ப்ரொடியூசர் டைரக்டர் கிட்டே நாடோடித்தென்றல் , மதராசப்பட்டிணம், இந்த ரெண்டு பட டிவிடியையும் கொடுத்து சி கா நடிச்ச மிஸ்டர் லோக்கல் பட டிவிடியையும் குடுத்து இந்த மாதிரி ஒரு படம் வேணும்னு சொல்லிட்டாங்க போல \எஃப் டி எஃப் எஸ் ஷோ 100 ரூபா டிக்கெட் 200 ரூபாக்கு வித்தாங்க ,அநேகமா இன்னைக்கு நைட்டே 100 ரூபா டிக்கெட்டை 50 ரூபாக்கு விக்கலாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோ ஒரு ஸ்கூல்ல வாத்தியார்.அதே ஸ்கூலுக்கு ஹீரோயின் டீச்சரா வர்றாங்க . இவங்க ஃபாரீன் லேடி . பார்த்ததுமே ஹீரோக்கு லவ் வந்துடுது . ப்ரப்போஸ் பண்றாரு. என்ன காரணத்துக்காக என்னை லவ் பண்றே?னு ஹீரோயின் புத்திசாலித்தனமா கேட்குது . படம் முடியும் வரை ஹீரோ அதுக்கு பதில் சொல்லவே இல்லை
ஒரு சீன்ல ஹீரோ ஒரு மக்கு ஸ்டூடண்ட்க்கு ட்யூஷன் சொல்லித்தர்றாரு. அது ஒரு வாத்தியாரா அவரோட கடமை தானே? அதைப்பார்த்ததும் அந்த பேக்கு ஹீரோயினுக்கு ஹீரோ மேல லவ் வந்துடுது
ஹீரோவோட அப்பா பிரிட்டிஷ்க்காரனைக்கண்டாலே பிடிக்காதவர். காரணம் அவரோட அப்பாவை அதாவது ஹீரோவோட தாத்தாவைக்கொன்றதே ஒரு பிரிட்டிஷ் காரன் தான்
இவங்க காதல் என்ன ஆச்சு ? என்பதுதான் மிச்ச மீதி கதை
ஹீரோவா சிவகார்த்திகேயன். அலட்ட்சிக்காம வர்றார். கடந்த 2 படங்களின் வெற்றி அவர் முகத்தில் பொலிவையும், தன்னம்பிக்கையையும் தந்திருக்கு . பிரமாதமா புதுப்புதுன் டான்ஸ் ஸ்டெப்ஸ் எல்லாம் போட்டுக்கலக்கறார். ஆனா ஒரு டவுட், இவரது சொந்த ஸ்டைல் டான்ஸே நல்லாதானே இருக்கு ? ஏன் விஜய் டான்சை அட்லீ வேலை பண்றாரு தெரியல
ஹீரோயினா மரியா. இவங்க நிஜமாலுமே ஃபாரீன் பொண்ணா? தெரியல, ஆனா பார்க்க நல்லாதான் இருக்காங்க . டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் சிலது ஒர்க்கவுட் ஆகலை . லவ் போர்சன்ல பிரமாதமா பண்றவங்க செண்ட்டிமெண்ட் சீன்களில் கொஞ்சம் டொக்கு வைக்கறாங்க
ஹீரோவோட அப்பாவா சத்யராஜ். இவரோட கேரக்டர் டிசைன் சீரியசா? காமெடியா? சீரியஸ் கலந்த காமெடியா?னு டைரக்டருக்கே ஒரு குழப்பம்
பிரேம்ஜி அமரந்தான் வில்லன். யாரும் சிரிக்க வேணாம், ஆள் கொரானா காய்ச்சல்ல இளைச்ச கொக்கி குமார் மாதிரி இருக்கார் .மொக்கை காமெடி எடுபடலை. பல சீன்கள் கடுப்பைக்கிளப்புது . இயக்குநர் வெங்கட் பிரபு படங்களில் மட்டும் தான் இவரால சைன் பண்ண முடியுது
இசை தமன் . 3 பாடல்கள் செம ஹிட்டு . அதுக்கான டான்ஸ் எல்லாம் கலக்கல் . ஒளிப்பதிவு லொக்கேஷன் கள் எல்லாம் குட்
ரசித்த வசனங்கள்
1 ஜாதி முக்கியம் இல்லை நமக்கு , புரிஞ்சுதா?
ஆமாங்க , மதமும்தான் முக்கியம்
2 ஊர் மக்கள் நான் சொல்றதை ஃபாலோ பண்ணுங்க
ட்விட்டர்ல இன்ஸ்டாகிராம்ல ஃபாலோ பண்ணச்சொன்னா பண்ணலாம், நீங்க சொல்றதை எல்லாம் ஃபாலோ பண்ண முடியாது
3 எனக்கு ஒரு பிரச்சனை -னா என் ஃபிரண்ட்ஸ் ஓடி வருவாங்க , பிரச்சனையைத்தீர்க்க அல்ல, அதைப்பார்த்து எஞ்சாய் பண்ண
4 காலைல எந்திரிச்சாலே உடனே டிப்ரஷன் ஸ்டார்ட் ஆகிடுது, இதுக்கு என்ன தீர்வு ?
காலைல எந்திரிக்காத
5 டேய் , இந்த லவ் லெட்டர்ல அந்த லைன்ஸ் எல்லாம் எங்கே கத்துக்கிட்டே? துக்ளியூண்டு பையனா இருக்கே?
கொரியன் மூவி ஓ டி டி ல பார்த்தப்போ சப் டைட்டில் ஓடுச்சு, அதுல கத்துக்கிட்டது
6 பசங்களை மதிக்கற அப்பாக்கள் லிஸ்ட் எடுக்கச்சொன்னா அதுல என் பேருதான் முதல்ல வரும் , ஏன்னு சொல்லு பார்ப்போம்
ஏன்னா அந்த லிஸ்ட்டை எழுதறதே நீங்கதான்
7 ஏன் என்னை லவ் பண்றே?னு ரீசன் கேட்கறா
லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு சொல்லு
ஆனா அஞ்சாவது சைட்ல தானே லவ்வே வந்துச்சு
8 உலகம் பூரா இந்த பாய் பெஸ்டி தொல்லை தாங்கலை . எல்லாப்பொண்ணுங்களுக்கும் பாய் பெஸ்டி இருக்கானுங்க
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அடுத்த வாரம் எப்படியும் ஓ டி டி ல ரிலீஸ் ஆகிடும், அப்போப்பார்த்துக்கலாம் அவசரம் இல்லை
Prince | |
---|---|
Directed by | Anudeep KV |
Written by | Anudeep KV |
Produced by |
|
Starring |
|
Cinematography | Manoj Paramahamsa |
Edited by | Praveen K. L. |
Music by | Thaman S |
Production companies |
|
Distributed by | Suresh Productions Gopuram Cinemas |
Release date | 21 October 2022 |
Running time | 143 minutes |
Country | India |
Languages |
|
0 comments:
Post a Comment