வில்லன் ஒரு மினிஸ்டர். 2000 கோடி ரூபா மதிப்புள்ள 10 வைரங்களை தன்னோட பினாமி நகைக்கடைல மறைச்சு வெச்சிருக்கான். அதை மோப்பம் பிடிச்சுக்கிட்ட இன்னொரு வில்லன் தன் பரிவாரங்களோட அந்த வைரங்களை கொள்ளை அடிக்கிறான்
இந்த நகைக்கடை கொள்ளை சம்பவம், நடக்கும்போது தன் கல்யாணத்துக்காக நகை வாங்க வந்த ஹீரோயின் தன் மகளூடைய ஆபரேஷன் செலவுக்காக நகையை அடமானம் வைக்க வந்த இன்னொரு ஹீரோயின் இருவரும் மாட்டிக்கறாங்க . ஒருவர் உயிர் இழக்கிறார் , இன்னொருவர் இந்த கொள்ளையர்களைப்பார்த்த சாட்சி ஆகிறார்
வில்லன் மினிஸ்டரோட 45 வது சின்னவீடு அவர் கூடவே இருந்துட்டு அவருக்கு குழி பறிக்க நினைக்குது . கொள்ளை அடிச்ச வில்லன் கூட இருக்கும் ஒருத்தன் அந்த வைரங்களை ஆட்டையைப்போட பிளான் போடறான்
மொத்தத்துல் யார் யாருக்கு குழி பறிச்சாங்க என்பதை திரையில் காண்க \
ஏப்பா நில்லுப்பா இதுல ஹீரோ வைப்பற்றி மென்சன் பண்ணவே இல்லையே?
இது என்ன பிரமாதம் ? ஹீரோயினை லவ் பண்றவர் தான் ஹீரோ ஹீரோயின் இறப்புக்கு பழி வாங்க களம் இறங்கறார்னு காமிச்சுட வேண்டியதுதான்
ஹீரோவா ஜெய் .அழகா நடிச்சிருக்கார் ஆக்சன் காட்சிகளில் பொறி பறக்குது ஆனா ரொமான்ஸ் காட்சிகளில் அஞ்சலி கூட ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி இதுல ஒர்க் அவுட் ஆகல . எந்த நடிகை கூட ஜோடி சேர்ந்தாலும் அந்த நடிகை கூட கெமிஸ்ட்ரி பயாலஜி பிசியாலஜி எல்லாமே எப்படி ஒர்க் அவுட் பண்ண வைப்பது என்பதை கமல் , கார்த்திக் போன்ற அனுபவம் மிக்க நடிகர்களிடம் இந்தக்கால நடிகர்கள் பாடம் கத்துக்கனும்
ஹீரோயினா அதுல்யா ரவி கொழுக் மொழுக் கன்னம் , நாவல் பழம் போன்ற கண்கள் இவரது பிளஸ் . நடிப்பு ஓக்கே ரகம் தான் . சிலாகிக்கும்படி பெருசா ஒண்ணும் இல்லை
இன்னொரு ஹீரோயினா சாட்சியாக அஞ்சலி நாயர் . பிரமாதமான முக வெட்டு .மெயின் ஹீரோயினை விட இவர் வரும் காட்சிகள் தான் அதிகம் . ரோஸ் மில்க் பவுடரை முகத்தில் ஒட்டியது போல பிரமாதமான கனகாம்பரப்பூ கலர் . நடிப்பும் நல்லா வருது
வில்லன் மினிஸ்டராக சுனில் நடிப்பு கச்சிதம் . கொள்ளை அடிக்கும் வில்லனாக வம்சி கனகச்சிதம் . சமீப காலமாக த்ரில்லர் படங்கள் அதிகம் வருவதும் அதில் வம்சியின் பங்களிப்பு இருப்பதும் கவனிக்க முடிகிறது
வில்லன் மினிஸ்டரின் சின்ன வீடாக வித்யா பிரதீப் சுமார் ரகம்
விக்ரம் வேதா பட இசை அமைப்பாளார் சாம் சி எஸ் இதில் பிஜிஎம் நல்லா போட்டிருக்கார் . பாடல்களும் ஓக்கே ரகம்
ஒளிப்பதிவு லொக்கேஷன் எல்லாம் பக்கா
சபாஷ் டைரக்டர் ( வெற்றி செல்வன் )
1 ஓப்பனிங் சீனிலேயே விறுவிறுப்பாக கதை சொல்ல ஆரம்பித்து விடுவது சிறப்பு
2 நேரடியாக கதை சொல்லாமல் நான் லீனியர் கட்டில் கதை சொன்ன விதம் சிறப்பு
3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் குட்
ரசித்த வசனம்
1 முதல்ல எல்லாம் பீச்க்கு லவ்வர்ஸ் வருவாங்க பசங்க தன் லவ்வரோட வருவானுங்க ஆனா இப்போ பசங்க அவங்க லவ்வர்சோட வர்றாங்க நல்ல முன்னேற்றம்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 வில்லன் வம்சி அந்த 2000 கோடி ரூபா வைரங்களைப்பற்றி தன் கூட்டத்துக்கு சொல்லாமலேயே அந்த கொள்ளையை செய்திருக்கலாம். எதுக்காக சொல்லனும் ?
2 கொள்ளை அடிக்கும்போது அந்த 2000 கோடி ரூபா வைரங்களை தன் பாக்கெட்டில் பத்திரமாக வெச்சுக்காம நகைகளோட ஒண்ணா சேர்ப்பது நம்பும்படி இல்லை
3 நகைக்கடைல கொள்ளை அடிக்க வர்றவங்க கடைல இருக்கற அவ்ளோ நகைகளை எடுக்கவே நேரம் இடம் போதலை கடைக்கு வர்ற கஸ்டம்ர்ஸ் வெச்சிருக்கற நகைகளை வாங்குவாங்களா? இது எப்படி இருக்குன்னா பேங்க் கொள்ளை அடிக்க வர்றவங்க பேங்க்குக்கு பணம் கட்ட வந்த கஸ்டமர்ஸ் பாக்கெட்டை பிக்பாக்கெட் அடிக்கற மாதிரி இருக்கு
4 ஒரு மினிஸ்டர் கமிஷனரை பப்ளிக் முன்னால ஒரு வேலைக்காரனைப்போல் கேவலமாக நடத்துவது ஓவரோ ஓவர்
5 அஞ்சலி நாயர்க்கு நெற்றில அடிபட்டு பிளாஸ்திரி போட்டிருக்காங்க அந்தக்காயம் ஆறவே ஆறு மாசம் ஆகும், ஆனா ஆறு மணி நேரத்துலயே அது காணாமப்போச்சு இட்ஸ் கான் . நெற்றி கிளீனா இருக்கு
6 மினிஸ்டரோட 45 வது சின்னவீடா வரும் வித்யா பிரதீப் அவர் கூடவே இருப்பதுதான் சேஃப்டி ஆனா அவருக்கு ஒரு கள்ளக்காதலன் இருப்பதும் அவனுக்கு இவர் உதவுவதும் வேண்டாத வேலை ரிஸ்க்
7 மிகப்பெரும் நகைக்கொள்ளையில் கொள்ளையர்களைப்பார்த்த ஒரே சாட்சியான அஞ்சலிநாயரை போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் அம்போ என விடுவது எப்படி ?
8 சாட்சியான அஞ்சலி நாயர் துப்பு கொடுக்க கால அவகாசம் கேட்கிறார். மகளைப்பார்க்கனும்கறார் அப்பவே போலீஸ் பாதுகாப்போடு மகளைக்காட்னா வேலை முடிஞ்சுது அதை விட்டுட்டு ஒரு நாள் டைம் கொடுப்பது இளிச்சவாயத்தனம்,
9 நகைக்கடையில் கொள்ளை சம்பவம் நடக்கும்போது அஞ்சலிநாயர் கணவன் சுடப்பட்டு இறப்பதை கண்ணால் பார்த்து கதறுகிறார் ஆனால் ஒரு சீனில் அவருக்குக்கணவர் இறந்த விஷயமே தெரியாது என போலீஸ் கூறும் வசனம் வருது
10 த்ரில்லர் படம் எடுக்க முடிவெடுத்துட்டா அதுல காமெடி லவ் போர்சன் எல்லாம் குறைச்சுக்கனும். இதுல ஹீரோயின் 4 வருசம் ஹீரோ பின்னால சுத்துனார் ஹீரோ கண்டுக்கலை ஆனா இப்போ ஹீரோ ஹீரோயின் பின்னால சுத்தறார் என்பதும் சம்பந்தம் பேசும் சீனில் வரும் ஜாதி பேதம் அந்தஸ்து பேதம் வசனமும் மெயின் கதைக்கு ஸ்பீடு பிரேக்கர் .
11 நகையை அடமானம் வெச்சு பணமா தர மாட்டோம் வேற நகையா வாங்கிக்குங்க ஏன்னா எங்க கடைல வாங்குன ரசீது உங்க கிட்டே இல்லைனு க்டைக்காரர் சொல்றார். அப்போ அதே க்டைல நகையை வித்து வேற நகையை வாங்கி அதுக்கான ரசீதை வாங்கி அந்த ரசீதை வெச்சு அடுத்த நாள் வித்திருக்கலாமே? அது போக பெரிய பெரிய நகைகக்டைல தான் அப்டி ரசீது கேட்பாங்க பொற்கொல்லர்கள் சின்னக்கடைல ஈசியா பணமா தருவாங்களே ?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - த்ரில்லர் ரசிகர்கள் அவசியம் பார்க்கலாம் படம் ரெண்டரை மணி நேரம் விறுவிறுப்பாதான் போகுது ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் 41 குமுதம் ரேங்க்கிங் குட் . அட்ரா சக்க ரேட்டிங் 2.25 / 5 ஈரோடு அன்னபூரணில படம் பார்த்தேன்
0 comments:
Post a Comment