Friday, July 08, 2022

SHE (2020 ) - HINDI - வெப் சீரிஸ் விமர்சனம் 18+ ( க்ரைம் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


 2017ல்  ரிலீஸ்  ஆன  ஜெமினி கணேசனும்  சுருளிராஜனும்  படத்தில்  நடிச்ச அதிதி சுதிர்  போகன்கர்  பின்  2019ல்  செல்வராகவன்  இயக்கத்தில்  சந்தானத்துக்கு  ஜோடியா  மன்னவன்  வந்தானடி  படத்தில்  நடிச்சார்  ஆனா  படம்  ரிலீஸ்  ஆகல , ஓவர்  நைட் ஒபாமா  கணக்கா  ஒரே  ஒரு  வெப்  சிரிஸ்  மூலமா  செம  ஹிட்  அடிச்ட்டார். 2  வருடங்களுக்கு  முன்பே  இதைப்பற்றிக்கேள்விப்பட்டும் அப்போ  நான்  பார்க்கலை . பொதுவா  ஒரு  வெப் சீரிஸ்னா 4  மணி  நேரம்  7  மணி  நேரம்  செலவு  பண்ணிப்பார்க்கனும், அந்த  டைம்ல  3  தமிழ்ப்படங்கள்  பார்த்துடலாம்கற  எண்ணம்  தான்.2022 ல்  இதன்  செக்ண்ட்  செஷன்  வந்ததும் ஆளாளுக்கு  துக்கம்  விசாரிக்க  ஆரம்பிச்ட்டாங்க , இன்னுமா  இதைப்பார்க்கல?னு  . அத்னாலயே  பார்த்தாச்சு 

ஹீரோயின்  ஒரு  போலீஸ்  கான்ஸ்டபிள் . குருதிப்புனல்  , விக்ரம்  படங்களில்  கமல்  வருவது  போல  ஒரு  கும்பலைப்பிடிக்க  அண்டர்  கவர்  ஆபரேசன்  ஏஜெண்ட்டாக  நியமிக்கப்படுகிறார். அவர்  கரெக்டா  அந்த  வேலையைச்செய்து  வெற்றி  பெற்றாரா? இல்லை  அங்கே  மாட்டிக்கிட்டாரா? என்பது  முதல்  பாகத்தின்  கதை 


இது  மெயின்  கதை  , இது  போகக்கிளைக்கதைகளும்  உண்டு . ஹீரோயினுக்கு  அப்பா  இல்லை  அம்மா  தங்கை  மட்டுமே . ஹிரோயினுக்கு  மேரேஜ்  ஆகிடுச்சு  ஆனா  கணவரிடம்  இருந்து  பிரிந்து  வாழ்கிறார்  டைவர்ஸ்க்கு  அப்ளை  பண்ணி  இருக்கு . தங்கைக்கு  ஒரு  காதலன்  இருக்கான் 

இந்த  வெப்சீரிஸ்  முதல்  பாகத்தில்  ஏழு எபிசோடு  ஒவ்வொண்ணும்  அரை  மணி  நேரம்  மொத்தம்  3 1/2  மணி  நேரம் ,தமிழ்  டப்பிங்க்லயும்  இருக்கு 


ஹீரோயினா  அதிதி   இவர்  பிந்து  மாதவி  சாயலில்  இருக்கார் ஏதோ சம்பளம்  குடுக்கறாங்க  வேலை  செய்யறேன்  என  விட்டேத்தியாக  பதில்  சொல்வது  இயல்பான நடிப்பு . . நாட்டுப்பற்று  போலீஸ்  கடமை  உணர்ச்சி  என  ஜல்லி  அடிக்கல. மகிழ்ச்சி .மாணிக்கம்  டூ  மாணிக்  பாட்ஷா , விஸ்வரூபம் , வல்லவன்  படங்களில்  வருவது  போல  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  சீன்கள்  உண்டு. அந்தக்காட்சிகளீல்  எல்லாம்  ஹீரோயின்  பாடி லேங்க்வேஜ்  செம 


போதை  மருந்து  கடத்தும்  வில்லனின்  அடியாளாக சசாயா  கேரக்டரில்  விஜயவர்மா  எனும்  நடிகர்  பிரமாதப்படுத்தி  இருக்கார் .அவரது  நக்கல்  நையாண்டிப்பேச்சு  அருமை  நடிப்பும் குட் 

ஹீரோயினுக்கு  கமாண்டிங்  ஆஃபீசராக  வரும்  ஃப்ர்ணாண்டஸ்  கேரக்டர்  கச்ச்தமான  நடிப்பு  ஹேர்கட்   ஜிம்  பாடி  பாடிலேங்க்வேஜ்  எல்லாமே  பக்கா 

  ஆனா  அவருக்கு  ஹையர்  ஆஃபிசராக  வருபவர்  ஹேர் கட்  யூனிஃபார்ம்  மிடுக்கு  எல்லாத்துலயும்  கோட்டை  விட்டுட்டார்


 மெயின்  வில்லனாக  கிஷோர்  மிரட்டலான  நடிப்பு 


ஹீரோயினுக்கு  தங்கையாக  வருபவர் ஓக்கே  ரகம்   ஹீரோயின்  கணவராக  வருபவர் நல்லாப்பண்ணி  இருக்க வேண்டிய  கேரக்டர்  சுமாராதான்  பண்ணி  இருக்கார் 




சபாஷ்  டைரக்டர்(கள்)


1  முதல்  எபிசோடு பார்க்கறவங்க  நிச்சயமா  மீதியைப்பார்க்காம  ஸ்கிப்  பண்ணவே  முடியாது. அவ்ளோ  பிரமாதமாக  திரைக்கதை எடிட்டிங்க்ல  கவனம்  கொண்டு நல்ல  அவுட்புட்டைக்குடுத்திருக்காங்க 


2 ஹீரோயினுக்கு  வேலை போகப்போகுது  என்ற்தும்  பதறி  க்ரைம்  பிராஞ்ச்  ஹெட்  குவாட்டர்சில்  4  நாட்களாக  டெய்லி  வந்து  வெயிட்  பண்ணுவது அங்கே  ஆதங்கப்படும்  பெண்  போலீசிடம்  வருத்தப்படுவது  எல்லாமே  டச்சிங்  சீன்ஸ்


3   ஒளிப்பதிவு  , பிஜிஎம்  எல்லாம்  வேற  லெவல் .கலக்கி  இருக்காங்க . எடிட்டிங்கும்  நான்  லீனியர்  கட்டில் அங்கங்கே  விளையாடி  இருக்கு . நேரடியா  கதை  சொல்லி  இருந்தா  இவ்ளோ  சுவராஸ்யம்  கிடைச்சிருக்காது 


4  போதை  மருந்து  ஃபேக்டரி  அண்டர்  கவர்  ஆபரேஷன்  இதை  எல்லாம்  நேரில்  பார்ப்பது  போல  தத்ரூபமாகப்படமாக்கிய  விதம் 


5   ஹிரோயின்  கேரக்டர்  ஸ்கெட்ச்சை  ஓப்பனாக  சொல்லாமல்  பூடகமாகவே கொண்டு  செல்வது  நல்ல  உத்தி . நான்  என்ன  செய்யப்போறேன்னு  எனக்கே  தெரியல  என    அவரையே  டயலாக்  பேச  வைத்திருப்பதும்  நல்ல  உத்திதான். அவர்  இப்படி  செய்வார? அந்தப்பக்கம்  பல்டி  அடிப்பாரா?  என்பது  சஸ்பென்சாகவே  இருக்கு 


ரசித்த  வசனங்கள்


1    என்ன்  வேலை  பார்க்கறே?


வேலை  தேடறதும்  ஒரு  வேலை  தானே? 


2   இந்த  அண்டர்  கவர்  ஆபரேஷன்  ஒர்க்ல  யாரைப்பார்த்து  நீ  அதிகம்  பயப்படறே?


 என்னைப்பார்த்துதான் 



3   சார்  என்னை  எல்லாம்  கிரிமினல்னு  சொன்னா  ஊர்ல  இருக்கற  கிரிமினல்ஸ்  எல்லாம்  கோவிச்சுக்குவாங்க  சார்  நான்  சும்மா  டம்மி  பீசு


4   நான்  தான் அவருக்கு  செல்லம்  அவரு  எல்லாத்தையும் என்  கிட்டே  சொல்வார்  , நீதான்  என்  செல்லம் நான்  உன் கிட்டே  அதை  எல்லாம்  சொல்வேன் 


5  உடம்புக்குள்ளே  இருக்கும்  அகங்காரத்தை  மண்ணுக்குள்ளே  தூக்கிப்போட்டுடனும் 


6  கண்ணை  வேணா  மூடலாம், ஆனா  மூளையை ? அது  பாட்டுக்கு  ஓடிக்கிட்டே  இருக்கு 


7   இப்போ  எல்லாம்  ஆபத்து  ஒரு  போதை  மாதிரி  ஆகிப்போச்சு 


8  நார்மலா  இருக்கும்  எதுவும்  எனக்கு  ஈசியா  கிடைப்பதில்லை 


9  இண்ட்டலிஜென்ஸ்  டீம்ல  இல்லாதவன்  ஆனா இண்ட்டலிஜெண்ட்டா இருக்கான்


10  சொந்த  வீட்டில்  மனைவிக்கு  மரியாதை  தராதவந்தான்  கிரிமினல் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1 போதை  மருந்துக்கடத்தல்  கும்பலைப்பிடிக்கும்  அவ்ளோ  பெரிய  ஆபரேஷனுக்கு  இன்ஸ்பெக்டர்  லெவல்ல  ஆல்ரெடி  டிரெய்னிங்  எடுத்த  ஆளை  அனுப்பாம  சாதா  கான்ஸ்டபிள்க்கு  பயீற்சி  கொடுத்து  அனுப்புவாங்களா?  ரிஸ்க்  ஆச்சே??


2   கோடிக்கணக்கில்  பணம்  புரளும்  போதை  மருந்துக்கும்பல்  தலைவன்    ஹை  க்ளாஸ்  ரேஞ்சில்  பெண்ணைத்தேடாம  ஜஸ்ட் 2000  ரூபாய்  பெண்ணுக்காகவா  ஆள்  அனுப்பி  கடத்திட்டு  வரச்சொல்வான்? வேன்  வாடகைக்கே  கட்டாது  உள்ளத்தை  அள்ளித்தா  மணிவண்ணன்  காமெடி  மாதிரி  இருக்கு 


3  பெண்ணுக்கு  ஆசைப்படும்  வில்லன்  பெட்ரூமில்  மட்டும்  அவளை  அலோ  பண்ணாமல்  ஹாலில்  வில்லன்  கம்யூட்டர்  யூஸ்   பண்ணும்  இடங்களுக்கெல்லாம்  அலோ  பண்ணி  ஏமாறுவானா? 


4  ஒரு  சீனில்  வில்லனை  நேரில்  பார்த்தவங்க யாருமே  இல்லை  அப்டினு  வில்லனே  சொல்லிக்கறான்  ஆனா  அவன்  ஆட்கள்  நிறைய  பேரு  அவனை  டெய்லி  பார்த்துட்டு  தான்  இருக்காங்க 


5   சஸ்யா  எனும்  கேரக்டர்  ஹீரோயின்  அழகில் மயங்கி  வில்லனைக்காட்டிக்குடுக்க  ஒத்துக்கொள்வது  நம்பும்படி  இல்லை  உயிருக்கே  ரிஸ்க்  ஆச்சே? அப்படியே  சொன்னாலும்  ஏதோ  ஒரு  தகவல் சொன்னாப்போதாதா  ஏ  டூ இஜட்  ஒப்பிப்பானா? \

சி பிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கரைம்  த்ரில்லர்  ரசிகர்கள்  அவசியம்  பார்க்கலாம்., ஆனா  தேவை  இருக்கோ  இல்லையோ  அங்கங்கே  அடல்ட்  கண்ட்டெண்ட்ஸ்  இருப்பதால்  ஃபேமிலியோட  பார்க்க  முடியாது. ஃபே,மிலி  தூங்கிய  பின்  பார்க்கவும்    ரேட்டிங் 3 / 5 

0 comments: