நேமாலஜிப்படி தாணு தனுஷ் இருவ்ருக்கும் ராசி உண்டு. DHANUSH என்ற சொல்லுக்குள் அடங்கிடுது.DHANU சோ ஹீரோ & புரொடியூசர் பிராப்ளம் வராது.
ஆளவந்தான் பட்ம் அட்டர் ஃபிளாப் ஆனதில் கமல் மீது கலைப்புலி எஸ் தாணுக்கு ஒரு வ்ருத்தம் உண்டு. அதே கதை ஒன்லைனை வேற பாணில வேற் திரைகக்தைல ந் லோ பட்ஜெட்ல எடுத்து ஜெயிச்சுக்காட்டறேன் பார் என மானசீகமாக சவால் விட்டு எடுத்த மாதிரியே இருக்கு
ப்டத்தின் முதல் பாதி சூப்பர் நேச்சுரல் ஹாரர் ஃபிலிம் அல்லது கோஸ்ட் த்ரில்ல்ர் மோட்ல எடுத்துட்டு பின் பாதி சைக்கோ க்ரைம் த்ரில்லரா போனாலும் டோட்டலா படம் ஸ்லோ வாதான் போகும், அதனால ஆடியன்ஸ் தியேட்டருக்கு பொறுமையான திரைக்கதையை எதிர்பார்த்து வரனும்
செல்வராகவன் + தனுஷ் + யுவன் ஷங்கர் ராஜா காம்போ நீண்ட இடைவெளிக்குப்பின் இனையுது
ஸ்பாய்லர் அலெர்ட்
நான்- லீனியர் கட்ல கதை சொல்லப்ப்ட்டாலும் நம்ம விமர்சனத்துல ரிவர்ஸ் பேட்டர்ன்ல கதை சொல்றேன்
சம்பவம் 1 - பொதுவாவே இந்த சம்சாரம்ங்க வாயைத்திறந்தாலே நமக்கு பக்னு இருக்கும், என்ன கோரிக்கை? என்ன ஆர்டர்? என்ன ஷாப்பிங்?னு... ஆனா வில்லன் கொடுத்து வெச்சவர். ஒரு பேச்சு வராத சாந்தியை லவ் மேரேஜ் பண்ணிக்கறாரு . அவருக்கு 2 பசங்க. ஃபேமிலியோட வெளில போகும்போது ஒரு ரவுடி கும்பல் வில்லனை வம்படியா கலாய்க்குது . வில்லன் அமைதியா வர்றார். ஆனா பச்ங்க சலிச்சுக்கறாங்க, அவங்களை ஒரு காட்டு காட்டி இருக்கலாமில்ல? என அங்கலாய்க்கறாங்க .
அன்னைக்கு நைட் காட்டுக்கு வேட்டையாடப்போறேன்னு வில்லன் கிளம்பறார். மகன் ஒருத்தன் அப்பா வேட்டையாடுவதை வீடியோ எடுக்கலாம்னு அவருக்கே தெரியாம ஜீப்ல ஏறிக்கறான்.அன்னைக்கு நைட் நடக்கும் சம்பவங்கள் அவனுக்கு அதிர்ச்சி ..
வில்லன் மகன் ஜீப்ல இருந்ததை ஒரு கட்டத்தில் வில்லன் பார்த்துடறார். இந்த விஷயத்தை இங்கே நடந்ததை அம்மா கிட்டயோ வேற யார் கிட்டேயோ சொன்னே தொலைச்சிடுவேன்னு மிர்ட்றார்
அவன் அம்மா கிட்டே அப்பா பற்றிய ரகசியங்களை சொன்னானா? பின் விளைவுகள் என்ன ஆச்சு ? இது சஸ்பென்ஸ்
சம்பவம் 2 - ஹீரோக்கு ஒரு சம்சாரம் ஒரு பெண் குழந்தை . பாப்பாவுக்கு 12 வயசு ஆனதும் அவர் கிட்டே ஒரு மாற்றம் வருது. ரூம்ல தனியா இருக்கறப்போ வேற யார் கிட்டேயோ பேசற மாதிரி தெரியுது . யார்னு கேட்டா அதெல்லாம் ஒண்ணும் இல்லைனு சமாளிக்கறா. ஒரு கட்டத்தில் இது ஓவர் ஆகவே சைக்யாட்ரிஸ்ட்டிடம் கூட்டிட்டுப்போறாங்க. ஹீரோ மகளை ஒரு ஆவி பிடிச்சிருக்கு அந்த ஆவி ஒரு கொலை பண்ணனும்னு டிமாண்ட் வைக்குது . அதை அந்தக்கொலையை ஹீரோ பண்ணாலும் சரி ஹீரோ மகள் உடம்பில் இருந்து ஆவியை பண்ண விட்டாலும் சரி .. இஅந்தக்கொலை எதுக்காக ப்ண்ணனும்? யாரைப்ப்ண்னனும் என்பது சஸ்பென்ஸ் . ஆவியின் கோரிக்கையை ஹீரோ நிறைவேற்றினாரா? இல்லையா? அது சஸ்பென்ஸ்
சம்பவம் 3 - ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி ,அவங்களுக்கு ரெண்டு பசங்க. 2 பேரும் ட்வின்ஸ் . ஒருத்தன் நல்லவன், இன்னொருவன் கெட்டவன் . சைக்கோ மாதிரி , அவன் பார்வையே சரி இல்லை ., ஏண்டா இப்டி இருக்கே?னு கேட்டதுக்கு அப்பாவையே போட்டுத்தள்ளிட்டான் . அரண்டு போன அம்மா ஜோசியரிடம் போக அந்தக்குழந்தையால ஆபத்து . விரட்டி விட்டுடுங்க என்கிறார்/. அம்மா நைசா அந்தப்பையனை கழட்டி விட்டுட்டு எஸ் ஆகிறார்
மேலே சொன்ன 3 வெவ்வேற சம்பவங்களும் எப்படி ஒரு நேர்கோட்டில் இனையுது என்பதே திரைகக்தை
ஹீரோவா தனுஷ் , அமைதியான நடிப்பு . கெட்ட்ப்பும் நார்மல் . அவருக்கு மனைவியாக இந்துஜா அதிக வாய்ப்பில்லை வந்தவ்ரை ஓக்கே
தனுஷின் மகளாக வரும் ஹியா தவே கலக்கலான நடிப்பு . படத்தில் தனுஷ்க்கு அடுத்து இவருக்குதான் அதிக காட்சிகள் ., குறிப்பாக இண்ட்டர்வெல் பிளாக்கில் அவரது பேய்ச்சிரிப்பு பிரமாதம்
வில்லன் தனுஷ்க்கு தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுது .,அனாயசமான நடிப்பு
சிறுவர்கலாக வரும் இரட்டையர்கள் ந்டிப்பு அபாரம்
வில்லனின் மனைவியாக வருபவர் நடிப்பு குட் . சைக்யாட்ரிஸ்டாக வரு ம் பிரபு குட் ஆக்டிங் . யோகிபாபுவுக்கு அதிக வேலை இல்லை
ஒளிப்பதிவு இசை படத்தின் பெரிய பலம்
சபாஷ் டைரக்டர்
1 த காஞ்சூரிங் படத்தில் வருவது போல திகில் காட்சிகளை இதில் எதிர்பார்க்கவில்லை . ஒரு சீனில் கூட பேயைக்காட்டாமல்யே திகிலை வரவழைக்கிறார்கள்:
2 ரொம்ப லோ பட்ஜெட்டில் இரு வீடுகளிலேயே ஷூட்டிங்கை முடித்த சாமார்த்தியம் சபாஷ்
3 வில்லன் வரும்போது ஒலிக்கும் பிஜிஎம் அந்தப்பாட்டு கொலை மாஸ்
திரைக்கதையில் சில ஆலோசனைகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 பொதுவா இந்தியக்குடும்பங்களில் அம்மா அப்பா மகள் எல்லாம் ஒரே பெட்ரூமில் படுப்பதுதான் வ்ழக்கம், ஃபாரீன் படத்தில் இருந்து சீன் உருவும்போது அப்படியே வைக்கனும்னு இல்லை , நம்ம கலாச்சாரத்துக்குத்தகுந்த மாதிரி மாத்திக்கனும், இந்த விஷயத்தில் அட்லீ கெட்டி
2 ஹீரோ ஹீரோயின் இருவரும் படுத்திருக்கும் கட்டில் கிட்டத்தட்ட 10 பேர் படுக்கும் அளவு அகலமாத்தான் இருக்கு ., மகள் நைட் வந்து இன்னைக்கு நான் உங்க கூடப்படுத்துக்கறேன் என சொல்லும்போது அப்பா ஓகேங்கறார். அம்மா கோவிச்ட்டு எனக்கு கட்டில்ல இடம் போதாதுனு கோவிச்ட்டு வெளில போறார். இந்த சீன் எதுக்கு ?
3 மகளுக்கு ஏதோ பிரச்சனை என்று தெரிந்த பின்னும் மக்ளை தனி அறையில் ப்டுக்க வைப்பது ஏன் ?
4 மகள் ரூமில் கேமரா செட் பண்ணுவது இன்ன பிற டெக்னிக்கல் அம்சங்கள் ஃபிட் பண்ணுவது எல்லாம் மகள் ஸ்கூலுக்குப்போனபின் அவளுக்கு தெரியாமலேயே ப்ண்ணலாமே?
5 பொதுவா தம்பதிக்கு 2 வது குழந்தை வேணும்னா முதல் குழந்தை பிறந்து 5 வருடத்துக்குள்ள் தான் கேட்பாங்க, அதான் உலக வழக்கம் , இந்த ஹீரோயின் மகளுக்கு 12 வயசு ஆனபின் இவளுக்கு மேரேஜ் ஆகிட்டா நாம தனியா இருப்போம் இன்னொரு குழந்தை பெத்துக்கலாம்னு சொல்லுது . காலம் கடந்த ஞானம்
6 வில்லனுக்கு வேலை வெட்டி எதும் இருப்பதாத்தெரில. பூவாவுக்கு என்ன பண்றாரு ?
7 பொதுவா ஒரு கொலையைப்பார்த்த சாட்சியை விட்டு வைப்பது அபாயம் தான், ஆனா தன் சொந்தக்குழந்தை தான் சாட்சி எனும்போது யாராவது கொல்வாங்களா? எல்லாரையும் கொன்னுட்டு அவர் எங்கே போகப்போறார்?
8 வில்ல்ன் 35 வய்சுல தான் ஏன் சைக்கோ ஆ னேன்னு காரணம் சொல்வது ஓக்கே ஆனா சின்னப்பையனா இருய்க்கும்போதே அவர் ஏன் சைக்கோவா ஆனார் என்பதற்கு பட்த்தில் விளக்கம் இல்லை . வ்ழக்கமா அனாதை , அன்பு இல்லைனு சப்பைக்கட்டு கட்டுவாங்க இதில் அது கூட இல்லை
9 வில்லனின் கேரக்டர் ஸ்கெட்ச் இன்னும் ஸ்ட்ராங்கா டிசைன் பண்ணி இருக்கலாம்
10 க்ளைமாக்சில் 200 அடி பள்ளத்தாக்கில் மேலே இருந்து விழும் ஹீரோ வில்லன் இருவருமே உயிர் பிழைப்பது காதில் பூ . கீழே தண்ணி ஓடுதுனு காட்டியாவது சமாலிச்சிருகலாம்
11 நீ என்னை விட மோசமானவன் என செல்வராகவன் சொல்லும்போது அப்றம் ஏப்பா அவரை கூட வெச்சுக்க்றேனு கேட்கத்தோணுது
12 இவ்ளோ க்ளேபரங்கள் கதைல நடக்குது . ஒரு மருந்து , மாத்திரை , டானிக்குக்கூட போலீஸ் கேரக்டரே இல்லை
ரசித்த வசனங்கள்
1 என்னை விட நீ ஏன் பலசாலி இல்லைனு தெரிய்மா? ஏன்னா நான் அனுபவிச்ச வலி எனக்கு நிகழ்ந்த நிராகரிப்புகள் இதெல்லாம் உனக்கு நிகழ்லை
2 உலகத்தோட எந்த மூலைக்கு நீ போனாலும் அப்பாவா உன்னைப்பாதுகாக்க அங்கே வருவேன்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஃபேமிலியோடு பார்க்கத்தகுந்த ஒரு த்ரில்லர் படம் தான் . ரெண்டு மணி நேரம் தான் ஓடுது . பார்க்கலாம்
நானே வருவேன் (2022)-முதல் பாதி கோஸ்ட் த்ரில்லர்.பின் பாதி சைக்கோ க்ரைம் த்ரில்லர்.யுவன் பிஜிஎம் பட்டாசு.சைக்கோ தனுஷ் நடிப்பு செம.லோ பட்ஜெட்ல ஒரு ஹிட் படம்.விகடன் 43. ரேட்டிங். 2.75 / 5. #NaaneVaruvean
0 comments:
Post a Comment