ஜெயதேவி இயக்கிய இந்தப்படத்தோட விமர்சனத்துக்குள்ளே போகும் முன் 2 முக்கியமான காமெடி நிகழ்வுகளை பதிவு பண்ணிடறேன், இல்லைன்னா மறந்துடும்
1 வில்லன் எம் என் நம்பியார் ஃபாரெஸ்ட் ஆஃபீசர் நிழல்கள் ரவி கிட்டே சொல்றாப்டி 1,2 ,3 என 10 வரை எண்ணுவேன் இந்த காட்டை விட்டே நீ ஓடிப்போகனும் இல்லைன்னா சுட்டுப்பொசுக்கிடுவேன் அப்டிங்கறார் இவரே தான் அடுத்த சீன்ல அடியாளுங்க கிட்டே சொல்றார் சோதாப்பசங்களா அவங்களை தப்பிக்க விட்டுட்டீங்களேடா . பரவால்ல அவங்க 100 கிமீ வேகத்துல போனாக்கூட இந்தக்காட்டோட எல்லையைக்கடக்க 3 நாட்கள் ஆகும் அதுக்குள்ளே போய் பிடிச்சிடுங்க அப்டிங்கறார். அப்போ 10 கவுண்ட் பண்றதுக்குள்ளே எப்படி ஏரியா விட்டு போக முடியும் ?
2 அதே வில்லன் நம்பியார் ஹீரோ ஜெய்சங்கரோட மனைவி குழந்தை குடும்பம் எல்லாரையும் பிணையக்கைதியா பிடிச்சு வெச்சிருக்காப்டி .இப்போ மனைவியை ஹீரோவான கணவன் கிட்டே ஃபோன்ல பேச அனுமதிக்கிறார். ஆனா ஒரு கண்டிஷன் 1 2 3 என 10 வரை எண்ணுவேன் அதுக்குள்ளே பேசிடுங்கறார். 10 வரை எண்ண 20 செகண்ட் போதும் ஆனா அந்த மனைவி கேரக்டர் இல்லாத ராமாயணம் எல்லாம் பேசிட்டு இருக்கு
ஒரு உதா “ ஏங்க தொட்டு தாலி கட்டுன புருசன் கிட்டே பேசக்கூட கண்டவன் பர்மிஷன் கேட்க வேண்டியதா இருக்கு இதுக்குதான் நீங்க போலீஸ் ஆஃபீசரா ஆனிங்களா ? அப்பவே எங்கப்பா சொன்னாரு காக்கிச்சட்டை போட்டவருக்கு பொண்ணு குடுக்க மாட்டேன்.
இப்போ தான் வில்லன் ஒண்ணு அப்டிங்கறார்.
அடுத்து ஏங்க வேளா வேளைக்கு சாப்ட்டீங்களா? பக்கத்து வீட்டு மங்களம் சவுக்கியமா ? பீரோ மேல சுகர் டேப்லெட் வெச்சிருக்கேன் எடுத்துக்குங்க நான் இல்லைனு தம் அடிக்கறது தண்ணி அடிக்கறது எல்லாம் ஆரம்பிக்காதீங்க
இப்போ வில்லன் எண்ணறாப்டி ரெண்டு
டேயப்பா சிரிச்சு மாளலை இது ஆக்சன் படமா ? காமெடி படமா?
;போன விலாங்கு பட விமர்சனத்துல நாட்டுக்கு முக்கியமான ஒரு தகவலை பலரும் ஷேர் பண்ணி இருந்தாங்க . அதை இங்கே சொல்லிடறேன். பெண் இயக்குநரான ஜெயதேவி பல படங்களை இயக்கியவர் இவர் படங்களில் அழகியல் உணர்வு இருக்கும் ஹீரோயினை அழகா காட்டுவார் . கடவுள் பட இயக்குநரான வேலு பிரபாகரின் முன்னாள் மனைவி யாம்.இந்த அரிய தகவலை பகிர்ந்த 11 உள்ளங்களுக்கும் நன்றி , விக்கி பீடியாவில் கூட இந்த தகவல் இல்லை
என் மேல ஒரு புகார் . பட கதை பூரா சொல்லிடறார் அது ஏன்னு தன்னிலை விளக்கம் கொடுத்துடறேன் நான் சின்னப்பையனா இருந்தப்போ பாட்டு புக்ஸ் படிப்பேன் அதுல படத்தோட முழுக்கதையும் போட்டுட்டு க்ளைமாக்ஸ்க்கு முந்தின ஷாட் வரை விளக்கமா கதை சொல்லிட்டு மீதியை வெண் திரையில் காண்க அப்டினு வரும் அவங்க சொல்லாம விட்ட கதை போலீஸ் டுமில்னு சுட்டுட்டு வர்ற ஒரு சீன் தான்
அதை படிச்சு படிச்சு எனக்கும் அந்த பழக்கம் தொத்திக்கிச்சு
ஸ்பாய்லர் அலர்ட்
ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர் அவருக்கு ஒரே ஒரு சம்சாரம் ஒரு குழந்தை ஒரு தம்பி இருக்கான். ஹீரோவோட சம்சாரத்தோட தங்கையும் ஹீரோவோட தம்பியும் லவ்வர்ஸ் பொண்ணைக்கட்டி பெண்ணை கொடுப்பது மாதிரி பொண்ணு கட்ன இடத்துலயே மீண்டும் பொண்ணு கட்டு ஃபார்முலா தான்
வில்லன் ஒரு இண்டட்ர் நேஷனல் ஸ்மெக்ளராம் யார் சொன்னா அந்த வில்லன் தான் சொல்லிக்கறான். அவனுக்கு ஒரு தத்தி டம்மி மகன் இருக்கான் .அவன் போலீஸ்ல மாட்டிக்கறான்
தன் மகனை விடுவிக்க வில்லன் நேர்டியா களத்தில் இறங்குனாலே அவனுக்கு இருக்கற ஆள் பலம் படை பலம் யூஸ் பண்ணி ஈசியா மீட்டிருக்கலாம். ஆனா ஸ்கிரிப்ட்ல அப்டி இல்லை
அதனால தலையை சுத்தி தளபதியை தொட்ட கதையா ஹீரோவோட குடும்பத்துல இருக்கற எல்லாரயும் பணயக்கைதியா பிடிக்கறான் ஹீரோ வீட்டு வாட்ச்மேன் அன்னைக்கு லீவ் போல இல்லைன்னா அவனையும் பிடிச்ட்டு வந்திருப்பான்
இப்போ ஆடி மாச எக்சேஞ்ச் ஆஃபர் தற்றான் அதாவது வில்லனோட மகனை ஒப்படைச்ட்டு ஹீரோ ஃபேமிலியை கூட்டிட்டு போய்க்கலாம்
இந்த கதை ஒன்றரை மணி நேரம் தான் ஓடுது அதனால எக்ஸ்ட்ராவா ஒரு கதை சேர்த்திருக்காங்க . இன்னொரு ஃபாரஸ்ட் ஆஃபீசர் வில்லனைப்பிடிக்க முயற்சித்ததும் அது ஏன் முடியாம போச்சு
என்பதும் அவர் இப்போ ஹீரோக்கு எப்படி ஹெல்ப் பண்றார் என்பதும்
ஒரு அரை மணி நேரம் தேத்திட்டாங்க
ஹீரோவா ஜெய்சங்கர் தென்னக ஜேம்ஸ்பாண்ட்னா சும்மாவா?அ ருமையான நடிப்பு நல்ல கம்பீரம்
வில்லனா எம் என் நம்பியார் விக் தான் எடுபடலை ம்ற்றபடி ஓக்கே
ஹீரோவின் மனைவியா சுலக்சனா . க்ளைமாக்ஸ்ல நல்ல நடிப்பு
ஹீரோவின் தம்பியா அருண் பாண்டியன் அவரது லவ்வரா ரம்யா கிருஷ்ணன் அதிக வாய்ப்பில்லை
வில்லனின் தம்பியா நளினிகாந்த் நான் சின்னப்பையனா இருக்கும்போது நளினியோட அண்ண்ந்தான் நளினிகாந்த்னு நினைச்ட்டு இருந்தேன்
கெஸ்ட்ரோ;லில் சத்யராஜ் , ஜனகராஜ் காமெடிக்கு
சபாஷ் டைரக்டர்
1 ஐஎம்டி ரேட்டிங்க்ல 9.4 /10 எடுத்து லீடிங்க்ல இருக்கு, ரிலீஸ் ஆன டைமில் நல்ல ஹிட்டாம் பரபரப்பான ஆக்சன் படம் தான்
2 காட்டுக்குள்ளே தப்பி ஓடும் லவ் ஜோடியை சம்ப்ந்தமே இல்லாம அருவில குளிக்க வெச்சு சென்சார்ல ஏ சர்ட்டிஃபிகேட் வாங்குனது . ஏ சர்ட்டிஃபிகேட் இருந்தாதானே இளசுங்க தியேட்டருக்கு வருவாங்க ?
3 படத்தின் ஒளிப்பதிவாளரான வி பிரபாகரனை இந்தப்பட ஷூட்டிங்கில்தன் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாராம்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 க்ளைமாக்ஸ் சீனில் சுலக்சனா காரில் மாட்டி இருக்கும்போது நாய் காரில் பாய்வது ஆல்ரெடி 1981ல் ரிலீஸ் ஆன டிக் டிக் டிக்லவந்தாச்சே? அது போக நாயை அவர் சமாளிக்கும் காட்சி எல்லாம் நம்பவே முடியல
2 காட்டில் ரம்யாகிருஷ்ணன் ஓடும்பொது 18 பெர் கொண்ட குழு சுடுது அப்போ ரம்யாவுக்கு கெண்டைக்காலில் அடிபடுது. அதுக்குப்பின் அந்தக்குழு ரம்யாவைக்கண்டுக்கலை அப்பவே போட்டிருக்கலாம் அலல்து அருண் பாண்டியனை ஷூட் பண்ணி இருக்கலாம் வேடிக்கை தான் பார்க்கறாங்க
3 காலேஜ் ஸ்டூடண்ட் ஆன அருண் பாண்டியன் களாஸ்க்கு கட் அடிச்ட்டு சுத்திட்டு இருக்கறவர் எம் பி பிஎஸ் படிச்ச டாக்டர் மாதிரி ரம்யா காலில் பட்ட குண்டை ஆபரேஷன் பண்ணி எடுக்கறார். துப்பாக்கியே அதுவரை பிடிச்சுப்பார்க்காத்வர் மிஷின் கன் ரைபிள் என எல்லா ரக துப்பாக்கிகளையும் அசால்ட்டா டீல் பண்றார்
4 இண்டர் நேசனல் ஸ்மெக்ளர் ஆன நம்பியார் ஃபோனில் எக்சேஞ்ச் ஆஃபர் தரும்போது ஹீரோவின் குடும்பம் தப்பி காட்டுக்குள் போய்டுது போலீஸ் ஆஃபீசர் புத்திசாலியா இருந்தா ஃபோன்ல என் ஃபேமிலி ஆட்களை பேச வை அப்போதான் அவங்க உன் கிட்டே இருக்காங்கனு நம்புவேன்னு சொல்லி இருக்கலாம்
5 நிழல்கள் ரவியின் மனைவியை வில்லனின் ஆட்கள் ரேப் செய்து கொலை செய்து அந்தப்பழியை நிழல்கள் ர்வி மேல போடறாங்க அதாவ்து கள்ளக்காதலன் வைத்திருந்த மனைவியைக்கொலை செய்ததாக போஸ்ட்,மார்ட்ட,ம் ரிப்போர்ட்டில் அது ரேப்னு தெரிஞ்சிருக்குமே> ஏன் கேஸ் 2 வருசமா நடக்குது ?
6 க்ளைமாக்ஸ்ல நிழல்கள் ரவி கடலில் விழுந்து தற்கொலை பண்ணிக்க்றதுன்னா தனியா அவர் மட்டும் போலாமே? எதுக்கு அரசாங்க ஜீப்ல கடலில் சமாதி ஆகறாரு? அரசுக்கு நட்டம் தானே??
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அந்தக்காலத்தில் ஹிட் ஆன படம் என்றாலும் இப்போப்பார்க்க காமெடியா ஜாலியா இருக்கு ரசிக்கனும்னா பார்க்கலாம் ரேட்டிங் 2.25 / 5
விலங்கு | |
---|---|
இயக்கம் | ஜெயதேவி |
தயாரிப்பு | துளசி இண்டர்நேஷனல் |
இசை | ஷியாம் |
நடிப்பு | அருண் பாண்டியன் ரம்யாகிருஷ்ணன் ஜெய்சங்கர் சுலோக்ஷனா கிருஷ்ணா ராவ் எம். என். நம்பியார் நளினிகாந்த் ரவி சத்யராஜ் நளினி |
ஒளிப்பதிவு | வி. பிரபாகர் |
வெளியீடு | பெப்ரவரி27, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
0 comments:
Post a Comment