1 கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதைத்தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீ
2 விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் குலம் விளங்க விளக்கு வைப்போம்
3 நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே
நடக்கின்ற தென்றலை அணைக்கின்ற நாணலே!
போன்ற சூப்பர் ஹிட் பாட்டுக்களுக்காகவே இந்தப்படத்தைப்பார்க்கலாம். இளையராஜா விளையாடி இருப்பாரு
ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோ ஒரு தொல் பொருள் ஆராய்ச்சியாளர் அவருக்கு பழங்கால ஓலைச்சுவடி ஒண்ணு கிடைக்குது .. அதுல சொல்லப்பட்டிருக்கும் விஷயம் என்னான்னா குறிப்பிட்ட ஒரு இடத்துல நாக காளி அம்மன் கோவில் இருக்கு அதை ஒட்டி ஒரு அருவி இருக்கு . பவுர்ணமி அன்னைக்கு அந்த அருவில குளிச்சா கீராத வியாதி எல்லாம் தீரும் அது போக போனசா கடவுள் அன்னைக்கு எழுந்தருளப்போறாரு என்ற விஷய்ம் தெரிய வருது
இது மீடியாவில் பரபரப்பா வைரல் ஆகுது . அப்போ நாத்திகம் பேசிட்டு சுத்திட்டு இருக்கும் ஒரு வெட்டிக்கும்பல் அந்தக்கோயிலை வெடிகுண்டு வெச்சு தகர்த்துட்டா கடவுள் இல்லை . அப்டி ஒரு சக்தி இல்லைனு ஜன்ங்களுக்கு நிரூபிக்கலாம்னு லூஸ் தனமா நினைக்குது
இப்போ போலீஸ்க்கு ரெண்டு வேலை 1 அந்தக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கனும்.2 இந்த நாத்திகம் பேசிட்டு சுத்திட்டு இருக்கும் தண்டக்கும்பலைப்பிடிக்கனும், இது தான் மெயின் கதை
கிளைக்கதைகள்
1 ஹீரோவோட அப்பா அவரோட வளர்ப்பு அப்பா . அவரு போன ஜென்மத்துல பெரிய சித்தரா இருந்தவரு. அவரு கடவுளை தரிசிச்சு வரம் வாங்கிட்டா பெரிய ஆள் ஆகிடுவார்னு சாத்தான் தன்னோட தங்கச்சியை அனுப்பி அவரோட் தவத்தை கலைக்க ஐடியா பண்றாரு. அந்த தங்கச்சி நிஜமாவே அந்த சித்தர் மேல ஆசைப்பட்டு அவரை அடைய முடியாம தற்கொலை பண்ணிக்குது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை விட மாட்டேன்னு சபதம் போடுது
2 தீவிரவாத தலைவன் காலேஜ் படிக்கறப்ப ஒரு காதலி. அவளுக்கு விபத்துல கண் பார்வை போய்டுது.அந்தக்காதலி அந்த அருவில வந்து குளிச்சா தன் கண் பார்வை திரும்பக்கிடைச்சிடும்னு நம்பி வருது .
ஹீரோவா ரகு என்கிற ரகுமான் இவருக்கு அதிக வேலை இல்லை
இன்னொரு ஹீரோவா தீவிரவாத தலைவனா ராம்கி . இவரு சிரிச்ச முகமா இருந்தாதான் பார்க்க நல்லாருக்கும் ஆனா டெரரிஸ்ட் என்பதால் உர்ருனே இருக்காரு.
ராம்கிக்கு ஜோடியா கவுதமி அழகுப்பெண் . போலீஸ் ஆஃபிசரா நாசர் இவரும் டம்மி தான் போலீஸ் கான்ஸ்டபிளாக வெண்ணிற ஆட மூர்த்தி ஹோட்டல் ரூம் பாய் ஆக செந்தில் அது போக வினோதினி ரியாஸ்கான் எல்லாரும் உண்டு
ஒளிப்படிவு மது அம்பாட் பட்டாசா இருக்கு ஃபோட்டோ கிராஃபி
கிளாமருக்கு விசித்ரா ஒரு டான்ஸ் கஸ்தூரி ஒரு அருவிக்குளியல் டான்ஸ்
சின்னி ஜெய்ந்த் , வெ ஆ மூர்த்தி , செந்தில் காமெடி பரவால்லை
பிரதாப் போத்தன் தான் டைரக்சன் . படம் ரிலீஸ் டைம்ல நல்லா போச்சு விமர்சன ரீதியாவும் பாராட்டுப்பெற்றது
த மிராக்கிள் எனும் நாவலின் அஃபிசியல் தழுவல் தான் இந்தப்படம்
ரசித்த வசனங்கள்
1 வாழ்க்கைல கடைசி நம்பிக்கையும் போனபின் மக்கள் வாழ்ந்துட்டு இருக்கறதே கடைசில கடவுளாவது வந்து காப்பாத்த மாட்டாரா?ங்கற நம்பிக்கைலதான்
2 கடவுள் உண்மையா இருந்தா அவரோட உண்மையான பக்தன் யார்?னு கண்டுபிடிச்சு அவருக்கு தரிசன்ம் தரலாமே?
3 இந்த உலகத்துல கடவுளை நம்பறவங்க தான் அதிக எண்ணிக்கைல இருக்காங்க
4 ஜனங்க ஜாஸ்தியா ஏமாறும் இடமே கோவில் தான்
5 போலீஸான நாம கடவுளுக்கே பாதுகாப்பு கொடுக்கனும்? ம்ம்
6 யாருப்பா நீ?
பாய் சார்
நெத்தில விபூதி குங்குமம் வெச்சிருக்கான் ஆனா முஸ்லிம் பாய்னு சொல்றான் இவனை தரோவா செக் பண்ணனும்
அய்யோ நான் ரூம் பாய் சார்
7 மனப்பூர்வமான பிரார்த்தனையை விட பெரிய படிப்பு எதுவும் இல்லைனு நம்பறவன் நான்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 கடவுள் தோன்றப்போகும் கோவிலை வெடி வெச்சு தகர்க்கலாமா?னு ராம்கி அண்ட் கோ அப்போதான் பேசவே ஆரம்பிக்கறாங்க டக்னு கேட்டைத்திறந்து ஒரு தாடிக்காரன் ஒரு சூட்கேசோட வந்து நீங்க பேசறதை எல்லாம் கேட்டுட்டு இருந்தேன் இந்தாங்க நீங்க எதிர்பார்க்கும் பணம்னு கொடுத்துட்டுப்போறான். அடேய்.. உங்க அக்கிரமத்துக்கு அளவே இல்லையா?
2 பொதுவா நம்ம மேனேஜரோ எம் டி யோ கேவலமான மொக்கை ஜோக் சொல்லும்போது நாம ஈரோடு மகேஷ் மாதிரி சிரிப்போம், ஆனா ஒரு ஹையர் ஆஃபீசர் நாசர் கிட்டே நீங்க கடவுளைப்பார்த்தீங்கன்னா அவர் கிட்டே பிரமோஷன் பற்றிக்கேளுங்க அப்டினு கடி ஜோக் சொல்லும்போது முறைச்சுப்பார்க்கறார்.. இது நடக்குமா?
3 நாளைக்குக்காலைல ஆபரேஷன்னு ரியாஸ்கான் ஹாஸ்பிடல்ல படுத்திருக்கார். கேன்சர் பேஷண்ட் . பக்கத்துல க்ளுக்கோஸ் பாட்டில் ட்ரிப்ஸ் ஏறிக்கிட்டு இருக்கு. அடுத்த ஷாட்ல சங்கீதா அவரைக்கோயிலுக்குக்கூட்டிட்டு வந்து தாலி கட்ட வைக்கிறார். நேரம் கெட்ட அந்த நேரத்துல டாக்டர் அதே கோயிலுக்கு வர்றார். செண்ட்டிமெண்ட் டயலாக் வேற ,, முடியல
4 மேல் மருவத்தூர் அம்மன் திருக்குழுனு பேனர் வெச்ச வேன்ல இருந்து இறங்கும் பக்தர்கள் மஞ்சள் அண்ட் மஞ்சள் யூனிஃபார்ம்ல வர்றாங்க , எனக்கு தெரிஞ்சு அவங்க யூனிஃபார்ம் சிவப்புனு நினைக்கறேன். மாரியம்மன் பக்தர்கள் தான் அந்த காம்போல வருவாங்க
5 போலீஸ் ஆஃபீசரான நாசர் தன் தங்கை விழி ஒளி இழந்தவர் என்பதால் அவருக்கு துணையா வழிகாட்டியா ஒரு ஆம்பளையை அப்பாயிண்ட் பண்றார் அவரு ஹீரோவும் கிடையாது. யாராவது இப்படி ஒத்துக்குவாங்களா? அதே நாசர் அந்த கைடை ஒரு டைம் கவுதமியோட பார்க்கும்போது கவுதமி நாசருக்கு இண்ட்ரோ பண்றாங்க நீங்க என்னைப்பார்த்துக்க அப்பாயிண்ட் பண்ணீங்களே ஒரு கைடு அது இவர்தான். நேர்லயே பார்க்காம ஒரு போலீஸ் ஆஃபீசர் தன் தங்கைக்கு ஒரு ஆளை அப்பாயிண்ட் பண்றார்
6 போலீஸ் ஆஃபிசரான நாசர் லாட்ஜ் ரூம் கதவை தட்றார் அப்றம் தான் ரூம் கதவு பூட்டி இருக்குன்னே அவருக்கு தெரியுது , தமிழ் நாடு போலீஸ் ராக்ஸ்
7 போலீஸ் ஆஃபீசர் யூஸ் பண்ற ஒவ்வொரு துப்பாக்கிக்குண்டுக்கும் மேலிடத்துல பதில் சொல்லனும், ஹேர்பின் போட்டாலே ஓபன் ஆகும் பாடாவதி பூட்டை உடைக்க போலீஸ் துப்பாக்கியால சுடுது எதுக்கு இந்த பில்டப் ?
8 ஒரு எஸ் டி டி பூத் க்கு முன்னே பின்னே அறிமுகமே இல்லாத ஒரு ஆள் வந்து ஒரு எஸ் டி டி கால் பண்ணனும்னு கேட்கறான். ஓக்கே சொன்ன அந்த பூத் ஓனர் சார் இந்த பூத்தை கொஞ்சம் பார்த்துக்குங்க நான் போய் டீ குடிச்ட்டு வற்றேன்னு போய்டறான் எங்கிருந்துதான் இபடி சீன் எல்லாம் யோசிக்கறாங்களோ ? அவன் பாட்டுக்கு 100 ரூபாய்க்கு கால் பேசிட்டு கம்பி நீட்டிட்டா என்ன செய்வான்?
10 தீவிரவாதியைப்பார்த்த ஒரே சாட்சியான செந்தில் கிட்டே போலீஸ் ஆஃபீசர் நாசர் அடுத்த டை,ம் அவனைப்பார்த்தா உடனே எனக்கு தகவல் தரனும்கறார் அதன்படி ஒரு டீக்கடைல ராம்கியைப்பார்த்த செந்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு ஃபோன் பண்ணி தகவல் சொல்லி அவரை அவரோட கண் பார்வைலதானே வெச்சிருக்ஜ்கனும்? 4 கிமீ நடந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் நாசரைக்கூட்டிட்டு வர்றார். அப் அண்ட் டவுன் எப்படியும் 40 நிம்சம் ஆகி இருக்கும் . ஒரு ஆள் முக்கா மணி நேரமா டீ குடிச்ட்டா இருப்பான் ?
11 பிரமாதமான மெலோடி சாங்கான கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக பாடலை படமாக்கும்போது கவித்துவமா எடுக்க வேணாமா? ஹீரோ டிராயர் போட்டுட்டு வர்றார் ஹீரோயின் மிடி போட்டுட்டு விரகதாபத்துல படுத்துட்டு இருக்கு .
12 இந்த கதைக்கும் கஸ்தூரிக்கும் என்ன சம்பந்தம்? அவரு எதுக்கு அருவில குளிச்சுட்டே ஒரு பாட்டு பாடறாரு ?
13 காலேஜ் படிக்கும்போது கவுதமி உயிருக்கு உயிரா 3 வருசம் நேசிச்சவர் விழி ஒளி இழந்து சில வருசம் கழிச்சு ராம்கியை சந்திக்கும்போது குரலை வெச்சு அடையாளம் காண முடியாதா?
14 அவ்ளோ பெரிய சித்தர் ஒரு அழகியைக்கண்டு மயங்கற மாதிரி காட்றாங்க அந்த பாப்பாவைப்பார்த்தா எங்க ஊர் தேர்க்கடைல கரகாட்டம் ஆடற பொண்ணு மாதிரி இருக்கு
15 சாத்தான் வீரபாகு வடிவேல் ரசிகன் போல . சித்தரை மயக்க ஆள் அனுப்பாம தன் தங்கச்சியை ஏன் அனுப்பறார்னு விளக்கம் இல்லை
16 தீவிரவாதி ராம்கியை நேரில் பார்த்த ஒரே சாட்சி ரூம் பாய் செந்தில்தான்னு சொல்றாங்க ஆனா ரூம் எடுக்கும்போது லாட்ஜ் ரிசப்ஷ்கனிஸ்ட் லாட்ஜ் மேனேஜர் எல்லாம் பார்க்கறாங்க
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - படம் ஜாலியாதான் போகுது . லாஜிக் மிஸ்டேக்ஸ் ஒரு 60 தேறும், நான் 16 தான் சொல்லி இருக்கேன் , பதிவு ரொம்ப நீளமாப்போயிடும் நீலமாவும் ஆகிடும்னு சென்சார் பண்ணிட்டேன் . ரேட்டிங் 2.25 /5 யூ ட்யூஒப்ல ராஜ் டி வி யின் ஹெச் டி பிரிண்ட் கிடைக்குது
ஆத்மா | |
---|---|
இயக்கம் | பிரதாப் கே. போத்தன் |
தயாரிப்பு | அஜிதா ஹரி |
மூலக்கதை | The Miracle படைத்தவர் Irving Wallace |
திரைக்கதை | பிரதாப் கே. போத்தன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ராம்கி ரஹ்மான் நாசர் கௌதமி கஸ்தூரி வினோதினி வாணி விஜயகுமாரி ரியாஸ் கான் செந்தில் |
ஒளிப்பதிவு | மது அம்பத் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
தயாரிப்பு | சுப்ரியா இன்டெர்நேஷனல் |
வெளியீடு | சூலை 30, 1993 |
நேரம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
0 comments:
Post a Comment