இந்தப்படத்தோட ஒன் லைன் ஸ்டோரி என்ன?னு கேட்டீங்கன்னா அட போங்கப்பா இதெல்லாம் ஒரு கதையா?னு அசால்ட்டா நினைக்கத்தோணும், ஆனா இதன் திரைக்கதை வடிவமைப்பைபார்த்தா பிரம்மிக்கத்தோணும், கேரளாவில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி சக்க போடு போட்ட படம் , லோ பட்ஜெட்ல திரைக்கதையை நம்பி எடுக்கப்பட்ட படம், இந்தப்படத்தை தமிழில் ரீமேக்க சான்சே இல்ல ஹீரோ ஹீரோயின் வில்லன் இவங்களை விட ஜட்ஜா வர்றவர் நடிப்பு பிரமாதமா பேசப்பட்ட படம் என்ற பெருமையும் இதுக்கு உண்டு
Spoiler alert
ஹீரோ ஒரு முன்னாள் திருடர். இந்நாள் திருந்தி வாழும் அதிருடர். இவருக்கு ஒரு காதலி , மேரேஜ் பண்ணிக்காம லிவ்விங் டுகெதரா வாழ்ந்து நாயகி இப்போ மாசமா இருக்கா
ஹீரோ ரோட்ல நடந்து போய்க்கிட்டு இருக்கும்போது ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆக இருந்தது . அதுல இருந்து தப்பிக்க அருகில் இருக்கும் பங்களா காம்பவுண்ட் சுவர் ஏறி குதிக்கிறார் . அது ஒரு எம் எல் ஏ வீடு . போலீஸ் கேஸ் ஃபைல் பண்றாங்க . எதையோ திருடத்தான் அங்கே வந்தே?னு கேட்டு அரெஸ்ட் ப்ண்றாங்க
சிசிடிவி ஃபுட்டேஜ் ஹீரோவுக்கு சாதகமா இருப்பதால் ரிலீஸ் ஆகறார் , ஆனா அந்த ரோட்ல இருந்த குழி தான் விபத்து நடக்கக்காரணம் அதனால அந்த ரோடு காண்ட்ராக்ட் ல சம்பந்தப்பட்ட மினிஸ்டர் மேல கேஸ் போடறேன் அப்டிங்கறார்
ஒரு சாமான்ய மனுஷனுக்கும் அரசியல் செல்வாக்கு மிக்க மனிதனுக்கும் நடக்கும் நீதிப்போராட்டம்தான் கதை
படத்தின் முக்கியமான கதாபாத்க்திரமான ஜட்ஜ் கேரக்டர் டிசைனும் பிரமாதம் ஜட்ஜாக நடித்த பிபி குன்ஹி கிருஷ்ணன் உடல் மொழி , காமெடி , அனைத்தும் அருமை . ஒரு கோர்ட் ரூம் டிராமாவில் வாதி , பிரதிவாதி , வக்கீல் எதிர்க்கட்சி வக்கீல் அனைவரையும் தாண்டி ஒரு ஜட்ஜால் படம் முழுக்க ஆதிக்கம் செலுத்தி அப்ளாஸ் பெறுவது சினிமா சரித்திரத்தில் நான் காணாதது
ஒரே ஒரு சீன் சாம்ப்பிளுக்கு .. கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்ட மந்திரி தனது பரிவாரங்களுடன் வர்றார். அவரைப்பார்த்து தனியா நிக்க பயமா? என கேட்க மினிஸ்டர் அமர்த்தலா என் கூட கூட்டணி அமைக்க ஆளாளுக்கு அழைப்பு விடுத்துட்டே இருக்காங்க என சொல்ல அதில்லை கோர்ட்ல தனியா நிக்க பயமா இருக்கா? கூட நிக்கற எடுபுடிகள் எல்லாம் ஒன் ஸ்டெப் பேக் என ஆர்டர் போட்டுட்டு அப்படியே அந்த சேரையும் எடுத்துட்டுப்போய்டச்சொல்லுங்க . இது கோர்ட் நின்னுட்டே இருக்கனும் என சொல்லும்போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளி இருக்கும்/.
ஹீரோவா குஞ்சாக்கா போபன் எதார்த்தமான நடிப்பு . இயல்பான தோற்றம் இவரே வக்கீலாக மாறி ஆர்க்யூ பண்ணுவதெல்லாம் செம கூஸ்பம்ப் சீன்ஸ் வக்கீல்கள் இருக்கும் ஏரியாவில் அவர் இருக்க ஒரு வக்கீல் அதை ஆட்சேபிக்கும்போது ஜட்ஜ் கொடுக்கும் கவுண்ட்டரில் தியேட்டர் தெறித்து இருக்கும்
ஹீரோயினா நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம் காயத்ரி . ஜ்ட்ஜ் தீர்ப்பு தேதி அறிவித்த பின் ஜட்ஜ் அய்யா எனக்கு டெலிவரி டேட் அது . அதனால கொஞ்சம் தீர்ப்பு தேதியை முன்னாடியே வைங்க என்றதும் உங்க இஷ்டத்துக்கு எல்லாம் பண்ண முடியாது என ஜட்ஜ் சொல்லும்போது ஏன் அமைச்சர் வராத போது அவருக்கு மட்டும் சலுகை தர்லையா? என கேட்கும்போது ஜட்ஜ்ட்ஜையே திகைக்க வைக்கும் நடிப்பு
பெரும்பாலான காட்சிகள் கோர்ட்ல நடந்தாலும் சலிப்பு தட்டும் காட்சி ஒன்று கூட இல்லை . முதல் 20 நிமிடங்கள் ஸ்லோவாப்போகும் படம் பிறகு பர பர என பற்றிக்கொள்ளும் வேகம்
நாசூக்கான அரசியல் சட்டைய்ர் வசனங்கள் அபாரம் . கேஸ் ஆரம்பிக்கும்போது மாசமா இருக்கும் நாயகி தீர்ப்பு வரும்போது 4 வயது குழந்தையுடன் இருப்பது , பெட்ரோல் விலை யை வைத்து கோர்ட் கேஸ் நடக்கும் கால கட்டத்தை பூடகமா உணர்த்துவது எல்லாமே பிரமாதம்
கலக்கலான வசனங்கள்:
1 காயம் சரி அகும் வரஒ உங்க வீட்டுக்காரர் வேலைக்குப்போக முடியாதும்மா
டாக்டர் , ஆல்ரெடி அவரு சும்மாதான் இருக்கார் , வேலை வெட்டி ஏதும் இல்லை
2 என்னது ? 2 பி ஏ வா?
நான் தான் நிஜ பி ஏ அவரு பேரே பி ஏ கிருஷ்ணன்
3 வீட்ல 2 குழந்தைங்க இருக்கு ., இவருக்கு ஜாமீன் கொடுத்தாதான் குழந்தைங்க ளுக்கு நல்லது
இந்தாளுக்கு ஜாமீன் குடுக்காம இருக்கறதுதான் அந்தக்குழந்தைகளுக்கு நான் செய்யற நல்ல காரியம்
4 ஐயா ,இவரு கெட்ட வார்த்தை சொல்லி திட்டிட்டாருங்க
என்ன வார்த்தை ?
அதான் சொன்னேனே கெட்ட வார்த்தை
என்ன கெட்ட வார்த்தை ?
அதை சொல்ல முடியாதுங்க , எழுதி வேணா காட்றேன்
5 ஒரு மந்திரி மேல கேஸ் போடனும்னா மந்திரி சபை கிட்டே அனுமதி வாங்கனும்கறீங்க , அப்போ என்னை மாதிரி திருடன் மேல கேஸ் போட திருடர்கள் சங்க,ம் கிட்டே அனுமதி வாங்குனீங்களா?
6 ஒரு பெண் முடிவெடுத்தாதான் அது சரியா இருக்கும்
‘
‘7 கடந்த கால நடத்தைககளை வெச்சு ஒரு ஆளோட கேரக்டரை ஜட்ஜ் பண்ணிட முடியாது
8 ஏப்ரல் 1 ந்தேதி கோர்ட்டுக்கு வரனும் ‘
சாரி அப்போ டீச்சர் கூட ஒரு டேட்டிங் இருக்கு வேற ஆளை கூட்டிட்டுப்போங்க
‘
‘ அப்போ ஆள் மாறாட்டக்கேஸ்ல உள்ளே போய்டுவீங்க பரவால்லியா ?
9 ஹிமாலயாஸ்ல இருந்து வர்றதால கஞ்சா அடிச்சவனாதான் இருக்கும்னு சொல்லிட முடியாது ஏன்னா கங்கா நதி கூட இமயமலைல இருந்து தான் வருது அது என்ன கஞ்சா அடிச்சுட்டா வருது ?
10 ஒரு விபத்துல நேரடியாவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் தான்
சபாஷ் டைரக்டர்
1 ஒவ்வொரு கேரக்டரையும் அவர் டிசைன் பண்ணிய விதம் பிரமாதம். சாட்சியாக வரும் ஓமக்குச்ச் நரசிம்மன் மாதிரி ஒரு ஒல்லி கேரக்டருக்கு ( ஆட்டோ டிரைவர்) காதலியா பிரமாதமான அழகியான ஒரு டீச்சர் இருப்பதும் அவர் கோர்ட்டில் பண்ணும் ரகளைகளும் அதகளம் . யதார்த்தமான காமெடி எப்படி அமையனும் என்பதை இந்த சீன் பார்த்து புரோட்டா சூரி , ஈரோடு மகேஷ் , மதுரை முத்து போன்ற மொக்கை காமெடியன்கள் கத்துக்கறது நல்லது
2 கோர்ட்ல வக்கீல்கள் விவாதம் செய்யச்செய்ய கட கட என அதை எழுதிக்கொண்டே இருக்கும் ஜட்ஜின் பாடி லேங்க்வேஜ் பிர்மாதம் அப்பப்ப அவர் கவுண்ட்டர் கொடுப்பதும் கோர்ட் உள்ளே வரும் புறாக்களை அவர் நோட் பண்ணுவதும் . பார்வையாளர்களாக வருபவர்கள் ஏதாவது அத்து மீறினால் அவர்களை கலாய்ப்பதும் அபாரமான ஸ்கிரிப்ட்
3 எல்லாம் முடிஞ்சு க்ளைமாக்ஸ்ல ஒரு லாரி ஹீரோவை ஏத்த வருவதும் தலை குப்புற விழுந்து நிலை குலைந்த லாரி டிரைவர் யார்றா கபோதி ரோட்ல இவ்ளோ பெரிய குழியை உண்டாக்குனது என திட்டுவதும் மரண காமெடி
லாஜிக் மிஸ்டேக்ஸ்
இந்தக்கதையில் கூட எதுனா குறை கண்டுபிடிச்சு நொட்டை சொல்லிட்டு இருந்தா நமக்கு சிரஞ்சீவி, விஷால் நடிக்கும் டப்பா படங்கள் தான் பார்க்க லாயக்கு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - t தமிழ் டப்பிங்க்லயே டிஸ்னி + ஹாட் ஸ்டார் ;ல ரிலீஸ் ஆகி இருக்கும் இந்தப்படத்தை மிஸ் பண்ணாம அனைத்து தரப்பு ஏ பி சி டி இஜட் செண்ட்டர் ரசிகர்கள் எல்லாரும் பார்க்கலாம் . ஆனந்த விகடன் மார்க் 50 ரேட்டிங் 4 / 5
1 comments:
இந்தப் படமே மொக்கை. நடைமுறையில் நடக்க முடியாத காட்சிகளை வைத்து மலையாளத்தில் எடுத்தால் ஆகோ ஓகோவெனப் பாராட்டுவதும் அதேபோல் தமிழில் எடுத்தால் காதுல பூ என்பதும் என்ன மாதிரி மனநிலை என்று தெரியவில்லை.
நந்தன்.
Post a Comment