Wednesday, August 17, 2022

சக்களத்தி (1979) - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா)

அழகாபுரி  அழகப்பன்  மாலைமதில  நாவல்  எல்லாம்  எழுதி  படிச்சிருக்கேன். அவரோட  கதை  வசனம் அழகு  மயில்  ஷோபா  நடிச்ச  படம்  என்றதும்  பார்த்துடலாம்னு  முடிவு  ப்ண்ணுனேன். ரொம்ப  சின்னப்படம்தான் 100  நிமிடங்கள் . நடிகை  அம்பிகா  அறிமுகம்  ஆன  பட்ம்  இதுதான்  ஒரு  சின்ன  ரோல் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ  ஒரு  தண்டச்சோறு ஒரு  வேலைக்கும்  போகாதவன். அந்த  ஊர்ப்பண்ணையார்  பார்த்து  அவனுக்கு  மேரேஜ்  பண்ணி  வைக்கறார். மேரேஜ்    ஆன்பின்பும்  அவனுக்கு  புத்தி  வர்லை  டெய்லி  மேட்னி  ஷோ  சினிமாக்கு  போறதுனு  ஊர்  சுத்திட்டு  இருக்கான்


 ஹீரோவோட  அண்ணன்  செம  வசதி  அவன்  ஃபாரீன்  போய்  எட்டு  வருசம்  ஆச்சு  ஆள்  அட்ரசே  காணோம் . ஃபாரீன்  போறவங்க  எல்லாம்  ப்ணம்  சம்பாதிச்சுட்டு  இங்கே  வந்து  செட்டில்  ஆகனும்னு  நினைச்சுப்போவாங்க  பணம்  ச்ம்பாதிப்பாங்க   ஆனா  இங்கே  ரிட்டர்ன்  வர  மாட்டாங்க அதே  மதிரி தான்  அண்ணனும்  . சம்சாரத்தை  ஊர்ல  விட்டுட்டுப்போனவன்  அங்கேயே  ஒரு  ஃபாரீன் காரியை  கரெக்ட்[ பண்ணி  மேரேஜ்  பண்ணி  செட்டில்  ஆகிட்டான்  மாசாமாசம்  பணம்  மட்டும்  அனுப்பறான். இந்த  விஷயங்கள் எல்லாம்  ஹீரோவோட  அண்ணிக்குத்தெரியாது 


ஹீரோ  வேலை  வெட்டிக்குப்போகாததால்  ஹீரோயின்  செம  கடுப்பாகி  அவனை  திண்ணைல  படுக்கச்சொல்லிடறா. சம்பாத்யம்  புருச  லட்சணம்  எப்போ  சம்பாதிக்கறியோ  அப்போதான்  ஸ்பெஷல்  மீல்ஸ்னு  சொல்லிடறா


ஹீரோவோட அண்ணி  உடல்  நிலை  சரி இல்லைனு  டாக்ட்ரைப்பார்க்கப்போறா. அங்கே  டாக்டர்  கூட கனெக்ச்ன்  ஆகிடுது . இது  ஊர்  பண்ணையாருக்கும்  ஊருக்கும்  தெரிஞ்சிடுது


சமையல்  பண்ணக்கூட  வீட்டில்  எதுவும்  இல்லை  சரி  அம்மா  வீட்டுக்கே  போலாம்னு  ஒரு  மாசம்  தாய்  வீட்டு  கேம்ப்  அடிக்கும்  பிளானில்  ஹீரோயின்  பிறந்த  வீடு  போறா 


 ஆடியன்சும்  ஊர்  மக்களும்  ஹீரோக்கும்  அண்ணிக்கும்  தொட்ர்பு  ஏற்படும்னு  வெய்ட்டிங்  


 ஆனா  ஒரு  ட்விஸ்ட் .  ஊர்ல  இருந்து  திரும்பி  வந்த  ஹீரோயினுக்கு  ஒரு  உண்மை  தெரிய  வருது   அது  என்ன  என்பதை  யூ  ட்யூப்ல  காண்க 


 ஹீரோவா  சுதாகர் . ராமராஜனைக்கூட்  ரசிச்சுப்பார்த்துடலாம், ஆனா  இந்த  சுதாகரை  ஆரம்பத்துல  இருந்தே  எனக்குப்பிடிக்காது . என்ன  ரீசன்னு  தெரியல். ஆன  உருவ  கேலி  எல்லாம் இல்லை . இந்தப்படத்துல  அவருக்கு  சோத்துக்கு  செத்தவன்  கேரக்டர்  நல்லா  பண்ணி  இருக்கார் . அண்ணியிடம்  பழகும்போதும்  மனைவியிடம்  வழியும்போதும்  பண்ணையாறரிடம்  பம்மும்போதும்  குட்  ஆக்டிங் 


ஹீரோயினா  தேசிய  விருது  பெற்ற  ஷோபா . அருமையான  நடிப்பு . இவர்  ஏற்று  நடித்த  பாத்திரங்களில்  கூட இவர்  சந்தோஷமாக  இருந்ததில்லை  எல்லாவற்றிலும்  சோக  கேரக்டர்  அல்லது  நெகடிவ்  க்ளைமாக்ஸ் 


அண்ணியா  ஒய்  விஜயா . கச்சிதமான  3நடிப்பு  இவரது  கேரக்டர்  ஸ்கெட்ச்  அப்டி  இப்டி இருந்தாலும்  காட்சிப்படுத்துவதில்  அடல்ட்  கண்ட்டென்ட்  எதுவும்  இல்லை 


ஊர்  பண்ணையாராக  விஜயன் . அதிக  வாய்ப்பில்லை .  சும்மா  வந்து  போறார்  சரத்பாபு  சரிதா  எல்லாம்  சும்மா  ஒப்புக்கு  சப்பாணி  கேரக்டர்கள் தான் 


பாடல்களில்  2  பாட்டு  செம  ஹிட்டு  இளையராஜா  செம 


1 என்ன  பாட்டுப்பாட  என்ன தாளம்  போட ?  நிக்காதே  ஓடு  இது  சர்க்காரு  ரோடு 

2 வாடை  வாட்டுது   ஒரு போர்வை  கேட்குது, இது   ராத்திரி  நேரமடி 

ரசித்த  வசனங்கள்


1  சாப்பாடு  முக்கியம்  இல்லை  பரிமாறும்  கை  தான்  முக்கியம்


2  புருசனைப்பற்றி  பிறந்த  வீட்ல  குறை  சொல்றது  ஈசி  ஆனா  ஒரு  முறை  பேரு  கெட்டுட்டா  மதிப்பு  போய்டும்  இழந்த  மரியாதையை  திருப்பி  பெற  முடியாது


3  காசு  இருந்தா  எல்லா  சுகமும்  வரும் 


4  சம்பாதிக்கத்தெரியாத  புருசனுக்கு   வாழ்க்கைப்படறதுக்கு  சுருக்குக்கயிற்றுல  தொங்கலாம்னு  தோணுது 


5  ஆம்பளை  தப்பு  பண்ணுனா  வீட்ல  இருக்கறவன்  வெளீல  துப்புற  மாதிரி  பொம்பளை  தப்பு  பண்ணுனா அது  வெளீல  இருக்கறவன்  வீட்டுக்குள்ளே  துப்பற  மாதிரி 


 அது  எப்படி ? ஆம்பளைக்கு  ஒரு  நியாயம்  பொம்பளைக்கு  ஒரு  நியாயம் ?


6  காத்து இருக்குதுங்களா?


 எனக்காக  யாரும்  காத்துட்டு  இல்லீங்களே?


 சைக்கிள்ல  காத்து  இருக்குங்களா? இரங்கி  இருக்கு  போல ?


7  காஞ்சு  கிடைக்கற  பூனை  அவ  கருவாட்டுக்கூடை  கிட்டே  விடலாமா? 




 சபாஷ்  டைரகடர் ( தேவராஜ் -மோகன்) 


1  கிராமத்தில்  நடக்கும்  கதை என்பதால்  இயல்பான  வசனஙகள்  கேரக்டர்கள்  அறிமுகங்கள்  இயல்பா  இருக்கு 


2  கண்ணியமாக  நடிக்கும்  ஷோபாவையே  எதையோ  பொய்யைச்சொல்லி  க்தைக்கு   சம்ப்ந்தமே  இல்லாம  கட்டெறும்பு   விசிட்டிங்  சீன்  வெச்சு  கிளாமர்  காட்ட  வெச்சது கட்டெறும்பிடம்  ஷோபா  பேசும்  வச்னம்  எல்லாம்  வேற  லெவல்  அனா  கதைக்கு  சம்பந்தமே  இல்லை 

3  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டாக  த்ரில்லர்  பட்ங்களில்  கொலையாளியைக்கண்டுபிடிப்பது  போல  அந்த  பச்சைப்பொட்டு  விஷயத்தை  வெச்சு சக்களத்தியைக்கண்டுகொள்வது  அபாரம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  டாக்டர்  வீட்டில்  ஒய்  விஜயா  விஜயம்  செய்ததும்  கதவை  தாழ்  போடாமல்  டாக்டர்  காதல்  சிகிச்சையை  ஆரம்பிப்பது   எப்படி? அது  ஒரு  கிராமம் . கம்பவுண்டர்  கூட  இல்லை . ஆள்  யாராவது  திடிர்னு  வந்துட்டா  டின்  கட்டிடுவாங்கனு  தெரியாதா?


2  ஒய்  விஜயாவைப்பார்க்க  அவர்  வீட்டுக்கே  வரும்  டாக்டர்  திண்ணைல  இருக்கற  ஊர்பெரிய  மனுசங்க  கிட்டே  ஒய்  விஜயா  வீடு  எங்கே  இருக்குனு விசாரிச்சுட்டு  பின்  சைக்கிளை  இங்கேயே  விட்டுட்டு[ப்போறான்  நீங்க  சைக்கிளைப்பார்த்துக்குங்க  நான்  அவளைப்பார்த்துட்டு  வர்றேன்  என  போவதெல்லாம்  ஓவரோ  ஓவர் . சத்தம்  இல்லாம  சைக்கிளை  நிறுத்திட்டு  தனியா  நடந்து  வந்து  யாரிடமாவது  விசாரிச்சு  இருக்கலாம்.


3  ஹீரோயினுக்கு  தன்  கணவர்  வேற  யாரோடோ  தொடர்பில்  இருக்கார்  என்ற  விஷயம்  தெரிய  வௌம்போது  அவர்  முகத்தில்  ஷாக் ஏதும்  இல்லை . அப்றம்? ஊர்ல  யார் யார்  யாரை  யாரை  வெச்சிருக்காங்க? என  வெட்டி  அரட்டையில்  ஈடுபட்டுக்கொண்டு  இருக்கார்  அந்த  சீன்ல  மின்னல்  அடிக்கனும்  பூகம்பம்  வரனும்  ஃபேஸ்க்கு  ஒரு  க்ளோசப்  ஷாட்  வைக்கனும், என்னய்யா  டைரக்டர்கள்  பத்தாததுக்கு  ரெண்டு  பேரு  டைரக்டர்ஸ் 


4  ஹீரோயின்  ஊர்ல  இல்லை  ஹீரோ  தனியா  இருக்கார்  அண்ணிக்கு  அதுதான்  நல்ல  வாய்ப்பு  அதை  எல்லாம்  விட்டுட்டு  அவரு  யார் கிட்டே  எப்படிப்போனா  மாட்டிக்குவோமோ  அதே  மாதிரி  மாட்டிக்குது  இவ்ளோதத்தியாவா  கிராமத்தில்  இருப்பாங்கனு  எண்ண  வைக்குது 


5  டாக்டரா  நடிக்க  வெச்ச  ஆள்  பார்க்க   கருப்பட்டி  வியாபாரி  மாதிரி  இருக்காப்டி  கொஞ்சம்  நம்பகத்தன்மை  உள்ள  ஆளை  வாட்டசாட்டமா  நடிக்க  வெச்சிருக்கலா,ம்  அவரது  நடிப்பும்  அமெச்சூர்தனம் 


6  ஒய்  விஜ்யா  கிராமத்தில்  இருக்கு  தலை  நிறைய 8  முழம்  ஜாதி  மல்லிகைப்பூ  வெச்சுக்கிட்டு  நடு  ராத்திரி கரும்புக்காட்டுக்கு  போகுது .,  டவுட்  வராம   என்ன  வரும் ? அப்டியாவது  ஒரு  மஞ்சப்பைல  பூ  சுத்தி  கொண்டு  போய்  ஸ்பாட் ல   தலைல  வெச்சிருந்திருக்கலா,ம்


7  ஒய்  விஜயா  சாப்பாடு  கொண்டு  போறது  என்னவோ  ஒரு  சின்ன  டிஃபன்  கேரியர்ல  ஆனா  அதை 10  அடி  ஆரம்  உள்ள  அவ்ளோ  பெரிய  கூடைல  வெச்சு  கொண்டு  ;போகுது 

8   டாக்டர்  - ஒய்  விஜயா  ரெண்டாவது  மீட்டப்ல  அதே  மாதிரி  கதவை  திற்ந்து  வெச்ட்டே  மாட்டிக்கறாங்க  அந்த  வீட்டுக்கு  பின்  வாசல்  ஒண்ணு  இருக்கு. மெயின்  கதவை  வெளிப்பக்கம்  பூட்டி ட்டு  செருப்போட  உள்ளே  போய்ட்டா  பின்  கதவை    லாக்  பண்ணிட்டா  ஆளும்  வர  மாட்டாங்க  டவுட்டும்  வராது . முதல்  டைம்  மாதிரியே  ரெண்டாவது  டைமும்  டாக்ட்ர்  மாட்டிக்கறார். நாம்  பண்ற  முதல்  தப்புல  இருந்து  பாடம்  கத்துக்கனும்னு  பெரியவங்க  சொல்லி  இருக்காங்களே? 


  சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இது  ஸ்லோவாகப்போகும்  மெலோ  டிராமா  ஆண்களுக்குப்பிடிக்கும்  அம்சங்களே  அதிகம் .  பார்க்கறவங்க  பார்க்கலாம்   ரேட்டிங்  2 / 5 


 டிஸ்கி  =  லாஜிக்  மிஸ்டேக்ஸ் ல  வர்ற  பாயிண்ட்ஸ்  எல்லாம்  சினிமா  டைரக்டர்கிட்டே  கேட்பது  கள்ளக்காதலர்களுக்கு  ஐடியா  எல்லாம்  கொடுக்கலை . ஒரு  முன்  ஜாமீன்  விளக்கம் 






இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புஎஸ். நாகம்மாள்
சுப்புராஜா கம்பைன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயன்
சுதாகர்
ஷோபா
வெளியீடுதிசம்பர் 71979
நீளம்3301 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: