Monday, September 05, 2022

புதிய முகம் ( 1993) ( தமிழ்) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)


பிளாஸ்டிக் சர்ஜரி  பண்ணி  முகத்தை  மாற்றி  தப்பிக்கும் ஒரு  கிரிமினலின்  கதையை  தமிழில் சொன்ன  முதல்  படம்  என்ற  அளவிலும்  உன்னி  என்கிற  நடிகை  ரேவதியின்  காதல் கணவர் உடனான  ச்ந்திப்பு  நிகழ்ந்த  படம்  என்ற  அளவிலும் இது  கவனிக்கத்தக்க  படம்.சுரேஷ்  மேனன்  தான்  இயக்குநர்  தயாரிப்பாளர்  ஹீரோ   எல்லாமே 

செம  ஹிட்டு  பாட்டு லிஸ்ட்

ஏ ஆர்  ரஹ்மானின்  செம  ஹிட் சாங்க்ஸ்

1  கண்ணுக்கு  மை  அழகு  கவிதைக்குப்பொய்  அழகு 

2 பக்திப்பாடல்  பாடட்டுமா? 

3  நேற்று இல்லாத  மாற்றம் என்னது ? இதுதான்  காதல்  என்பதா? 

4  ஜூலை  மாதம்  வந்தால் ஜோடி  சேரும்  வயசு

5  சம்போ  சம்போ 

 ஸ்பாய்லர் அலெர்ட்


ஓப்பனிங்  சீன்லயே  ஹீரோ  தன்  காதலியோட  டூயட்  பாடிட்டு  இருக்கார். டூயட்  முடிஞ்ச்தும்  ஒரு  கொலை  நடக்கறதைப்பார்க்கறாங்க. காதலியைக்கொன்ன  கும்பல்  ஹீரோவை  மட்டும்  அசால்ட்டா  விட்டுடுது . அங்கேயே  அப்பவே  ஹீரோவைப்போட்டுத்தள்ளிட்டா  படமும்  அங்கேயே  முடிஞ்சிடுமே?


காதலியைக்கொன்னவங்களைப்பழி  வாங்க  ஹீரோ  அந்த  கும்பல்  தலைவனுக்கு  எதிரான  ஒரு  கிரிமினல்  கிட்டே  வேலைக்கு  சேர்றாரு. பழியும்  வாங்கிடறாரு .


 இப்போ  ஹீரோ தான்  சேர்ந்த கும்பலின் கொலை  கொள்ளை  செயலுக்கு  உடந்தையா  இருக்காரு. அவர்  மேல  ஏகப்பட்ட  கிரிமினல்  கேஸ்  ஃபைல்  ஆகுது .   அவர்  ஃபோட்டோவை  பப்ளிஷ்  பண்ணி  மீடியாக்கள்  எல்லாம்  அவரை  பிரபலப்படுத்திடறாங்க 


ஹீரோ  பிளாஸ்டிக்  சர்ஜரி  செஞ்சு  தன்  முகத்தை  மாத்திக்கிட்டு  புதிய  வாழ்க்கை  வாழ  ஆசைப்படறாரு 


அவரு  தன்  கூட்டத்தை  விட்டு  தன்  கட்டுப்பாட்டை  விட்டு  போறது  வில்லனுக்குப்பிடிக்கலை 


ஆனாலும்  ஹீரோ  தன்  முடிவில்  உறுதியா  இருக்காரு . ஒரு  பொண்ணை  லவ்  பண்ணி  மேரேஜ்  பண்ணிக்கறார். அவருக்கு  ஒரு  ஆண்  குழந்தை


 என்னப்பா  கதை  போய்க்கிட்டே  இருக்குனு  நினைக்கும்போதுதான்  ஒரு  ட்விஸ்ட் 

20  வருடங்கள்  கழித்து 


 ஹீரோவின்  மகன்  ஹீரோ  பிளாஸ்டிக்  சர்ஜரி  செய்யும்  முன்  இருந்த  முகச்சாயலுடன்  இருக்கார்\

\

 இதுக்குப்பின்  கதையில்    நிகழும்  சுவராஸ்யங்கள்  தான்  திரைக்கதை 


ஹீரோவா  சுரேஷ்  மேனன்.   நடிகர்  சுரேஷ்  நடிகர்  மோகன்  இருவர்  முகச்சாயலும்  கலந்த  கலவை . புது  முகம்  என்ற  அளவில்  ஓக்கே . 


ஹீரோயினா  ரேவதி . துறு  துறு  நடிப்பில்  கொடி  கட்டிப்பறக்கும் இவர்  க்ளைமாக்சில்  கண்  கலங்க  வைக்கும்  நடிப்பில்  முத்திரை  பதிக்கிறார் 


ஹீரோவின்  முதல்  முகமா  , மகனா  இரு  வேடங்களில்  வினித்/    வந்தவரை  ஓக்கே 


 வில்லனா  ராதா ர்வி   ரவிச்சந்திரன்  . பெரிய  அளவில்  வாய்ப்பில்லை 


 போலீஸ்  ஆஃபீசரா  ஹீரோயினை  ஒருதலையாக்காதலிக்கும்  போலீஸ்  ஆஃபீசரா  நாசர் ., அட்டகாசமான  நடிப்பு 


 கஸ்தூரி  ஒரே  ஒரு  பாட்டுக்கு  மட்டும் 


  கடைசி  வரை  இவரது  காதல்  ஹீரோயினுக்கு  தெரியாமயே  போவது  உருக்கம் 


ஒளிப்பதிவு  இ சை  எடிட்டிங்  கனகச்சிதம் 


 இது  ஒரு  கொரியன்  மூவியின்  காப்பி  என்றும்  ஒரு  ஆங்கில  சிறுகதையின்  பட்டி  டிங்க்ரிங்  ஒர்க்  எனவும்  இண்டஸ்ட்ரில  பேசிக்கிட்டாங்க


 இது  பாடல்கள்  த்ரில்லிங் மொமெண்ட்டுக்காகவே  ஓடிய  ப்டம், 



சபாஷ் டைரக்டர்


1   சூப்பர்  ஹிட்  ஆன  ஒரு  மெலோடி  சாங்கை  தனக்கு  வெச்சுக்காம  வேற  ஒரு  ஹீரோவுக்கு  விட்டுக்கொடுத்துட்டாரே?  என  பாராட்ட  நினைத்த  சமயம்  அதே  பாட்டை  பிளாஸ்டிக்  சர்ஜரிக்குப்பிறகு   வேற  ஒரு  ஹீரோயின்  கூட  அதே  பாட்டைப்பாடற  மாதிரி  காட்டிட்டாரு . 


2   ஐ டி  கார்டுக்கு  எல்லாம்  என்ன  பண்ணப்போறாருனு  நினைச்ச  டைம்  ஒரு  போலீஸ்  ஆஃபீசருக்கு  ஹெல்ப்  பண்ணி  அவர்  மூலமா  ஐ  டி  கார்டு  மட்டுமில்ல  மிலிட்ரிலயே  ஆஃபீசரா  வேற  சேர்றாரு . 


3 தனக்கு  என்ன  வருதோ  அதுக்குத்தக்கபடி  தான்  ந்டிக்கும்  கேரக்டர்களை  டிசைன்  பண்ணிக்கொள்ளும்  கே  பாக்யராஜ் , விஜய் ஆண்ட்டனி ,  வரிசையில்  சுரேஷ்  மேனன்  



ரசித்த  வசனங்கள் ( K S  அதியமான்)


1  இந்த  உல்கத்துல  அடிச்சுப்போட  ஒருத்தன்  இருந்தா  அணைச்சுப்போக  ஒருத்தன்  வருவான் 


2  குழப்பமே  பொம்பளைங்களாலதான்  வரும் 


3  சிரிக்கும்போது  அழகா  இருக்கீங்க, அதுக்காக  சிரிக்காதப்ப  அழகா  இல்லைனு  அர்த்தம்  இல்லை 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  ஒப்பனிங்  சீன்ல  நடக்கும்  ஒரு கொலையை  வினீத்  கஸ்தூரி   ஜோடி  பார்த்துடறாங்க , கொலையைக்கண்ட  சாட்சியைக்கொலை  செய்யனும். 10  அடி தூரத்துலதான்  கொலைகாரன்  இருக்கான். டக்னு  துரத்துனா  2  நிமிசத்துல  பிடிச்சிருக்கலாம்.,  அந்த  கிறுக்கன்  பக்கத்துல  இருக்கற  ஹெலிகாப்டர்ல  ஏறி  ஸ்டார்ட்  பண்ணி  துரத்தற்துக்குள்ளே  அந்த  ஜோடி 5  கிமீ  போய்டறாங்க . அட்லிஸ்ட்  ஒருத்தன்  ஓடித்துரத்தியும்  இன்னொருத்தன்  ஹெலிகாப்டர்ல  துரத்தியுமாவது   இருக்கலாம்


1  கண்ணுக்கு  மை  அழகு  பாடலில்    அவரைக்குப்பூ அழகு அவருக்கு  நான்  அழகு  என்ற   வரி  காட்சிப்படுத்தும்போது  நாயகி  தனிமையில்  இருப்பது  போல  அல்லது  தோழியிடம்  சொலவது  போல  காட்னாத்தான்  பொருத்தம் . புருசன்  பக்கத்துலயே  இருக்கும்போது  உனக்கு  நான்  அழகு  எனதானே   வரும்? அவருக்கு  என  வரி  வந்தா  அப்போ  இவர்  யாரம்மா?னு  கேட்கத்தோணுது. மேலோட்டமாப்பார்க்கும்போது  இது  ம்டத்தனமா  தான்  இருக்கும் . யோசிச்சுப்பாருங்க ( இதே  போல  கமலின்  காக்கிச்சட்டையில்  பூப்போட்ட  தாவணி  பாடலில்  மாதவி  மிடி  போட்டுட்டு  வருவார் ) 


3  மிலிட்ரில  சேர  வயது  வரம்பு  எல்லாம்  உண்டு. 17  வயசுக்கு  முன்னே  சேரனும்,  ஹீரோ 27  வயசுல  சேர்றாரு . அதுவும்  பெரிய  மிலிட்ர்  ஆஃபீசரா. அது  கூட  பரவால்ல  எப்போப்பாரு  வீட்டுக்குள்ளேயே  மிலிட்ரி  யூனிஃபார்மல  சுத்திட்டு  இருக்காரு 


4  போலீஸ்  ஆஃபீசரான  நாசர்  ஹீரோ   வினீத்  கொலைகாரனா  இருந்தப்போ  அந்த  கேசை  டீல்  பண்ணவர் . சுரேஷின்  மகன்  வினீத்  சாயலில்  வரும்போது   அவர்  ரீ ஆக்சனே  காட்டலை  மீடியாக்களும்  கண்டுக்கலை 


5   ஹீரோவின்  மகன்  20  வயசு  ஆனதும்  தன்  பழைய  முகச்சாயலில்  இருப்பதைப்பார்த்து  உஷார்  ஆகி  அவரை  ஃபாரீன்  அனுப்பி  இருக்கலாமே?  ஹீரோ  ஏன்  கண்டுக்கலை ? 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  - ஃபாரின்  படமான  ஃபேஸ்  ஆஃப்  , நாசரின்  முகம்  போன்ற  படங்களைப்பார்க்காதவர்கள்  இதைப்பார்க்கலாம். ரெண்டு  மணி  நேரம்தான் . யூ  ட்யூப்ல  கிடைக்குது   ரேட்டிங் 2.75 / 5 


டிஸ்கி -  விமர்சனத்துக்கு  சம்பந்தம்  இல்லாத  ஒரு  கருத்து , ஹீரோயின்  தன்னைக்காதலிச்ச  தன்  கூடவே  பல  வருசங்கள்  பழகிய  நேர்மையான  நல்லவனை  லவ் பண்ணலை. ஒரு  கிரிமினலைத்தான்  லவ்  பண்ணி  இருக்கு . பெரும்பாலான  பொண்ணுங்க  இப்படித்தான் 

0 comments: