ஸ்பாய்லர் அலெர்ட்
\
\ஹீரோயின் ஒரு கம்பெனில ரிசப்ஷனிஸ்ட்டா சேர்றாங்க . காலப்போக்கில் கம்பெனி ஓனரே அவரை ப்ரப்போஸ் பண்ணும் அளவுக்கு முன்னேற்றம். ஓனர் ஆக கசக்குதா என்ன ? லவ்வுக்கு ஓக்கே சொல்லிடறாங்க . மேரேஜ் நடக்குது. இதுல ஒரு சிக்கல் இருக்கு . ஓனர் பேருக்கு தான் மேரேஜ் பண்ணிக்கறாரு அவரால தாம்பத்ய வாழ்க்கைல ஈடுபட முடியாது . இதை முதல்லியே ஹீரோயின் கிட்டே சொல்லிடறாரு. பொதுவாவே ( பெரும்பான்மையான ) பெண்களுக்கு காசுதானே குறி ? ஹீரோயின் தெரிஞ்சேதான் மேரேஜ் பண்ணிக்கறாங்க
இப்போ என்ன பிரச்சனைன்னா ஹீரோயினோட முன்னாள் நண்பர் ஒருவர் போலீஸ் ஆஃபீசர் அவரு ஹீரோயின் கிட்டே அத்து மீற முயற்சித்தார்னு அவரை கொலை செய்ததா ஹீரோயின் கைது செய்யப்படறாங்க ஹீரோயின் இப்போ கோடீஸ்வரி எனப்தால் பிரபல வக்கீலின் உதவியை நாடறாங்க வக்கீல் ஒரு போலீஸ்காரரை அனுப்பி வைக்கறாரு. அவர் ஹீரோயின் கிட்டே நடந்த உண்மைகளை கரெக்ட்டா சொன்னாதான் கேஸ்ல இருந்து காப்பாற்ற முடியும்கறார்
ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும்போது போலீஸ் ஆஃபிசருக்கு ஒரு ஃபோன் கால் வருது . போன வருசம் ஒரு காணாமப்போன ஆள் பற்றிய கேஸ் அதுபற்றி அவரு ஃபோன்ல பேசறதை ஹீரோயின் ஆர்வமா கேட்கறாங்க
போலீஸ் ஆஃபீசர் ஸ்டேட்மெண்ட் - ஒரு மகன் அவனோட அம்மா இருவரும் ஒரு புகார் தர்றாங்க . அப்பா மிஸ்சிங் அப்டினு . ஆரம்பத்துல ஆந்தக்கேஸ்ல ஆர்வம் காட்டாத ஆஃபீசர் பார்ட்டி பெரிய இடம்னு தெரிஞ்சதும் ஒரு குறிப்பிட்ட தொகையை டிமாண்ட் பண்ணி மகன் கிட்டே பணம் வாங்கிக்கறார் . ஆனா கேசை விசாரிக்கலை . இதனால மகன் அடிக்கடி அந்த ஆஃபிசருக்கு தொந்தரவு தந்துட்டே இருக்கான்
அது இருக்கட்டும் நீங்க ஏன் இந்த கேசைப்பற்றி ஆர்வமா கேட்கறீங்க?
ஹீரோயின் ஸ்டேட்மெண்ட் = அந்த மிஸ்சிங் கேஸ்க்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கு. நானும் என் காலேஜ் நண்பனும் கார்ல போய்ட்டு இருந்தப்ப எதிர்ல வந்த கார் லைட்டா மோதிடுச்சு அதுல வாக்குவாதம் ஏற்பட்டு அது முத்திப்போய் கைகலப்பு வரை வந்துடுச்சு. என் நண்பன் ஒரு முன் கோபி அந்த ஆளை போட்டுத்தள்ளிட்டான்
இதைக்கேட்ட போலீஸ் ஆஃபீசருக்கு நம்பிக்கை இல்லை ஹிரோயின் எதையோ மறைக்கறாங்கனு புரிஞ்சிக்கறார். இதுக்குப்பின் இந்தக்கதையில் ஏற்படும் திருப்பங்கள் தான் திரைக்கதை
அடேங்கப்பா ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்ட் . மேலே சொன்ன 3 படங்களையும் பார்க்காதவங்க இதைப்பாருங்க . மூணுல இதுதான் பெஸ்ட்
ஹீரோவா அடவி சேஸூ. இவர் பாகுபலி ல முக்கியமான ரோலில் வந்தவர். ஸ்மார்ட்டான லுக் ஓப்பனிங்க்ல இவரு பணத்தாசை பிடிச்சவரா காட்டிக்கிட்டாலும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்ல அவர் மேல மரியாதை வருது
ஹீரோயினா ரெஜினா காண்ட்ரா .வர்தாம் படத்தின் பேக் போன் செண்ட்டர் போன் எல்லாம். செமயான வில்லித்தன நடிப்பு
ஹீரோயினோட கள்ளக்காதலனா நவீன் சந்திரா இவர் பட்டாசு பட்த்துல வில்லனா வந்தவர்
திரைக்கதை எடிட்டிங் ஒளிப்பதிவு எல்லாம் வேற லெவல் . ஒர்ய் அஞ்சு நிமிசம் மிஸ் பண்ணீனாக்கூட கதை புரியாது .க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் யாரும் எதிர்பாராதது
சபாஷ் டைரக்டர்
1 மணிரத்னம் இயக்கிய மவுன ராகம் கதையை பட்டி டிங்கரிங் பண்ணி அவர் கிட்டேயே கதை சொல்லி படத்தை ஹிட் அடித்த அட்லீயின் ராஜா ராணி மாதிரி ஸ்பானிஷ் படமான த இன்விசிபிள் கெஸ்ட் படத்தின் டைரக்டரே பாராட்டும் வண்ணம் அந்தக்கதையியே சில ட்விஸ்ட் எக்ஸ்ட்ரா சேர்த்து திரைக்கதை அமைத்த விதம் அருமை
2 என் கண்னை மட்டும் தான் அவ பார்த்திருக்கா அதனால ..... என ஒரு கேரக்ட்ர் க்ளைமாக்ஸ்ல சொல்லும் ட்விஸ்ட் அபாரம் .இது ஸ்பானிஷ் ஒரிஜ்னலிலே கூட இல்லை
3 ஒரு சீன் கூட போர் அடிக்கலை கதைக்குத்தேவை இல்லத காட்சி என எதுவும் இல்லை
ரசித்த வசனங்கள்
1 நாம பண்ற ஒரு சின்ன தப்பு கூட நம் வாழ்க்கையை பலமா தாக்கிட வாய்ப்பு இருக்கு
2 போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இந்த கேஸ் பற்றி என்ன பேசிக்கறாங்கனு சொல்ல வந்தியா? என்னைக்குறுக்கு விசாரனை பண்ண வந்தியா?
ரெண்டும் இல்லை , பணம் சம்பாதிக்க வந்தேன்
3 எதிர்பார்ப்பும், நிஜ வாழ்க்கையும் எதார்த்தமும் சந்திக்க . ஜிரணிக்க கஷ்டமாதான் இருக்கும் , வலி தரும்
4 பொதுவா காதலை வெளிப்படுத்தும்போது அன்பின் அளவைதான் சொல்வாங்க, நீ ஏன் ஸ்டேட்டசை சொத்தின் அளவை சொல்றே?
.5 சில டைம் ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வியே பதிலா இருக்கும்
6 ஒரு உண்மையை உண்மைனு நிரூபிக்க ப்;ஒய் சொல்லலாம், தப்பில்லை
7 பொதுவா போலிஸ்காரங்க கை நீட்டிப்பணம் வாங்கிட்டா அந்த வேலைய கரெக்டா செஞ்சு முடிச்சுடுவாங்க , அவ்ளோ நல்லவங்க அவங்க
8 எப்பேர்ப்பட்ட சிச்சுவெரெஷன் வந்தாலும் முதல்ல அதை அக்செப்ட் பண்ணிக்கனும், அதுக்குப்பின் அதை ஃபேஸ் பண்ணனும்
லாஜிக் மிஸ்டேக்.ஸ் ..
1 காணாமல் போன ஆளோட மனைவி மகன் இருவரும் காரில் ஒருவருக்கு லிஃப்ட் தர்றாங்க அவ்ங்க கிட்டே காணாம போன ஆளோட ஃபோன் இருக்கு. .வாசல்.ல் காரை . நிறுத்.திட்டு . ..வீட்டுக்.குப்போய் . அ.வ.ங்க்... .ஃபோ.ன் . .பண்றப்போ அந்த ஆள் ஃபோனை காருக்குள்ளே ஏன் போடனும்? அதுவரை காரில் இல்லாத ஃபோன் இப்போ எப்படி வந்ததுனு டவுட் வரும வேற எங்காவது தூக்கிப்போட்டிருக்கலாம்
2 காணாம் போனவரின் ஃபோன் அன்லாக் பண்னச்சொல்லி மகனைக்கேட்கும் போலீஸ் அவன் தெரியாதுனு சொன்னதும் மனைவி கிட்டே கேட்டிருக்கலாமே? ஏன் கேட்கலை ?
3 நெற்றில ஓப்பனிங் சீன்ல காயத்தோட வரும் ஹீரோயின் அடுத்த சீன்லயே நல்லாகிடறார்.அட்லிஸ்ட் ஒரு பிளாஸ்திரியாவது போட்டிருக்கலாம்
4 ஹீரோயினை கைது பண்ணி போலீஸ் கூட்டிட்டுப்போகும்போது ஆண் போலீஸ் தான் வருது பெண் போலீஸ் காணோமே? ஒரு பெண்ணைக்கைது பண்ணும்போது ஒரு பெண் போலீஸ் உடன் வரனுமே?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - நாம பார்த்த டாப் 10 க்ரைம் த்ரில்லர் படங்களோட பட்டியல் போட்டா இதுக்கு நிச்சயம் முதல் 5 இடத்துல இடம் வகிக்கும், குட் ஒன் ரேட்டிங் 4 / 5
0 comments:
Post a Comment