Saturday, October 29, 2022

THE GOOD NURSE (2022) - சினிமா விமர்சனம் ( க்ரைம் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


இது  உண்மையில் நடந்த  சம்பவம். இதைப்படமாக்கும்போது எந்த  விதமான  எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ்  டெக்ரேஷன்ஸ்  எதுவும்  செய்யாமல்  ராவாக தந்திருப்பதால்  இது  பரபரப்பான   சைக்கோ  க்ரைம்  த்ரில்லராக  இல்லாமல்  ஸ்லோவாக  செல்லும்  திரைக்கதை  அமைப்பில்  இருக்கும்,  சீரியல்  கில்லரின்  கதை என்றாலும்  ரத்தம்  தெறிக்கும்  கொடூரக்காட்சிகள்  எதுவும்  இல்லாமல்  குடும்பத்துடன்  பார்க்கத்தக்க  க்ரைம்  த்ரில்லராக  இருப்ப்து  சிறப்பு 


நாயகி  ஒரு  தனியார்  ஹாஸ்பிடலில்  நர்ஸ் . இவர்  ஒரு  சிங்கிள்  மதர்.  2  குழந்தைகள்  உண்டு . இவ்ரது  இதயத்தில்  ஒரு  பிரச்சனை  இருக்கு .  இவரது  ஃபேமிலி  டாக்டர்  கொடுக்கும்  அட்வைஸ்  உடனடியாக   ஹார்ட்    சர்ஜரி  செய்தே  ஆகனும்,  எந்த  நேரத்திலும்  இதயம்  தன்  துடிப்பை  நிறுத்தி  விடலாம் என  எச்சரிக்கிறார். ஆனால்  நாயகி  ஹாஸ்பிடலில்  இன்னும்  பர்மனெண்ட்  ஆகவில்லை ,  அதற்கு  இன்னும்  4  மாதங்கள்  உள்ள்து , அதற்குப்பின்தான்  இன்சூரன்ஸ்  கவர்  ஆகும்  என்பதால்  ஆப்ரேஷன்  செய்து  கொள்வதை  தள்ளிப்போடுகிறார்


இப்போ  அந்த  ஹாஸ்பிடலுக்கு  புதிதாக  ஒரு  நபர்     பணிக்கு  வருகிறார். அவருடன்  நாயகி  நெருக்கமாகபப்ழகுகிறார். ஆதரவில்லாத  தன்  குழந்தைகளுக்கும்  ஆபத்தில்  இருக்கும்  தனக்கும்  இந்த  புதிய  நபரின் நட்பு  ஒரு  நல்ல  வடிகேல் என  அவள்  நினைக்கிறாள் .ஆனால் அவரது  வருகைக்குப்பின்  ஹாஸ்பிடலில்  மரணங்கள்  எண்ணிக்கை  அதிகரிக்கிறது .  அந்தப்புதிய  நபரின்  நடவடிக்கையில்  நாயகிக்கு  சந்தேகம்  வருகிறது  , இதற்குப்பின்  இந்தக்கதையில்  ஏற்படும்  திருப்பங்கள்  தான்  திரைகக்தை 


நாயகியாக ஜெசிகா  பிரமாதமான  நடிப்பு . அவரது  நடிப்புக்கு  கட்டியம்  கூறும் ஒரே  ஒரு  காட்சி  போதும். வீட்டில்  அவரது  குழந்தைகள்  வில்லனுடன்  பேசிக்கொண்டிருப்பதைப்பார்த்து  அதிர்ந்து  நீ  ரூமுக்குப்போ  என  அதட்டுவதும்  அதற்கு  வில்லன்  என்ன  ரீ ஆக்சன்  காட்டுவானோ  என  பதைபதைப்பதும்  பிரில்லியண்ட்  ஆக்டிங் 


வில்ல்னாக  எடிரெட்மனி  ஒரே  ஒரு  பார்வை  மூலமே  பயமுறுத்தும்  கேரக்டர். படத்தில்  ஒரு  சீனில்  கூட  இவர்  கொலை  செய்வதை  நேரடியான  காட்சியாக  காட்டி  இருக்க  மாட்டார்கள் . ரத்தம்  கூட   ஒரு  சொட்டு  சிந்துவது  இல்லை  , ஆனாலும்  பயம்  வரனும்., வர  வைத்திருக்கிறார். என்ன  ஒரு  அருமையான  நடிப்பு 


 புரியாத  புதிர்  படத்தில்  ஒரு  காட்சியில்  ரகுவரன்  ஐ நோ  ஐ நோ  என்ற  ஒரே  ஒரு  டயலாக்கை  37  முறை  வெவ்வேறு  பரிமாணத்தில்  சொல்வார் ( அதை  வைத்து  ஒரு  போட்டி  கூட  வைத்தார்கள் )  சிகப்பு  ரோஜாக்கள்  படத்தில்  ஸ்ரீ தேவி  கமலிடம்  என்ன  விஷயம் > என  கேட்கும்போது  சைக்கோத்தனமாக  நத்திங்  நத்திங்  என்பார்  பல  முறை . இந்த   இரண்டு  காட்சிகளுக்கும்  இணையான  ஒரு  காட்சி  இதில்  உண்டு.


 எதற்காக  இத்தனை   கொலைகளை  செய்தாய் ? என  போலீஸ்  விசார்ணை நடத்தும்போது   “ நான்  சொல்ல  மாட்டேன் “ என்ற  வ்ரியையே  திருப்பி  திருப்பி  சொல்லும்  காட்சி  அபாரம் 

நாயகி , வில்லன் , விசாரிக்கும்  போலீஸ்  ஆஃபிசர்ஸ்  இருவர் , குழந்தைகள்   இருவர்  என  ஆறு  முக்கியக்கதாபாத்திரங்களை  வைத்து  கண்ணியமான  க்ரைம்  டிராமாவை  உருவாக்கி  இருக்கிறார்கள் 

இசை  ஒளிப்பதிவு  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  குட் 


சபாஷ்  டைரக்டர்


1 க்ரைம் த்ரில்லர் , சைக்கோ  க்ரைம்  த்ரில்லர்  படங்களில்  வ்ழக்கமாக  இடம்  பெறும்  கொலை , கொள்ளை , ரத்தம் , பாலியல்  வன்முறை  என  எந்தவித  காட்சிகளும்  காட்டாமலேயே  க்ரைம்  டிராமா  எடுத்த  விதம்


2 வில்லனின்  கேரக்டர்  டிசைன். பொதுவா  வில்லன்  செய்யும்  அல்லது  செய்த  கொடூரத்தை  விஷூவலாக  கட்டித்தான்  அவனது   வில்லத்தனம்  நம்  மனதில்  பதிய  வைக்கப்படும், ஆனால்  இதில்   வில்லனின்  பார்வை , உடல்  மொழி  மூலமாகவே  பயத்தை ஏற்படுத்தியது 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1 தொடர்ந்து  9  ஹாஸ்பிடலில்  பணி  புரிந்த  வில்லன்  ஒரு  இட்த்தை  விட்டு  இன்னொரு  இடம்  போகும்போது  இண்ட்டர்வ்யூவில்  இதற்கு  முன்  ப்ணி  புரிந்த  இடத்தில்  க்ளியரன்ஸ்  ச்ர்ட்டிஃபிகேட் கேட்டு  இருக்க  மாட்டாங்களா? அட்லீஸ்ட்  ஃபோன்  ப்ண்ணி  விசாரிக்க  மாட்டாங்களா? ஏன் எனில்  ஒவ்வொரு  ஹாஸ்பிடலில்  ப்ணி  ஆற்றும்போதும்    கொலைகளை  அரங்கேற்றி  இருக்கிறான்


2  வில்லன்  மீது  நாயகி  சந்தேகப்படுவது  தெரிந்தும்  ஒரு  பாதுகாப்புக்காக  நாயகியை  ஏன்  வில்லன்  கொலை  செய்யலை ? ஒரு  முயற்சி  கூட  நடக்கலை ?

3   வில்லனைக்கைது  செய்த  போலீஸ்  அவன்  உண்மையை  சொல்லவில்லை  என்றதும்  உண்மை  கண்டறியும்  சோதனைக்கு  ஏன்  உட்படுத்தலை ?


4  ஹோட்டலில்  வில்லனை  சந்திக்கும்  நாயகி அவனிடம்  வாக்கு  மூலம்  கேட்பது  நமக்கே  செயற்கையா  தோணும்போது  வில்லனுக்கு  டவுட்  வராம  இருக்குமா? சந்தேகம்  வந்து  அவன்  கோபத்துடன்  கிளம்பியதும்  ஒரு  அஞ்சு  நிமிசம்  கேப்  கூட  விடாம  போலீஸ்  அங்கே  ஆஜர்  ஆகி  நாயகியை  சந்திப்பது  மெச்சூரிட்டி இல்லாத  போலீஸ்த்னம். வில்லன்  மறைந்திருந்து  அதை கண்காணிக்க  மாட்டானா? 


5  வில்லனின்  வயதான  அம்மாவை  ஒரு  ஹாஸ்பிடலில்  சரியா  ட்ரீட்மெண்ட்  தராததால்  மர்ணிக்கிறாள். இதனால  மனநிலை  பாதிக்கப்ப்ட்ட  வில்லன்  நர்சாக  ஹஸ்பிடல்களில்  அதே  வயதுள்ள  பெண்களை  கொலை  செய்கிறான்,  அவங்க  எந்த  விதத்திலும்  அவனை  எதிர்க்கலை  என  காரணமும்  சொல்கிறான்,  இதெல்லா   நமக்கே  புரியும் போது  நாயகியும் , போலீசும்  காரணம்  தெரியாமல்  புல்ம்புவது  ஏன் ? 


  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  2  மணி   நேரம்  ஓடும்  படம் , பொறுமையா  பார்க்கனும்,  ஹாஸ்பிடலில்  ஐ சி  யூ  வில்  நோயாளிகளைக்காப்பாற்ற  போரடும்  காட்சிகள்  கொஞ்சம்  போர்  அடிக்கும் .  கமர்ஷியல்  எலிமெண்ட்ஸ் இல்லாத  க்ரைம்  ஸ்டோரி . ரேட்டிங்  3 / 5 

 The Good Nurse

Director – Tobias Lindholm

Cast – Jessica Chastain, Eddie Redmayne, Noah Emmerich, Nnamdi Asomugha

 இண்டியன் எக்ஸ்பிரஸ்  Rating – 4/5


Good nurse.jpg
Official release poster
Directed byTobias Lindholm
Screenplay byKrysty Wilson-Cairns
Based onThe Good Nurse: A True Story of Medicine, Madness, and Murder
by Charles Graeber
Produced by
Starring
CinematographyJody Lee Lipes
Edited byAdam Nielsen
Music byBiosphere
Production
companies
Distributed byNetflix
Release dates
  • September 11, 2022 (TIFF)
  • October 19, 2022 (United States)
  • October 26, 2022 (Netflix)
Running time
121 minutes[1]
CountryUnited States
LanguageEnglish











   

0 comments: