யாரிடமும் உதவி இயக்குநராகப்பணி ஆற்றாமல் சுயம்புவாக இயக்குநர் ஆனவர்கள் தமிழ் சினிமாவில் குறைவே! எம் ஜி ஆர் , , விஜயகாந்த் , கமல் , மணிரத்னம் , லோகேஷ் கனகராஜ் வரிசைல சினிமாப்பட விமர்சகர் அர்விந்த் சீனிவாசனும் இணைவதில் மகிழ்ச்சி .இதுவரை 3000 படங்களுக்கு விமர்சனம் எழுதி இருக்காராம் . தினமும் ஒரு படம் என கணக்கில் வெச்சாலும் 8 வருசம் இடைவிடாம உழைச்சாதான் இந்த சாதனை நிகழ்த்த முடியும். அவரது முதல் படம் க்ரைம் த்ரில்லராக அமைந்ததில் மகிழ்ச்சி .
பல படங்கள் பார்த்தவர் என்பதால் மற்ற படங்களில் இருந்து மாறுபட்டு கதை சொன்னாரா? பார்த்த நல்ல படங்களில் இருந்து காட்சிகளை உருவி பட்டி டிங்கரிங் பண்ணி அட்லீ ஒர்க் செஞ்சாரா என்பதை கடைசில சொல்றேன்
சம்பவம் 1 - ஒரு ராத்திரி நேரம் . டாக்சில ஒரு பொண்ணு போகுது . வழில அந்த டாக்சியை இடிச்ட்டு சாரி கூட கேட்காம ஒரு கார் கிராஸ் ஆகுது. ஓவர்டேக் பண்ணிப்போன அந்தக்காரை மறுபடி ஆன் த வே ல பார்த்த டாக்சி டிரைவர் வண்டியை நிறுத்தி அவங்க கிட்டே நியாயம் கேட்கறான். குடி போதைல தகறாரு ஆகி அந்த டாக்சி டிரைவரை அடிச்சுப்போட்டுட்டு டாக்சில வந்த பெண்ணை பாலியல் வன்முறை செஞ்சுடறாங்க அந்த 4 பேர் . டாக்சி டிரைவர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் தர்றார் . அந்தப்பொண்ணு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகுது . இந்த கேசை விசாரிக்கும் போலீஸ் ஆஃபீசர் குற்றம் செஞ்ச நாலு பேரில் ஒரு ஆள் வசதியானவன் என்பதால் அவன் கிட்டே பணம் லஞ்சமா வாங்கிக்கிட்டு மீதி 3 குற்றவாளிகளையும் , அநத டாக்சி டிரைவரையும் என்கவுண்ட்டர்ல போட்டுத்தள்ளிடறார். பாதிக்கப்பட்ட பொண்ணு உயிரோட இருந்தா 4வது ஆள் எஸ் ஆகிட்டான் என்பது தெரிஞ்சுடும்னு நல்லவனான டாக்சி டிரைவரையே போலீஸ் போட்டுத்தள்ளீடுச்சு என்ற உண்மை மீடியாவில் வந்துடும்னு போலீசே டாக்டரை கரெக்ட் பண்ணி அந்த பொண்ணையும் போட்டுத்தள்ளிடுது
சம்பவம்2 = ஒரு பார்ட்டில 3 பொண்ணுங்க கலந்துக்கறாங்க பார்ட்டி நடந்துட்டு இருக்கும்போதே ஒரு பொண்ணு பாதிலயே கிளம்புது அந்தப்பொண்ணு போலீஸ் டிஜிபியோட பொண்ணு .அந்தப்பொண்ணு மிஸ் ஆகுது . பொது மக்கள்க்கு பாதுகாப்பு தரும் போலீஸ் பொண்ணையே ஒருத்தன் கடத்தி இருக்கான்னா ஊர் உலகம் கேவலமா பேசும்னு அந்த கேசை டீல் பண்ண ஒரு அண்டர் கவர் ஆஃபீசரை அன் அஃபிசியலா நியமிக்கறாங்க
சம்பவம் 3 - ஒரு நாவல் ரைட்டர். அவர் ஒரு நாவல் மட்டுமல்ல பல நாவல்கள் எழுதி இருக்கார் ., இதுல என்ன விசேசம்னா இவர் நாவலில் வரும் சம்பவங்கள் நிஜத்திலும் நடக்குது . ஒரு நாள் இவர் போலீஸ் ஸ்டேஷன் வந்து ஒரு புகார் தர்றார். என் நாவலில் வரும் கேரக்டர் என்னையே மிரட்டுதுங்கறார். முதல்ல அவர் குடி போதைல சொல்றார் என அசால்ட்டா இருந்த போலீஸ் அவர் நாவலில் எழுதும் சம்பவங்கள் ஒவ்வொண்னா நடப்பதைப்பார்த்து அரண்டு போகுது
சம்பவம் 4 - சம்பவம் 1ல் புகார் தந்த டிரைவர் என்கவுண்ட்டரில் போட்டுத்தள்ளப்பட்டாரே? அவர் சம்பவம் நடந்து ஒரு வருடம் கழித்து அதே மாதிரி வேற ஒரு புகார் தர போலீஸ் ஸ்டேஷன் வர்றார்
மேலே சொன்ன 4 சம்பவங்கள் தனித்தனியா? எல்லாவற்றுக்கும் ஒரு தொடர்பு இருக்கா? என்பது க்ளைமாக்ஸ் \\
ஹீரோவா அருள் நிதி . மாறுபட்ட கதைக்கருக்களை தேர்வு செய்து நடிப்பவர் என்ற நல்ல பெயர் இவருக்கு உண்டு . இவரது முந்தைய படமான டி பிளாக் நான் பார்க்கலை சுமார்தான்னு சொன்னாங்க இந்தப்படம் இவரது இமேஜைக்காப்பாத்தும்
அண்டர் கவர் ஆஃபீசரா கெத்து காட்றார் அவரது பாடி லேங்க்வேஜ் டயலாக் டெலிவரி எல்லாம் அருமை .
போலீஸ் டிஜிபி ஆக ரோஜா புகழ் மது பாலா ,. அப்போ பார்த்த மாதிரி இப்போவும் இளமையா இருக்கார்னு பல விமர்சகர்கள் புகழ்ந்த அளவு எல்லாம் இல்லை . ஓவர் மேக்கப் உறுத்துது போலீஸ் ஆஃபிசர்க்கான கம்பீரம் மிஸ்சிங் . வைஜயந்தி ஐபிஎஸ் விஜயசாந்தி டெல்லி கிரைம் வெப்சீரிஸ் நாயகி , த்ரிஷ்யம் போலீஸ் ஆஃபீசர் ஆஷா சரத் , படையப்பா நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் இவங்க கம்பீரத்துல 10 % கூட இவர் காட்டலை அதுதான் இந்த படத்தின் மிகப்ப்பெரிய மைனஸ்
ரைட்டராக அச்யுத் குமார் பொருத்தமான தேர்வு . அவரது கேரக்டர் ஸ்கெட்சில் ஒரு டவுட் . ரைட்டர் என்றாலே சரக்கு தண்ணி வண்டியாத்தான் இருக்கனுமா? நம் கண் முன்னே டீசண்ட்டா இருக்கும் ராஜேஷ் குமார் , பிகேபி , சுபா மாதிரி முன்னோடிகளை உதராணமா எடுத்துட்டு அந்த கேரக்டரை வடிவமைத்து இருக்கலாம், படம் பூரா அவர் தண்ணி அடிச்ட்டே இருப்பது எரிச்சல்
போலீஸ் டிஜிபி மதுபாலா மகளாக ஸ்முருதி கச்சிதமான நடிப்பு . டிஜிபி யின் அசிஸ்டெண்ட் ஆக வரும் சேத்தன் பாடி லேங்க்வேஜில் பணிவு இல்லை ஃபிரண்ட் மாதிரி அசால்ட்டா இருக்கார் . போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் காளி வெங்கட் கேர்க்டர் ஸ்கெட்ச்சும் சுமார் தான்
படத்தின் மிகப்பெரிய பலம் ஜிப்ரான் பிஜிஎம் பட்டாசா இருக்கு / ஒளிப்பதிவு பிஜி முத்தையா பக்கா உழைப்பு
சபாஷ் டைரக்டர்
1 முதல் ஒரு மணி நேரம் செம விறுவிறுப்பு டைம் போனதே தெரியல . தேஜாவு என்ற டைட்டிலுக்கான விளக்கம் இஎஸ்பி பவரா இருக்குமோ என்ற சந்தேகம் எல்லாம் கச்சிதம்,
2 படத்தை மிகச்சரியாக 2 மணி நேரத்தில் கட் பண்ணின எடிட்டிங் சாமார்த்தியம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் \\
1 அண்டர் கவர் ஆஃபீசராக வருபவர் ஃபோட்டோவை போலீஸ் டிஜிபி வாட்சப் நெம்பருக்கு ஏன் அனுப்பவில்லை ?
2 தமிழ்நாட்டின் போலீஸ் டிஜிபியாக வரும் ஆஃபீசரையே சாதாரண அண்டர் கவர் ஆஃபீசர் ஆர்டர் போடுவது எப்படி?
3 எந்தஃ வித பின்புலமோ உடல் பலமோ இல்லாத டாக்சி டிரைவர் 4 பேர் கொண்ட கும்பலை நள்ளிரவில் நடுரோட்டில் எதிர்ப்பது எந்த தைரியத்தில்? டாக்சியில் இளம்பெண் இருக்கிறார் என்ற பொறுப்பு இருக்காதா?
4 பொதுவாக வில்லன் கேரக்டர் மேல் நமக்கு வெறுப்பு வரனும் பரிதாபம் வரக்கூடாது . க்ளைமாக்ஸில் வில்லன் மேல் நமக்கு பரிதாபம் வருது
5 முதல் பாதி எந்த ஃஅளவு சுவராஸ்யமா இருந்ததோ அதுக்கு நேர் எதிர் பின் பாதி . இன்னும் கொஞ்சம் டைம் எடுத்து திரைக்கதை அமைத்திருக்கலாம், அவசர அவசரமாக கதையை முடிக்கறாங்க
6 ஹையர் ஆஃபிச்ர் ஃபோனில் போலீஸ் காளீயிடம் ரைட்டர் காதில் செக் பண்ணு என்றதும் என்னது? காதை செக் பண்ணனுமா? என வாய் விட்டுக்கேட்டு கொஸ்டீன் பேப்பரை அவுட் பண்றார். எந்த முட்டாள் போலீசும் அப்படி கேட்காது ( ஆராரோ ஆரிராரோ படத்தில் அதிர்ச்சிப்பைத்தியம் ஒண்ணு வரும் என்னது? ஆஃபீஸ் கிளம்பிட்டாரா? என்னது அவருக்கு மேரேஜ் ஆகிடுச்சா? என ஒவ்வொரு செய்திக்கும் ஒரு ஜெர்க் கொடுக்கும் அது மாதிரி மடத்தனமான கேரக்டர் ஸ்கெட்ச்
7 ஒட்டுக்கேட்கும் கருவியை காதில் வைத்திருக்கும் ஆள் போலீஸ் செக் பண்ண வரும்போது அதை காதுக்குள் தள்ளி விடுகிறார். டார்ச் அடிச்சுப்பார்க்கும்போது அது கண்ணுக்குத்தெரில இதுக்கு பாசிபிலிட்டியே இல்லை
8 ஒரு போலீஸ் டிஜிபி இந்த அளவு மாங்கா மடையரா இருப்பாரா? தன்னிடம் பணி புரிய வரும் நபரிடம் ஐடி கார்டு கூட கேட்க மாட்டாரா?
9 அண்டர் கவர் ஆபரேஷன் ஆஃபீசராக வருபவரிடம் டெக்னிக்கலாக சிம் கார்டை ஹேக் பண்ணி ரெண்டுநாட்கள் கழிச்சு ட்யூட்டில ஜாயின் பண்ணுனா போதும்கறாங்க ஆனா மேலே சொல்லும் பல சம்பவங்கள் நடக்க 10 நாட்கள் ஆகுது அதுவரை அவர் என்ன பண்ணிட்டு இருந்தார் ?
10 பின் பாதி திரைக்கதை சாமான்ய ரசிகர்களுக்கு புரிவது சிரமம் . ஒரிஜினல் படமான இன் விசிபிள் கெஸ்ட் அல்லது அதன் ரீமேக்கான பதலா ஹிந்தி பட்டி டிங்கரிங் ரீமேக்கான எவரு தெலுங்கு படம் பார்த்தவர்களுக்கு மட்டும்தான் புரியும் ,. இது ஒரு பின்னடைவு
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - தேஜாவு 2022 = 25% த இன்விசிபிள் கெஸ்ட் 2016 + 10% எவரு(telugu)(2019) ÷ 5 % Badla(hindi)2019.. + 10 % நவம்பர் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் + 15 % இறுதி அத்தியாயம் எல்லாம் கலந்த கலவை . போஸ்டர் டிசைன் கூட சொந்தமா யோசிக்கலை,த இன்விசிபிள் கெஸ்ட் போஸ்டர் காப்பிதான் ஜிப்ரான் பிஜிஎம் செம. விகடன் 42 ரேட்டிங் 2.75/5
0 comments:
Post a Comment