Saturday, October 15, 2022

நாடோடி மன்னன் (1958) - சினிமா விமர்சனம் @ அமேசான் பிரைம்



படத்தில் பஞ்ச் டயலாக்ஸ் பேசிய ஹீரோக்கள் பலர் உண்டு ஆனா பட வெளியீட்டுக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பஞ்ச் டயலாக் பேசி புகழ் பெற்றவர் இன்று வரை ஒருவர்தான்/ பல கஷ்ட நஷ்டங்களுக்குப்பின் தன் கையிருப்புகள் எல்லாம் சொந்தப்பட தயாரிப்பில் கரைந்த பின் எம் ஜி ஆர் பேசிய சரித்திரப்புகழ் பெற்ற அந்த டயலாக் இந்தப்படம் ஓடினால் நான் மன்னன் ஓடா விட்டால் நான் நாடோடி




எம்ஜியார் தான் டைரக்சன் என்றதும் கிண்டல் பண்ணிய கூட்டம் எல்லாம் சிதறி ஓடும் அளவுக்கு இந்தப்படத்தின் வெற்றி பிரம்மாண்டமாய் இருந்தது இவரது வெற்றி சாதனையை பல வருடங்களுக்குப்பின் இவரே தான் முறியடிக்க வேண்டியதாய் இருந்தது , அதுதான் உலகம் சுற்றும் வாலிபன்




மிஸ்டர் எம் ஜி ஆர் என ஷூட்டிங் ஸ்பாட்டில் உரிமையாய்க்கூப்பிடும் சந்திரபாபு காமெடி டிராக்குக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தினம் ரூ ஒரு லட்சம் சம்பளம் கேட்டும் ஒத்துக்கொண்டவர் . படப்பிடிப்பில் தாமதம் செய்து சிரமம் கொடுத்ததும் பின்னாளில் சந்திரபாபுவின் சொந்தப்படமான மாடி வீட்டு ஏழை ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் டபாய்த்து பழி வாங்கியதாக வரலாறு உண்டு




கோழி முட்டையை சாப்பிட்டு வாயில் கோழிக்குஞ்சை எடுக்கும் சந்திரபாபு காமெடி பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றது




ஷூட்டிங் நடக்கும்போது தனக்குத்திருப்தி ஏற்படும் வரை டேக் டேக் என எடுத்துக்கொண்டே இருப்பாராம் எம்ஜியார். அது பிடிக்காமல் நாயகி பானுமதி அவரிடம் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அவரை எதிர்த்துப்பேசியும் கிண்டல் பண்ணியும் வந்திருக்கிறார். பாதிப்படம் முடிஞ்சிடுச்சு . கவலையே படலையே எம்ஜியார். பானுமதி சாவது போல் ஒரு சீன் எடுத்து விட்டு நாயகியையே மாற்றினார். சொல்லப்போனால் இன்றைய டி வி சீரியல்களில் இந்தக்காட்சியில் இவருக்குப்பதில் இனி இவ்ர் என சொல்லும் வழக்கத்துக்கு முன்னோடியே எம் ஜியார் தான் . சரோஜாதேவி பின் பாதி நாயகி ஆனார்




சினிமா வில் வில்லனைக்கண்டு மிரளும் நாயகிகள் உண்டு . பயப்படுதல் அல்லது அருவெறுப்பாய் பார்த்தல் இதுதான் தமிழ் சினி மா வில்லன் நாயகி இருவருக்குமான பாண்டிங் , இதை உடைத்தவர் பானுமதி ., படத்திலேயே வில்லன் நம்பியாரை கேஷூவலாக கலாய்த்திருப்பார்




ஸ்பாய்லர் அலர்ட்




ஹீரோ ஒரு புரட்சிகர இளைஞன். மன்னராட்சி ஒழிக மக்களாட்சி வாழ்க என்பதுதான் இவரது கோஷம் . இவர் தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு போராடி வருகிறார். அப்படி ஒரு முறை அரண்மனை வாயிலில் போராடும்போது சிறையில் அவரைத்தள்ளுகின்றனர் காவலாளிகள் . அதே சிறையில் அருகிலேயே நாயகி .. அவரும் ஹிரோவைப்போல ஒரு புரட்சிக்காரிதான் . இருவருக்கும் பழக்கம் உருவாகுது




நாட்டின் மன்னனுக்கு ஏதோ மருந்து கொடுத்து அவரை மயக்கத்தில் ஆழ்த்தி பட்டாபிஷேகத்துக்கு வர விடாமல் தடுத்து ஆட்சியைக்கைப்பற்றத்திட்டம் போடுகிறான் வில்லன்




மன்னனின் முகமும் ஹீரோவின் முகமும் ஒரே சாயலில். இருவருக்கும் ரத்த சம்பந்தம் எதுவும் இல்லை . மன்னர் மயக்கத்தில் இருப்பதால் ஒரே ஒரு நாள் மன்னன் கெட்டபில் நடிக்க ஹீரோ மந்திரியால் கேட்டுக்கொள்ளப்படுகிறார்




நாட்டின் மன்னனாக ஈசியா ஹீரோ ஆள்,மாறாட்டம் பண்ணி நடிச்சுடறாரு. ஆனா மன்னரின் மனைவியான மகாராணியிடம் தான் அவரது கணவன் இல்லை எனவும் சொல்ல முடியவில்லை . கணவனாக நடந்து கொள்ளவும் முடியவில்லை




இந்த இக்கட்டான சூழலில் மனன்ரை கன்னித்தீவுக்குக்கடத்திச்சென்று விடுகின்றனர் . இளவரசி ரத்னாவையும் யாரோ கடத்தி அங்கே கொண்டு போய் சிறை வைத்து இருக்கிறார்.




இறுதியில் ஹீரோ அவர்களை எப்படி மீட்டார் என்பதே கதை




மன்னன் மார்த்தாண்டன் மற்றும் புரட்சி வீரன் வீராங்கன் என ஹீரோவா டபுள் ரோல் கலக்கலில் எம் ஜி ஆர் . நாடோடி எம்ஜியாராக தாடியுடன் வரும்போது எளிமையாக இருக்கார் . மன்னனாக வரும்போது அவர் செய்யும் ஒரு வித ஸ்டைல் அப்போது செம ஃபேமஸ் . அப்போதிருந்தே வசனங்கள் பேசும்போது அரசியல் கலந்து பேச ஆரம்பிச்சிருக்காரு




ஹீரோயினா மதனா வாக பானுமதி . எள்ளல் செய்யும் அழகே தனி . ஹீரோ வில்லன் இருவரையுமே இவர் நக்கல் செய்வது கலக்கல் ரகம் . ஆளுமை மிக்க நடிப்பு




இன்னொரு ஹீரோயினா ரத்னாவா சரோஜா தேவி , கடைசி ஒரு மணி நேரம் வந்தாலும் நல்ல வாய்ப்பு




காமெடிக்கு சந்திரபாபு . இவர் குதித்து குதித்து இங்கும் அங்கும் ஓடுவது பிரமாதம், ஜாக்கிசானின் சுறு சுறுப்புக்கும் பிரபுதேவாவின் நடன அசைவுக்கும் இவரே ,முன்னோடி




ராஜ குருவாக பி எஸ் வீரப்பா , இவரது குரலுக்கே பல ர்சிகர்கள் அப்போது இருந்தார்கள்




ராணி மனோகரியாக எம் என் ராஜம் . பிங்களனாக வில்லனாக எ,ம் என் நம்பியார் கலக்கலான நடிப்பு எம் ஜியாருடன் போரிடும் வாள் சண்டையில் அரங்கம் அதிர்ந்தது




எம் ஜி சக்கிர்பாணி ஒரு ரோலில் வருவார். எம் ஜியார் முகச்சாயல் அப்படியே இருந்தும் அவரால் எம் ஜி ஆர் போல் புகழ் பெற முடியாதது ஏனோ தெரிய்ல




வசனம் கண்ணதாசன் . எம் ஜி ஆரின் அரசியல் வாழ்வைக்குறி வைத்தே எழுதப்பட்டது




இசை எஸ் எம் சுப்பையா நாயுடு , என் எஸ் பாலகிருஷ்ணன் , ஆத்மானந்தன் என மூணு பேர்




18 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ ஒரு கோடியே 10 ல்ட்சம் வசூல் செய்து சரித்திர சாதனை புரிந்தது . மதுரை வீரன் வசூலை முந்திய படம்




இந்தப்படம் பார்ஷியலி கலர்டு ., அதாவது பாதிப்படம் ஒயிட் அண்ட் பிளாக் . கன்னித்தீவு போர்சனில் வரும் கடைசி ஒரு மணி நேரம் கலர்




1958ல் ரிலீஸான இந்த்ப்படத்தை இப்போப்பார்த்தாலும் மூணே கால் மணி நேரத்தில் ஒரு சீன் கூட போர் அடிக்காமல் போகும்




டைரக்டராக ஆடியன்சின் பல்ஸ் தெரிந்து காட்சிகளை ஜனரஞ்சகமாக அமைத்திருப்பார் எம் ஜி ஆர்




ரசித்த வசனங்கள்




1 என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு , ஆனால் நம்பிக்கெட்டவர்கள் யாருமே இல்லை




2 நீங்கள் மாட மாளிகையில் இருந்து மக்களைப்பார்க்கிறீர்கள் , நான் மக்களுடன்  இருந்து மாளிகையைக்கவனிக்கிறேன்




3 நீங்கள் போடும் புரட்சித்திட்டத்தால் பணக்காரர்களே நாட்டில் இருக்க மாட்டார்கள் அப்படித்தானே?




இல்லை ஏழைகள் தான் இருக்க மாட்டார்கள்




4 சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தைகள்




5 என்னை நம்புகிறயா?

நான் மட்டுமல்ல, இனி இந்த நாடே உங்களை நம்பித்தான் ஆக வேண்டும் ( உள்குத்து வசனம்)




6 ஆண்டியின் மடம் ஆனாலும் அழகிகளுக்கு மட்டும் பஞ்சம் இல்லை ( நித்யானந்தா ரெஃப்ரன்ஸ்)




செம ஹிட்டு பாட்டு லிஸ்ட்




1 தூங்காதே தம்பி தூங்காதே ( ஹீரோ ஓப்பனிங் சாங் )




2 தடுக்காதே என்னைத்தடுக்காதே ( சந்திரபாபு ஓப்பனிங் சாங் )




3 கண்ணில் வந்து மின்னல் போல காணுதே ( பானுமதி டூயட்)




4 சும்மா கிடந்த நிலத்தை கொத்தி




5 உழைப்பதிலா உழைப்பைப்பெறுவதிலா பெறுவதிலா இன்பம் ?




6 ,மானைத்தேடி மச்சான் வரப்போறான் ( சரோஜா தேவி டூயட்)




7 பாடுபட்டா தன்னாலே பலன் இருக்குது கை மேலே




8 கண்ணோடு கண்ணு கலந்தாச்சு ( க்ரூப் சாங் கன்னித்தீவு )




சபாஷ் டைரக்டர்




1 நான் ஆட்சிக்கு வ்ந்தால்; மக்கள் கஷ்டங்களை உணர்ந்து நடப்பேன் என்பது மாதிரி மறைமுகமான பிரச்சாரத்தை ஜனரஞ்சகமாகத்தந்த விதம்




2 சந்திரபாபுக்கு கதைக்குத்தேவைப்படாவிட்டாலும் அதிக முக்கியத்துவம் தந்து காட்சிகள் கொடுத்தது




3 பானுமதியின் கேரக்டர் டிசைன்




4 தான் வளர்த்த வளர்ப்பு மகளையே திருமணம் செய்து கொள்ளும் கேரக்டர் மூலம் பெரியாரை நக்கல் பண்ணிய பாங்கு




5 பானுமதியை நீக்க முடிவு செய்ததும் சாமார்த்தியமாக அவர் சீரியசாக மரணப்படுக்கையில் இருப்பது போல் காட்சியை ஷூட் பண்ணிட்டு அவரை அனுப்பியது

6   வில்லனுடனான  வாள்  சண்டையில்  புன்னகை  மாறா,மல்  ஹீரோ  ஃபைட்  போடுவது ,  போரிடும்போது  ஹீரோ  ரிவர்சில்  ஸ்டெப்  வைத்தாலும்  மேடான  பகுதிக்குதான்  செல்வார் , அதாவது பின்  வாங்கினாலும்  உயர்ந்த  இடத்தை  நோக்கியே  செல்வார்  என  குறியீடு 




லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்


‘1 விஷ்ம் கலந்த பழச்சாறை ம்ன்னர் புரட்சி வீரனுக்குத்தரும்போது அதன் டேஸ்ட் சரி இல்லை என அவர் குடிக்க மறுக்கிறார். மன்னர் குடிக்கும்போதும் டேஸ்ட்டில் மாற்றம் கண்டதும் டவுட் வர வேணாமா? கஷ்டப்பட்டு ஏன் குடிக்கனும்?> டெஸ்ட் பண்ணி இருக்கலாமே?




2 எம் ஜி சக்கிர பாணி கூட எம் ஜி யார் சாயலில் தான் இருக்கார் அவரை ஆ ள் மா றாட்டத்துக்கு பயன்படுத்தாதது ஏன் ?




சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அமேசான் பிரைம், யூ ட்யூப் ரெண்டுலயும் கிடைக்குது , பார்க்காதவங்க ஜா லியா ரசிக்கலாம் ரேட்டிங் 3.25 / 5


நாடோடி மன்னன்
இயக்கம்ம. கோ. இராமச்சந்திரன்
தயாரிப்பும. கோ. இராமச்சந்திரன்
எம். ஜி. ஆர். பிக்சர்ஸ்
இசைஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு
என். எஸ். பாலகிருஷ்ணன்
ஆத்மானந்தன்
நடிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
எம். என். நம்பியார்
சக்கரபாணி
சந்திரபாபு
பி. எஸ். வீரப்பா
பானுமதி
ஜி. சகுந்தலா
பி. சரோஜாதேவி
எம். என். ராஜம்
வெளியீடுஆகத்து 221958
ஓட்டம்.
நீளம்19830 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு 18 இலட்சம்[1]
மொத்த வருவாய்ரூ.1.06 கோடி. (மதுரை வீரன் திரைப்படத்தின் வருமானத்தை விட அதிகமான வருவாய் ஈட்டிய திரைப்படம்).

0 comments: