வெள்ளிவிழா நாயகன் மைக் மோகன் புதுமுகமாக அறிமுகம் ஆன முதல் படம் , பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்+மோகன்+ஷோபா+ரோஜா ரமணி இணைந்து நடித்த படம் இத்தனை பெருமை இருந்தும் இதை இத்தனை நாட்களா பார்க்காம எப்படி மிஸ் பண்ணோம்?னு நினைச்சுப்பார்த்தா 1981ல் கமல் -ஸ்ரீதேவி காம்போவில் ரிலீஸ் ஆன மீண்டும் கோகிலா-வும் கோகிலாவும் ஒரே கதையோ என்ற சந்தேகத்தில் பார்க்காம விட்டுட்டேன் போல , ஆனா இரண்டு கதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
இப்போ தான் கேஜிஎஃப் , காண்ட்டாரா என கன்னடப்படக்கள் செம ஹிட் ஆகி வருது . ஆனா தமிழகத்தில் சென்னையில் 100 நாட்கள் ஓடிய முதல் கன்னடப்படம் இதுதான். இது ஹிட் ஆனதும் மலையாளத்தில் 1983ல் ஊமைக்குயில் என ரீமேக் செய்யபப்ட்டது , பின் ஹிந்தியில் அவுர் ஏக் ப்ரேம் கஹானி என 1996ல் ரீமேக் செய்யப்பட்டது . இந்தப்படத்துக்காக சிறந்த ஒளிபதிவுக்கான தேசிய விருது பெற்றார் பாலுமகேந்திரா. மேலும் மாநில சிறந்த திரைக்கதைக்கான கர்நாடக மாநில அரசின் விருது பெற்றார்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஓப்பனிங் சீன்லயே ஹீரோவுக்கு உடம்பு சரி இல்லை / ஹாஸ்பிடல் போறார். அங்கே ஒரு லேடி டாக்டர் . அவரைப்பார்த்ததும் ஹீரோவுக்கு ஷாக், டாக்டர் என்னடான்னா அதிர்ச்சில சீட்டை விட்டு எழுந்திடறாங்க. எதோ ஃபிளாஸ்பேக் இருக்கும் போல
அப்படியே கட் பண்ணி ஃபிளாஸ்பேக்கை ஓப்பன் பண்னா.....
ஹீரோ ஒரு பேங்க்ல ஒர்க் பண்றார். புது ஊருக்கு ட்ரன்ஸ்ஃபர் ஆகி வர்றார். அங்கே குடி இருக்க வீடு வேணும், ந்ண்பன் கூட்டிட்டு வந்து ஒரு வீட்டில் குடி வைக்கிறார். ஹவுஸ் ஓனர் நாம குடி இருக்கும் வீட்டுக்குப்ப்க்கத்துல இருந்தாலே இம்சை தான், ஏதாவது குறை சொல்லிட்டே இருப்பார். ஆனா ஹீரோவுக்கு அந்தக்கவலை எல்லாம் இல்லை
அதே காம்பவுண்டில் நாயகியும் , தோழியும் குடி இருக்காங்க . ஹீரோவுக்கு தேவையான சாப்பாடு சமையல் பரிமாறல் எல்லாம் நாயகி தான்
பொதுவா காதல் என்பது அடிக்கடி நீங்க பார்க்கும் நபர் மேல் உண்டாகும் சாத்தியக்கூறுகள் கொண்டது. பெரும்பாலான காதல்கள் பக்கத்து வீடு , ஆஃபீசில் கூட ஒர்க் பண்ணும் நபர் , பஸ்சில் ரெகுலராக பயணம் செய்யும் நபர் இந்த மாதிரி தான் கனெக்சன் ஆகும்
நாயகியும் அதில் விதிவிலக்கு இல்லை . ஹீரோவின் அப்பாவித்தனம், யதார்த்தம் போன்ற குணங்களில் ஏதோ ஒன்றைப்பார்த்து காதலில் விழுகிறார்
தோழியிடம் அடிக்கடி நாயகனைப்பற்றிப்பேசிக்கொண்டிருக்கிறாள் . இருவரும் சேர்ந்து அடிக்கடி நாயகனை கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க
ஒரு நாள் தோழி ஊர்ல இல்லை . நாயகி , நாயகன் இருவரும் தனிமையில் . ஸ்பாஞ்ச்சும் , ஃபையரும் பக்கத்துல இருந்தா என்ன ஆகுமோ அது ஆகிடுது \
\
ஆனா அந்த கூடல் சம்பவத்துக்குப்பின் நாயகன் நடவடிக்கையில் மிகப்பெரிய மாற்றம், ஏதோ குற்ற உணர்வில் தவிக்கிறார்,சரியாப்பேசுவது இல்லை
நாயகிக்கு இது பெரிய அதிர்ச்சி. முன்பிருந்த காதலை விட இப்போ நாயகிக்கு கூடுதலா ஒரு அட்டாச்மெண்ட்
ஆனா திடீர்னு சொல்லாம , கொள்லாம ஹீரோ வீட்டைக்காலி பண்ணீட்டுப்போய்டறான்., சரி பேங்க்ல போய் விசாரிக்கலாம்னு நாயகி தன் தோழியுடன் போனா அங்கே இன்னொரு அதிர்ச்சி. அவரு ரிசைன் பண்ணிட்டுப்போய்ட்டதா ஹீரோவின் நண்பர் சொல்றார்
இதுக்கு மேல ஒரு பெண்ணால என்ன செய்ய முடியும் ?ஹீரோயின் படிச்சு டாக்டர் ஆகிடறா
ஃபிளாஸ்பேக் முடியுது
இப்போ ஹீரோ வீட்டுக்கு வாங்கனு இன்வைட் பண்றான்
ஹீரோயின் மனசுல பட்டர் ஃபிளை பறக்குது
ஆனா அவன் குடுத்த அட்ரஸ்ல போனா ஹீரோயினுக்கு அதிர்ச்சி / அங்கே நாயகியின் தோழி ஹீரோவின் , மனைவியா இருக்கா. அவங்க குழந்தைக்கு கோகிலானு பேர் வெச்சிருக்காங்க
ஹீரோ வீட்டுக்கு வெளில இருக்கும்போது ஹீரோயின் தன் தோழி கிட்டே பேசறா. ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டாங்க என்பதுதான் க்ளைமாக்ஸ்
ஹீரோவா கமல். நல்ல நாள்ல்யே நம்மாளு டாப்லெஸ்சாக ஒரு சீன்லயாவது வந்துடுவாரு , இந்தக்கதைல கேட்கவே வேணாம், இவருக்கு பாத்ரும்ல குளியல் சீன் எல்லாம் உண்டு
அந்தக்கால மலையாளப்படங்கள் எல்லாம் பார்த்தா கதைக்குத்தேவை இருக்கோ , இல்லையோ அதுல ஷகீலா குளிக்கற சீன் நிச்சயம் இடம் பெறும் .. கோடம்பாக்கத்தின் ஷகீலா என கமல் அந்தக்காலத்துலயே பேர் வாங்குனவரு. நீங்க அவர் நடிச்ச எந்தப்படம் வேணா பாருங்க டாப்லெஸ்சாக ஒரு சீனில் அவரோட ஜிம் பாடியைக்காட்டற மாதிரி வந்துடுவாரு
இவர் காட்டிய வ்ழியில் பின்னாளில் இதே ஃபார்முலாவில் டாப்லெஸ் ஆக ஒரு சீனாவது வருபவ்ர்கள் பட்டியல் சரத்குமார் , அர்ஜூன்
ஆனா நடிப்பில் கமல் வைரம். பல முகபவனைகளை அசால்ட்டா காட்றார்.க்ளைமாக்ஸ் சீனில் குற்ற உணர்ச்சியை நல்லா வெளிப்படுத்தி இருக்கார். இதுல இவருக்கு டான்ஸ் இல்லாதது ஒரு குறை
இன்னொரு ஹீரோவா , ஹீரோவுக்கு நண்பனா மைக் மோகன். யதார்த்தமான நடிப்பு . கதையில் இவருக்கு முக்கியத்துவம் இல்லை . வந்தவரை ஓக்கே
நாயகியா பாலுமகேந்திராவின் ஆஸ்தான நாயகி ஷோபா. நல்ல நடிப்பு, குறும்புத்தனம் மிக்க கண்கள் . டாக்டருக்கான கம்பீரம் மட்டும் ச ரியா வரலை
நாயகியின் தோழியா ரோஜா ரமணி, இவர் நடிச்ச படத்தை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. குட் ஆக்டிங் நல்ல முகவெட்டு
நான்கு கேரக்டர்கள் தான் பிரதானம் என்பதால் ஒரு மெலோ ட்ராமா எஃபக்ட் உருவாவதை த விர்க்க முடியவில்லை
சபாஷ் டைரக்டர்
1 நாயகிக்கு மட்டும் தான் நாயகன் மேல் அதீத காதல், நாயகனுக்குக்காதல் இல்லை என்பதை தெளிவாக திரைக்கதையில் கையாண்ட விதம்
2 ஹீரோ - ஹீரோயின் இருவரும் சந்திக்கும் ஒவ்வொரு காட்சியுமே ரசிக்கும்படி எடுத்தது
3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஹீரோ பாத்ரூம்ல பாடிக்கிட்டே குளிக்கறாரு. ஹீரோயின், தோழி இருவரும் பாத்ரூம் வெளியே கதவுக்குப்பக்கம் நின்னு பாடலைக்கேட்டு கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க... இதுவரை ஓக்கே. அனா ஷவர் நிறுத்தற சத்தம் கேட்டதும் டக்னு அவங்க கிளம்பி இருக்கலாமே? ஹீரோ துண்டால் உடலை துவட்டிட்டு வெளில வரும் வரை அங்கேயெ இருந்து மாட்டிக்கறாங்க . பெண்கள் அவ்ளோ உஷார் இல்லாதவங்களா? என்ன? ஹீரோ டக்னு கதவைத்திறந்தார்னாலாவது சால்ஜாப் சொல்லலாம்,
2 ஒரு பிரம்மச்சரியின் வீட்டுக்குள் அல்லது ரூமுக்குள் ஒரு பெண் நுழையும் முன் ஒரு அறீவிப்பு கொடுத்துட்டுதான் இந்தக்காலத்து மாடர்ன் கேர்ள்சே உள்ளே போறாங்க . 1977 கால கட்டத்தில் ஹீரோயின் அசால்ட்டா உள்ளே போறார். அப்போ ஹீரோ சரியா டிரஸ் பண்ணாம அரைகுறையா இருப்பதைப்பார்க்கறார். இது முதல் முறைன்னா பரவால்லை , ஒவ்வொரு முறையும் இது நடக்குது
3 என்னதான் காதல் மயக்கத்தில் இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு தான் விரும்பும் ஆண் தன்னை விரும்பறானா? இல்லையா? என்பது தெரியாமயா இருக்கும்? ஒரு முறை கூட வாய் விட்டு ஐ லவ் யூ சொல்லாத ஹீரோவிடம் ஹீரோயின் தன்னை அர்ப்பணிப்பது எப்படி ?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மலையாளப்படங்கள் , விருதுப்படங்கள் பார்த்துப்பழக்கம் உள்ளவர்கள் பார்க்கலாம், யூ ட்யூப்ல கிடைக்குது ரேட்டிங் 2.5 / 5
Kokila | |
---|---|
Directed by | Balu Mahendra |
Written by | Balu Mahendra |
Produced by | T. Motcham Fernando |
Starring | |
Cinematography | Balu Mahendra |
Edited by | Umesh Kulkarni |
Music by | Salil Chowdhury |
Production company | Commercial Films |
Distributed by | G.N. Films |
Release date |
|
Running time | 140 minutes |
Country | India |
Language | Kannada |
0 comments:
Post a Comment