ஸ்பாய்லர் அலெர்ட்
நாட்டுப்புறப்பாடல்கள் ஆராய்ச்சிக்காக அதன் கலெக்சனுக்காக ஹீரோ ஒரு கிராமத்துக்கு வர்றான். அங்கே வெள்ளி என்ற பெண்ணை சந்திக்கிறான். அவளோட மாமன் மகன் மருதராஜ் கூட அப்படி ஒரு லவ் அவளுக்கு . ஹீரோ தங்க ஒரு ஜமீன் மாளிகை ல ஒரு ரூம் ஏற்பாடு செய்யப்படுது. அந்த ஜமீன் மாளீகைல பேய் இருப்பதா ஒரு வதந்தி
அந்த மாளிகைல முன்பு இருந்த ஜமீந்தாரினி ரத்னாவதி டைரி ஹீரோவுக்குக்கிடைக்குது . அதை படிக்க ஆரம்பிக்கிறான்
ஜமீந்தாரர் ஒரு லேடீஸ் கலெக்டர் அதாவது பொம்பள பொறுக்கி . கண்ல சிக்குற எந்தப்பெண்ணையும் விட்டதில்லை . மனைவி ரத்னாவதியையும் கொடுமைப்படுத்தறான். அவளோட நகைகள் எல்லாம் வேணும்னு டார்ச்சர் பண்றான். அதனால ரத்னாவதி தன் நகைகளை எல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒளிச்சு வெச்சு அது எங்கே இருக்குனு குறிப்பும் வெச்சுடறா
ஜமீந்தார் வாரிசு அப்டினு சொல்லிட்டு ஒரு பொண்ணு வர்றா. ஆனா அவ உண்மையான வாரிசு கிடையாது . ரத்னாவதி சொத்துக்களை ஆட்டையைப்போட வந்தவ. அவ நகைகள் இருக்கும் இடத்தைக்கண்டுபிடிக்க வெள்ளியின் காதலன் மருத முத்து வை யூஸ் பண்ணிக்கறா. ஊரெல்லாம் ரெண்டு பேரும் ஜோடியா சுத்தறாங்க. இதனால அந்த லேடி மேல ஹீரோயின் வெள்ளி செம காண்ட் ஆகறா
ஒரு கட்டத்துல அந்த போலி ஜமீன் வாரிசு லேடி கொலை செய்யப்படறா. ஊரெல்லாம் ஹீரோயின் வெள்ளிதான் அதை செஞ்சிருக்கனும்னு சந்தேகப்படுது . அதனால ஹீரோயின் தலை மறைவு ஆகறா
உண்மையான கொலையாளி யார்? எதுக்காக கொலை நடந்தது ? ரத்னாவதி நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதா ? என்பதை திரையில் காண்க
ஹீரோவா பிரதாப் போத்தன் . ரொம்ப இயல்பான ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான் நடிப்பு . படத்தில் இவருக்கு ஜோடி இல்லை என்பது வருத்தமே. நிஜ நாவலில் ஹீரோயின் மீது இவருக்கு ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு என வரும், ஆனா திரைக்கதைல அப்படி காட்சிகள் வைக்கலை
ஹீரோயினா ஸ்ரீப்ரியா . கச்சிதமான நடிப்பு ஆனா இந்த கேரக்டருக்கு ஒரு புதுமுக நடிகையை நடிக்க வெச்சிருக்கலாம் என்பது சுஜாதாவின் விருப்பம் . மார்க்கெட்டிங்க்க்கா க அது நிறைவேறலை
போலி ஜமீன் வாரிசாக சுமலதா . ஸ்லீவ்லெஸ் டாப்பில் கிளாமராக படம் முழுக்க வருகிறார். இவரது முகத்தில் வில்லித்தனம் இல்லை அது ஒரு மைனஸ்
மருதமுத்துவாக ஹீரோயின் ஜோடியாக சுந்தர்ராஜ் . கச்சிதமான கிராமத்து அப்பாவி கேர்க்டர் . இந்த கேரக்டருக்கு இன்னும் பிரபலமான ஹீரோவை நியமிச்சு இருக்கலாம்னு சுஜாதா ஆசைப்பட்டாரு
நாட்டுப்புறப்பாட்டு பாடும் பெரியாத்தாவாக மனோரமா அசத்தலான நடிப்பு ஃபிளாஸ் பேக் காட்சிகளில் செம மேக்கப்
இசை இளையராஜா. பிஜிஎம் எல்லாம் செம பாடல்களும் ஹிட்டு
1 காடெல்லாம் பிச்சிப்பூவு கரையெல்லாம் சென்பகப்பூவு ( டைட்டில் சாங் )
2 ஏரியிலே ஏரியிலே இலந்தை மரம் என் தங்கச்சி வெச்ச மரம்
3 ஏரு பிடிச்சவரே
சபாஷ் டைரக்டர்
1 சந்திரமுகி படத்தில் ஜோதிகா நகைகளை எல்லாம் போட்டுக்காட்டும் சீன் செம ஃபேமஸ் அதுக்கான ஒரிஜினல் இந்த படத்தில் இருக்கும் . ஸ்ரீப்ரியா நகைகளை அணிந்து ஹீரோவுக்கு காட்டும் சீன் குட்
2 ஜமீந்தாரினி ரதனாவதி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு பிஜிஎம் திகில் ஊட்டுவதாக இருக்கும்
3 இடைவேளை வரை ஸ்லோவாகப்போகும் படம் கொலை நடந்த பின் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லராக செல்ஃப் எடுக்கும்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 மனோரமா ஹீரோவிடம் தன் ஃபிளாஸ்பேக் கதையை சொல்லும்போது ஜமீன் தாரர் இளவயசு மனோரமாவை அணைத்து உள்ளே கூட்டிச்செல்வதாக காட்சி விஷூவலா வரும் ( நாவலிலும் அப்படியே) ஆனா வசனமா சொல்லும்போது மனோரமா “ உலக்கையை ஜமீந்தாரர் மேல வீசிட்டு நான் வீட்டுக்கு ஓடி வந்துட்டேன் என வரும்
2 வில்லன் மாறுவேஷத்தில் கிராமத்தில் உலா வர்றான். ஆனா அதுக்கு என்ன தேவைனு தெரியல அந்த ஜமீன் பங்களா கேட்பாரற்று தேமேனு கிடக்கு அவனே உள்ளே போய் நகைகளைத்தேடினாலும் யாரும் கேட்பார் இல்லை
3 ஜமீன் தாரர் கொடுமைக்காரர் மனைவியை அடித்து துன்புறுத்துபவர் ஆனா நகைகளுக்காக மனைவி கிட்டே கெஞ்சிட்டு இருந்தது ஏன்? அவரால அது கூட கண்டுபிடிக்க முடியலையா?
4 ரத்னாவதி சாயலில் ஒரு லேடியை பேய் மாதிரி பங்களாவில் உல்வ விட்டேன்னு வில்லன் க்ளைமாக்ஸ்ல சொல்றான் அப்போ ர்த்னாவதி சாயலில் இருக்கும் அந்த லேடியையே ஜமீன் வாரிசாக நடிக்க வெச்சிருக்கலாமே? முக சாயல் மேட்ச் ஆகும், அவர் வயசானவரா இருந்தா அந்த லேடியோட வாரிசு அல்லது தங்கையை நடிக்க வெச்சிருக்கலாமே?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சந்திரமுகி படத்தின் ஒரிஜினல் வெர்சன் மணிச்சித்திர தாழ்தான் என பலரும் நினைச்ச வேளையில் அதன் சாராம்சம் இதிலிருதுதான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர இதைப்பார்க்கலாம் ஸ்லோ மூவிதான் யூ ட்யூப்ல கிடைக்குது ரேட்டிங் 2.25 / 5
0 comments:
Post a Comment