1982 ல் ரிலீஸ் ஆன பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை யின் பிரம்மாண்ட வெற்றி இயக்குநரை கவர்ந்திருக்க வேண்டும் அந்த சாயல் தெரியாத படி அதே பாணிக்கதையை க்ளைமாக்சை கே பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் (1981) படத்திலிருந்து எடுத்தாண்டிருக்கிறார். ஒரு ஆச்சரியமான விஷயம் இந்தப்படமும் ஹிட் . காரணம் இருவர் 1 ஆனந்த சங்கர் இசையில் பாட்டு ஹிட்டு 2 ஜெய ஸ்ரீ
ஹீரோ ஒரு டாக்டர் . அவர் வெளில போறப்ப ஒரு ஆத்து ஓரமா ஹீரோயின் மயக்கமா இருப்பதைப்பார்க்கிறார். அது ஒரு ஆம்பளையா இருந்தா அம்போனு விட்டுட்டு வந்திருப்பாரோ என்னவோ ? அழகிய பொண்னா போச்சே? வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சிகிச்சை அளிக்கிறார்
அந்தப்பொண்ணுக்கு பழசு ஏதும் நினைவில் இல்லை தான் யார் என்றே தெரியல . போலீஸ்ல தகவல் சொல்லி பேப்பர்ல விளம்பரம் பண்றார் ஆனா யாரும் வர்லை .
அங்கேயே நாட்களைக்கழிக்கும் நாயகி டாக்டரான ஹீரோ மேல் காதல் வசப்படுகிறார் அதை ஓப்பனா ஹீரோ கிட்டே சொன்னதும் அவரும் ஓக்கே சொல்லிடறார்
இந்தக்கதைக்கு வில்லன் யாரும் இல்லாததால் ஹீரோவின் வீட்டில் அம்மாவும் தடை சொல்லலை . நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடுநடக்குது
அப்போதான் ஒரு இடைவேளை ட்விஸ்ட் வருது . ஹீரோயினுக்கு ஏற்கனவே மேரேஜ் ஆகிடுச்சு கணவர் உயிரோட தான் இருக்கார் ஹீரோயினுக்கு ஏதோ நரம்பு சம்பந்தப்ப்ட்ட ஆபரேஷன் பண்ணுனதும் பழைய ஞாபகங்கள் எல்லாம், அவருக்கு நினைவு வருது
இப்போ ஹீரோயின் என்ன முடிவு எடுத்தார் ? இப்போதைய காதலனா 012? முன்னாள் கணவனா? ( மேரேஜ் ஆனாலும் தம்பதிக்கு குழந்தை இல்லை என்பது கூடுதல் தகவல் )
ஹீரோவா சிவக்குமார் , எனக்கு தெரிஞ்சு சிவக்குமார் கம்பீரமா வந்த படங்கள் ரெண்டு 1 சிந்து பைரவி 2 இது அருமையான மேக்கப் ஆடை அலங்காரங்கள் செம கம்பீரமா க்யூட்டா இருக்கார் டாக்டர்னு நாம நம்பனும்கறதுக்காக எங்கே போனாலும் கைல ஸ்டெஷஸ்கோப்போட போவது செம காமெடி யா இருக்கு
ஹீரோயினா அழகு மயில் ஜெய ஸ்ரீ. தமிழ் சினிமா நடிகைகளிலேயே தான் வரும் எல்லாகாட்சிகளிலயும் மங்களகரமாக கூந்தலில் பூச்சூடி வரும் நடிகைகள் இருவர் 1 அம்பிகா ( சைடுல ரோஸ்) 2 இவர் . ஒவ்வொரு காட்சியிலும் நெருக்கமாககோர்க்கப்பட்ட அல்லது தொடுக்கப்பட்ட மல்லிகைச்சரத்தோடு இவர் வரும் காட்சிகள் எல்லாம் அழகு பொங்குது . இவர் ஜாக்கெட் அணீயும் ஸ்டைலும் அலாதி தான் . முழங்கை வரை ஸ்லீவ் ஜாக்கெட்டும் அழகு பஃப் கை போல சிறிய கை ஜாக்கெட்டும் அழகு . இவர் சேலை அணீந்து வரும் அழகே அழகு . பொதுவாக மற்ற நடிகைகள் சேலை அணிவதற்கும் இவரது சேலை அணியும் முறையும் மாறுபட்டு இருக்கும் , கவனிச்ச்சுப்பாருங்க . கேமரா இவருக்கு சைடு போசில் வரும்போதெல்லாம் கண்ணியமாக முந்தானையை அட்ஜஸ் செய்து நாசூக்காக நடந்து கொள்வார்
கணவராக ராஜேஸ் . இந்த மாதிரி கணவர் இருப்பாரா ? என வியக்க வைக்கும் நடிப்பு இதிலும் இவர் கனக்ச்சிதமான நடிப்பு கன்னிப்பருவத்திலே படத்தில் எண்ணெய் வழிந்த முகத்துடன் இருப்பவர் இதில் அட்டகாசமான அழகிலே ஜொலிப்பார்
தேங்காய் சீனிவாசன் சார்லி கோவை சரளா ஆகியோர் வந்து போறாங்க சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை
இசை புதுமுகம் ஆனந்த சங்கர் ,. எல்லாப்பாட்டும் ஹிட்டு
1 பருவம் கனிந்து வந்த பாவை வருக புடவை அணிந்து வந்த பூவே வருக
2 யார் போகும் வழியிலும்
3 இதயம் முழுதும்
4 நான் பாடும்\
5 ஆஹா ஆயிரம்
சபாஷ் டைரக்டர் ( ஸ்ரீதர் )
1 ஒளிப்பதிவாளர் அசோக் குமார் பிரமாதமா கேமராவை ஹேண்டில் பண்ணி இருக்கார். ராஜேஷ் இவ்ளோ அழகா வேற எந்தபப்டத்துலயும் பாக்க முடியாது இதுக்கு ஆடுத்து மக்கள் என் பக்கம் . அதே போல் ஜெய ஸ்ரீ இதுக்கு அடுத்து தென்றலே என்னைத்தொடு
2 ஹீரோயின் ஜெயஸ்ரீ ஹீரோ சிவக்குமாரை விட ஹைட் ,. இதை சாமார்த்தியமா கேமரா கோணங்களில் மறைத்த விதம் ( சிங்கம் சூர்யா அனுஷ்கா போல ) லாங்க் ஷாட்டில் இருவர் நடந்து வரும்போது ஹீரோ மேடான இடத்திலும் ஹீரோயின் பள்ளமான இடத்திலும் நடக்க விட்டிருப்பாங்க
3 கணவன் மனைவி அன்யோனயக்காட்சிகளோ காதலர்களுக்கு நெருக்கமான காட்சிகளோ வைக்காமல் கண்ணியமாய் நெறீயாள்கை செய்தது
லாஜிக் மிஸ்டேக்ஸ் திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஹீரோயினின் கணவர் சிங்கப்பூர் போய்ட்டார் ஹீரோயின் டூர் போன இடத்துல பஸ் ஆக்சிடெண்ட் எல்லாம் சரி பேப்பர்ல விளம்பரம் பார்த்து ஹீரோயினின் சொந்தக்காரங்க கணவரின் சொந்தம் நண்பர்கள் யார் கண்ணிலுமா அது படாமல் போய் இருக்கும் ?
2 எவ்ளோதான் நல்லவனா இருந்தாலும் ஒரு கணவன் தன் மனைவி இப்போ சுய நினைவு இல்லாம இருக்கா என்பதை தெரிந்தபின் தான் இன்னார் என்பதை வெளிப்படுத்தாமலா இருப்பாங்க ? வீட்லயே ஃபோட்டோ ஆல்பம் எல்லாம் இருக்கே ?
3 ராஜெஷ் பெரிய தொழில் அதிபர் கம் பணக்காரர் அவர் வீட்டில் வேலையாட்கள் சமையல்காரர் வாட்ச் மேன் யாருமே இருந்திருக்க மாட்டாங்களா ? ஜெயஸ்ரீ வீடு திரும்பாததை யாருமே தகவல் சொல்லாமயா இருப்பாங்க
4 ஜெய ஸ்ரீயை எந்த ஏரியாவில் ஹீரோ கண்டுபிடிச்சாரோ அந்த ஏரியா போலீஸ் ச்டேஷன்ல விபரம் சொல்லி இருந்தா அவங்க ஈசியா டீல் பண்ணி இருப்பாங்க,. ஹீரோ இருக்கும் ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் சொல்லி என்ன பயன் ? ( ஒரு காமெடி தான் நினைவு வருது ,. ஏண்டா தெரு விளக்குல என்னமோ தேடிட்டு இருக்கே? வீட்ல என் பேனாவை தொலைச்ட்ட்டேன் . அப்போ அங்கே தேடாம ஏன் இங்கே தேடறே? அங்கே இருட்டா இருந்துது இங்கே தான் நல்ல வெளிச்சம் இருக்கு .
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - நல்ல குடும்பப்படம் தான். பாடல்களுக்காகவும் ஜெயஸ்ரீ அழகுக்காகவும் பார்க்கலா,ம் ரெண்டே மணி நேரம் அமேசான் பிரைம்ல கிடைக்குது . இது ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் 40 நாட்கள் ஓடுச்சு ரேட்டிங் 2. 5 / 5
0 comments:
Post a Comment