


 உலகத்தை  வெறுப்பவன்  ஞானி  அல்ல   உலகத்தை  உணர்ந்தவன்தான்  ஞானி  


13  தாய்க்குப்பின்  தாரம்  என்பது  உண்மையா? எப்படி ?


  தாய்க்குப்பின்  ஆண்களைக்கண்டிப்பது  மனைவிதானே?


14 அரசன்  முதல் ஆண்டி  வரை  எல்லோராலும்  வெல்ல  முடிவது  எது? முடியாதது  எது ?


  விதியை  வெல்ல  முடியும்  மதியை  வெல்ல  முடியாது



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   குழந்தையால்  தானே  ஆபத்து ? மன்னர்  எதற்காக  ராணியை  நாடு  கடத்தனும் ? குழந்தையை  கவனிக்க  ஒரு  தாதியை  ரெடி  பண்ணி  ராணியை  அந்தப்புரத்துலயே  தங்க  வெச்சிருக்கலாமே? 


2 பகடை  சூதாட்டத்தில்  ஒரு  அழகி  எல்லாரையும்  ஜெயிக்கிறாள்.  தோற்றவர்களுக்கு  அந்த  ரகசியம்  தெரியும்,தாங்கள்  எப்படி  ஏமாற்றப்பட்டோம்  என்பதை  ஊர்  பூரா  பரப்பி  விட  மாட்டார்களா?  உலை  வாயை  மூடுனாலும்  ஊர்  வாயை  மூட  முடியாதே?


3  ஒவ்வொரு  நாட்டின்  இளவரசனும் பகடை  சூதாட்டத்தில்   தோற்கும்போது  அடிமை  ஆக  வேண்ட்ய  சூழல் . அப்போது  அந்த  சூதில்  நிகழந்த  தில்லுமுல்லுவை  சொல்லி  எதிர்க்க  மாட்டார்களா?


4  போட்டிகளில்  முதல்  கட்டமா  வீரப்போட்டினு  ஒரு  ஆள்  கூட  வாட்போர்  புரிவது  ஓக்கே , அறிவுப்போட்டி  என  சில  கேள்விகளுக்கு  பதில்  சொல்வது  கூட  ஓக்கே , கடைசி  போட்டியாக  புலியுடன்  மோதனும்னு  சொல்வது மடத்தனமா  இருக்கு . இதெல்லாம்  நடைமுறைல  சாத்தியமா? நல்ல  வேளை  சிறுத்தையை  விட  வேகமா  ஓட்டப்பந்தயத்துல  ஜெயிக்கனும்னு  போட்டி  வைக்கலை 


5   போட்டிகளில்  வென்றதால் நாயகனுக்கு  நல்ல  வரவேற்பு  மரியாதை . அங்கேயே  இரவு  தங்கிட்டு  காலைல  போலாமே?  நாயகன்  எதற்காக  லாட்ஜ்ல  தங்கறார்? ( அப்போதானே  எதிரிகள்  அந்த  மலரை    அபகரிக்க  முடியும்னா? ) 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  சூப்பர்  டூப்ப்ர்  ஹிட்  படம்.  குழந்தைகள்  பார்க்க  வேண்டிய  படம் ,  லயன் காமிக்ஸ் , முத்து  காமிக்ஸ்  படிக்கும்  சிறுவர்கள்  பார்க்கலாம் . ரேட்டிங்  2/75 / 5  






குலபகாவலி
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புடி. ஆர். ராமண்ணா
ஆர். ஆர். பிக்சர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்
சந்திரபாபு
ஏ. கருணாநிதி
கே. ஏ. தங்கவேலு
டி. ஆர். ராஜகுமாரி
ராஜசுலோச்சனா
ஜி. வரலட்சுமி
ஈ. வி. சரோஜா
வெளியீடுசூலை 291955[1]
நீளம்14998 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
a

இசை[தொகு]

படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்கள் இசையமைத்தனர். பாடல் வரிகளை தஞ்சை ராமையாதாஸ் எழுதினார்.[3][4]

#பாடல்பாடகர்கள்நீளம்
1."மயக்கும் மாலை"  ஜிக்கிஏ. எம். ராஜா4:27
2."ஞாபகமே நபி"  எஸ். சி. கிருஷ்ணன், நாகூர் அனிபா2:51
3."அச்சு நிமிர்ந்த வண்டி"  ஜே. பி. சந்திரபாபுஏ. ஜி. ரத்னமாலா3:12
4."வில்லேந்தும் வீரரேல்லாம்"  திருச்சி லோகநாதன்பி. லீலாஜி. கே. வெங்கடேசு6:33
5."மாய வலையில்"  டி. எம். சௌந்தரராஜன்1:13
6."வித்தார கள்ளியெல்லாம்"  டி. எம். சௌந்தரராஜன்1:29
7."கையை தொட்டதும்"  டி. எம். சௌந்தரராஜன், பி. லீலா2:37
8."நா சொக்கா போட்ட நவாபு"  ஜிக்கி3:36
9."ஆசையும் நேசமும்"  கே. ஜமுனா ராணி3:37
10."பகாவலி நாட்டிலே"  டி. எம். சௌந்தரராஜன்3:47
11."கண்ணாலே பேசும்"  ஜிக்கி3:54
12."அறிவுப் போட்டி" (வசனங்கள்)ம. கோ. இராமச்சந்திரன்3:26


0 comments: