கோடம்பாக்கத்தின் ஹிட்ச்சாக் என அழைக்கப்பட்ட ராஜ்பரத் இயக்கிய படங்கள் எதுவுமே நான் பார்த்ததில்லை .. ஃபேஸ்புக்ல கோகுலம் என்ற குழு அட்மின் ஆகிய திரு சிவ கருணாநிதி அவர்கள் தான் அறிமுகப்படுத்தி விமர்சனம் செய்ய கோரிக்கை வைத்தார். அவருக்கு என் நன்றி. பேசிக்கலா நான் த்ரில்லர் பட ரசிகன். என் கண்ணுக்கு எப்படி தட்டுப்படாம போச்சுனு தெரில உச்சகட்டம் .சின்ன முள் பெரிய முள். தொட்டால் சுடும் , சொல்லாதே யாரும் கேட்டால் என்ற நான்கு பட்ங்கள் அவர் இயக்கியவையாம்
இது போல அதிகம் அறியப்ப்டாத த்ரில்லர் பட்ங்கள் இருந்தால் தகவல் சொல்லுங்க . பார்த்துடலாம், பேய்க்கதை , திகில் கதை ரத்தம் தெறிக்கும் படங்கள் சிரஞ்சீவி டைப் தெலுங்கு டப்பிங் மசாலா குப்பைகள் வேண்டாம். க்ரைம் த்ரில்லர் , க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் , ரொமாண்டிக் காமெடி பட்ங்கள் மட்டும் சொல்லுங்க
இந்தப்படம் ஹிட் ஆனதும் கன்னடத்து ல PREMA MATHSARA (Ambarish ) ரீமேக் ஆச்சு
தமிழ் சினிமா ல நான் பார்த்த வரை மனநலம் குன்றியவ்ர்களை வைத்து எடுக்கபப்ட்டு ஹிட் ஆன படங்கள் பிரதாப் போத்தன் ராதிகா நடித்த மீண்டும் ஒரு காதல் க்தை , கே பாக்யராஜின் ஆராரோ ஆரிராரோ , பிரபு நடித்த மனசுக்குள் மத்தாப்பூ
ஸ்பாய்லர் அலெர்ட்
மனநல காப்பாகம் ஒன்றில் ஹீரோ சில மாதங்களா இருக்கார் . ஒரு நாள் நைட் காவலாளியை கொலை பண்ணிட்டு தப்பிப்போறார். இவருக்கு ஒரு ஃபிளாஸ்பேக்
இவரு ஒரு காலத்துல மனநல மருத்துவரா இருந்தவர்தான். இவருக்கு ஒரு மனைவி. ஹீரோக்கு ஒரு ப்ழக்கம் அடிக்கடி தன் சம்சாரத்தை சத்தம் போடாம பின்னால வந்து பே அப்டினு பயப்படுத்தறது அவருக்குப்பிடிக்கும்
ஒரு நாள் அஃபிஷியலா 5 நாட்கள் டூர் வெளியூர் போற வேலை . ஆனா 2 நாட்களில் வேலை முடிஞ்சிடுது . தகவல் கொடுக்காம சஸ்பென்ஸா வீட்டுக்கு அமைதியா வீட்டைத்திறந்து பூனை மாதிரி மெதுவா போய் மனைவியை பே அப்டினு பயமுறுத்தலாம்னு பார்த்தா ஒரு ஷாக். பெட்ரூம்ல மனைவி வேற ஒருவர் கூட..
அங்கேயே அந்த ஆளை ஒரே போடா போட்டுடறார். ம்னைவி பயந்து போய் ஒரு ரூம்ல போய் கதவை அடைச்சுக்கிட்டதால தப்பிச்சாங்க
டாக்டரான ஹீரோ பேசண்ட்டா இருக்கார்
இப்போ தப்பியதே தன்னிடம் இருந்து தப்பிய தன் மனைவியைக்கொலை செய்யத்தான்
இப்போ ஹீரோவோட மனைவி வேற ஒருவர் கூட மேரேஜ் பண்ணிக்க ரெடி ஆகிடுது எதிர் வீட்ல ஹீரோ தங்கி மனைவியக்கொலை பண்ண திட்டம் போடறார். போலீஸ் அவரோட மனைவிக்கு பாதுகாப்பு தருது . ஹீரோவோட திட்டம் ஜெயிச்சுதா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ்
ஹீரோவா சரத்பாபு . ஜெண்டில்மேனாகவே பார்த்துப்பழக்கப்பட்டவரை கொலைகாரனாகப்பார்க்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு , ஆனா அவர் நடிப்பு பக்கா. துரோகத்தை ஜீரணிக்க முடியாதவராக அபாரமான நடிப்பு
எதிர் வீட்டுக்காரராக ஒய் ஜி மகேந்திரன். இவரை மொக்கை ஜோக் சொல்பவரா பார்த்திருக்கோம், கடுப்பா இருக்கும் ஆனா இதில் நல்ல நடிப்பு அண்டர் ப்ளே ஆக்டிங் குட்
மனைவியாக சுனிதா . தான் தப்பு செய்யவில்லை . கண்னால் காண்பது பொய் என வாதிடும் கேரக்டர். அழகு முகம் . ஆனா கணவன் மன நோயாளி ஆன ஒரு வருசத்துலயே அடுத்த திருமணத்துக்கு ரெடி ஆவது கொஞ்சம் உறுத்துது
இசை சங்கர் கணேஷ் . பிஜிஎம் ஓக்கே ரகம் . ஒளிப்பதிவு கண்ணுக்கு அழகு
சபாஷ் டைரக்டர் ( என் எஸ் ராஜ்பரத் )
1 மொத்தமே ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் தான் படம் பக்காவான எடிட்டிங் .
2 க்ளைமாக்ஸ் எதிர்பாராத முடிவு
ரசித்த வசனங்கள்
1 சதுரங்கத்துலயும் சரி வாழ்க்கைலயும் சரி ஒவ்வொரு மூவையும் கவனமா வைக்கனும்,
2 ஒரு மனுசன் வாழ்க்கைல எல்லா சமயத்துலயும் ஜெயிச்சுக்கிட்டே இருந்தா அவனோட பலமா இருக்காது மத்தவங்களோட ப;லவீனத்தாலதான் ஜெய்ச்சிருப்பான்
3 லட்சியமே இல்லாத வாழ்க்கை , கற்பில்லாத மனைவி , நண்பனே இல்லாத மனிதன் இவை எல்லாமே கொடுமைகள்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 போலீஸ் ஆஃபிசர் ஒரு பங்களாக்குள்ளே வ்ந்து வேலைக்காரி கிட்டே மேடம் இருக்காங்களா?னு கேட்கறார் மேலே இருக்காங்கனு சொல்லுது அவரு ,மேலே பெட்ரூம் போய் ஒரு மரியாதைக்குக்கூட கதவை தட்டி மே ஐ கம் இன் அப்டினு கேட்காம திடுதிப்னு நுழையறார்
2 காலம் பூரா ச்ந்தேகப்பட்டுட்டே இருக்கற கணவன் கூட எப்படி வாழ முடியும்?னு ஹீரோயின் 2 வது புருசன் கிட்டே கேட்கறா ஆனா ஹீரொ ஒரே ஒரு டைம் மனைவியை அவளோட முன்னாள் காலேஜ் மேட் டோடு பார்த்தப்ப தான் சந்தேகப்படறான் அவ்ளோ தான்
3 இன்னொரு மேரேஜ் பண்ணிக்கனும்னா டைவர்ஸ் வாங்கனும் அல்லது 7 வருசம் பிரிஞ்சு வாழ்ந்திருக்கனும் அப்டி இல்லாம மேரேஜ் ஆகி ஒன்றரை வருச்த்துல இன்னொரு மேரேஜ் ஹீரோயின் பண்ண முடிவு எடுப்பது எப்படி ?
4 முன்னாள் காலேஜ் மேட் ஃபோன் பண்றப்போ ஹீரோயின் தன் கணவன் ஊர்ல இருக்கற நாளா பார்த்து வரச்சொல்லி இருக்கலாமே? ஏன் கணவன் ஊர்ல இல்ல வர 5 நாட்கள் ஆகும்னு எடுத்துக்கொடுக்கறா?
5 தூக்க மருந்து அல்லது மயக்க மருந்து கொடுத்து காலேஜ் மேட் ஹீரோயினை பலவந்தப்படுத்தும்போது தன் நினைவு இல்லாத ஹீரோயின் அந்த டைம்ல அங்கே வந்த கணவன் அவனை கொலை செஞ்சதும் நினைவு வந்து கதவை தாழ் போட்டுக்கொள்வது எப்படி?
6 க்ளைமாக்ஸ்ல ஹீரோயின் கொலைகாரனிடமிருந்து தப்பி இன்ஸ்பெக்டர் அப்டினு கத்தி அவரை கட்டிப்பிடிக்குது சரி பயத்துல அப்டி பண்ணி இருக்கும் இன்ஸ்பெக்டர் எதுக்கு அப்டி கட்டிப்பிடிக்கறாரு தள்ளி நின்னே ஆறுதல் சொல்லலாமே?
7 ஹீரோயின் ஒரு டைம் கூட ஹீரோவிடம் தன்னிலை விளக்கம் கொடுக்கவே இல்லை . நான் துரோகம் செய்யலை . இவந்தான் இப்படி மருந்து கலந்து இப்படி ப்ண்ண பார்த்தான்னு சொல்லவே இல்லை . சொன்னாதானே தெரியும் ?
8 ஹீரோ தனக்கு துரோகம் செஞ்சதா அவர் கருதும் மனைவியை , அவளது காலேஜ் மேட்டை கொலை செய்ய முயல்வது ஓக்கே ஆனா சம்ப்ந்தமே இல்லாம காவலாளியை ஏன் கொலை செய்யனும் ? சும்மா தாக்கி காயப்படுத்துனா போதாதா? க்ரைம் ரேட் கூடிட்டே போகுதே?
சி பிஎஸ் ஃபைனல் கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். சின்னப்படம்தான் போர் அடிக்காம போகுது . ரிலீஸ் டைமில் சத்தமே இல்லாம வந்து ஹிட் ஆன படமாம் லோ பட்ஜெட்டில் ஒரு ஹை வெற்றி
Uchakattam | |
---|---|
Directed by | N. S. Rajbharath |
Written by | N. S. Rajbharath |
Produced by | S. Kannan |
Starring | Sarath Babu Sunitha Rajkumar Y. G. Mahendran |
Cinematography | Diwari |
Edited by | N. Vellaisamy R. Krishnamoorthy |
Music by | Shankar–Ganesh |
Distributed by | Surya Arts |
Release date | 27 September 1980 |
Running time | 101 minutes |
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment