ஸ்பாய்லர் அலெர்ட்
சம்பவம் 1 - ஹீரோ ஒரு பொண்ணைப்பார்க்கறாரு , காதல் வசப்படறாரு . அந்தப்பொண்ணுக்கும் இவர் மேல இஷ்டம் தான் . இரண்டு பேரும் வெளிப்படையா இன்னும் லவ்வை சொல்லிக்கலை , ஹீரோ தன் வீட்டுக்கு ஹீரோயினை இன்வைட் பண்றாரு . பாப்பாவும் வருது . ஆனா ஹீரோவோட வீடு பேக்கிரவுண்ட் இதெல்லாம் அவருக்கு பிடிக்கலை . என் வீட்டை வந்து பார் என்னைப்பிடிக்கும் என்பதெல்லாம் கவிதை எழுதத்தான் கரெக்டா இருக்கும், நிஜ வாழ்வில் பொண்ணுங்க வசதியைத்தானே எதிர்பார்க்கறாங்க ?
நேர்மையான , ஒழுக்கமான ஏழை ஆண் பெண்களுக்குத்தேவை இல்லை . குடிகாரனாவோ பொறுக்கியாவோ இருந்தாலும் பரவால்ல அவங்களுக்குப்பணக்காரன் தான் தேவை . எல்லாப்பெண்களும் அபப்டி இல்லை ஒரு 90 % அப்படித்தான்
ஹீரோயின் நைசா கழண்டுக்கறாரு அதுக்குப்பின் அவர் கால் பண்ணா எடுக்கறதில்லை . ஒரு நாள் ஹீரோ கண் எதிரே ஹீரோயின் வேற ஒரு பாய் ஃப்ரண்டோட சுத்திட்டு இருக்கறதைப்பார்க்கறாரு . வலியிலேயே பெரிய வலி நம் நேசத்துக்கு உரியவங்க நம் கண் முன்னால வேற ஒருவரோட நேசமா இருப்பதுதான். ஹீரோ செம காண்ட் ஆகறார். அவரோட லவ்வருக்கு மேரேஜூ,ம் ஃபிக்ஸ் ஆகுது . மேரேஜ் அன்னைக்கு மண்டபத்துக்கே போய் அவரைப்பழி வாங்கனும் அல்லது பாடம் கற்பிக்கனும்னு துடிக்கறாரு
சம்பவம் 2 - தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியைகள் வாழ்க்கை எல்லாம் கொடுமை , மாசம் 3000 ரூபா சம்பளம் நல்லா சர்வீஸ் பண்ணா 20 வருசம் கழிச்சு இன்க்ரீமெண்ட் ஒரு 200 ரூபா தருவாங்க ஆனா பாருங்க இந்த ஐ டி ல ஒர்க் பண்றவங்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம். அப்படிப்பட்ட வசதியான வாழ்க்கை வாழ்ந்த 4 ஐ டி எம்ப்ளாயர்ஸ்க்கு திடீனு வேலை போய்டுது. அவங்களுக்கு ஏகப்பட்ட கமிட்மெண்ட்.
குறுக்கு வழில சம்பாதிக்க முடிவு பண்றாங்க . ஒரு கோடீஸ்வரன் மகனைக்கடத்தி ஒரு கோடி ரூபா கேட்டு பிளாக்மெயில் பண்ணலாம்னு முடிவு பண்றாங்க அவங்க ஒர்க் பண்ணுன கம்பெனி சீஇஓ தான் அந்த கோடீஸ்வரன்
சம்பவம் 3 = ஒரு சரக்கு பார்ட்டி ரோட்ல நடந்து போய்க்கிட்டு இருக்கும்போது ஆடி கார்ல ஒரு ஆள் அந்த லைனை கிராஸ் பண்றப்போ குடிகாரனை லைட்டா கார் டச் பண்ணிடுது. கரை நிறுத்தி என்னனு பார்க்கலாம்னு அந்தக்குடிகாரன் டக்னு கார்ல ஏறி வண்டியை எடுங்கறான் . போகும்போது திடீர்னு துப்பாக்கியைக்காட்டி எனக்கு ஒண்ணேகால் கோடி பணம் வேணும். உன் சம்சாரத்துக்கு ஃபோன் போட்டு வர வை பணம் கொண்டு வரச்சொல்லுனு மிரட்றான்
மேலே சொன்ன 3 சம்பவங்களும் ஒரு புள்ளி ல இணைவதுதான் திரைக்கதை
ஹீரோவா சிபிராஜ் . வாரிசு நடிகர்களான கார்த்திக் ,பிரபு , விக்ரம் பிரபு , விஜய் , சிம்பு ., சூர்யா , கார்த்தி உட்பட அனைவருமே அவரவர்க்கு என தனித்தனி பாணி உருவாக்கிக்கொண்டதால் ஹிட் ஆனாங்க , ஆனா சிபிராஜ் இன்னமும் அப்பா சத்யராஜின் பாணி நடிப்பை நம்புவது வருத்தம்தான் . காதல் காட்சிகளில் வேணா நல்லா பண்றார்
படத்தில் அதிக காட்சிகளில் வருபவர் ஆண்ட்ரியா . கொரோனா காய்ச்சலில் பெட் ரெஸ்ட் எடுத்தவர் மாதிரி பாவ,மா இளைச்சு இருக்கார் . நடிப்பு ஓக்கே
ஆண்ட்ரியாவின் கணவராக வம்சி கிருஷ்ணா கச்சிதமான நடிப்பு இவரது பாடி லேங்க்வேஜ் பக்கா . இவருடன் குடிக்கும் குடிகாரனாக திரைக்கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் அந்த கேரக்டர் நடிப்பில் அசத்தல்
அதுல்யா ரவி கொழுக் மொழுக் கன்னம் அகண்ட விழிகள் என கவனத்தைக்கவர்கிறார்
கடத்தல் காரர்களாக வரும் 4 பேரில் அந்த குண்டான நபர் மற்றும் ஒரு பெண் இருவரும் நடிப்பில் குட்
கே பிரசன்னாவின் இசையில் 2 பாட்டு நல்லா இருக்கு பாடல் வரிக்ள் எல்லாம் தெளிவா புரிய்ற மாதிரி இருக்கு . பிஜிஎம் குட் கோவை நகரத்தை இரவில் இவ்ளோ அழகாகக்காட்டிய ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு
மதுபானகக்டை என்ற வித்தியாசமான படம் கொடுத்த இயக்குநர் கமலக்கண்ணனின் அடுத்த படைப்பு இது
வசனம் எல்லாம் பட்டாசா இருக்கு
ரசித்த வசனங்கள்
1 பயத்துலயே பெரிய பயம் இப்போ நாம வாழ்ந்துட்டு இருக்கற வாழ்க்கை நம்ம கையை விட்டுப்போய்டுமோ எனும் பயம் தான்
2 ஒரு பெரிய இரும்புக்கதவை ஓப்பன் பண்ண பெரிய ஆயுதம் எல்லாம் தேவை இல்லை . சின்ன சாவி போதும்
3 வாய்ப்புங்கறது தானா தேடி வராது நாம தான் வர வைக்கனும்
4 குடிச்சவனைக்கிளப்பறதும் புதைச்சவனை எழுப்பறதும் முடியாத காரியம்
5 ஏழைகளை ஏமாற்ற ஒரே வழி அன்பு தான்
6 இவளா ஃபோன் பண்ணி மிரட்டப்போரா?
பொண்ணுங்களால மட்டும்தான் இயல்பா மிரட்ட முடியும்
7 டேய் யார்றா நீ ? நடு ரோட் ல மிட் நைட்ல நீ இங்கே என்னடா பண்ணிட்டு இருக்கே?
யோவ் போலீஸு நான் எப்பவாவது உன்னை இப்படிக்கேட்டிருக்கேனா? நாட்டைக்காப்பாத்தற குடிகாரனுக்கு நாட்டையே வழி நடத்தறவனுக்கு நடு ரோட்ல உலாத்த உரிமை இல்லையா?
8 பொண்ணுங்களுக்கு காதல் ஒத்தை வார்த்தைல முடிஞ்சிடுது . ஒத்து வர்லை
9 இங்கே வாழனும்னா அதிகாரம் பணம் இரண்டும் வேணும்
10 ஒரு ஆணால் தர முடியாத பாதுகாப்பை அதிகாரம் பணம் இரண்டும் ஒரு பொண்ணுக்கு தரும்
11 அவ சாகனும் இல்லைன்னா சாகப்போறோம்னு பயந்து பயந்தே வாழனும்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 ஹீரோ சிபிராஜ் குடிச்ட்டு போறப்ப அவரை வழி மறிச்சு 1000 ரூபா அலேக் போடும் போலீஸ் ஆடி காரில் வருபவரை நிறுத்தி எதுவும் கேட்காமல் விட்டு விடுவது எப்படி ?
2 நடு ராத்திரில டி வி எஸ் 50 ல ஒரு பேக்ல ஒரு கோடி ரூபா ஹாட் கேஸ் வெச்சுக்கிட்டு சுத்தறாங்க போலீஸ் கண்டுக்கவே இல்லை
3 ஹீரோ சிபிராஜ் மிரட்டும்போது வம்சி கிருஷ்ணாவோ ஆண்ட்ரியாவோ பெரிய எதிர்ப்பெல்லாம் காட்டலை , சில காட்சிகளில் எங்கே ஆண்ட்ரியா சிபிராஜ்க்கு ஜோடியா மாறிடுவாரோனு பயந்துட்டேன்
4 வசனமா நல்லாருக்கும் படம் திரைக்கதையா திருப்தி தந்த படம் க்ளைமாக்ஸ் முடிஞ்சதும் பெரிய திருப்தியைத்தரலை ., ஏன்னு தெரியலை. ஒரு வேளை எல்லாரும் நல்லவங்க என்று காட்டுனதாலயா?
5 ஹீரோ சிபிராஜ் வில்லன் டைப் தாடி கெட்டப்பில் படம் பூரா இருப்பவர் ஹீரோயின் அருகே இருக்கும்போது மட்டும் டீசண்ட் ட்ரிம் தாடில மாறுவது எப்படி ?
6 ஆடி கார் நெம்பரை போலீஸ்க்கு ஃபோன் பண்ணி சொன்னாலே ஜிபிஎஸ் வெச்சு காரை ட்ரேஸ் பண்ணிடலாமே போலீஸ்? ஏன் அதை செய்யலை ?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மாமூல் மசாலா படங்கள் பார்ப்பவர்களுக்கு இது பிடிக்காது . பிரமாதமான படம்னு சொல்லிட முடியாது அதே சமயம் மொக்கைப்படமும் இல்லை பார்க்கலாம் லெவல் விகடன் ,மார்க் 40 ரேட்டிங் 2.25 / 5 அடல்ட் கண்ட்டெண்ட் இருக்கா?னு யாரும் கவலைபட வேணாம் படத்துல கண்டெண்ட்டே இல்லை அடல்ட் கண்டண்ட் மட்டும் இருக்கவா போகுது ?