RORSCHACH (2022) ( மலையாளம்) -சினிமா
விமர்சனம்
டைட்டிலுக்கு என்ன அர்த்தம்?னு கூகுள் சர்ச் பண்ணிப்பார்க்காம இந்தப்படத்தைப்பார்த்தாதான் சஸ்பென்ஸ் மெயிண்ட்டெயின் ஆகும்,
மம்முட்டியின் சொந்தப்படமான இது மிஸ்ட்ரி த்ரில்லரா? சைக்கலாஜிக்கல் த்ரில்லரா? ரிவஞ்ச் த்ரில்லரா? என்பதே கடைசி வரை சஸ்பென்சாகவே இருக்கும் என்பதுதான் இதன் பிளஸ் பாயிண்ட்
ஓப்பனிங் சீன்லயே ஹீரோ போலீஸ் ஸ்டேஷன் போய் தன் மனைவி காணாம போனதா புகார் தருகிறார்.
கார்ல போய்க்கிட்டு இருக்கும்போது ஒரு ராங் டர்ன் போய்ட்டேன் , அதனால பாதை மாறி ஒரு மரத்து மேல இடிச்ட்டேன். மயக்கம் தெளிஞ்சு பார்த்தா மனைவியைக்காணோம், அவ நிறை மாச கர்ப்பிணினு சொல்றார்
போலீஸ் உடனே அவரைக்கூட்டிட்டு ஸ்பாட்க்குப்போறாங்க
ஆனா அதுக்குப்பின் நடக்கும் பல சம்பவங்கள் முதல்ல சொன்ன கதைக்கும் இப்போ நடக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லாதது போலத்தோன்றும்
முன் பாதி முழுக்க ஸ்லோவாதான் திரைக்கதை நகரும், ஆனா பின் பாதில எல்லாத்துக்கும் விடை கிடைக்கும்
ஹீரோவா மம்முட்டி.
செமயான நடிப்பு. ஓப்பனிங் சீன்ல எந்த வித ஹீரோ பில்டப்பும் இல்லாம ரொம்ப சாதாரணமா அறிமுகம் ஆகி முழுபடத்தையும் தாங்கி நிற்கிறார்
பிந்து பணிக்கர் முதல் பாதியில் அமைதியா வந்து பின் பாதியில் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சீனில் தெறிக்க விடுகிறார். மம்முட்டிக்கு இணையான நடிப்பு
போலீஸ் கான்ஸ்டபிளாக ஜெகதீஷ் நல்ல நடிப்பு , ஒரு விசாரணையில் ஒரு வயதான லேடியிடம் விசாரணை பண்ணும்போது அவர் எப்படி இறந்தார்? என்பதற்கு ஒரு க்ளூ கிடைச்சிருக்கு. உண்மையை சொல்லிடுங்க என்றதும் அந்த லேடி ஒரு ஜூஸ் குடுத்து குடிங்க என்று சொல்லிட்டு அவர் குடிச்சதும் நான் தான் காபில விஷம் வெச்சுக்கொன்னேன் என்றதும்
கை நடுங்க தான் குடிச்ச டம்ளரை
வைக்கும் சீன் அடிபொலி
சீன்
சவுண்ட் டிசைனிங் பற்றி சொல்லியே ஆக வேண்டும், பிரமாதம் , பிஜிஎம் மிரட்டி இருக்காங்க .ஒளிப்பதிவு லொக்கேஷன் செலக்சன் எல்லாம் குட்
. அதே போல் எடிட்டிங்
., நான் லீனியர் கட் ஆக ஆங்காங்கே நிகழ்காலம் இறந்த காலம் என போய் போய் வருகிறது. அது திரைக்கதைக்கு பிளஸ் தான்
படம் முழுக்க ஆங்காங்கே வரும் ஆங்கிலப்பாடல் படமே
ஆங்கிலப்படமோ என எண்ண வைக்கிறது
மம்முட்டி ரசிகர்கள் மட்டுமல்ல த்ரில்லர் ரசிகர்கள்
அனைவரும் காண வேண்டிய படம்
சென்னையில் வெளியாகி
இருக்கும் தியேட்டர்களில் ஆங்கில சப் டைட்டிலுடன் ஓடுகிறது
நிசாம் பஷீர்
தான் இயக்கம். ஒரு
மெகா ஸ்டாரை வைத்து
எப்படி ஒரு த்ரில்லர்
மூவி தருவது என்ற
பதட்டமே இல்லாமல் கச்சிதமாக
இயக்கி இருக்கிறார்.திரைக்கதை ,
வசனம் சமீர் அப்துல்.
பஞ்ச் டயலாக் எல்லாம்
இல்லாமல் கதைக்கு என்ன
தேவையோ அதை மட்டும்
இயல்பாக தந்திருக்கிறார்
மிதுன் முகுந்தன்
இசை த்ரில்லர் படத்தை
தூக்கி நிறுத்துகிறது ,
பிஜிஎம் பல இடங்களில்
மிரட்டல்
நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு
கண்ணுக்குக்குளிர்ச்சி . பல லொக்கேஷன்களில் ஏரியல்
வ்யூ கச்சிதம்
கிரன் தாஸ் எடிட்டிங்கில் நான் லீனியர்
கட் ஆக பல
இடங்களில் சாமார்த்தியம் காட்டுகிறது
16 கோடி
ரூபாய் பட்ஜெட்டில் உருவான
இந்தப்பட,ம் முதல் நாளில் கேரளாவில் மட்டும்
5 கோடி வசூல்
செய்துள்ளது
0 comments:
Post a Comment