Tuesday, August 23, 2022

ஏணிப்படிகள் (1979) - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்)

 


1  ஏனுங்க  மாப்பிள்ளை  இந்த  நினைப்பு

‘இங்கு என்னாத்தக்கண்டீங்க  இந்தச்சிரிப்பு


2  பூந்தேனில்  கலந்து பொன் வண்டு  எழுந்து  சங்கீதம்  படித்ததென்ன?


மேலே  சொன்ன  ரெண்டு  சூப்பர்  ஹிட்  பாடல்கள்  அந்தக்காலத்துல  ஒலிக்காத  வீடுகளே  இல்லை 


தேசிய  விருது  பெற்ற  பசி உட்பட  ஷோபா  நடிச்ச  பெரும்பாலான  படங்களில்  க்ளைமாக்ஸ்ல  அவருக்கு  சோகமான  முடிவு  அல்லது  படத்துக்கு  சோகமான  முடிவு  இருக்கும்  இதில்  மட்டும் தான்  ஹேப்பி  எண்டிங். எஸ்  பாஸ்  என  ஒரு  சீனில்  வந்துட்டுப்போன  சத்யராஜ்  இதில்  பேர்  சொல்லும் வில்லனாக  வருவார் 


1978ல் தெலுங்கில் ரிலீஸ்  ஆன  சீதா லட்சுமி  என்ற  படத்தின்  அஃபிசியல்  ரீ மேக்  இது . இந்தப்படத்தின்  பாதிப்பில்  கே  பாக்யராஜ்  தாவணிக்கனவுகள் , விக்ரமன்  உன்னிடத்தில்  என்னைக்கொடுத்தேன்  படங்கள்  தந்தது  வரலாறு . முழுக்கதையும்  அப்டியே  எடுக்கலை.  சில  காட்சிகள்  மட்டும் 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஹீரோ  ஹீரோயின்  ரெண்டு பேருமே  கிராமத்தில்  இருக்கும்  டெண்ட்டுக்கொட்டாய்ல  வேலை  செய்யறவங்க . இருவரும்  காதலர்கள் . ஒரே  தியேட்டரில்  ஓன்றாக  இரவில்  தங்க  நேர்ந்தாலும்  எல்லை  மீறாத  கண்ணியக்காதலர்கள் 


அந்த  ஊருக்கு ஒரு  சினிமா  டைரக்டர்  வர்றார்.. வந்தவர்  ஹீரோயின்  அழகைப்பார்த்து  உனக்கு  ஒரு  சான்ஸ்  தர்றேன்  சென்னை  போய்  லெட்டர்  போடறேன்னு  சொல்லிட்டுப்போய்ட்டார்


 இதுக்குப்பின்  ஊரெல்லாம்  ஹீரோயின்  செம  ஹிட்  ஆகிட்டார் . சினிமாவுக்குப்போகப்போகும்  சித்தாளு  என  ஏக  மவுசு 


ஆனா  போன  ஆள்  போனதுதான்  ஒரு  தகவலும்  இல்லை /


இப்போ  ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  சென்னை  வர்றாங்க . அட்ரசை  வெச்சு  ஆளைப்பிடிச்சா  அந்தாளு  ஒரு  டுபாக்கூர் பார்ட்டி.  என்ன  பண்றதுனு

 தெரியாம  முழிக்கறாங்க., திரும்பி  ஊருக்குப்போனா  அவனவன்  நக்கல்  ப்ண்ணுவான், அதனால  அங்கேயே எதுனா  வேலை  பார்ப்போம்னு  முடிவு  பண்றாங்க 


 அப்போ  நிஜமாலுமே  ஒரு  நல்ல  டைரக்டர்  கண்ல  பட்டு  சினிமால்;  நடிக்க  ஹீரோயின்  ஒப்பந்தம்  ஆகறார்


இதுக்குப்பின்  திரைக்கதையில்  ஏற்பட்ட  திருப்பங்களை  யூ  ட்யுப்ல  காண்க . பெரிய  ஸ்டார்  ஆன  ஹீரோயின்   தன்  காதலனைக்கல்யாணம்  பண்ணிக்குதா? இல்லையா?  என்பதுதான்   க்ளைமாக்ஸ்


ஹீரோவா  சிவக்குமார். இந்தப்படம்  அவரது  திரை வாழ்வில்  முக்கியமான  படம் . கிராமத்தானாக  நல்லா  பண்ணி  இருக்கார்


ஹீரோயினா  ஷோபா / இவரது  நடிப்பைப்பற்றி  பல  முறை  சிலாகித்தாகி  விட்டது 


வில்லனாக  சத்யராஜ்  ஓக்கே ரகம்,  இவரு  செம  ஹிட் ஆனது காக்கிச்சட்டை  தக்டு  தகடு  டயலாக்கிற்குப்பிறகு தான் 


மனோரமா  காமெடிக்கு . ஷோபாவைப்பார்த்து  பொறாமைபப்டும்  கேரக்டர்


 கே வி  மகாதேவன்  இசையில்  4  பாடல்களூமே  குட்  அதுல  2  பாட்டு  செம  ஹிட்டு . டைரக்டர்  பேரு  பி  மாதவன் 



  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  + திரைக்கதையில்  சில  ஆலோசனைகள் 


1  சென்னைல  இருந்து  கிராமத்துக்கு  ரிட்டர்ன்  வரும்  ஹீரோ   ஹீரோயினின்  குடும்பத்துக்கு  டிரஸ்  கிஃப்ட்  எல்லாம்  கொண்டு  வந்து  கொடுத்துட்டு  பணமும்  கொடுத்துட்டு  கிளம்புங்க  உங்களைக்கையோடு  கூட்டிட்டு  வரச்சொலிடுச்சுனு  சொல்றார். அப்றம்  எதுக்கு  அவ்ளோ  கிஃப்ட்டு?  அங்கே  இருந்து  இங்கே  கொண்டு  வந்து  ,மறுபடி  அங்கே  கொண்டு  போகனும் ? அதுக்கு  பருத்தி  மூட்டை  குடோன்லயே  இருந்திருக்கலாமே?


2 சினிமா  ஸ்டார்  ஆன  பின்  ஹீரோயின்  தன்  கிராமத்துக்கு  வர்றா  ஒரு  பள்ளி  விழாவில்  கலந்துக்கறா  மைக்  பிடிச்சு  பேசறா  அப்போ  ஹீரோ  பத்தி  ஒரு  வார்த்தை  பேசி  இருக்கலாமே? மனத்தாங்கலில்  இருக்கும்  ஹீரோவுக்கு  கவுரவம்  குடுத்த  மாதிரி  இருக்கும்  ., இந்த  மிஸ்  ஆன  சீன்  தான்  உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்  க்ளைமாக்ஸ். ஆடியன்ஸ்  அப்ளாஸ்  அள்ளிக்கும் \

3 கிராமத்துக்கு  வந்த  ஹீரோ  சினிமா ல  நடிகை  ஆன  ஹீரோயின்  கார்  பங்களா  எல்லாம்  வாங்கிட்டா  வச்தி  ஆகிட்டா  என  சொல்றார்  ஆனா  சென்னைல  காமிரா  ஜூம்  ஆகும்போது  முதல்  படமே  இன்னும்  ரிலீஸ்  ஆகல  என  சொல்றாங்க . முதல்  பட  அறிமுகத்துக்கு  எந்த  புரொடியூசர்  அவ்ளோ  அள்ளிக்குடுக்கறார்?

4  ஹீரோயின்  நடிச்ச  படம்  கிராமத்தில்  ரிலீஸ்  ஆகி அங்கே  ஹிட்  ஆகி  மக்கள்  கொண்டாடற  மாதிரி  ஒரு  சீன்  வெச்சிருக்கலாம்


5  கணவனால்  கை  விடப்பட்ட  ஒரு  பெண்ணுக்கு  வாழ்வு  கொடுக்கபோரேன்னு  ஒரு  டைம்  ஹீரோ  ஹீரோயின் கிட்டே  ஒரு  வேகத்துல  சொல்லி  இருப்பார்  அதே  கதையை  வெச்சு    வில்லன்  ஹீரோயின்  கிட்டே  ஹீரோ  அந்தப்பெண்ணை   வெச்சிருக்கார்  என  சொல்வதை நம்புவது  எப்படி ? செகண்ட்  ஒப்பீனியன்  யார்  கிட்டேயாவது  கேட்க  மாட்டாரா? 


6  ஹீரோயின்  தற்கொலை  என  பொய்யாக  நியூஸ்  தர  சம்மதிக்கும்  ஹீரோயின்  அதைப்பார்த்தா  ஹீரோ விபரீத  முடிவு  எடுப்பார்  என  தெரியாதா? அதை  முன்  கூட்டியே  இது  சினி ஃபீல்டுக்காக  டிராமா   என  தகவல்  சொல்ல  மாட்டாரா? 


7  சத்யராஜ்  அண்ட்  கோ  தான்  ஹீரோயின்  கால்ஷீட்  விவகாரங்களை  கவனிச்சுக்கறார்னு  டயலாக்  வருது . இதுவரை  எத்தனை  படம்  நடிச்சு  உங்களுக்கு  கொட்டி  இருக்கேன்னு  டயலாக்  வருது  , ஆனா  முதல்  படம்  மட்டும் தான்  நான்  கிளம்பறேன்னு  ஒரு  இடத்தில்  டயலாக்  வருது . திரைக்கதைல  ஹீரோயின்  பல  படங்கள்  ப்ண்ணினவர்  எனவும்  ஒரே  ஒரு படம் தான்  ப்ண்ணினார்  என்வும்  மாறி  மாறி  டயலாக்  வருது  . எடிட்டர்  எப்படி  கவனிக்காமல்  விட்டார் ?


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  அந்தக்காலத்தில்  ஹிட்  ஆன   படம் . இந்தக்காலத்தில்  சுமாராதான்  தெரியும்  பாட்டு  ஹிட்  அதுக்காகப்பார்க்கறவங்க  பாருங்க  ரேட்டிங்  2.25 /5 




0 comments: