ட்ரெய்லரைப்பார்க்கும்போதே இது ஒரு டப்பா படம்னு தெரிஞ்சுடுச்சு, ஆனா ஐஎம்டிபி ரேட்டிங் பாகுபலி ரேஞ்சுக்கு தூக்கிக்குடுத்தாங்காட்டி ஒரு டவுட். ஒரு வேளை தப்பித்தவறி நல்ல படமா இருந்துட்டா.அதனால களம் இறங்குவோம்னு....
ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோயின் ப்ரூஸ்லீ ரசிகை . அவர் படம் பார்த்தே அவரை மாதிரியே சண்டை எல்லாம் கத்துக்குது. ஒரு குங்க்ஃபூ ஸ்கூல்ல ஸ்டூடண்ட்டா சேருது. மாஸ்டர் கிட்டே நல்ல பேர் எடுக்குது
ஹீரோ ஒரு அப்பாவி கம் அம்மாஞ்சி. எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் இல்லையா? இந்த மாதிரி ஒரு சண்டைக்காரியைக்கட்டிக்கிட்டா நம்ம குடும்பம் விளங்கிடும்னு ஹீரோவுக்கு தெரிஞ்சு லவ் பண்றாரு
\
வில்லன் ஒரு வீணாப்போனவன்.தன் அடியாளுங்களை விட்டு கராத்தே மாஸ்டர் அல்லது குங்க்ஃபு மாஸ்டரை மிரட்றான். உடனே மாஸ்டர் அவ்ளோ பெரிய சொத்தை முந்தா நேத்துதான் ஸ்கூல்ல ஜாய்ன் பண்ன ஹீரோயினை நம்பி எனக்குப்பிறகு நீதாம்மா இந்த ஸ்கூலை நடத்தனும்கறார்
அடுத்த நாளே வில்லன் மாஸ்டரை போட்டுத்தள்ளிடறான். இப்போ ஹீரோயின் அந்த ஸ்கூலைக்காப்பாத்துனாரா? ரெண்டு மணி நேரப்படத்துல யார் கூடவும் ஒரு ஃபைட் கூடப்போடாத தத்தி வில்லனை ஜெயிச்சாரா? என்பதே மிச்ச மீதிக்கதை
ஹிரோயினா பூஜா பலேகர் . துணிச்சலான நடிகை . சார் சொன்னா நம்ப மாட்டீங்க (அப்போ சொல்லாதே) படம் பூரா 2 மணி நேரம் 2 நிமிசமும் ஹீரோயின் காஸ்ட்யூம் ஒரு பிரா ஒரு ஜ்ட்டி மட்டும்தான்
ஃபைட் சீன் ரொமாண்டிக் சீன் டூயட் சீன் மாமியார் கிட்டே ஆசீர்வாதம் வாங்கற சீன் வில்லன் கிட்டே சவால் விடற சீன் கோயிலுக்குப்போய் சாமி கும்பிடற சீன் உட்பட எல்லா காட்சிகளிலும் ஒரே விதமான காஸ்ட்யூம் தான்
இடைவேளை அப்போ ஆடியன்சை பார்த்தா என் கண்ணுக்கு எல்லாருமே டூ பீஸ் டிரஸ்ல இருக்கற மாதிரியே ஒரு பிரமை
ரேவதி , சுஹாசினி , நதியா மாதிரி குணச்சித்திர நடிகைகள் எல்லாம் கண்ணியமா உடைஅணிவதில் கவனமா இருப்பாங்க புன்னகை மன்னன் படத்துல ரேவதி கிட்டே பாலச்சந்தர் சார் இங்க பாரம்ம்மா மழைக நனையற மாதிரி ஒரு சீன் அவசியம் எடுக்கனும் காஸ்ட்யூம் யுவர் சாய்ஸ் அப்டின்னாராம் ரேவதி 3 டீசர்ட் ஒரு ஒவர் கோட் அதுக்கு மேல ரெயுன் கோட் போட்டுட்டு நடிச்சாங்களாம்.,
அந்த மாதிரி வாழ்ந்த இண்டஸ்ட்ரில இவங்களைப்பார்த்தா சிரிப்பா இருக்கு . ஃபைட் நல்லா போடறாங்க. ஒவ்வொரு ஆக்சன் சீன்லயும் கிளாமர் தெறிக்குது . அடியாளுங்களைத்துரத்தற சேசிங் சீன்ல ஹீரோயின் ஸ்லோமோஷன்ல ஓடிக்கிட்டே இருக்கறதை 10 நிமிசம் காட்றாங்க
கதைக்கு சம்பந்தமே இல்லாம ஹீரோயின் ஃபாரீன் போறாங்க ., எவன் காசு? புரொட்யூசர் காசுதானே?னு நினைச்சிருப்பாரு போல . இவரோட மானசீக குரு புரூஸ்லீ சிலையை நேரில் பார்க்கனு ஒரு சப்பைக்கட்டு வேற
பாடல்கள் இசை சுமார் ., படமே ரொம்ப சுமார் தான்
சபாஷ் டைரக்டர் ( ராம்கோபால் வர்மா)
1 படம் ஹீரோயின் சப்ஜெக்ட்னு முடிவான பின் ஒரு டம்மி ரோலில் நடிக்க ஹேண்ட்சம் ஹீரோவை ஒத்துக்க வெச்சது ( ஏன்னா ஜனங்க கேவலமா பேசுவாங்களே அதுக்கும் சேர்த்துத்தானே சம்பளம் தரனும் ?)
2 படம் பூரா செட் பிராப்பர்ட்டியை கூட்டி விட ஆள் தேவை இல்லை ஹீரோயின் போட்டிருக்கற துப்பட்டா அல்லது ஷால் மாதிரி ஏதோ ஒண்ணு அவர் உடம்புல நிக்காம தரையைக்கூட்டிக்கிட்டே க்ளீன் ப்ண்ணிட்டு இருக்கு
3 படத்துல காமெடி டிராக்னு தனியா ஏதும் இல்லை வில்லன் ப்ண்ற எல்லாமே காமெடி தான் ( ஒரு சாம்ப்பிள் - க்ளைமாக்ஸ் ல அடியாளுங்க கிட்டே என்னடா பார்த்துட்டு இருக்கீங்க அவளைப்போய் அடிங்கடா அப்டினு சொன்ன பின் தான் அடியாளுங்க 10 பேரு போய் அடி வாங்கறாங்க , அவங்க ஆஃப் ஆனதும் அடுத்த க்ரூப்பை அனுப்பறார் கடைசி வரை வில்;லன் சோலோ ஃபைட் எல்லாம் போடவே இல்லை )
ரசித்த வசனங்கள் ( இது டைரக்டர் எழுதுனது இல்லை ப்ரூஸ்லீ தத்துவங்கள் )
1 எங்கிருந்து வர்றே? என்பது முக்கியம் இல்லை என்னவா ஆகப்போறே ? என்பதுதான் முக்கியம்
2 உனக்கான எல்லை எது தெரியுமா? உனக்கு எல்லைகளே இல்லை என்பதுதான்
3 நாம வாழ்ற ஒவ்வொரு நிமிசமும் பர்ஃபெக்டா வாழலைன்னா அவ்ளோ பெரிய வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன் ?
4 நீ என்னவா ஆகனும்னு நீ நினைக்கறியோ அதுவாகவே ஆகி விடுவாய்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதைல சில நெருடல்கள்
1 ஒரு சீன்ல ஹீரோ ப்ரூஸ்ளீ பற்றி தப்பாப்பேசறாரு. ப்ரூஸ்லீ ரசிகையான ஹீரோயின் செம காண்ட் ஆகி ஹீரோவை அடிச்சு துவைச்சுக்காயப்போடறாரு ( இது மாதிரி எந்தப்படத்துலயும் வந்ததில்லை, வில்லனைத்தான் அடிப்பாங்க) அப்போ வில்லனோட அடியாளுங்க வந்து ஹீரோவை அடிக்கறாங்க . ஹீரோயின் அவங்களை தாக்கி அனுப்பிட்டு நாந்தான் அவனை அடிப்பேன் நீங்க அடிகக்கூடாதுனு டயலாக் பேசுது. ஆக்சுவலா அடியாளுங்க ஹீரோவை ஒரே ஒரு அடிதான் வெச்சாங்க , ஹீரோயின் கோவை சரளா வடிவேலுவை வெளுக்கற மாதிரி அடி வெளுக்குது
2 மினி வில்லன் அடியாளுங்க 10 பேரோட மாஸ்ட்ரை மிரட்றார். அவரு பத்திரத்துல சைன் போடலைனு சொன்னதும் டேய் யாரும் அவர் மேல கை வைக்காதீங்கனு கூட்டிட்டுப்போய்டறார். அப்றம் எதுக்கு தண்டமா அந்த அடியாளுங்க? இது 3 டைம் நடக்குது
3 மெயின் வில்லன் அவனை எதிர்த்துப்பேசற பெண்களை கடத்திட்டு வந்து கை காலை கட்டிப்போட்டு பல மாசமா அடைச்சு வெச்சிருக்கான் ரேப்பும் பண்ணலை. எதுக்கு தண்டமா சாப்பாடு போட்டு இதை செய்யனும் , உள்ளத்தை அள்ளித்தா ல மணிவண்ணன் காமெடியான வேன் எல்லாம் வெச்சுக்கடத்தி இருக்கோம் காமெடி நினைவு வருது
4 ப்ரூஸ்லீ ரசிகையான நாயகி அவர் மாதிரி ஃபைட் டிரஸ் தானே போடனும், ஆனா ஜீன்ஸ் பேண்ட் சாரி ஜீன்ஸ் ஜட்டி போட்டுட்டு ஃபைட் பண்ணுது
5 குங்க்ஃபூ மாஸ்டர் அதிகாலை 5 மணிக்கு ஜாகிங் போறவர் பீச் ல பார்க்ல போகாம அடியாளுங்க அடிக்க வசதியா ச்ந்து பொந்துல புகுந்து போறார். நாய் துரத்தாதா?
6 இதை எல்லாம் விட மரணக்காமெடி இருக்கு படம் பூரா ஜட்டி பிராவோட சுத்தும் நடிகை க்ளைமாக்ஸ் ல ஜீன்ஸ் பேண்ட் போட்டுட்டு வில்லன் முன் நிக்குது வில்லன் நாயகியை மானபங்கப்படுத்தறதா நினைச்சுட்டு ஹீரோவை கண் பாய்ண்ட்ல நிக்க வெச்சு ஹீரோயினை பேண்ட்டை கழட்டச்சொல்றாரு , அது கழட்ட ரெடி ஆகுது அதுக்குள்ள தத்திக்கு அவசரம் கத்திரிக்கோல் எடுத்து வந்து ஜீன்ஸ் பேண்ட்டை வெட்டி டிராயர் மாதிரி ஷேப்க்கு கொண்டு வந்துடறான். இதுல 2 விஷயம், அநியாயமா ஒரு நல்ல பேண்ட் நாசமாப்போய்டுச்சு . இன்னொரு விஷயம் அதனால ஹீரோய்னுக்கோ ஆடியன்சுக்கோ எந்தப்பதட்டமும் வர்லை அதான் படம் பூரா ஜட்டியோடதானே சுத்துது. இப்போ என்ன ஆகிப்போச்சு என்ற எண்ணம் தான் வருது
7 வில்லன் க்ளைமாக்ஸ் ல ஹீரோவை ரிவால்வரால 2 டைம் ஷூட் பண்றாரு மீதி 4 புல்லட் இருக்கு ஆனா ஹீரோயினை சுடலை , ஒரு வேளை ரிவால்வர்ல மினிமம் பேலன்ஸ் மெயிண்ட்டெய்ன் பண்ணனுமோ என்னவோ ?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இது ஆண்களுக்கான படம் மலையாளத்துல ஷ்கீலா நடிச்ச காலை 11 மணிக்காட்சி மாதிரி படம். ஃபைட்டும் எக்ஸ்ட்ராவா இருக்குய் அவ்ளோ தான். அது ;போக இவங்க பண்ற கூத்துக்களை ஜாலியா ரசிச்சுட்டு வரலாம் ., ரேட்டிங் மைனஸ் 2 / 5
0 comments:
Post a Comment