இந்தப்படம் ரிலீஸ் டைம்ல இதுக்கு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பிரமாண்டமா இருந்தது . மாஸ் ஹீரோக்களுக்குக்கூட இவ்ளோ பில்டப் இல்லை . கலைப்புலி எஸ் தாணு கலைப்புலி ஜி சேகரனோடு இணைந்து தயாரித்த படம் . இது மாதிரி பேய்ப்படங்கள் , திகில் படங்களில் பய முகம் காட்டியே பிரபலம் ஆன நளினிதான் இதுல ஹீரோயின். போஸ்டர் டிசைன்ல ஹீரோ முகமே இருக்காது . ஹீரோயின் முகம் அல்லது வில்லனான பேய் முகம் தான் பிரதானமா பயமுறுத்துச்சு. செம ஓட்டம் ஓடுச்சு
ஸ்பாய்லர் அலெர்ட்
200 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ நிகழ்வாய் நவ கிரகங்களும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் ஒரு இரவில் பிறக்கும் ஆண் குழந்தை சாத்தானின் குழந்தை, அதனால் உலகத்துக்கு தீங்கு வரும் அதைப்போய் கொண்டுவா என சாமியார் ஒருவர் சீடனிடம் சொல்லி அனுப்பறார்
ஆனா கொண்டு வர முடியல . அந்தக்குழந்தையை குழந்தை இல்லாத ஒரு தம்பதி தத்து எடுத்து வளர்த்துது
அவனுக்கு 18 வயசு ஆகும் வரை எந்தப்பிரச்சனையும் இல்லை அதுக்குப்பின் தான் கதை மலையாளப்படக்காலைக்காட்சி 11 மணி படம் போல் யூ டர்ன் அடிக்குது சாரி ஏ டர்ன் அடிக்குது
சாத்தானின் குழந்தைனு இவங்க சொல்லிக்கற வில்லனோட வீட்டுக்குப்பக்கத்துலதான் ஹீரோயின் வீடு இருக்கு . வில்லனுக்கு ஹீரோயின் மேல ஆசைன்னா ஹீரோயின் வயசுக்கு வந்து 10 வருசமா சும்மாதான் தேமேனு இருக்கு அப்போ ட்ரை பண்ணி இருக்கலாம் அல்லது ஒரு மிலிட்ரி ஆஃபீசர் கூட மேரேஜ் ஆகுதே அப்போ தடுத்திருக்கலாம்
அட அது கூட வேணாம்ங்க ., மேரேஜ் முடிஞ்சி 2 வது நாளே மிலிட்ரிக்குப்போய் ட்யூட்டில ஜாயின் பண்ணி ஒரு 6 மாசம் கேம்ப் அடிக்கறாரு ஹீரோயினோட புருசன் அப்போவாவது ட்ரை பண்ணி இருக்கலாம்
கோல்டன் ஆப்புர்சுனிட்டி எல்லாத்தையும் அந்த கேன வில்லன் தவற விட்டுட்டு மிலிட்ரி ரிட்டர்ன் வந்து ஹீரோயின் கூட அப்டி இப்டி இருக்கும்போதுதான் வில்லனுக்கு திடீர்னு ஞானம் வந்து ஹீரோயினை அடைய முயல்கிறார். அந்த முயற்சில வில்லன் வெற்றி அடைஞ்சானா? இல்லையா? என்பதுதான் கதை
ஹீரோவா ஆக்சன் கிங் அர்ஜூன் . அவரது விக் எடுபடலை . அவரது கேரக்டர் ஸ்கெட்ச் மகா மட்டம் . மனைவியை பெட்ரூம்ல அணைக்க முற்படும்போது ஏதோ ஒரு காரணத்துக்காக ஹீரோயின் மறுக்க பளார்னு ஒரு அறை குடுக்கறார் . அப்புறம் வருவாளோ தேவி தெருவோரம் பாவினு ஒரு சோகப்பாடல் வேற
இவர் என்னமோ பெண்மையைக்கட்டிக்காப்பவர் மாதிரி தாய் போல நீ உன் மடியில் சேய் ஆனேன்னு பாட்டு வரி எல்லாம் பட்டையைக்கிளப்பது ஆனா ஹீரோ கேரக்டர் டிசைன் பண்ணது சரி இல்லை
ஹீரோயினா நளினி . செம ஆக்டிங் வில்லனின் ஹிப்னாடிச பார்வையில் தன்னிலை மறப்பதும் அந்த குற்ற உணர்ச்சியில் தவிப்பதும் கணவன் தன்னை சந்தேகப்படும்போது துடிப்பதும் அருமையான நடிப்பு ., தாய்க்குலங்கள் கண்கள் எல்லாம் குளங்கள் ஆகி இருக்கும்
வில்லனா சாத்தானின் குழந்தையா ஏதோ இத்துப்போன ஒரு ஆள் . அனேகமா தயாரிப்பாளரோட சொந்தக்காரரா இருக்கும்
பரம்பரை பரம்பரையா கரண்ட்ல கண்டம் உள்ள செந்தில் குடும்ப காமெடி கதையோட ஒட்டி வருவது அருமை
சங்கராபரணம் சோமயாஜூலு நடிப்பு குட் நிழல்கள் ரவி மீசை இல்லாமல் வர்றார் , வித்தியாசமான தோற்றம்
ஜெய் சங்கரின் குணச்சித்திர நடிப்பு டச்சிங், இசை வி எஸ் நரசிம்மன் 2 பாட்டு செம ஹிட்டு
சபாஷ் டைரக்டர் ( கலைப்புலி ஜி சேகரன்)
1 பொதுவாக பெண்கள் மலையாளப்படங்கள் காலைக்காட்சி பார்ப்பதில்லை அவங்களையே தியேட்டருக்கு வர வெச்சு பார்க்க வெச்சு ஹிட் ஆக்கிய திறமை அடடா . , எடுத்துக்கொண்ட கதை அடுத்தவன் மனைவியை அடைய நினைக்கும் வில்லன் கதை அதுக்கு மேல்பூச்சா பேய் பூதம் என ஜிகினா வேலைகள் கச்சிதம்
2 போஸ்டர் டிசைன் , பிரமாதமான விளம்பரங்கள் மார்க்கெட்டிங் டெக்னிக்ஸ்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 ஜெய்சங்கர் தம்பதிக்கு குழந்தை இல்லை , ஒரு அனாதைக்குழந்தையை தத்து எடுக்கனும் ஓக்கே அது ஏன் அந்த நைட்ல மழை புயல் வீசி ஊரே களேபரமா இருக்கு அப்பவே போய் ஆகனுமா> அடுத்த நாள் போகக்கூடாதா?
2 சாத்தானின் குழந்தைனு ஏகத்துக்கு பில்டப் கொடுத்தாங்க ஆனா அது ஆக்டிவ் ஆக 18 வருசம் ஆகுது அதுவரை ஏன் சைலண்ட் மோடுல இருக்கு ?
3 வில்லன் ஹிப்னாடிசம் மூலமா ஹீரோயினை மயக்கறான் அப்போ சோபாவில் தான் இருக்கான் அங்கேயே ஹீரோயினை ரேப் பண்ணி இருக்கலாம்., வா வா என் பின்னாடி வா அப்டினு 2 பர்லாங்க் தூரம் பெட்ரூம்க்கு கூட்டிட்டுப்போவதற்குள் ஹீரோயினுக்கு தன்னுணர்வு வந்துடுது
4 ஹீரோயின் ஹீரோ கிட்டே பக்கத்து வீட்டில் இருக்கும் ஆள் சரி இல்லைனு சொன்னதும் வாம்மா நாம ஊட்டி கொடைக்கானல்னு போவோம்னு கிளம்பி இருந்தா மேட்டர் ஓவர் ஆனா ஹீரோ லூஸ் மாதிரி மனைவி கிட்டே கோவிச்சுட்டு அவரு வீட்டை விட்டு வெளீல போறார்
4 வில்லன் தேவையே இல்லாம அவனோட வளர்ப்புத்தாயை எதுக்கு கொலை பண்றான்? நேரடியாக்கொல்லலை , அவனோட பேய் உருவம் மாறுவது கண்டு அம்மா ஹார்ட் அட்டாக்கில் இறக்கிறா. ஆந்தக்காட்சிக்கு சரியான விளக்கமே இல்லை
5 வில்லன் ஹீரோயினுக்கு ஃபோன் ப்ண்ணி எனக்கு உடம்பு சரி இல்லை சாப்பாடு இங்கே கொண்டு வானு சொன்னதும் ஹீரோயின் அவ்ளோ பெரிய பங்களாவுக்கு தனியா ஏன் போகனும் ? வாட்ச்மேன் வாட்ச் கட்டாத மேன் வேலைக்காரி சமையல்காரி யார் கிட்டேயாவது பார்சல் கொடுத்து விட்டிருக்கலாமே ?
6 சிவனை நோக்கி 50 வருசமா தவம் இருக்கும் குரு சாமியாருக்குக்காட்டாத தரிசனத்தை சிஷ்யன் சாமியாருக்கு சிவன் கொடுத்ததால் கோபப்பட்ட குரு சாமி சுவாமி இத்தனை வருசமா நான் செஞ்ச தவம் எல்லாம் வீணாப்போச்சேனு புலம்பறார் . அடுத்த சீன்லயே என் 50 வருச தவ வலிமையை பயனை சாத்தானுக்கு தானம் பண்றேன்கறார். ஏய்யா லூஸ் சாமி ,நீங்கதானே வேஸ்ட்னு சொன்னீங்க . உங்க அக்கவுண்ட்லயே பணம் இல்லை , இந்த லட்சணத்துல இன்னொரு அக்கவுண்ட்க்கு எப்படி டிரான்ஸ்ஃபர் பண்ண முடியும் ?
7 நீ வருவேனு எனக்குத்தெரியும், உனக்காகத்தான் 17 வருசமா இந்த காட்டுக்குள்ளே காத்திருந்தேன். நீ அந்த சாமியாரை சந்திக்க வரும்போது போட்டுத்தள்ளலாம்னு இருந்தேன்னு சொல்றாரு அந்த கெட்ட சாமியார் , நானா இருந்தா 17 வ்ருசம் வேஸ்ட் பண்ணாம அந்த நல்ல சாமியாரை அப்பவே போட்டுத்தள்ளி இருப்பேன் . அல்லது இவனைப்போட்டு இருப்பேன். எதுக்கு 17 வருசம் வேஸ்ட் பண்ணிட்டு ?
8 ஹீரோ மிலிட்ரி ஆஃபீசர்னா ஜனங்களுக்கு அதை தெர்யப்படுத்த மிலிட்ரி யூனிஃபார்ம்ல ட்ரெய்ன்ல இறங்கற மாதிரி காட்றது வழக்கம்தான் ஆனா மிலிட்ரியை விட்டு தூரமா வந்து 10 நாட்கள் ஆகியும் அதே யூனிஃபார்ம்ல ஊர் சுத்திட்டு இருக்காரு ஹீரோ , எதுக்கு ?
9 பேய்க்கு சாமின்னா ஆகாதுனு ஹீரோயினுக்கு தெரியுது , அப்போ பூஜை ரூம்ல போய் தாழ் போட்டுக்கிட்டா சேஃப் தானே? அதை செய்யாம பேக்கு மாதிரி பெட்ரூமலயே கிடக்குது
10 ஹீரோ மிலிட்ரி மேன். எக்சசைஸ் பாடி , நிழல்கள் ரவி ஒரு வயிற்றுவலி பேஷண்ட். கதைப்படி பலவினமான அவர் அர்ஜூன் கூட சரிக்கு சரி ஃபைட் போடுவது எப்படி ? அர்ஜூன் கிட்டே துப்பாக்கி இருந்தும் ஒண்ணும்பண்ண முடியல
சி பி எஸ் ஃபைன்ல் கமெண்ட் - டபுள் மீனிங் டய்லாக்ஸ் , கணவ்ன் மனைவி கொஞ்சல் காட்சிகள் எல்லாம் உண்டு ஏ படம் .தான் , திகில் படம்னு நம்பி பார்க்கறவங்க பார்க்கலாம் ரேட்டிங் 2.25 / 5 யூ ட்யூப்ல கிடைக்குது
0 comments:
Post a Comment