ஹீரோயின் பேரு மாலா . ஹீரோ போற பக்கம் எல்லாம் குறுக்கால வர்றாரு .ஏம்மா ஏகப்பட்ட ஸ்பேஸ் அங்கே கிடக்கு ஏன் நான் போற பக்கம் எல்லாம் வர்றே? தள்ளு மாலா அப்டினு கடுப்பாகறார் . மன்னன் ரஜினி - விஜயசாந்தி போல ரெண்டு பேருக்கும் நடக்கும் ஈகோ மோதல் தான் கதை அப்டினு டைட்டில் பார்த்ததும் நானா கதையை யூகிச்சேன் . ஆனா அந்தக்கதை இல்லை
ஸ்பாய்லர் அலெர்ட்
ஹம் ஆப் கே ஹேங் கோன் அப்டினு ஒரு ஹிந்திப்படம் மேரேஜ் ஃபங்க்ஷன் பேக் க்ரவுண்டில் சொல்லப்பட்ட ஒரு லவ் ஸ்டோரி . மாங்கு மாங்குனு ஓடுச்சு அதே மாதிரி ஒரு மேரேஜ் ஃபங்க்ஷனில் நடக்கும் அடிதடின் தான் கதை அப்டினு சொன்னா நம்பவா போறீங்க ?
ஆக்சன் சீக்வன்ஸ் எல்லாம் அதகளமா இருக்கும் . எனக்குத்தெரிஞ்சு தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் போலீஸ் ஸ்டேஷன் ஃபைட் மாதிரி கை தட்டல் வாங்குன ஆக்சன் சீக்வன்சை இது வரை பார்த்ததில்;லை . பாட்ஷா படத்தில் இடைவேளை டைமில் வரும் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சீன் ஃபைட் . விஸ்வரூபம் கமல் ஃபைட் , தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் வரும் பெஞ்ச் ஃபைட் இதெல்லாம் மறக்க முடியாத ஃபைட் சீன்கள்
இந்தப்படத்தில் வரும் ஒரு சினிமா தியேட்டர் ஃபைட் இது வரை இந்திய சினிமாவில் காட்டாத ஆக்சன் சீக்வன்ஸ் . அதே போல் க்ளைமாக்ஸில் வரும் கல்யாண மண்டப ஃபைட் சீக்வன்ஸ் இப்ப்டி எல்லாம் சீன் எடுக்க முடியுமா? என யோசிக்க வைத்த அதகளமான காட்சிகள்
சரி , கதை என்ன? விலா வாரியா பார்ப்போம்
ஓப்பனிங் சீன்ல யே ஹீரோவுக்கு மேரேஜ் அந்த மேரேஜ் ஃபங்க்ஷனில் ஒரு தகறாரு நடக்குது . அதனால மேரேஜ் நின்னு போகுது . எதனால அந்தத்தகறாரு நடந்ததுனு நான் லீனியர் முறைல திரைக்கதை ஓடுது
ஹீரோ ஒரு முன் கோபி . அது ஏன் எல்லா ஹீரோவும் முன் கோபியாவே இருக்காங்க? பாதிப்பேராவது முன் சத்திய மங்கலமாக இருக்கலாமில்ல ?
அடிக்கடி யார் கூடவாவது சண்டைப்போடறது அதன் மூலம் வீடியோ வைரல் ஆகி ஹிட் ஆவது இதுதான் ஹீரோ. ஹீரோயின் அதுக்கும் மேல . இன்ஸ்டா , ஃபேஸ் புக் ல லைக் வாங்கற அரைப்பைத்தியம்
இந்த வேலை வெட்டி இல்லாத வெட்டாஃபீசுங்க ரெண்டு பேருக்கும் லவ் ஆகி மேரேஜ் வரை போகும்போது அங்கே நடக்கும் தக்றாருல மீண்டுய் கல்யாணம் நிக்குதா? திக்குதா? என்பதுதான் க்ளைமாக்ஸ்
ஹீரோவா டோவினோ தாமஸ் . பேசும் படம் கமல் மாதிரி அட்டகாசமான கெட்டப்ல சில சீன்கள் வர்றார் . சூர்யா , விக்ரம் , கமல் எல்லாம் பல கெட்டப் போட மெனக்கெட்டு கதையை யோசிக்கறாங்க ., ஆனா கதையே இல்லாத இந்த மசாலாப்படத்துல ஏகப்பட்ட கெட்டப் ல வர்றார் . இவரது ரசிகைகளுக்கு இந்தப்படம் சக்கரைப்பொங்கல் தான்
ஹீரோயினா கல்யாணி பிரியதர்சன் அழகிய முகம். கண்ணிய உடை , மிதமான சிரிப்பு என மனம் கவர்கிறார்
இருவருக்கும் இடையே ஆன காதல் காட்சிகள் நம்பும்படி இருக்கு
கிட்டத்தட்ட வில்லன் மாதிரி ஆனா வில்லன் அல்லாத கதாபாத்திரத்தில் சைன் டாம் சாக்கோ நடிச்சிருக்கார் ., இவர் தான் இஸ்க் படத்தின் வில்லன் . அடிபொலி ஆக்டிங்
படத்தில் கிட்டத்தட்ட 10 பாட்டு 12 ஃபைட்டு . கரெக்ட்டா 10 நிமிசத்துக்கு ஒரு பாட்டு 12 நிமிசத்துக்கு ஒரு ஃபைட்டு என லைன் கட்டி வருது
ரசித்த வ்ச்னங்கள்
1 எதிரியைத்தோற்கடிக்கறவன் பலசாலியே இல்லை , தன்னுடைய கோபத்தை யார் அடக்கறாங்களோ அவன் தான் பலசாலி
2 என் தங்கச்சியைக்கல்யாணம் பண்ணிக்குடுனு இவன் கேட்கறான், ஆனா எனக்குதான் தங்கச்சியே இல்லையே?
3 இப்போ நீ என்ன நினைக்கறே?
என்ன நினைக்கறது ? நம்மைப்பத்தி நினைக்காதவங்களைப்பற்றி நாம ஏன் நினைக்கனும்?
4 வாழ்க்கைங்கறது சாதா சைக்கிள் இல்லை , பிரேக் இல்லாத சைக்கிள்
5 சில அடி வாங்கித்தீர்க்கனும் சில அடி கொடுத்துத்தீர்க்கனும்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
கதைனு ஒண்ணு இருந்தாதானே திரைக்கதை அமைக்கனும்? லாஜிக் பார்க்கனும்? தக்காளி கதையே இல்லைன்னா எதுல போய் மிஸ்டேக்ஸ் கண்டுபிடிப்பீங்க> பார்க்கறேன் இதுதான் டைரக்டர் மைண்ட் வாய்ஸ்
இந்தப்படம் கேரளாவில் ரிலீஸ் ஆகி மெகா ஹிட் ஆகிடுச்சு நம்ம ஊர் உள்ளத்தைஅள்ளித்தா லெவல் ஹிட்.
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மாஸ் மசாலா பார்க்கும் சிரஞ்சீவி ரசிகர்கள் . வேலை இல்லாத வெட்டாஃபீஸ்கள் தாராளமாப்படம் பார்க்கலாம் / ரேட்டிங் 2 / 5 நெட் ஃபிளிக்சில் கிடைக்குது தல்லுன்னா மலையாளத்தில் பைக். ஹீரோ ஒரு பைக் ரேசர். இந்த அர்த்தத்தை சொன்ன கோட்டயம் குருப்பந்தாரா குலங்காரா லக்சி சேச்சிக்கு நன்றி ஆனா கூகுள்ல பார்த்தா செயின் ஆஃப் ஃபைட்ஸ்னு அர்த்தம் போட்டிருக்கு
0 comments:
Post a Comment