Sunday, September 25, 2022

RAY(HINDI) 2021) - வெப் சீரிஸ் விமர்சனம் ( சத்யஜித்ரே சிறுகதைகள் 4) @ நெட் ஃபிளிக்ஸ்


 ஒரு  மணி  நேரம்  ஓடக்கூடிய 4  வெவ்வேறு  சிறுகதைகள்  , ஆக  மொத்தம்  4  ம்ணி  நேரம்.


1  FORGET ME NOT  - (  சைக்கோ  க்ரைம்  த்ரில்லர்) 

ஹீரோ  ஒரு  பெரிய  கம்ப்பெனில  பெரிய  பொறுப்பில்  இருக்கார். மல்ட்டி  டேலண்ட்டட்  பர்சன். ஒரே  சமயத்துல  3  வேலைகள்  செய்வாரு.  நானெல்லாம்  அதிக பட்சம்  3  வேலை  செய்யறதுன்னா  சாப்ட்டுட்டே  டி வி  பார்த்துட்டே   ரோட்ல  வேடிக்கை  பார்க்கறதோட  சரி ., ஆனா  ஹீரோ  அதுக்கும்  மேல  , இவருக்கு  அபாரமான  மெம்மரி  பவர் .  கம்பெனி  மேட்டர்ல  எல்லாம்   டீட்டெய்ல்சை  ஃபிங்கர்  டிப்ல  வெச்சிருக்கார் . எனக்கு  ஃபிங்கர்  டிப் ல  நகம் தான் இருக்கு  இவருக்கு  ஒரு  மனைவி .  ஒரு  குழந்தை  பிறக்கப்போகுது 


 இப்போதான்  இவருக்கு  ஒரு  சோதனை  வருது . ஒரு  பொண்ணு  அவர்  கிட்டே  வந்து  என்னை  ஞாபகம்  இருக்கா?  எல்லோரா , அஜந்தா  குகைல  நாம  மீட்  பண்ணோமே? எக்செட்ரா  எக்சட்ரா  அப்டினு  குண்டைத்தூக்கிப்போடுது . ஹீரோக்கு  ஞாபகமே இல்லை


 எனக்கெல்லாம்  +2  படிக்கறப்ப  மேத்ஸ் க்ரூப்  ரத்னம் , ஃபர்ஸ்ட் க்ரூப்  தமிழ்  மீடியம்  அங்கயற்கண்ணி , ஹிஸ்டரி  க்ரூப் மீனாட்சி , அக்கவுண்ட்ஸ்  க்ரூப்  தேன்மொழி  முதற்கொண்டு  எல்லாரையும்  ஞாபகம்  இருக்கு , ஆனா  பெரிய  அப்பாடக்கர்  மெம்மரி  பவர்  மேன்னு  சிலாகிக்கப்படும்  ஹீரோக்கு  அந்தப்பெண்ணை   நினைவில்லை 


 இந்த  சம்பவத்துக்குப்பின்  ஹீரோ  பல  விஷயங்களில்  தடுமாறுகிறார்.  இவ்ர்  வீட்டுக்குப்போறதுக்குப்பதிலா  பக்கத்து  அபார்ட்மெண்ட்  போய்  பெல்  அடிக்கிறார்


இதுக்குப்பின் இவர்  வாழ்க்கைல  நட்ந்த  திருப்பங்கள் , கம்ப்பெனில  கண்ட  வீழ்ச்சிகள் ,  ஒரு  சஸ்பென்ஸ்  ட்விஸ்ட்  நிகழ்வு  அப்டினு  படம்  போகுது 



2 BAHURUPERIYA  ( ஃபேண்ட்டசி  த்ரில்லர் )  -  ஹீரோ  ஒரு  மேக்கப்  மேன்,  பிரமாதமா    மேக்கப்  போடுவார் . புதிய  முகம்  பட்த்துல  ஹீரோ  பிளாஸ்டிக்  ச்ர்ஜரி பண்ணி  தன்  முகத்தை  மாத்திக்கறது  மாதிரி ,  முகம்  படத்துல  நாசர்  தன்  உருவத்தை  மாத்திக்கற  மாதிரி   இவர்  த்ன்  மேக்கப்பால  வேற  ஒரு  உருவமா  மாறி கலக்குவார் 


 ஒரு  டைம்  இவரு  ஒரு  சாமியாரைப்பற்றிக்கேள்விப்பட்றார் .  சாமியார்னா  நித்யானந்தா , பிரேமானந்தா  மாதிரி  டுபாக்கூர்  இல்ல , சக்தி  வாய்ந்த  சாமியார் . அவர்  தன்னைத்தேடி  வரும்  பக்தர்களின்  குறைகளை  தீர்த்து  வைப்பதா  ஃபேம்ஸ்  ஆனவர்

  ஹீரோ  வேற  ஒரு  முகம்  வேற  ஒரு  பேரு  உடன்  சாமியாரை  ச்ந்தித்து  சாமி  என்  பேரு  இது , எனக்கு  என்  குறைகள்  எப்போ  சரி  ஆகும? அப்டினு     கேட்க  சாமியாருக்கு  ஹீரோ  பொய்  முகம்  பொய் பேருடன்  வந்தது  தெரிஞ்சிடுது 


 உன்  பேரென்னபா?  என  திரும்ப  திரும்ப  கேட்கறார். ஹீரோ  அச்ராம  அதான்  இப்போ  சொன்னேனே? என  பிடிவாதமா  இருக்க  அந்த  பொய்  முகமே  பர்மணண்ட்டா  மாறிடுது.    ஹீரோ  ஜெர்க்  ஆகறார். இதுக்குப்பின்  அவர்  என்ன  முடிவெடுத்தார்  என்பது  கதை 


 வின் சி  டா  எனும்  கன்னட  த்ரில்லர்  படம்  பார்த்திருப்பீங்க.  செம  ஹிட்  அது  ., இந்தக்கதையின்  டெவல்ப்டு  ஸ்க்ரீன்ப்ளே  தான்  அது . 

 கொஞ்சம்  ஸ்லோ வாதான்  போகுது


 கடைசி  வரை டைட்டிலில்  வரும்  ப்ரியாவைக்காட்டவே  இல்லை 


3  HUNGAMA HAI KYON BARPA  மெலோடிராமா

 ஹீரோ  ஒரு  ப்கழ் பெற்ற கஜ்ல்  பாடகர் ,  கஜோலை  மட்டுமே  புகழ்ந்து  பாடுபவ்ர்தான் கஜல்  பாடகர்னு  ஒரு  மொக்கை  ஜோக்  எழுதி  தினமலர்    வாரமலர்ல 1000  ரூபா  சன்மானம்  வாங்குன  ஞாபகம்    வருது  ( இப்படி  கேப்  கிடைக்கும்போதெல்லாம்  செல்ஃப்  ப்ரமோ  பண்ணிக்கனும்)


ஹீரொவுக்கு  ஒரு  வித்தியாசமான  வியாதி  இருக்கு ., க்ளப்டோமேனியா .  அடிக்க்டி  நைட்  கிளப்க்கு  போய்  டான்ஸ்  பார்க்கற  மேனியானு  நான்  சின்னப்பையனா  இருக்கும்போது  நினைச்சிருந்தேன். ஆனா  வச்தி  இருந்தும்  சும்மா   ஆர்வத்துல  உன்னை  ஏமாத்திட்டேன்  பாருனு  காட்டிக்க  சின்ன்ச்சின்னப்பொருளை  திருடுவதுதான்  க்ளப்டோ மேனியா


 ஒரு  டைம்  ரயில்ல  ட்ராவல்  பண்ணும்போது  எதிர்  சீட்ல  இருப்பவர். அவர்  பெட்டில  இருந்து  ஒரு  அதிர்ஷ்ட  கடிகாரம்  எடுத்துக்காட்றார். இது  தன்  வாழ்வில்  வந்த  பின்  தான்  தனக்கு  அதிர்ஷட  லட்சுமி  சந்தான  லட்சுமி , அங்கு ல்ட்சுமி   என  லட்சுமியின்  அனைத்து  அவதாரங்களும்  வீட்டுக்கு  வந்ததா  நம்பறாராம்


 அவ்ரு  பாத்ரூம்  போன  கேப்ல  ஹீரோ  அதை  ஆட்டையைப்போட்றாரு

\

  சில  வருடங்கள்  க்ழித்து  மீண்டும்  அவரை  மீட்  பண்றாரு. அவருக்கு  ஹீரோவை  அடையாளம்  தெரியல  . ஆனா  ஹீரோ  தன்னைத்தானே  இண்ட்ரோ  பண்ணி  தான்  திருடுன  மேட்டரை  சொல்றாரு


 க்ளைமாக்ஸ்  என்ன  ஆச்சு  ?  என்பது  சஸ்பென்ஸ் 


 இது  நான்  எட்டாம்  கிளாஸ்  படிக்கும்போது  நீதிக்கதைகள்  , சிறுகதைத்திரட்டு  ல  படிச்ச  மாதிரி   ஃபீலிங்,, ஆனா  ரே  அட்லீயா  இருக்க  மாட்டாருனு  நம்புவோம்

 ரெண்டே  ரெண்டு  ஆண்  கேரக்டர்கள்  உள்ள  ஒரு  கதையை  ஒரு  மணி  நேரம்  சுவராஸ்யமா  கொண்டு  போனது  ஆச்சரியம்


 நீங்க  நல்லா  நோட்  பண்ணிப்பார்த்தா  சிறுகதை, நாவல்  திரைப்படம்  எல்லாத்துலயும்  ஒரு  பெண்    கேரக்டரால்தான்  சுவராஸ்யம்  வரும்  என்பதை  க்வனிக்கலாம், ஆனா  இந்தக்கதை  ஒரு  விதி  விலக்கு 



4 SPOT LIGHT  ஜாலி  எண்ட்டஎர்டெய்ன்,மெண்ட்- ஹீரோ  ஒரு  சினிமாபட  ஹீரோ . ஏகபப்ட்ட  புகழ். அவர்  ஒரு  ஸ்டார்  ஹோட்டல்ல  தங்கறார். மடோனா  ரூம்னு  ஒரு  ஸ்பெஷல்  ரூம்  இருக்கு அதுல  தான்  புக்  பண்ணி  இருக்கார் 


 அப்போ  ஒரு  லேடி  சாமியார்  அந்த  ஹோட்டலுக்கு  வர்றார். அதுவரை  ஹீரோவை  பிரமிப்பா  பார்த்துட்டு  இருந்தவங்க  அபப்டியே  யு  டர்ன்  அடிச்சு  அந்த  லேடி  சாமியாரை[ப்பத்தி  சிலாகிக்கறாங்க


 இவரை  யாரும்  கண்டுக்கவே  இல்லை . இது  ஹீரோவின் ஈகோக்கு  கிடைச்ச  பெரிய  அடி அவருக்கு  அலாட்  ஆன  ரூமும்  லேடி  சாமியாருக்குப்போய்டுது 


 இப்போ  ஹீரோ  சாமியாரினியை  மீட்  பண்ண  நினைக்கறாரு . இதுக்குப்பின்  நிக்ழும்   திருப்பங்கள்  தான்  கதை 


 சி பி  எஸ் ஃபைனல்  கமெண்ட் - மேலே  கண்ட  4  க்தைல  முதல்  கதையும்  கடைசிக்கதையும்  கமர்ஷியலா  போச்சு .  2  வது  கதை  ஆர்ட்  ஃபிலிம்  போல்  ஸ்லோவா  போச்சு  3 வது  கதை  நீதி  போதனைக்கதையா  இருந்தாலும்  நல்லாதான்  இருக்கு ஓவராலா  பார்த்தா  4  கதைகளுமே 50  மார்க்குக்கு  மேல  தரலாம் ஒர்த்  டூ  வாட்ச் 

நெட்  ஃபிளிக்ஸ்  என்பதால் அடல்ட்  கண்ட்டென்ட்    இருக்குமோ?னு  பயப்படத்தேவை  இல்லை   ஃபேமிலியோட  பார்க்கத்தகுந்த  படமே 

ரேட்டிங்  2.75 / 5 

0 comments: