எல்லாருக்கும் புரியற மாதிரி அதாவது நாவல் படிக்காத பாமரர்களுக்கும் புரியற மாதிரி கதையை சொல்லிடறேன்
தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞர் தான் சுந்தரசோழன். இவருக்கு அழகிரி, ஸ்டாலின் அப்டினு ரெண்டு பசங்க இருக்கற மாதிரி சுந்தர சோழனுக்கு ஆதித்த கரிகாலன், அருண்(ள்)மொழிவர்மன் என ரெண்டு பசங்க. கனிமொழி மகள் மாதிரி குந்தவைனு ஒரு மக. பெரியப்பா மகன் மதுராந்தகர் பதவிக்குப்போட்டி இடுகிறார். இவரை மு க முத்துனு வெச்சுக்குவோம். இந்த பதவிப்போட்டியில் யார் ஜெயித்தார்கள் என்பதே முதல் பாகத்தின் கதை
சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ். படுத்த படுக்கைல இருப்பதால் இவருக்கு அதிக வாய்ப்பில்லை .ஆனாலும் கம்பீரமான நடிப்பு .
மேலே சொன்ன கேரக்டர்களில் அல்லாத வந்தியத்தேவன் எனும் ஒற்றன் கேரக்டரில் ஹீரோவா கார்த்தி . மொத்தமா 3 மணி நேரம் ஓடும் படத்தில் ரெண்டே கால் மணி நேரம் இவருக்குதான் அதிக காட்சிகள் . துறுதுறுப்பு , சுறுசுறுப்பு , குறும்பு என இவர் துள்ளலான நடிப்பில் கலக்கி இருக்கார் . படத்தில் வரும் 3 முக்கியமான பெண் கேரக்டர்களிடமும் வழிவதும் பம்முவதும் அருமை
ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரம் நடிப்பு கனகச்சிதம்.ஓப்பனிங்கில் நிராயுதபாணியாய் இருப்பவனை நாங்கள் கொல்வதில்லை என கெத்து காட்டும்போது அப்ளாஸ் அள்ளுறார்.
அருள் மொழிவர்மராக பொன்னியின் செல்வனாக வரும் ஜெயம் ரவி ஷாக் சர்ப்பரைஸ் ஆக்டிங். இவருக்கும் கார்த்திக்கும் வரும் ஒரு ஃபைட் சீன் செம
குந்தவையாக வரும் த்ரிஷா கெட்டப் , மேக்கப் நடிப்பு எல்லாம் அழகு
வில்லியாக, பெரிய பழுவேட்டரையரின் மனைவியாக, நந்தினியாக வரும் ஐஸ்வர்யாராய் செம ஆக்டிங் .
பெரிய பழுவேட்டரையrஆக சரத்குமார் , சின்ன பழுவேட்டரையராக இரா பார்த்திபன் கச்சிதமான நடிப்பு
மதுராந்தகராக ரகுமான் அதிக வாய்ப்பில்லை . வந்தவரை ஓக்கே , அம்மாவை எதிர்த்துப்பேசும் காட்சி அனல் பறக்குது
நந்தினியாக வரும் ஐஸ்வர்யாராய் தன் முதல் கணவரான வீர பாண்டியனைக்கொன்ற ஆதித்த கரிகாலனை பழிக்குப்பழி வாங்கத்தான் சோழ தேசத்துக்கு வருகிறாள். இது போக ஆல்ரெடி ஆதித்த கரிகாலனுடன் ஒரு காதல் வேற இருக்கு
ஆக மொத்தம் இவருக்கு 3 ஜோடி
ஆதித்த கரிகாலன் போர்க்களத்தில் இருக்கிறார். அருள் மொழி வர்மன் இலங்கையில் இருக்கிறார். சுந்தர சோழன் தஞ்சையில் இருக்கிறார். அனைவரையும் தஞ்சை வர வைக்கனும், அதுதான் ஹீரோ கார்த்தியின் பணி
படத்தின் முதல் ஹீரோ ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணிதான் . பிரம்மாண்டமான செட்கள் அரண்மனைக்காட்சிகள் எல்லாமே தத்ரூபம். வில்லன் யார் எனில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் காட்சிகளும் விஎஃப் எக்ஸ் ஒர்க்கும். சரியா செட் ஆகலை
ஜெயம் ரவிக்கும் , கார்த்தி க்கும் இடையே நடக்கும் ஃபைட் செமயா படமாக்கப்பட்டு இருக்கு
ஆனா மற்ற போர்க்காட்சிகள் எல்லாம் கூட்டத்தோட கோவிந்தா போட்ட மாதிரி ஏனோதானோனு தான் இருக்கு
பாகுபலில போர்க்காட்சிகள் லாங்க் ஷாட்டில் ரசிக்கும்படி படமாக்கி இருந்தாங்க . இதில க்ளோசப் ஷாட்ல 50 பேரை வெச்சு முடிச்ட்டாங்க
சபாஷ் டைரக்டர்
1 ரைட்டர் ஜெயமோகனுடன் இணைந்து இயக்குநர் மணிரத்னம் திரைக்கதை அமைத்த விதம். ஆனானப்பட்ட எம் ஜி ஆர் , கமல் உட்பட பலர் முயற்சித்தும் முடியாததை முடிச்சுக்காட்டியமைக்கு ஒரு ஷொட்டு . நாடக அனுபவம் உள்ள குமரவேல் திரைக்கதை அமைப்பில் உதவி இருப்பது அருமை
2 விக்ரம் , த்ரிஷா , ஐஸ்வர்யா ராய் மூவருக்குமான ஓப்பனிங் சீன், த்ரிஷா - ஐஸ் காம்போ சீன் எல்லாம் டைரக்சன் டச்
3 பாடல் காட்சிகளில் திருடா திருடா படத்தில் வரும் வீரபாண்டிக்கோட்டையிலே ரெஃப்ரென்ஸ் இருப்பது லைட்டிங் எல்லாம் செம
4 கடல் காட்சிகள் பாய்மரக்கப்பல் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டம்
5 கார்த்தி பேசும் காமெடி சீக்வன்சில் ரைட்டர் ஜெயமோகன் வசனம் பளிச்
6 அதிகம் எதிர்பார்க்காத விவேக் கேரக்டர் பூங்குழலியாக வரும் படகோட்டி ஐஸ்வர்யா லட்சுமி கேரக்டர் குட்
7 ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் ஹிட் பிஜிஎம் செம . தோட்டாதரணியின் ஆர்ட் டைரக்சன் சூப்பர்
8 ரவிவர்மனின் ஒளிப்பதிவு கனகச்சிதம்
படத்தின் மைனஸ்
1 ஹீரோவுக்கு காதல் காட்சிகளே இல்லை . அவ்வளவு ஏன்? சரித்திரப்படத்தில் யாருக்குமே லவ் போர்சனே இல்லாதது மைனஸ் தான்
2 போர்க்காட்சிகளை பாகுபலி மாதிரி பிரம்மாண்டமாக எடுக்கவில்லை அல்லது அப்படிக்காட்டவில்லை
3 சி ஜி ஒர்க்கும் விஎஃப் எக்ஸ் ஒர்க்கும் ரொம்ப சுமார்தான்
ரசித்த வசனங்கள்
1 சுரங்கப்பாதைல போற வழில கருவூலம் இருக்கும், அதுல தங்கம் இருக்கும், மயங்கிடாத
வைரச்சுரங்கத்தையே இங்கே பாத்துட்டேனே?
மயங்கிட்டாயா?
கொஞ்சமா
2 பேரழகிகளை விட ஆசை காட்டுவது மணிமுடி
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அனைத்துத்தர ரசிகர்களையும் கவரும் ஜனரஞ்சகமான படம் தான்
பொன்னியின் செல்வன்-1 (2022)- மணிரத்னம் பிரமாதமான மேக்கிங்கில் கலக்கிட்டார். கடல் காட்சிகள் பிரம்மாண்டம். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி நடிப்பு அருமை , த்ரிஷா-ஐஸ் காம்போ காட்சி செம . நாவல் படித்தவர்களுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கும், பாகுபலி போல இந்தியா முழுக்க ஹிட் ஆவது கடினம், தமிழகத்தில் ஏ செண்ட்டரில் ஹிட் ஆகும். விகடன் 50 , ரேட்டிங் 3.5 / 5