Sunday, October 02, 2022

ஆயிரம் பூக்கள் மலரட்டும் (1986) (தமிழ்)- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா)


 ஒரு  திரைப்பட  விழாவில்  மதர்லேண்ட்  பிக்சர்ஸ்  கோவைத்தம்பி  பேசும்போது  இந்தப்படத்தின்  தோல்விக்கு பொண்டாட்டி  தன்  புருசனையே  கொலை  செய்யும்  க்ளைமாக்ஸ்  தான்  காரணம்,  தமிழ்ப்பெண்கள்  புருசனைக்கொலை  செய்வதை  ஏத்துக்கலை  என  சொல்லி  இருந்தார். அதைக்கேட்டு  நான்  ஜெர்க் ஆகிட்டேன்.,  பொதுவா  இந்தப்பொண்டாட்டிங்க  புருசனை  காலம்  காலமா  கொலையா  கொன்னுட்டு இருக்காங்க , அப்படி  இருக்கும்போது  இந்த  ஜூஜூபி  விஷயத்துக்காக  ஒரு படத்தை  ஏத்துக்கலையா? என்ன?னு  பார்ப்போம்னு  களம்  இறங்குனேன்

ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஹீரோ ஒரு  டாக்டர் .  ஹாஸ்பிடல்ல  அவரு  ட்ரீட்மெண்ட்  தர்ற  மாதிரி  கண்ணுக்கு  எட்டுன  தூரம்  வரைக்காட்சிகளே  இல்லை . இவரு  குடி  இருக்கற  வீட்டில் ஹவுஸ்  ஓனர்  பொண்ணு  பாட்டுப்பாடிட்டு  சுத்திட்டு  இருக்கு . இவர்  அந்தப்பொண்ணை  சுத்திட்டு  இருக்காரு . இவரை  இன்னொரு  பொண்ணு  சுத்திட்டு  இருக்கு . இந்த  முக்  கேன காதல்  கதைல  எந்தக்கேனம்  காதல்  ஜெயிச்சுச்சு  என்பது  க்ளைமாக்ஸ் 


 ஹீரோவா  மைக்  மோகன் . . இவரு  பாடகராவே    காலம்  பூரா  நடிச்சு  ஹிட்  கொடுத்துடலாம்னு  நினைச்சு  இருப்பார்  போல  ,. டாக்டர்  கேரக்டர்  என்றதும்  திணறுகிறார்


பொதுவா  நிஜ  வாழ்க்கைல  பொண்ணு  அழகா  இருந்தாப்போதும்  , பசங்க  பின்னாடியே  போவானுங்க , ஆனா  சினிமால  மட்டும்  தான்  ஹீரோயின்  வீணை  வாசிக்கற  அழகு ,  ஓவியம்  வரையும்  அழகு  , பாட்டுப்பாடும்  அழகுனு  ஹீரோ  மயங்கறார்னு  ரீல்  விட்டுட்டே  இருக்காங்க 


வாய்  பேச  முடியாத  நாயகியா  சீதா . இவருக்கு  ஒரு  ஃபிளாஸ் பேக்  இவர்  ஏன்  பேச  முடியலைனு ?


 காலேஜ்ல  படிக்கும்போது  நட்ட  நடு  ராத்திரில  மார்ச்வரில  போய்  பிணங்களின்  முகத்தின்  மேல்  எலுமிச்சம்பழம்  வெச்சுட்டு  வரனும்  . இதான்  பந்தயம் .  சீதா   அப்படி    மார்ச்வரி  போனப்போ  காலேஜ்  ஃபிரண்ட்  ஒருத்தன்  பிணம்  மாதிரி   வேஷம்  போட்டுட்டு  சீதா  வந்ததும்  பே  அப்டினு  பயமுறுத்தறான். அந்த  அதிர்ச்சில   சீதாவால  பேச  முடியாம  போய்டுது 


 இந்த  அதிர்ச்சிக்கு  இன்னொரு  அதிர்ச்சி  வைத்தியம்  கொடுத்தா  சரி  ஆகிடும் , பேசிடுவாருனு  ஹீரோ  சொல்றாரு . அதுக்கான  ஐடியாவைக்கேட்டா  ஆஸ்கார்  விருதுக்குழு  கின்னஸ்  ரெக்கார்டு  குழு  எல்லாம்  மயங்கி  விழுந்துடும் 


அதாவது சீதாவை  பரிசல்ல  ஆத்துல  எங்கயோ  கூட்டிட்டுப்போறாரு  ஹீரோ ,  அங்கே  ஆள்  இல்லாத  தனிமை  இடத்துல  அவரை  ரேப்  பண்ண  ட்ரை  பண்றதா  டிராமா  போடறாரு  .  எந்தெப்பெண்ணுக்கும்  அவ  கற்புக்கு  களங்கம்  வர்றதுதான்  பெரிய  அதிர்ச்சி .. அப்டினு  கேவலமா  ஒரு  டயலாக்  வேற .  அப்படி  ரேப்  அட்டெம்ப்ட்  பண்ணதும்  சீதாக்கு  பேச்சு  வந்துடுது 


 நல்ல  வேளை . என்  வாழ்க்கைல  பேச்சு   வர்றதுக்கு  உங்க  இந்த  ட்ரீட்மெண்ட்  தான்  காரணம்  , ரொம்ப  நன்றி,  இதுக்கு  பிரதி  உபகாரமா  நிஜமாவே  நீங்க  வேணா  ஒரு  வாட்டி  என்னைக்கெடுத்துக்குங்கனு  சொல்லலை  நல்ல  வேளை 


ஆக்சுவலா  அட்டெம்ப்ட்  ரேப்  கேஸ்ல  ஹீரோவை  10  வருசம்  உள்ளே  போட்டிருக்கனும்   தப்பிச்ட்டாரு 


இப்போ  சீதா  ஒரு  ஆளை  லவ்  பண்றாரே  அந்தக்கதையைப்பார்ப்போம்


வில்லன்  ஒரு  விமனைசர்.  பொண்ணுங்களை  லவ்  பண்ண  வேண்டியது , மேரேஜ்  பண்றேன்னு  ஏமாத்தி  வரதட்சணை  வாங்க  வேண்டியது .  பின்  நைசா  பணம்   நகையோட  எஸ்  ஆவது  இதுதான்  அவன்  பிளான் 


க்ளைமாக்ஸ்  ல  சீதாவுக்கும்  வில்லனுக்கும்  மேரேஜ்  நடக்க  இருக்கு . மாப்ளை  வீட்டுக்காரங்க  மாப்ளை  ரூம்ல  இருக்காங்க , பொண்ணும்  பொண்ணு  வீட்டுக்காரங்களும்  பொண்ணு  ரூம்ல  இருக்காங்க 


 அப்போ  ஒரு  ஆள்  வந்து  மாப்ளையை  மிரட்றான்.  நீ ஒரு  டுபாக்கூர்னு  தெரியும் அதுக்கான  ஆதாரம்  என் கிட்டே  இருக்கு , எனக்கு  இவ்ளோ  பணம்  தரனும், இல்லைன்னா  எல்லாத்தையும்  பெண்  வீட்ல  சொல்லிடுவேன்கறான்


அப்போ  வில்லனான  மாப்ளை  “  ஓட்டை வாயை  வெச்சுட்டு   கம்முனுஜ்  இருக்காம அவன்  லீலைகள்  பூரா  உளறிடறான்  ., அதை  பக்கத்து  ரூம்ல  இருக்கற  பொண்ணு  கேட்டுட்டே  இருக்கு . அப்பவே  கல்யாணத்தை  நிறுத்தி  இக்ருக்கனுமில்ல? 


 அதை  விட்டுட்டு  அடுத்த  நாள்  காலைல  தாலி  கட்ற  வரை  வெயிட்  பண்ணி  குத்து  விளக்கை  எடுத்து  ஒரே  குத்து  . குத்திட்டு 


 டேய்  நீ  நேத்து  பேசிட்டு  இருந்ததை  என்  ரெண்டு  காதாலயும் கேட்டுட்டுதாண்டா  இருந்தேன்  அப்டிங்குது 


 அப்பவே  ஏம்மா  மேரேஜை  நிறுத்தலைனு  யாரும்  கேட்கலை 


 ஆனா  ஒல்ரு  சமாளிஃபிகேசன்  வசனம்  பேசுது


 என்னை  மாதிரி  வேற  எந்தப்பெண்ணும்  பாதிக்கப்படக்கூடாதுனு  தான்  இப்படிப்பண்ணேன்குது


 அட  கேனம், இதை  போலீஸ் ல  புகாரா  குடுத்தா  அவனும்  உள்ளே  போய்  இருப்பான், நீயும்  ஹீரோவைக்கட்டி  இருக்கலாம்’



இந்தக்கேவலமான  சீனை  எழுதுனது  யாருனு  பார்த்தா  அசிஸ்டெண்ட்  டைரக்டர்ஸ்  27  பேரு  பட்டியல்ல  வருது , ஏம்ப்பா  யாராவது  ஒருவராவது  இதை  சொல்லி  இருக்கக்கூடாதா? 


கடைசில   ஹீரோ  ஆசைப்பட்ட  சீதா  கூடவும்  அவருக்கு  மேரேஜ்  நடக்கலை ,, ஹீரோ  மேல  ஆசைபப்ட்ட  ரஞ்சனி  கூடவும்  மேரேஜ்  நடக்கலை  


 அப்றம்  எதுக்கு  தண்டமா  ஹீரோனு  பேரு ?  தெரில  


  கவுண்டமனி  காமெடி  டிராக்  சுமாரா  இருக்கு .ஹீரோயின்  சீதா வுக்கு பேச  முடியாத  கேரக்டர்  என்பதால்  வசனம்  இல்லை , ரஞ்சனி  தொண தொணனு  பேசிட்டு இருக்கு. , ரஞ்சனி  ஊறுகாய்  மாதிரி  பாடல்  காட்சிகளில்  கிளாமரா  இருக்கட்டும்னு புக்  பண்ணி  இருக்காங்க  போல 

பாடல்கள்


1  ஆயிரம்  பூக்கள்  மலரட்டும்  ஆனந்தம்  எங்கும்  பெருகட்டும் 


2  மேகம்  அந்த  மேகம்  அது  வழி  தேடும்  ஊமை  தானே?  மவுனம்  இந்த  மவுனம்  இது  தேவன்  கோவில் 


3  பூ  மேடையோ?  பொன்  வீணையோ ?


4  நேத்து  உன்னைப்பார்த்து  என்  நெஞ்சுல  உள்ளதை  கண்ணுல  சொன்னேனே?


 சபாஷ்  டைரக்டர்


 1  படத்துல  2  ஹீரோயின்  என்பதால்  போட்ட  4  பாட்டுக்களை  சரி  சமமாப்பிரிச்சு    முதல்  2  பாடல்களை  சீதா  வுக்கும்   அடுத்த  2  பாடல்களை  ரஞ்சனிக்கும்  பிரிச்சுத்தந்தது, ஆனா  நாலிலும்  ஹீரோ  மோகன்  உண்டு 


2  பூ  மேடையோ  பாட்டு  காட்சிக்கான  லீடு  சீன்  செம  காமெடி .  வீட்டு  கூரை  மேல  ரஞ்சனி  நிற்பார் , கண்ணை  மூடி  ஏதோ  கேம்  போல   கீழே  ஹீரோ  நிற்பார்.  ஏதோ  சுவர்னு  காலை  ஹீரோ  தலை  மேல  வெச்சு  பின்  அபடியே  இறங்குவார். உடனே  டூயட் , என்னதான்  கண்ணை  மூடி  இருந்தாலும்  கல்லுக்கும்  ஆளுக்கும்  வித்தியாசம்  தெரியாதா? 



  சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட்  - ஸ்க்ரிப்ட்டே  படிச்சுப்பார்க்காம  இந்த  மாதிரி  குப்பைக்கதைக்கு  எல்லாம்  தயாரிப்பாளர்  எப்படி  மாட்றாங்கனு  தெரியலை .  டப்பாப்படம்  பாட்டு  நல்லாருக்கு  கவுண்டமணி  காமெடி  ஓக்கே  ரேட்டிங்  1 / 5 


ஆயிரம் பூக்கள் மலரட்டும்
இயக்கம்ஈ. இராமதாஸ்
தயாரிப்புகே. மோகன் துரை
கதைஈ. ராமதாஸ்
இசைவி. எஸ். நரசிம்மன்
நடிப்புமோகன்
சீதா
ரஞ்சனி
கவுண்டமணி
ஒளிப்பதிவுதினேஷ் பாபு
படத்தொகுப்புஆர். பாஷ்கரன்
பி. கிருஷ்ண குமார்
கலையகம்மதர்லாண்ட் பிச்சர்ஸ்
விநியோகம்மதர்லாண்ட் பிச்சர்ஸ்
வெளியீடுஆகத்து 8, 1986[1]
ஓட்டம்133 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தியா

0 comments: