சூப்பர் ஹிட் படமோ , சுமார் ரகப்படமோ , டப்பாப்படமோ கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரிலீஸ் ஆகும் ஒரு படத்தில் காதல் காட்சிகள் மட்டும் கவிநயத்துடன் இருக்கும்., மிக தைரியமாக நாம் தியேட்டரில் பார்க்கலாம் ( விதி விலக்கு நடு நிசி நாய்கள் ) / விரல் வித்தை நடிகர் என கிண்டல் செய்யப்படும் சிம்பு ரொம்ப டீசண்ட்டாக நடித்த படங்கள் கோவில் , தொட்டி ஜெயா , விண்ணைத்தாண்டி வருவாயா. ,மாநாடு இதில் மூணாவதா சொன்ன படம் பிரமாதமான வெற்றிப்படம், இவர்கள் இருவரும் இணையும் படம் என்பதாலும் ரைட்டர் ஜெயமோகன் கதை வசனம் என்பதாலும் இதற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறிய்து . எப்படி ரிசல்ட்னு பார்ப்போம்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோ ஒரு கிராமத்துல முள் காட்டுல முள் வெட்டிக்கிட்டு இருக்காரு, சாரி விறகு வெட்டிட்டு இருக்காரு .அவரு குடும்பம் ரொம்ப ஏழ்மையானது. திடீர்னு அவ்ர் வெட்டிப்போட்ட விறகு தீ விபத்துக்கு ஆளாகுது / விட்டாப்போதும்னு ஓடி வந்துடறாரு .
தீ விபத்துக்கு ஹீரோதான் காரணம், நஷ்ட ஈடு தரனும்னு தகராறு பண்ணிட்டுப்போறாரு ஓனரு . எந்தப்பிர்ச்சனை வந்தாலும் இருந்து அதை ஃபேஸ் ப்ண்ணனும்கற அடிப்படை அறிவு கூட இல்லாம ஹீரோ ஊரை விட்டு ஓடிப்போலாம்னு முடிவு பண்றாரு
அவரா அப்படி முடிவெடுத்தா ஹீரோயிசத்துக்கு அவமானம்னு ஹீரோவோட அம்மா அவரை வ்ற்புறுத்தற மாதிரி காட்டிடறாங்க
அந்த ஊர்க்காரர் ஒருவர் மும்பைல புரோட்டோக்கடைல வேலை செய்யறவ்ர் அங்கே போ உனக்கு வேலை போட்டுத்தரச்சொல்றேன்னு ரெக்கமண்ட் பண்றார்
ஹீரோ மும்பை போறார். அந்த புரோட்டோக்கடைல வேலைக்கு சேர்றார். அங்காடித்தெரு படம் மாதிரி ஒரு தரமான கதையைத்தான் ஜெயமோகன் எழுதிட்டாரோனு ஆச்சரியமா யோசிக்கும்போது சிகப்பு ரோஜாக்கள் ஹீரோ - ஹீரோயின் லவ் போர்சன் பார்த்து பட்டி டிங்கரிங் ப்ண்ணி ஜவுளிக்கடைல ஹீரோயின் சேல்ஸ் விமனா இருக்கா. அங்கே ஹீரோ டிரஸ் எடுக்கப்போறாருனு லவ் போர்சனை இண்ட்ர்ஸ்ட்டாதான் எடுத்திருக்காங்க
இதுல ஒரு புரட்சி வேற ஹீரோவுக்கு 21 வயசு ஹீரோயினுக்கு 25 வயசு ( க வுதம் மேனனின் பெரும்பாலான படங்களில் ஹீரோ அடுத்தவன் சம்சாரத்தைத்தான் லவ் பண்ணுவாரு அல்லது சீனிய்ர் ஹீரோயினை லவ்வுவாரு )
மெயின் கதைக்கு வருவோம். புரோட்டோக்க்டைங்கறது பார்ட் டைம் ஜாப் தான் மெயின் ஜாப் ஆள் கடத்தல் , அடிதடி , வெட்டு , குத்து , கொலை . இரண்டு கேங்க்ஸ்டர் மோதல்
மேலிடம் இரு கேங்க்ஸ்டர் லீடரையும் கூப்பிட்டு சமாதானமா போகச்சொல்றாங்க . ஹீரோக்கு பிரமோஷன் கிடைக்குது . ஒரு கேங்க்ஸ்டர்க்கு இவர்தான் பாடிகார்டு
பாடிகார்டா இருந்த இ வர் எப்படி தாதா ஆனார் என்பதுதான் கதை .
ஹீரோவா சிம்பு . டயட்ல இளைச்சு ஆளே மாறி இருக்கார் . ஓப்பனிங் சீன்ல இருந்து முதல் ஒரு மணி நேரம் வரை அவரு இளமையான தோற்றம் அருமை . ஒரு மாதிரி சாய்ச்ச மாதிரி நடபப்து மேனரிசமா ஸ்டைலா தெர்ல ஆனா நல்லாலை .நாயகியுடனான ரொமாண்டிக் போர்சனில் கலக்கறார். தாதா ஆனபின் பெரிய அளவில் அவர் நடிப்பு கவரலை . கார்ணம் யதார்த்தம் மிஸ்சிங்
ஹீரோயினா சித்தி இட்னானி ... இவரை ச்ருக்கமா சித்தி...னு கூப்பிடுவாங்களா? புதுமுகம் மாதிரியே தெரியலை. பிரமாதமான நடிப்பு கண்ணியமான அழகு
அம்மாவாக ராதிகா வழக்கமான டெம்ப்ளேட் அம்மா ரோல் . முக்கியமான ட்விஸ்ட் ரோலில் அப்புக்குட்டி ., ஓக்கே ரகம் .
ஒரு மாறுபட்ட கேரக்டரில் நீரஜ் மாதவ். நல்லா பண்ணி இருக்கார்
உயரம் குறைவான வில்லன் ரோலில் வருபவர் செம மிரட்டல். ஃபைட் சீக்வன்ஸ்லயும் நல்லாப்பண்ணி இருக்கார்
இசை பெரிய பலம் ., 2 பாட்டு செம ஹிட்டு . தாமரை எழுதிய மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே செம ஹிட் மெலோடி அதுக்கான பிக்சரைசேஷனை இன்னும் பிர்மாதப்படுத்தி இருக்கலாம் , சிம்புவின் குரலில் வரும் காலத்துக்கும் நீ வேண்டும் நல்ல பாட்டு
ஹீரோ - ஹீரோயின் லவ் போர்சன் அருமை . அதே போல நீரஜ் மாதவ் லவ் போர்சனும் இன்னும் விரிவாகக்காட்டி இருக்கலாம்
வில்லனின் இடத்தில் ஹீரோயினை கடத்தி வைத்து வில்லன் மேல் தவறான எண்ணத்தை ஹீரோவுக்கு ஏற்படுத்தி தூண்டும் இடம் நல்ல ட்விஸ்ட்
அதே போல் நீரஜ் மாதவின் காதலியை முதலாளி பலவந்தப்ப்டுத்த முயல அப்போ நிகழும் கொலையும் பர்ஃபெக்ட்
ஒளிப்பதிவு , எடிட்டிங் , பிஜிஎம் எல்லாம் நல்ல உழைப்பு . வசனம் ஓக்கே ரகம் ஆனால் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்
ரசித்த வசனங்கள்
1 இருட்டா இருந்தாலும் வெட்டுன ஸ்டைல்லயே தமிழன்னு தெரியுது
2 படுக்கைல பாம்பை வெச்சுக்கிட்டே மேல பாயைப்போட்டு படுப்பதும் ஒரு விதத்துல ஜாக்கிரதையா இருக்க வைக்குது . த்ரில்தான்
3 யாரையாவது சாமியாக்கும்பிடனும்னா ஜட்ஜைத்தான் கும்பிடனும். ஒரு சாதா சிவில் கேசையே 30 வருசம் இழுக்கறாங்க . அவங்களாலதான் நமக்குப்பொழைபு ஓடுது
4 நீ ரெண்டு மூணு த்டவை கடைக்கு வந்தா நான் மயங்கிட்வேன்னு நினைச்சியா?
அதான் நான் மய்ங்கிட்டேன் இல்ல?
5 ரகசியமான பகை இன்னும் ஆபத்தானது
6 எவன் முன்னாலயும் என்னால அவமானப்பட முடியாது , அதனால இந்த வேலை எனக்கு செட் ஆகாது
7 பணம் இல்லைன்னா தரைல கிடக்குற சாக்கு மாதிரிதானே மதிக்கறாங்க ? கைல ஆயுதம் இருந்தாவேணா பயம் கலந்த மரியாதை கிடைக்குது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஓப்பனிங்ல ஹீரோகிட்டே 10,000 ரூபா பணம் குடுத்து புது டிரஸ் , சூட்கேஸ் எல்லாம் வாங்கிக்கோ என ஒருவர் சொல்றார். ஹீரோவும் வாங்கிடறார். ஆனா ஹீரோயின் ஜவுளிக்கடைக்கு ஹீரோ போகனுமே என்பதற்காக என் கிட்டே ரெண்டு ஜட்டிதான் இருக்கு என ஒரு வசனம். ஏன் அந்த 10,000 ரூபா பணத்துல அப்ப எடுக்கலையா?
2 ஹீரோ சிம்பு சட்டைல பின்னால 17 முள் குத்தி இருக்கு , சட்டையைக்கழட்டுனா யதார்த்தத்துல பாதி கீழே விழனும். 9 முள் தான் இருக்கனும் ஆனா சர்ட் கழட்டுனதும் அது டபுள் ஆகி 37 முள் இருக்கு
3 மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே பாடல் காட்சிக்கான லீடு சீனில் அந்த அடியாளின் சம்சாரம் பக்கத்துல ஆள் யாரும் இல்லையே?>னு கேட்க அவனும் இல்லைனு பொய் சொல்றான் , உடனே அந்த லேடி பாடுது . அது வீடியோ கால் . அவளுக்கு தெரியலையா? . பாட்டு முடியும் டைமில் ஆள் சத்தம் கேட்குதே?னு ஒரு சமாளிப்பு வசனம் வேற .. வீடியோ காலில் தெளிவா ஆட்கள் தெரியுமே?
4 நாம நிஜமா நேசிக்கும் ஒரு பெண்ணை எவனாவது பாலியல் வன்முறைக்கு ஆளாக்குனா நம் கண் முன்னால சம்பவம் நட்ந்தா நாம உடனே பொட்டுனு அவன் ம்ண்டைல போடுவோம், ஆனா இதுல நீரஜ் 10 நிமிசம் யோசிக்கறாரு /...பொறுத்துபொறுத்துப்பார்த்து அந்த காதலியே தாக்குதல் நடத்துது . ரொம்ப செயற்கையான சீன்
5 க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முன்னே வில்லன் தேடிட்டு இருந்த ஹீரோ வில்லன் கிட்டே மாட்றார். வில்லன் கைல துப்பாக்கி. டக்னு சுடாம 2 பக்கம் டயலாக் பேசிட்டு இருக்காரு , ஹீரோ சுடறாரு. வில்லன் மாட்டிக்கறான்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பலரும் சமூக வலைத்தளங்களில் கழுவி ஊத்தியது போல இது டப்பாப்படம் எல்லாம் இல்லை , பார்க்கலாம் ரகம்தான் . எதிர்பார்க்கும் விகடன் மார்க் 41 ரேட்டிங் 2. 75 / 5
Vendhu Thanindhathu Kaadu Part I: The Kindling | |
---|---|
Directed by | Gautham Vasudev Menon |
Screenplay by | Gautham Vasudev Menon |
Story by | B. Jeyamohan |
Produced by | Ishari K. Ganesh |
Starring | Silambarasan Siddhi Idnani |
Cinematography | Siddhartha Nuni |
Edited by | Anthony |
Music by | A. R. Rahman |
Production company | |
Distributed by | Red Giant Movies |
Release date |
|
Country | India |
Language | Tamil |
Budget | ₹30 crore[1] |
Box office | est. ₹60 crore[2] |
0 comments:
Post a Comment