கலைப்புலி எஸ் தாணு ஒரு பேட்டில ஆளவந்தான் படத்தால தனக்கு ஏகப்பட்ட நட்டம்னு சொல்லி இருந்தார். அதை டிஜிட்டல் முறைல மீண்டும் ரீமிக்ஸ் பண்ணி ரிலீஸ் பண்றதா ஒரு ஐடியா வேற வெச்சிருந்தார் கோப்ரா படத்தோட ட்ரெய்லர் , டீச்ர் எல்லாம் பார்க்கும்போது தசாவதாரம் , சிட்டிசன் மாதிரி இது ஏதோ கெட்டப் சேஞ்ச் மேனியாவால பாதிக்கப்பட்ட ஹீரோவோட கதைனு நினைச்சா அங்கே தான் ஒரு ட்விஸ்ட் . கமல் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்காத திருப்பமா ஆளவந்தான் , வில்லன் , தடம் , வாட் ஹேப்பண்ட் டூ மண்டே , தூம் 3 போன்ற 5 படங்களையும் அட்லீ ஒர்க் பண்ணி இதை கெடுத்து வெச்சிருக்காங்க சாரி எடுத்து வெச்சிருக்காங்க
ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோ ஒரு மேத்ஸ் டீச்சர் . அவர் கணக்கு போடற வேலையை மட்டும் பார்க்கலை ஆளுங்களோட கணக்கு தீர்க்கற ப்ரொஃபஷனல் கில்லர் வேலையையும் பார்க்கறார். கொலை பண்றதெல்லாம் சாதா ஆட்கள் இல்லை ஃபாரீன் வி ஐ பிகள் மாநில சி எம் மாதிரி செக்யூரிட்டி அதிகம் உள்ளவங்களை தான்,
மாசத்துக்கு 29 நாட்கள் ஃபாரீன் சுத்திட்டு இருக்கற ஹீரோ மீதி இருக்கற 2 நாட்களில் ரிலாக்ஸா இருக்கலாம்னா ஒரு பேக்கு ஹீரோயின் அவரை லவ் பண்ணுது , ஆளே ஊர்ல இருக்கறதில்லை எப்படி லவ் வருதுனு தெரில
ஃபாரீன் ல நடந்த கொலைக்கும் இந்தியாவில் நடந்த கொலைக்கும் 6 ஒற்றுமைகள் இருப்பதைப்பார்த்து ஃபாரீன் ஆஃபீசர் ஒருத்தர் இந்தியா வர்றார் . அவரு ஹீரோவை பிடிச்சாரா? இல்லையா? என்பதே கதை
. இந்தப்படம் 3 வருசமா ஷூட்டிங் நட்ந்ததா சொல்றாங்க . அதை சிம்பாலிக்கா உணர்த்தும் விதமா டைம் டியூரேஷன் 3 மணி நேரம் 3 நிமிசம் 3 விநாடி படம் ஓடுது. அது போக டைரக்டரோட ராசியான நெம்பர் 333 யாம் ., அனேகமா புரொடியூசராட ராசி நெம்பர் ஏழரையாதான் இருக்கும்
ஹீரோவா விக்ரம் , பிரமாதமான நடிப்பு . ஆனா கெட்டப் சேஞ்ச் பண்றேன்னு அவர் பண்ற சில கூத்துக்கள் ஓவர் .சிட்டிசன்ல எப்படி அஜித்துக்கு பல கெட்டப்கள் எடுபடாம துருத்தலா ,மேக்கப் தெரிஞ்சுதோ தசாவதாரம்ல கமலுக்கு சில கெட்டப்கள் எப்படி எடுபடலையொ அதே கதை இங்கேயும் டிட்டோ
தறுதலையா சுத்திட்டு இருக்கும் ஹீரோவை ஒரு தலையா காதலிக்கும் லூஸ் ஹீரோயின் கேரக்டர் தான் தமிழ் சினிமாவின் சாபம். அந்த சாபத்தின் பிம்பமாய் ஸ்ரீநிதி ஷெட்டி . ஏம்மா பார்க்க சுமாரா அழகாதானே இருக்கே ? ஏன் 55 வயசு ஆளை லவ் பண்றே?னு கேட்கத்தோணுது
ஃபிளாஸ்பேக் சீனில் இன்னொரு காதலியாக மிருணாளி நடிக்க வாய்ப்பு. இவர்கள் இருவரை விட அதிக காட்சிகளில் வரும் வாய்ப்பு ஆராய்ச்சி மாணவியாக வரும் மீனாட்சிக்கு . துடுக்குத்தனமான தோற்றம்
ஃபாரீன் ஆஃபீசராக இர்ஃபன்பதான். புதுமுகமாக அறிமுகம் . குறை சொல்ல முடியாத நடிப்பு . ஆனா அவரா எதுவும் கண்டு பிடிக்காம ஆராய்ச்சி மாணவி சொன்னதை ஃபாலோ ப்ண்றார்
வில்லனா அத்தனை கொலைகளையும் செய்ய வைக்கும் மாஸ்டர் மைண்டா மலையாள நடிகர் ரோஷன் மாத்யூ ( கப்பீலா ஹீரோ) கூட டம்மி வில்லன் தான்
வில்லனை எப்போ டம்மியா காட்றோமோ அப்பவே ஹீரோவுக்கு வேல்யூ இருக்காது என்பதை இயக்குநர்க்ள் உணரனும்
இது போக கே எஸ் ரவிக்குமார் வ்ளர்ப்புத்தந்தையாக , மியா ஜார்ஜ் அம்மாவாக , வர்றாங்க . குட் ஆக்டிங் ,
இசை ஏ ஆர் ரஹ்மான் . 2 பாட்டு ஆல்ரெடி ஹிட்டு . பிஜிஎம் தீம் மியூசிக்கில் அள்ளறார்
ஒளிப்பதிவு ஃபாடீன் படம் போல இருக்கு லொக்கேசன் ஆர்ட் டைரக்சன் விஎஃப் எக்ஸ் ஒர்க்ஸ் எல்லாம் குட்
சபாஷ் டைரக்டர்
1 மொத்தப்படத்திலும் புதுமையான இதுவரை பார்க்காத ஒரு காட்சி பிரில்லியண்ட்டா ப்டமாக்கப்பட்டது அந்த விசாரனை அறைல நடக்கும் இண்ட்ராகேஷன் சீன் தான் அதகளம் .அந்த சீனில் ஆனந்த்ராஜின் டைமிங்கயும் சொல்லனும் ( இந்த சீன் அன்னியன் படத்தில் பிரகாஷ் ராஜ் விசாரிக்கும் சீனின் இன்ச்பிரேஷனாக இருக்கக்கூடும் , அதே போல் தனுஷ் ந்டிச்ச 3 படத்தில் தனுஷுக்கு ஆர்டர் போடும் இமேஜினெஷன் ஹாலுசினேஷன் பாத்திரம் கூட இதிலும் வருது )
2 முதல் பாதி பர பரப்பாக ஃபாரீன் படம் பார்க்கும் தோற்றத்தை அளிக்கும் விதமா படமாக்கியது
3 தனது முந்தைய படங்களான டிமாண்ட்டி காலனி , இமைக்கா நொடிகள் போலவே இதையும் த்ரில்லர் சப்ஜெக்ட்டாக தேர்வு செய்தது
ரசித்த வசனங்கள்
1 ராக்கெட்ல இருந்து மனுஷன் கத்துக்க வேண்டிய முக்கியமான விஷயம் எது தெரியுமா? நாம மேல போகப்போக வேண்டாத விஷயங்களைக்கழட்டி விட்டுட்டுப்போய்ட்டே இருக்கனும்
2 இவன் த்ரில் ஃபேக்டர்சுக்காக இப்படி எல்லாம் பண்றானா? இல்லை இவனை மட்டிவிட யாரோ பிளான் பண்றாங்களா?
3 இந்த உலகத்துலயே வில்லனைக்காப்பாத்துன முதல் ஹீரோ நீ தான்
4 நீ பேசனும்கறதுக்காக இப்போ அடிக்கலை எதுவும் பேசிடக்கூடாதுனு தான் அடிக்கறோம்\
\5 ஒரு புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் எமோஷனல் டெசிசன் தான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லன் என்னதான் கேனயனா இருக்கட்டுமே? ஒரு ஆளைக்கொலை பண்ண அந்த அந்த ஊர் கொலையாளியைப்பிடிச்சா பட்ஜெட்டும் கம்மியா செலவாகும் அவனைப்பத்திய விபரமும் வெளில தெரியாது
2 எந்த ஸ்கூலில் அல்லது காலேஜில் மாச்த்துக்கு 2 நாட்கள் வேலைக்கு வந்துட்டு மீதி 29 நாட்கள் லீவ் போடும் வாத்தியாரை வேலைக்கு வெச்சிருப்பாங்க ?
3 பலராலும் சிலாகிக்கப்பட்ட மேத மேட்டிக்கல் கால்குலேசன் மர்டர் மெத்தேட்ஸ் எல்லாம் நம்ப்ற மாதிரியே இல்லை . . பார்க்க சுவராஸ்யமா இருக்கு ஆனா 10% கூட நம்பகத்தன்மை இல்லை
4 ஹீரோவை போலீசிடம் மாட்டி விடும் அந்த இடைவேளை ட்விஸ்ட் சீனுக்குப்பின் அவருக்கு பெரிய அளவில் கதையில் வேலையே இல்லை , சும்மா டம்மியா தான் செட் பிராப்பர்ட்டியாதான் வந்துட்டுப்போறார்
5 ச்ர்வதேச அளவில் பெரிய வி ஐபிகளை ஆள் வெச்சுக்கொலை செய்யும் வேய்க்கானமான ( விபரமான) வில்லன் க்ளைமாக்சில் ஹீரோவை கொலை செய்ய தானே க்ளம் இறங்குவது ஏன்? ஆள் வெச்சுக்க மாட்டாரா?
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - கோப்ரா-முதல் பாதி விறுவிறுப்பாக.பின் பாதி இழுவையாக.கதை அமைப்பு ஆளவந்தான் :what happened to monday சாயல்.சிட்டிசன் போலவே சில கெட்டப் எடுபடல.ஏஆர்ஆர் பிஜிஎம் குட்.விகடன் 42 ரேட்டிங் 2.5 /5. இந்தப்படம் செம ஹிட்டும் இல்லை ஃபிளாப்பும் இல்லை , மீடியமா ஓடிடும். சி செண்ட்டர்ல போகாது . ஏ பி ல சுமாரா ஓடும்
0 comments:
Post a Comment