Wednesday, September 28, 2022

மன்னாதி மன்னன் (1960) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( டூயல் சிம் ரொமாண்டிக் டிராமா)


 ஸ்பாய்லர்  அலெர்ட் 


  எம் ஜி ஆர்  ரசிகர்கள்  இப்பதிவைப்படிக்காமல்  கடக்கவும்


  எம் ஜி ஆருக்கு  மனசாட்சினு  ஒண்ணு  இருக்கா?இல்லையா?னு  தெரியல. நாட்டியப்பேரொளி  பத்மினி  எப்படிப்பட்ட நடன  தாரகைனு  உலகத்துக்கே  தெரியும் . அப்பேர்ப்பட்ட  பிரமாதமான  நாட்டியக்காரி  கிட்டே  போட்டி  நடனம்  ஆடி  இவரு  ஜெயிக்கற  ,மாதிரியும்  அதனால  அவங்க  இவர்  கிட்டே  மாணவியா   சேர்ந்து  நாட்டியம்  பயில்வது  மாதிரியும்  ஓப்பனிங்  சீன். இவரு  எக்சசைஸ்  பண்ற  மாதிரி  கையைக்காலை  ஆட்றாரு , அந்தம்மா  பிரமாதமா  ஆடுது , ஆனா  அவங்க  தோத்துட்டாங்களாம், இப்படி  ஒரு  சீன்  எடுக்க  எப்படி  மனசு  வந்ததோ  டைரக்டருக்கு /


இதே  மாதிரி  ரஜினி  நடிச்ச  தங்க  மகன்  படத்துல  ஹீரோக்கும்  ஹீரோயினுக்கும்  டான்ஸ்  போட்டி  நடக்கும். அதுல  சமமா  2  பேரும்  ஆடிட்டு  வருவாங்க, கடைசில  ஹீரோ  தன்  சட்டையைக்கழட்டிட்டு  ஆடுவாரு. ஹீரோயின்  திகைப்பாங்க., ஹீரோ  ஜெயிச்ட்டேன்பாரு, என்ன  கொடுமை  சரவணா  இது ?


எது  எப்படியோ  முதல்  40  நிமிடங்கள்  செம  ஜாலியா  ஆட்டம்  பாட்டம்  கொண்டாட்டம்னு  படம்  ஜனரஞ்சகமாப்போகுது,


 ஓப்பனிங்  சாங்  ல  கதைக்கு  சம்ப்ந்தமே  இல்லாம   அச்சம்  என்பது  மடமையடா  அஞ்சாமை திராவிடர்  உடமையடானு  பாடறார். எனர்ஜெடிக்  சாங்  அது  விஸ்வநாதன்  ராமமூர்த்தி  இசைல  கண்ணதாசன்  வரிகளில்  கலக்கலான  பாட்டு 


ஒரு  நாட்டின்  இளவரசர்  ஹீரோ . அந்த  நாட்டில்  உள்ள  சாதாரண  நடன  மங்கையைக்காதலிக்கிறார். அவரும்  தான். இருவர்  காதலும்  வீட்டுக்குத்தெரியாது 


 அப்போ  ஹீரோ  வோட  அப்பாவான  மன்னர்  பக்கத்து  நாட்டு  இளவரசியை  பொண்ணு  கேட்டு  தூது  அனுப்பறார். அந்த  ஆகாவளி  மன்னன்  பொண்ணு  தர்றேன்  தர்லைனு  ஏதோ  ஒரு  பதிலை  சொல்லி  இருக்கனும். அதை  விட்டுட்டு   இளவரச்ர்   மகாராணிக்குப்பிறந்தவர்  இல்லை ., மன்னரின்  சின்ன  வீட்டுக்குப்பிறந்தவர் அவர்  கீழ்  சாதியை  சேர்ந்த  பெண் அந்தப்பெண்ணுக்குபிறந்த  மகனுக்கு  எப்படி  என்  பொண்ணைத்தர்றது?னு  கேட்டு  ஓலை  அனுப்பறார்


 இந்த  விஷயம்  ஹீரோவுக்குத்தெரிஞ்சதும்  நியாயமா  என்ன  சொல்லி  இருக்கனும்? அதை  விடு  கழுதை  போய்ட்டுப்போகுது . நான்  வேற  ஒரு  பொண்ணைக்காதலிக்கிறேன். அவளையே கல்யாணம்  பண்ணிக்கறென்னா  வேலை  முடிஞ்சது 


 அதை  விட்டுட்டு  அப்படியா  மன்னர்  சொனார்? என்  தாயைப்பழித்தானா? அதற்குப்பழி  வாங்க  இப்பவே  அந்த  நாட்டு  இளவரசியை  சிறை  எடுக்கிறேன்னு கிளம்பறாரு 


அந்த  நாட்டுக்கு  ஹீரோ  போறாரு. அங்கே  அந்நாட்டின் இளவரசி  தடாகத்தில்  குளிச்ட்டு  இருக்கு . அப்போ  ஒரு  காட்டெருமை  முட்ட  வருது . இளவர்சின்னா  பாதுகாவல்  படையோடுதானே  வருவாங்க . ஆனா  அப்டி யாரையும்  காணோம். 


 ஹீரோ  காப்பாத்த்றார். உடனே  அந்த  இளவரசிக்கு  இவரு  மேல  லவ்வு . ஆனா  வெளில  சொல்லலை ., தன்  தந்தையிடம்  அழைத்துச்சென்று  அறீமுகப்படுத்தறார். அவருக்கு  நடனம்  சொல்லித்தரும்  ஆசிரியரா  ஹீரோவை  நியமிக்கறாங்க 


மொத்தம்  3  மணி  நேரப்படம், இழுக்கனுமே? அதனால  இந்த  இளவரசியோட  டைம்  பாஸ்  பண்ணிட்டு  இருக்காரு  ஹீரோ 


அப்றம்   ஹீரோ  அந்நாட்டு  இளவரசியை  தன்  நாட்டுக்கு  அழைச்ட்டு  வந்துடறாரு 


 அப்போ சாதா  நடனப்பெண்ணை  இளவரசர்  காதலிப்பது  தெரிந்து  ஒரு ச்தித்திட்டம்  தீட்டி  அந்தப்பெண்ணை  வேற  நாட்டுக்கு  அனுப்பி  வைக்கறாங்க . ஹீரோ  கிட்டே  ஒரு  பொய்யைச்சொல்றாங்க


 ஹீரோ  அந்தப்பொய்யை  நம்பி  அந்நாட்டு  இளவரசியை  கல்யாணம்  பண்ணிக்கறார்


 இப்போ  அவர்  காதலிச்ச  மங்கை  திரும்பி  வர்றா/ இப்போ  ஹீரோ  என்ன  முடிவு  எடுத்தாரு ?  என்பதே  மிச்ச  மீதிக்கதை 


ஹீரோவா  இளவரசரா  எம் ஜி ஆர் . அட்டகாசமான  கெட்டப் . அருமையான  விக்.  எடுப்பான  அரசர்  உடை /வசீகரிக்கும்  சிரிப்பு  என  எம் ஜி ஆர்  செமயா  ஸ்கோர்  ப்ண்றார்


அம்மாவை  பழித்துப்பேசிட்டாங்க  எனும்போது  அவர்  காட்டும்  ரீ  ஆக்சன்  கொஞ்சம்  ஓவர்  டோசோத்தான்  இருக்கு ., பாமர  மக்களின்  பல்ஸ்  தெரிஞ்சு  இவர்  நடிக்கும்  கேரக்டர்  அம்மா  பாசம்  உள்ளவராக  நாட்டின்  நன்மைக்கு  பாடுபடும்  வீரராக  காட்டிக்கொண்டார்  போல 


  நடன  மங்கையா  பத்மினி . செம  நடிப்பு, செம  டான்ஸ்  . முக  பாவனைகள்  எல்லாம்  அள்ளுது 


 இளவர்சி  கற்பக வல்லியாக  அஞ்சலி  தேவி . ஆர்ப்பாட்டமான  நடிப்பு  மன்னன்  விஜயசாந்தி  போல . தனக்கு  வரப்போகும்  மாப்பிள்ளை  நாட்டோட  மாப்பிள்ளையா  வீட்டோட  மாப்பிள்ளையா  இருக்கனும்  என  அப்பாவிடம்  கோருவது  செம 


 பத்மினி  மீது  ஆசைபப்டும்  மன்னராக  பி எஸ்  வீரப்பா . ஆக்சுவலா  பட்த்துல  வில்லனா  இவரைக்காட்றாங்க,   ஆனா  இவரு  எந்தத்தப்பும்  பண்ணலை . இவரு  ஒரு  பெண்  மேல  ஆசைப்பட்றாரு  அவ்ளோ  தான்  பலவந்தம்  பண்ணலை , கெடுதல்  ப்ண்ணலை 


 இதை  எல்லாம்  பண்றது    ஹீரோதான் 


 லவ்  பண்றது  ஒரு  பெண்ணை  , மேரேஜ்  பண்ணிக்கறது  இன்னொரு  பெண்ணை , மேரேஜ்  ஆன்பின்  பழைய  காதலியைப்பார்த்ததும்  அவ்ருக்காக  உருகுவது  என  இவர்தான்  2  பெண்களுக்கும்  துரோகம்  பண்றார்


 இதை  எப்படி  ஜனங்க  கவனிக்காம  விட்டாங்கனு  தெரியலை 


 நாடோடி  மன்னன்  அளவுக்கு  மெகா  ஹிட்  ஆகாவிட்டாலும்  இது  ஒரு  ஹிட்  படமே 

குல்  தெய்வம்  ராஜகோபால்  , ஜி  சகுந்தலா  இருவரின்  காமெடி  டிராக்கும்  குட் 


செம  பாட்டு  ஹிட்டு 


1  அச்சம்  என்பது  மடமைய்டா  அஞ்சாமை  திராவிடர்  உடமையடா


2   ஆடாத  மனமும்  உண்டோ கலை  அலங்காரமும் அழகு  சிங்காரமும்


3  கண்கள்  இரண்டும்  இங்கு  உன்னைக்கண்டு  பேசுமோ   காலம்  இனிமேல்  நம்மை  ஒன்றாய்க்கொண்டு  சேர்க்குமோ ? 


4  கனியக்கனிய  ம்ழலை  பேசும்  கண்மணி 


இது  போக  சுமார்  ரகப்பாடல்கள்  4  அக  மொத்தம்  எட்டுப்பாட்டு . 


சபாஷ்  டைரக்டர் 


1 ஆர்ட்  டைரக்சன்  பிரமாதம் .   அதே  போல்  ஹீரோ , ஹீரோயின்கள்  இருவருக்கான  ஆடை  வடிவ்மைப்பு  நகைகள்  எல்லாம்  பக்கா 


2  பாடல்களுக்கான  சிச்சுவேஷன் , அதன்   படமாக்கம், பாடல்  வரிகள்  எல்லாமே  பிரமாதம் எம்  ஜி ஆரின்  அரசியல்  வெற்றிக்கு  பாடல்  வரிகள்  முக்கிய  அங்கம் 


3  மூன்று  மணி  நேரப்படத்தில்  கொஞ்சம்  கூட  போர்  அடிக்காத  திரைக்கதை .  திரைக்கதை  எழுதியவர்  கண்ணதாசன்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில  நெருடல்கள் 


1   ஹீரோ  கூட  எந்நேரமும்  இருக்கும்  அவர்  தோழர்க்கு  ஹீரோவுக்கு  நீச்சல்  தெரியுமா? தெரியாதா?னு  கூடத்தெரியாதா? ஒரு  சீன்ல  அவனுக்கு  நீச்சல்  தெரியுமா? தெரியாதா?ன்னே  எனக்குத்தெரியலயே?னு  டயலாக்  வருது (இதே  டயலாக்கை  பின்னாளில்  வெற்றி  விழா  படத்தில்  கமல்  சொல்வார். எனக்கு  பழசெல்லாம்  மறந்துடுச்சு, எனக்கு  டிரைவிங்  தெரியுமா? தெரியாதா?ன்னே  எனக்குத்தெரியல 


2  இளவர்ச்ர்  மன்னர்  இருவரும்  தோழமையோடு  பழகுபவர்க்ளே., ஏன்  ஹீரோ  தன்  அப்பாவிடம்  தன்  காதலைப்பற்றி  சொல்லலை ?  பக்கத்து  நாட்டுக்கு  பெண்  கேட்டு  தூது  ஓலை  அனுப்பிய  பிறகாவது  லவ்  மேட்டரை  ஓப்பன்  செய்திருக்கலாமே? 


3  ஹீரோவுக்கு  மேரேஜ்  ஆனது  தெரிஞ்சதும்  பத்மினி  புத்த  ம்தத்தைத்தழுவி  துறவி  ஆகிறார். ஆனா  துறவி  ஆன்பின்பும்  மேக்கப்  என்ன?  கொண்டை  டிசைன் என்ன? அதுல  எட்டு முழம்  பூ  என்ன?  எதுக்கு  துறவி  தலைல  பூ  (  மலர்  வாசனை  காதல் உணர்வைத்தூண்டும்  என்பதால்  துறவிகள்  பூச்சூட  அனுமதி  இல்லையே ? 


4  ஹீரோ  பக்கத்து  நாட்டு  இளவரசியைப்பார்க்கப்போறது  அங்கே  டேரா  அடிப்பது  இளவர்சிக்கு  டான்ஸ்  சொல்லித்தருவது  எல்லாம்  ஓக்கே, ஆனா  ஒரு  வார்த்தை  எனக்கு  ஆல்ரெடி  காதலி  உண்டு   நீ  வீணா  மனசில்  கற்பனைகளை  வளர்த்துக்காதனு  சொல்லவே  இல்லை யே? 


5  மேரேஜ்  ஆனபின்பு  ஹீரோ ஆற்றில்  குதித்தவர்  ஆளைக்காணோம்,  ஆள் அவுட்னு  முடிவு  பண்ணிடறாங்க , டெட்  பாடி  கிடைக்காமல்   அனைவரும்  அவர்  இறந்ததாக  நம்புவது  எப்படி ? 


6  டைட்டிலுக்கும்  கதைக்கும்  என்ன  சம்பந்தம் ? ஹீரோ மன்னரே  இல்லை  இளவர்சர்  தான். இர்ண்டு  பெண்களை  ஏமாத்திட்டு  சுத்திட்டு  இருக்கார் இவர்  எப்படி  மன்னாதி  மன்னன்  ஆவார் ? 


  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   போர்  அடிக்காம  பாட்டு  ஆட்டம்  பாட்டம்  கொண்டாட்டம், காமெடினு  டைம்  பாஸ்  மூவி  பார்க்கலாம் , யூ  ட்யூப்ல  கிடைக்குது  கலர்   படம்  ரேட்டிங்  2.75  / 5 




Mannathi Mannan
Mannathi Mannan.jpg
Theatrical release poster
Directed byM. Natesan
Story byKannadasan
Produced byM. Natesan
StarringM. G. Ramachandran
Anjali Devi
Padmini
CinematographyG. K. Ramu
C. J. Mohan
Edited byC. P. Jambulingam
S. Krishnamoorthy
Rajan
Music byViswanathan–Ramamoorthy
Production
company
Natesh Art Pictures
Release date
  • 19 October 1960
Running time
178 minutes
CountryIndia
LanguageTamil

0 comments: