Monday, August 15, 2022

ஒரு விடுகதை ஒரு தொடர்கதை (1979) - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா)


   ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஹீரோயின்  ஒரு  கம்பெனில  டைப்பிஸ்ட்  அன்னைக்கு  புது  மேனேஜர்  வர்றார். ஆனா  ஹீரோயின்  லேட்டா  ஆஃபீஸ்  வர்றாங்க . மேனேஜர்  கூப்பிட்றார்னு  பியூன்  சொன்னதும்  மேனேஜர்  ரூம்க்குப்போன  ஹீரோயின் ஷாக்  ஆகறாங்க.


 ஃபிளாஸ்பேக். ஆல்ரெடி  இவங்களுக்குள்  பழக்கம்   இருந்து இருக்கு . ஒரு  கிராமத்துல  வேலை  இல்லா  வெட்டாஃபிசா  சுத்திட்டு  இருக்கும்போது  ஹீரோயினையும் சுத்தி  சுத்தி  வந்து  லவ்  புரபோஸ்  ப்ண்ணவர்தான்  ஹீரோ . திடீர்னு ஹீரோயினியோட அப்பாவுக்கு  ட்ரான்ஃப்ர்  ஆனதால  வெளியூர்  போக  வேண்டிய  சூழல்.நான்  போய்  லெட்டர்  போடறேன்னு  சொன்ன  ஹீரோயின்   அங்கே சந்தர்ப்பு  சூழலால்  வேற  மாப்ளைக்கு  கழுத்தை  நீட்டிடறார்


(  எப்பவுமே  காதலர்கள்  சேர்ந்திருக்கும்போது  இருக்கும்  மன  உறுதி  பிரிந்து  வாழும்போது  இருக்காது  . சூழ்நிலை  இடம்  மாறும்போது  ,மனசும்  மாறிடும் )


ஃபிளாஸ்பேக்  கட்  பண்ணா  ஆஃபீஸ்;ல  மேனேஜ்ர்  ஹீரோயின்  கிட்டே  டீசண்ட்டாதான்  நட்ந்துக்கறார். இதே  கமல்  அல்லது  கார்த்திக்கா  இருந்திருந்தா  பாய்ஞ்சு  போய்  க்ட்டிப்பிடிச்சு  எப்படிம்மா  இருக்கே?னு  திரிசூலம்  சிவாஜி  கணேசன்  மாதிரி  உணர்ச்சியைக்கொட்டி  இருப்பாங்க 


ஹீரோயினோட  புருசன் ஒரு  பொம்பள  பொறுக்கி . ஆனா  என்ன  கொடுமைன்னா  மனைவியை  இதுவரை  தொடாதவர்.  கேட்டா  பிடிக்கலைங்கறார். பெற்றோர்  வற்புறுத்தி  கட்டி  வெச்ட்டங்களாம்


டைரக்டர்  விக்ரமன்  படத்துல  கூட  இவ்ளவ்  நல்ல  கேரக்டரை  நான்  பார்க்கலை  ஹீரோயின்  அவ்ளோ  நல்லவரா  இருக்கார். கணவனை எதிர்த்துப்பேசலை  கண்டிக்கலை . 


இங்கே  ஆஃபீஸ்ல  ஹீரோவைப்பற்றி  அரசல்  புரசலா  என்ன  பேசிக்கறாங்கன்னா  மேனேஜர்  ஒரு  மாதிரி  .,  ஒரு  ஏழைப்பெண்ணை  அவரது  ஏழ்மையை  பயன்படுத்தி  வெச்சிருக்கார் . குடும்பத்துக்கு  அவர்  தான்  படியளக்கிறார்


 இந்த  மாதிரி  கிசு  கிசு  கேட்டதும்  அதுவரை  மேனேஜர்ட்ட  நல்லா  பேசிட்டு  இருந்த   ஹீரோயின்  இப்போ  பேச்லை.  வித்தியாசமா   நடந்துக்க்றியே  ஏன்?னு  ஹீரோ  கேட்டதும்  உங்களைப்பற்றி  ஆஃபீஸ்ல  தப்பாப்பேசறாங்க , நீங்க  மேரேஜ்  ஆன  ஒரு  பொண்ணு  வீட்டுக்கு  அடிக்கடி  போறீங்களாமே?னு  கேட்கறா


 ஆமா  அந்தப்பெண்ணோட  முதல்  புருசன்  நான்  தான்  அப்டிங்கறார்  ஹீரோ 

  இந்தக்காலமா  இருந்தா  இதை  இடைவேளை  ட்விஸ்ட்டா  வெச்சிருப்பாங்க 


ஹீரோவோட  ஃபிளாஸ்பேக் . ஹீரோவும்  அவர்  மனைவியும்  சந்தோஷமாதான்  இருக்காங்க ., ஹீரோவோட  நண்பன்  ஒருத்தன்   நேஷனல்  பிளேயர் . ஏகப்பட்ட    ரசிகைகள்  வேற அவன்  அடிக்கடி  ஹீரோ  விட்டுக்கு  வர்றான். பழக்கம்  ஆகிடுது


 இவங்க  தொடர்பு  தெரிய  வந்ததும்  ஹீரோ  கத்தலை  பழி  வாங்கத்துடிக்கலை. டீசண்ட்டா வாழ்த்து  சொல்லிட்டு  பிரியறார்


ஆனா  விதி  வசத்தால்  அந்த  ஜோடிக்கு  வறுமை.  ஹீரோவின்  நண்பனும்  ஹீரோவின்  மனைவியின்  இரண்டாவது  புருசனும்  ஆகிய அந்த  ஆளுக்கு  ஒரு  விபத்து  நடக்குது. சம்பாதிக்க  வழி  இல்லை  இப்போ  ஹீரோதான்  இவங்க  2  பேருக்கும்  படி  அளக்கறார்


இப்படிப்பட்ட  உயர்ந்த  உள்ளத்தை  சந்தேகப்பட்டுட்டமேனு  ஹீரோயின்  தவிக்கறா


 ஹீரோயினோட  புருசன் பல  பெண்களை  ஏமாத்தறவன்னு  சொன்னேனே  அதுல  லேட்டஸ்ட்டா  ஏமாந்த  பொண்ணு  ஹீரோவோட  தங்கை 


தன்  தங்கையை  ஏமாத்துனவனை  ஒரு  புடி  புடிக்கலாம்னு  வீட்டுக்கு  வந்த  ஹீரோவுக்கு  ஷாக்  அப்போதான்  ஹீரோவுக்கு  அது  தன்  முன்னாள்  காதலியின்  புருசன்னு  தெரிய  வருது 


ஹீரோயினுக்கு  தர்ம  சஙகடம்  வ்ரக்கூடாதுனு  ஹீரோ  ஒரு  முடிவு   எடுக்கறார்.. தன்  புருசன்  இதுக்கு  மேல  திருந்த  வாய்ப்பில்லைனு  தெரிஞ்சு  ஹீரோயின்  ஒரு    முடிவு  எடுக்கறா


 அந்த  முடிவுகள் என்ன  என்பதே  க்ளைமாக்ஸ் 


ஹீரோவா  விஜயன்  உதிரிப்பூக்களில்  இவரை  வில்லனா  பார்த்துட்டு  இதுல  அக்மார்க்  நல்லவனா  பார்க்க  ஆச்சரியமா  இருக்கு  அருமையான  நடிப்பு 


ஹீரோயினா  அழகு  தேவ்தை  ஷோபா .  இவர்  புடவை  கட்டி  வரும்  பாங்கே  அழகு  கண்ணியம்  


சுருளிராஜன் -  காந்திமதி  காமெடி  டிராக்  இருக்கு  . இந்த  ஜோடிக்கு  ஒரு  பாட்டு  வேற 


வசனங்கள்  கச்சிதம் 



 சபாஷ்  டைரக்டர்  ( எம் ஏ  காஜா) 


1  திரைகக்தை  அமைத்த  விதம்  3  சிறுகதைகளை  ஒன்றாக  இணைப்பது  போல  இருந்தது 


2  இவ்வளவு  கண்ணியமான  ஒரு  ஆண்  கேரக்ட்ரை  டிசைன்  செய்த  விதம் . அதை  விஜய்ன்  வெளிக்கொணர்ந்த பாங்கு 


3  சீரியசான  கதை  ரொம்ப  ட்ரையான  சப்ஜெக்ட்  என்பதால்  காமெடி  டிராக்  கச்சிதமா  பிளேஸ்  பண்ணிய  விதம் 


4  நாயகன்  அவன்  ஒரு  புறம்  அவன்  விழியில்  அவள்  மனைவி  அழகு 


நாயகி  அவள் மறுபுறம்  அவள்  வானில்  இரண்டு  நிலவு  பாடல்  செம  ஹிட்டு  அதை  படமாக்கியவிதமும்  குட் 

ரசித்த  வசனங்கள்


1 தப்பு  செஞ்ச  புருசனை  விட்டுக்கொடுக்காத   பெண்ணை  இப்போதான்  பார்க்கறேன்


தப்பு  செஞ்ச  மனைவியை  இன்னொருவருக்கு  விட்டுக்கொடுத்த  புருசனை  நான்  ஏற்கனவே  பார்த்திருக்கேன் 


2  கண்ணாடி மாளிகை  உடைஞ்சு  போய்டுச்சேங்கற  கவலை  உங்களுக்கு  கல்  எறிஞ்ச்வன்  என்  வீட்லதான் இருக்கான்கற  கவலை  எனக்கு 


3  மணவறை  வரை  மட்டும் தான்  நான்  போயிருக்கேன்  அவர்  மனசுக்குள்ளே  இதுவ்ரை  போனதில்லை 



லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1   ஹீரோயினின்  கணவன்  ஒரு  பொம்பள  பொறுக்கி  பல  பெண்கள்ன்  வாழ்க்கையை  சீரழிப்பவன்  அனா    கட்டுன  சம்சார்த்தைத்தொடலை  எனும்  பாயிண்ட்  ஹீரோயினை  தெய்விகமாக  காட்ட  வலிந்து  திணித்த  மாதிரி  இருக்கு. புருசன்  வேற  ஒரு  பெண்ணை  லவ்  பண்ணி  இருந்தா  அவ  நினைவாக  மனைவியை  தொடலைனு  சொல்லலாம்  ஊரெல்லாம்  மேயறவனுக்கு   சொந்த  வீட்டில்  விருந்து  சாப்பிட  ஏன்  கசக்குது ?


2  ஹீரோ  ஆஃபிஸ்  விஷயமா  வெளியூர்  போறார்  மனைவி  தனியா  இருக்கா . இப்போ  கள்ளக்காதலன்  ம்னைவி  வீட்டுக்கோ  அல்லது  காதலன்  வீட்டுக்கோ   ச்ந்திப்பை  நிகழ்த்துவதுதானே  பாதுகாப்பு?  லூஸ்  மாதிரி  வெளியூர்  போய்  ஹோட்டல்ல  தங்குவங்களா?  தெரிஞ்சவங்க  பார்த்தா  மாட்டிக்குவோம்னு  பயம்  இருக்காதா? 


3  அந்தக்கள்ளக்காதலன்   மாட்டிக்கிட்டதும்  கள்ளக்காதலியை  மேரேஜ்  பண்ணிக்க  எப்படி  சம்மதிக்கிறான். அவன்  பேச்சிலர்  . ஏகப்பட்ட்  ரசிகைகள்  உள்ள  விஐபி .  புதுபெண்ணைக்கட்டப்பார்ப்பானா?   ஆல்ரெடி ருசி  பார்த்த  இன்னொருவர்  மனைவியைக்கட்டுவானா?


4  ஹீரோயின்  வீட்டில்  இருக்கும்போது  அவள்  கணவனுக்கு  அடிக்கடி  ஃபோன்  வருது  . அதை  ஹீரோயினே அட்டெண்ட்  பண்றா, கேர்ள்  ஃபிரண்ட்ஸ்  பேசறாங்க  அந்த  கான்வோ  எல்லாம்  படு  செயற்கைத்தன,ம்  இவ்ளோ  அப்பாவியாவா  ஒரு  மனைவி   இருப்பா?


5  இவ்ளோ  பாசிட்டிவா  கதை  சொன்ன  இயக்குநர்  க்ளைமாக்சை  ஏன்  நெகடிவா  வெச்சார் ?


  சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  இது  எல்லோருக்கும்  பிடிக்காது  ஸ்லோ  மெலோ  ட்ராமா . பெண்களுக்குப்பிடிக்கும்.  ஏ சர்ட்டிஃபிகேட்  படம்னாலும்  அடல்ட்  கண்ட்டென்ட்  எல்லாம்  எதுவும்  இல்லை   யூ  ட்யூப்ல  கிடைக்குது  ரேட்டிங்  2.75  / 5 

0 comments: