எனக்கு எல்லா தர்மங்களும் தெரியும் எல்லா நியாயங்களும் தெரியும் - இதுதான் வில்லனின் பஞ்ச் டயலாக் , செம ஹிட் ஆன டயலாக். எழுதியவர் திரைக்க்தை மன்னன் கே பாக்யராஜ் , ஆனா பாரதிராஜாவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக டைட்டிலில் அவர் பெயர் இடம் பெறவில்லை , கதை திரைக்கதை இயக்கம் பாரதிராஜா என வரும் வசனம் யார் என்றே இருக்காது
கமல் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார் ஆனா அவர் திரை வாழ்க்கையில் கதைப்படி ரத்த சம்பந்தம் இல்லாத ஒரு பெண்ணை தங்கையா ஏத்துக்கறேன்னு எந்தப்படத்திலும் சொன்னதே இல்லை . இதுதான் முதலும் கடைசியும் ., ராதாவைப்பார்த்து அப்படி சொல்வார்
படம் ஆரம்பித்து 55 வது நிமிடத்தில் ஒரு கொலை நடக்கும் அப்போ ஹீரோ ஓட ஆரம்பிச்சா க்ளைமாக்ஸ் வரை ஓடிட்டே இருப்பார் செம விறுவிறுப்பான படம்
இளையராஜா இசையில் செம ஹிட் சாங்ஸ்
இது ஒரு நிலாக்காலம் கனவுகள் உலாப்போகும்
நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம்
பூ மலர்ந்திட நடந்திடும் பொன்மயிலே
ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோ ஒரு ஃபோட்டோகிராஃபர். மாடலிங் அழகிகளை வளைச்சு வளைச்சு படம் பிடிப்பவர் . ஹீரோயின் மாடலிங் அழகி கம் பரத நாட்டியம் பயின்றவர் . ஹீரோயின் வீட்டுக்கே போய் அத்து மீறிப்படம் எடுக்கிறார் . இதனால் செம காண்ட் ஆன ஹீரோயின் ஹீரோவை அடிக்க துரத்துகிறார்
இந்த ரன்னிங் ரேஸ் ல ஹீரோ கீழே விழுந்துடறார் , ஹீரோயின் அப்படியே அவர் மேல பாய்ஞ்சு கடிச்சுக்குதறப்போறார்னு பார்த்தா ஹீரோ ஹீரோயினைப்பார்த்து கண் அடிக்கிறார் உடனே ஹீரோயினுக்கு காதல் வந்துடுது ( என்ன கொடுமை சார் இது )
மாதவி கமல் காம்போல நான் பார்த்த 3 படங்களிலும் இதே நிலைதான் காக்கிச்சட்டைல மாதவியை ஸ்விம்மிங் பூல் ல தள்ளி விடுவார் லவ் வரும் . சட்டம் படத்துல மாதவியோட அரைகுறை டிரஸ் பத்தி மட்டம் தட்டுவார் லவ் வரும் இதில் இப்படி இதைப்பார்த்து வேற யாரும் வேற யார் கிட்டேயும் ட்ரை பண்ணிடாதீங்க செம மாத்து கிடைக்கும்
வில்லன் ஓப்பனிங்ல ஒரு பஞ்ச் டயலாக் பேசறாரே எல்லாம் தெரியும்னு ஒரு வெங்காயமும் தெரியல மினிமம் பட்ஜெட்ல ஈசியா ஒரு கொலை கூடபண்ணத்தெரியல. , மாடலிங் அழகிகள் 3 பேரு உடம்புல வைரத்தை உள்ளே வெச்சு ஆபரேஷன் பண்ணிடறாங்க . ஃபாரீன்ல இருந்து இந்தியா வந்ததும் கொத்தா தூக்கிட்டுப்போய் 3 பேர் உடம்புல இருந்தும் வைரத்தை எடுத்துட்டா வேலை முடிஞ்சுது அது கூடத்தெரியாம அந்த பேக்கு வில்லன் தலையை சுத்தி மூக்கைத்தொட்டுட்டு இருக்காரு
ஒரு மாடல் அழகி கொலை வழக்கில்; ஹீரோ மாட்றார் அந்த கேசில் இருந்து எப்படி தப்பி வந்து விலலனை ஜெயிக்கிறார் என்பதே கதை
ஹீரோவா கமல் இந்தப்படத்தில் ஹீரோ செமயா இருப்பார் சேசிங் சீன்கள் எல்லாம் அனல் பறக்கும் 1986 ல் ரிலீஸ் ஆன விக்ரம் படத்தில் ட்ரை பண்ணுன பல சாகச முயற்சிகளுக்கு இதுல ட்ரெயல் பார்த்திருப்பாரு . மாதவி பரத நாட்டியம் ஆடும்போது பாய்ந்து பாய்ந்து ஃபோட்டோ எடுப்பதில் டைமிங் அசத்தும் . மாதவி ஸ்வப்னா ராதா என 3 ஹீரோயின்கள் இருந்தும் ஒரு முத்தகாட்சி கூட இல்லாதது உலக அதிசயம்
ஹீரோயினா மாதவி இவர் விழி அழகியா? புருவ அழகியா? என ஒரே குழப்பமா இருக்கும் அந்தக்கால கட்டத்தில் வயிற்றில் தொப்பையே இல்லாத ஸ்விம் சூட்டுக்கு சூட் ஆன ஒரே நடிகை மாதவிதான். கமலை விட ஹைட்டு அந்த உயர வித்தியாசம் க்ளைமாக்ஸ்ல இருவரும் ஜோடியா ஓடும்போது லாங் ஷாட்ல தெரியும்
ராதா வுக்கு அதிக வாய்ப்பில்லை அந்த அண்ணன் தங்கை செண்ட்டிமெண்ட் எதுக்குனு தெரியல கமல் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி ( அனேகமா கமலுக்கே அது அதிர்ச்சியாத்தான் இருந்திருக்கும் )
ராதாவை விட ஸ்வப்னாவுக்கு அதிக காட்சிகள் நல்லா பண்ணி இருக்கார்
வில்லனா நடிச்சவர் அப்போ பார்க்கும்போது டெரரா இருந்தார் இப்போபார்த்தா காமெடி பீஸ் மாதிரி இருக்கார்
தியாகராஜன் அடியாள் வேஷத்தில் வர்றார் அதிக வேலை இல்லை
ஆக்சன் ஸீக்வன்ஸ் எல்லாம் அதகளமா இருக்கும் வழக்கமாப்போடும் டிஷ்யூம் டிஷ்யூம் ஸ்டண்ட் இதில் இருக்காது சத்யா படத்துக்கு முன்னோட்டமாக இதில்; ஸ்டண்ட் காட்சிகளை ரியலா ட்ரை பண்ணி இருப்பார் கமல் ., க்ளைமாக்ஸில் மாதவியுடன் அவர் காருக்குள் ஜம்ப் பண்ணும் சீன் எல்லாம் கலக்கலா இருக்கும் டூப் போடாம அவரே நடிச்சிருப்பார் லாங் ஷாட்ல இருக்கும்
இளையராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம் தெறிக்க விடும் பிஜிஎம்
கதைக்கு சம்பந்தம் இருக்கோ இல்லையோ 3 ஹீரோயின்களும் டூ பீஸ் டிரசில் வரும் கிளு கிளு காட்சிகள் உண்டு . சென்சாருக்கு என்ன கொடுத்து கரெக்ட் பண்ணாங்களோ தெரில
தியேட்டரில் அப்ளாஸ் அள்ளிய காட்சிகள்
1 கமல் மீது பாயும் மாதவி சண்டை போட முயலும்போது கமல் மாதவியின் மணிக்கட்டைப்பிடித்து வீணை போல் வாசிப்பார் அப்போ ஒரு பிஜிஎம் ஓடும் கோபமா முறைக்கும் மாதவி வெட்கப்பட்டு சிரிப்பார்
2 ஸ்வப்னா கொலை நடந்ததும் கமல் பரபரப்பாக ஓடும் அந்தக்காட்சி திகில் ஊட்டும் பிஜிஎம் கமலின் பதட்டம் ஆடியன்சை தொற்றிக்கொள்ளும்
3 வழக்கமாக க்ளைமாக்சில் சோலோ ஃபைட்டில் வில்லனுடன் மோதும் க்ளிஷே இதில் இல்லை , ஒரு கார்ல ஹீரோ ஹீரோயின் மாட்டிக்குவங்க வில்லனின் அடியாட்கள் நூற்றுக்கணக்கான நாய்களுடன் அங்கே வருவாங்க செம சீன்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 ஸ்விம்மிங் பூல் ல அத்தனை பேர் இருக்கும்போது தியாக்ராஜன் மாதவியை தண்ணிக்குள் இழுக்க முற்படுவது எந்த அடிப்ப்டைல ? கமல் எதிர்லயே இருக்கார்.
2 ராதா வீட்டில் தனியே குடி ருக்கார் அம்மா ஹாஸ்பிடலில் இருக்காங்க ஈசியா வில்லன் ஆள் அனுப்பினா டக்னு வேலை முடியும் அதை விட்டுட்டு ராதாவை ஹாஸ்பிடல் வர வெச்சு ஆம்புலன்ஸ் வெச்சு கடத்தி ரொம்ப சிரமப்பட்டிருப்பாங்க
3 மாதவி உடம்புல வைரம் இருக்கு அதை எடுக்காம அவரது ஃபாரின் பயணத்துக்கு அனுமதி தந்தது எப்படி ?
4 அழகிகளை மயக்க மருந்து கொடுத்து வைரத்தை எடுத்துட்டா வேலை முடிஞ்சுது எதுக்கு அனாவசியமா கொலை எல்லாம் பண்ணிட்டுனு தெரியல
5 வில்லன் க்ளைமாக்ஸ் ல 3 வைரக்கல்லை முழுங்கறார் அது ஒவ்வொண்ணும் கூழாங்கல் சைஸ்க்கு இருக்கு எப்டி உள்ளே போகுமோ ?
6 ஸ்வப்னா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார் அதை போலீஸ் பிடிச்சு டுது மீண்டும் அதே ஸ்வப்னா கமல் வீட்டில் தூக்கில் தொங்க விடப்படுகிறார் வில்லன் படு தத்தியா இருக்கான் அதான் ஏற்கனவெ சொபனா கொலை வ்ழக்கில் கமல் மாட்டிக்கிட்டாரே? அதே ஸ்வப்னா கொலை வழக்கில் மீண்டும் ஒருக்கா எதுக்கு சிக்க வைக்கனும் ?போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட்ல கத்தியால் குத்தப்பட்டுதான் இறந்தார்னு தெரிந்ஞ்சா இந்த தூக்கு மேட்டர் கமலை சிக்க வைக்க செட்டப் என்பது தெரிஞ்சிடாதா?
7 அந்த லூஸ் வில்லன் சம்பளம் கொடுத்து ஒரு சின்ன வீடு மாதிரி ஒரு பெண்ணை வெச்சிருக்கான் ., அழகிகள் 3 பேரையு,ம் வெறிக்க வெறிக்க பாக்கறான் ஆனா அவங்களை எதுவும் செய்யல . அவ்ளோ நல்லவனா> விபரம் இல்லாதவனா ?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பாரதிராஜா பாக்யராஜ் காம்போல சிகப்பு ரோஜாக்கள் படத்துக்கு நிகரான கரைம் த்ரில்லர்னு சொல்ல முடியா விட்டாலும் அதுக்கு அடுத்து இதை சொல்லலாம். ஜாலி எண்ட்டர்டெயின்மெண்ட் க்ரைம் த்ரில்லர் ரேட்டிங் 2.75 / 5
0 comments:
Post a Comment