Tuesday, July 12, 2022

விராட் பருவம், 2022 - VIRATA PARVAM ( TELUGU) சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்) @ நெட் ஃபிளிக்ஸ்


1998 ல  ரிலீஸ்  ஆன  இயக்குநர்  மணிரத்னம்  படமான  தில்  சே  (ஹிந்தி ) படத்தின்  தமிழ்  டப்பிங்  உயிரே  படத்தின்  டிவிடியை  இயக்குநர்  அட்லீ  கைல  கொடுத்து  இதை    பட்டி  டிங்கரிங்  பண்ணி  ஒரு  கதை  ரெடி  பண்ணுங்கன்னா  எப்படி  இருக்கும் ?  ஹீரோ  இடத்துல ரீப்ளேஸா  ஹீரோயின்  அந்தப்படத்துல  ஹீரோயின்  கேரக்டரை  இந்தப்படத்துல ஹீரோ  கேரக்டரா  மாத்தி ஒரு  கதை  ரெடி  பண்ணுவாரு  இல்லையா? அது  மாதிரி  ஒரு  படம்  தான்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோயின் ஒரு  கவிதை  புத்தகம்  கதை  புத்தகம்  படிக்கறாரு/ வழக்கமானபொழுது  போக்கு  எழுத்து  அல்ல  அது  புரட்சிகரமான  கம்யூனிச  நக்சலைட்  கருத்துகள்  கொண்ட  புத்தகங்கள். அந்த  புகசை  எல்லாம்  படிச்சுட்டு  அந்த  ரைட்டரை  நேரில்  சந்திக்க  ஆசைப்படறாரு


  சின்ன  வயசுலயே  பகவான்  கிருஷ்ணன் மேல  அதி  தீவிர  காதல்  கொண்டு வீட்டை  விட்டு  வெளீயேறீய  மீராபாய்  வரலாறை  படிச்சு  அது  மாதிரி  தானும்  செஞ்சா  என்ன  என  நினைப்பவர் 


ஹீரோ   ஒரு  ரைட்டர்  மட்டுமில்ல  போராளி  புரட்சியாளர்  ஆனா  சட்டத்தின்  பிடியில்,  அவர்  ஒரு  தீவிரவாதி  நக்சலைட்  போலீசால்  தேடப்படுபவர்


 ஹீரோயின்  முதல்ல  ஹீரோவோட  அம்மா  வீட்டுக்குப்போய்  அவரை  சந்திக்கறாரு  அப்றம்  காடு  மேடு  எல்லாம்  சுத்தி  ஹீரோவை  சந்திக்கறார். அவர்  இயக்கத்தில்  தானும்  ஒரு  தீவிரவாதியா  இணையறார்.


 ஹீரோவுக்கு  அவர்  மேல  லைட்டா காதல்  இருந்தாலும்  அதை  வெளிக்காட்டிக்கலை.  அவர்  போலீஸ்  இன்ஃபார்மரா  இருக்கலாம்      என  தகவல்  வந்ததும்  ஹீரோ  என்ன  முடிவு  எடுக்கிறார்  என்பதே  க்ளைமாக்ஸ் 


 ஹீரோயினா  படத்தின்  முதுகெலும்பா  சாய்  பல்லவி. அபாரமான  முக  பாவனைகள்  பிரமாதமான  டான்சரான  இவருக்கு  இந்தப்படத்தில்  டான்ஸ்  சான்ஸ்  கம்மிதான். க்ளைமாக்ஸ்  சீன்ல  கலக்கல்  நடிப்பு 


 ஹீரோவா தயாரிப்பாளரான  ராணா  டகுபதி  ( த்ரிஷா வை  நிஜ வாழ்வில்  நிச்சய  தார்த்தம்  செய்து  பின்  கேன்சல்  செய்தவர் ) இவரது  முகம்  பாறை  மாதிரி  உணர்ச்சி  காட்டாமல்  இருக்கு . ஹைட்  வேணா  ஆறு  அடிக்கும்  மேல  இருப்பார்  போல . எனக்கு  இவரைப்பிடிக்கல 


டீச்சரா  அழகி, ஃபயர் புகழ்  நந்திதா  தாஸ் . வாலிப  வயதில்  அழகாகப்பார்த்தவங்களை  வயோதிக  வயதில்  தோல்  சுருக்கத்துடன்  பார்க்க சங்கடமா  இருக்கு 


ஹீரோவின்  அம்மாவாக  நடித்தவர்  உணர்ச்சிகரமான  நடிப்பு 


 பாடலகள்  இசை  சுமார்  ரகம்  ஒளிப்-பதிவு  அருமை 



 சபாஷ்  டைரக்டர் 


1   க்ளைமாக்ஸ்  சீனும்  கடைசி  20  நிமிட  பரபரப்புக்காட்சிகளும்.  இது  உண்மையில்  நடந்த  சம்பவமாம்


2  பொதுவாக  காதல்வசப்பட்ட  பெண்கள்  மாமியார்  மனம்  கவர  வீட்டுக்கு  போகும்போது   வீட்டை  க்ளீன்  பண்ணி  நல்லா  வெச்சிருப்பாங்க   அதை  ஹீரோயின்  செய்து  மாமியார்  மனம் கவர்வது   நல்லாருக்கு 


3   ஹீரோயின்   ஒரு அசாதாரணமான  கேரக்டர்  அவர்  செய்வதை  ஆரம்பித்தில்  நம்மால்  ஜீரணிக்க  முடியாவிட்டாலும்  போகப்போக  அவர்  பக்கம்  தாவுவது  மாதிரி  திரைக்கதை  அமைத்த  விதம் 

ரசித்த  வசனங்கள் 


1  வாழ்க்கைல  ரெண்டு  விஷயத்தை   மறந்துடவே  கூடாது   ஒண்ணு  நம்ம  பிறந்த  நாள்  ரெண்டு  நாம  எதுக்காகப்பிறந்திருக்கோம்,னு  தெரிஞ்சுக்கற  நாள் 


2   கண்ணன்  மேல  வெச்சிருந்த  காதலுக்காக  மீராபாய்  வீட்டை  விட்டு வெளீல  போனது  தப்பில்லையா? 


 இதுல  தப்பு   என்ன  இருக்கு ? இந்த  உலகத்துலயே  உன்னதமான  விஷயம்  காதல் தான்  . உண்மையான  காதல்  தெய்வத்துக்கு  சமம் 


4  சிவன் , பிரம்மா, விஷ்ணூ  இவங்களூக்கு  இருக்கும்  சக்தியை  விட  காதலுக்கு  இருக்கும்  சக்தி   அதிகம் 

5   அவனை  ஏன்  உனக்கு  பிடிச்சிருக்கு ?

 ஒரு சில  விஷயங்களுக்கு  காரணம் இருக்காது   காரியம்  மட்டும்  தான் 


6  இங்கே  யாரும்  யாரு  மேலயும்  பாசம்  வைக்க  மாட்டாங்க. நாம  நம்ம  மேல  வெச்சிருக்கற  பாசம்  மட்டும் தான் நிஜம் காதல்ங்கறதே  பெரிய பொய் `


7  காதலோட  ஆழத்தை  புரிஞ்சுக்க  முடியாதவங்க  உயிரோட  இருந்தாலும்  பொணத்துக்குதான்  சமம் 


8  ஏம்மா  மின்னல்? நீ யாரு ?  நீ  பாட்டுக்கு  வந்தே  வீட்டை  எல்லாம்  சுத்தம்  பண்றே?

  அத்தை  நான்  உங்க  வீட்டு  மருமக, ஆனா  இந்த  விஷயம்  உங்க  மகனுக்கே  தெரியாது 

 9  இந்த  ஊர்ல  கோழியை  அறுக்கறதுக்குக்கூட  காரணம்  தேவை  , ஆனா  புல்லட்  வெடிக்க  காரணம்  தேவை  இல்லை 

10  ஒரு  தீவிரவாதியை  எதுக்கு  அவ  காதலிச்சா? 


 காதலிக்க  காரணம்  வேணுமா? என்ன ? பசி  கண்ணீர்  மாதிரி  தான்  காதலும்  ஒரு  உண்ர்வு 


11  உனக்காக  பறவை  மாதிரி  பறந்து  வந்தா  றெக்கையை  வெட்டப்பார்க்கறீங்களா? 


12   என்னைப்பொறுத்தவரை  காதல்  என்பது    பலகீனமானவர்களின்  சமூக  சீர்கேடு 


13  உன்  முகத்துல  அமைதி  இல்லை .  காதல்  மட்டும் தான்  ஒருவருக்கு  நிம்மதி  அமைதி எல்லாத்தையும்  தரும் 


14   உன்  பக்கத்துல  இருக்கறவனே  உன்  முதுகுல  குத்தறதை  உன்னால  தடுக்க  முடியலைன்னா  உன்  எதிரி   உன்னைத்தாக்குவதை  எப்படி  உன்னால  தடுக்க  முடியும் ? 

15   ஒரு  தலைவனுக்கு  இருக்கற  முக்கியத்தகுதியே  சந்தேகப்படறது தான். யாரையும்  நம்பக்கூடாது 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஹீரோயினை  நிச்சயம்  செய்ய  வரும்  மாப்பிள்ளை  வீட்டார்    நிச்சயம்  முடிஞ்சதும்    ஜீப்  எடுத்துட்டு 60 கிமீ  வேகத்துல  கிளம்பிடறாங்க ,அதுக்குப்பின்  வீட்ல  20  நிமிசம்  பிரச்சனை  ஓடுது . எனக்கு  இந்த  மேரேஜ்ல  இஷ்டம்  இல்லை  என  சொல்லும் நாயகி  சைக்கிள்  எடுத்துட்டு  10  கிமீ  வேகத்துல  போய்  அந்த  ஜீப்பை  பாதிலயே  வழி  மறிச்சுடறா


2  ஹீரோ  ஒரு  நக்சலைட் . அவன்  எழுதற  புத்தகங்கள்  எல்லாம்  அரசாங்கத்தால்  தடை  செய்யப்பட்டவை. எல்லாரும்  ஒளிச்சு  வெச்சுதான்  படிக்கறாங்க . ஆனா  ஹீரோயின்  ஒரு  திருவீழாவில்  அத்தனை  கூட்டத்தில்  அந்த  புக்கை  வெச்சு  பூஜை  பண்றா  அங்கே  போலீஸ்  வேற  வருது . அந்த  புக்கை  யாரும்  கண்டுக்கலை 


3   சந்தேகப்படும் ஒரு  ஆளின் பையை  எப்படி  போலீஸ் செக்  பண்ணும்?னு  டைரக்டர்  சரியா  உணரலை  போல.  ஹீரோயின்  கிட்டே  பேக்ல  என்ன?னு  கேட்க  பொம்மைனு  சொல்லி  அதை  எடுத்து  காட்டுது. ஆக்சுவலா   போலீஸ்  அந்த  பேக்கை தலைகீழா  கொட்டிப்பார்ப்பாங்க  


4  போலீஸ்  கிட்டே  மாட்டி  எந்த  காயமும்  இல்லாம  மீண்டு  வரும்  தன்  ஆளை  சந்தேகப்படாம ஒரு  நக்சலிஸ்ட்  தலைவன்  எப்படி  மீண்டும்  தன்  கூட்டத்தில்  சேர்த்துக்குவான் ?  போலீஸ்  இன்ஃபார்மரா  இருப்பான்னு  ஏன்  யூகிக்க  முடியலை ? 


5   நக்சலைட்  தலைவனோட  அம்மாவை  போலீஸ்  கண்டுக்கவே  இல்லை. ஆக்சுவலா  அவரை  தூண்டிலா  வெச்சு  ஹீரோவை  பிடிக்க  திட்டமே  போடலை 


  சி பிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதலிப்பவர்கள் , காதலித்தவர்கள் , சாய்  பல்லவி  ரசிகர்கள்  மட்டுமே  பார்க்க  முடியும், நந்திதா  தாஸ்  ரசிகர்கள்  பார்த்தா  மனம்  நொந்துடுவாங்க . கல்யாண  வயதில்  பெண்  இருக்கும்  பெற்றோர்  படம்  பார்த்தா  கடுப்பாகிடுவாங்க.படத்துல  அடல்ட்  கண்ட்டெண்ட்  எதுவும் இல்லை . ஃபேமிலியோட  பார்க்கலாம்தான்  விகடன்  எதிர்பார்ப்பு  மார்க்  41   ரேட்டிங்  2.5 / 5 


  விமர்சனத்துக்கு  சம்பந்தம்  இல்லாத  இரு  தகவலக்ள்   1   சாய் பல்லவி  வந்த  புதிதில்  ஏராளமான  ரசிகைகள்    அவரை  மாதிரி  கன்ன  சிவப்பழகி  ஆக  பருக்களை  கிள்ளி  கிள்ளி  விட்டு  ட்ரை  பண்ணுவாங்களாம்.,  அந்த  மாதிரி  யாரும்  ட்ரை  பண்ண  வேணாம் ஏன்னா  டாக்டர்கள்  தகவல்படி 

2  சாய் பல்லவிக்கு  அமைந்த  அதீத  சிவப்புக்கன்னம்  ஏதோ வைட்டமின்  குறைபாடுகாரணமாம்











0 comments: