ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஒன் சைடா லவ் பண்ற பொண்ணுக்கு வேற ஒருத்தன் கூட கல்யாணம். கடுப்பான வில்லன் அவளைக்கொலை பண்ணிடறான். கொலை பண்ணிட்டு போலீஸ் துரத்தும்போது அப்போதைக்கு தப்பிக்க நாயகிகள் இருவர் இருக்கும் வீட்டில் அடைக்கலம் ஆகறான் , அவங்க சாமார்த்தியமா அவனை போலீஸ் ல பிடிச்சுக்கொடுத்துடறாங்க. இதனால காண்டான வில்லன் அவங்களைப்பழி வாங்கறதா சபதம் போடறான். அதுல அவன் ஜெயிச்சானா? இல்லையா? என்பதுதான் கதை \
என்னடா? இது மேலே சொன்ன கதைல ஹீரோவே இல்லையே? அது போக இது 20 நிமிட குறும்படத்துக்கான கதை மாதிரி தெரியுது . இதை எப்படி ரெண்டேகால் மணி நேரம் இழுக்க முடியும் ? அப்டினுதானே யோசிக்கறீங்க?அதுக்குதானே கதை இலாகா இருக்கு ?
அந்த இரு தோழிகளும் ஹீரோவை கலாட்டா பண்றாங்க . ஒரு தோழி ஹீரோவை ஒன்சைடா லவ்வி 2 டூயட்டும் பாடிடுது . இன்னொரு தோழியை ஹீரோ ஒன் சைடா லவ்வி மேரேஜூம் பண்ணிக்கிறார்
ஹீரோவா சுரேஷ். கமல் , மோகன் , கார்த்திக் வரிசைல அந்தக்காலத்துல காலேஜ் பெண்களால் சிலாகிக்கப்பட்ட ஒரு இளம் ஹீரோ சுரேஷ் . இதுல கிட்டத்தட்ட ஒரு கவர்ச்சி நடிகை மாதிரி தான் இவரை யூஸ் பண்ணி இருக்காங்க
ஹீரோயின்களா நளினி ., சாதனா. இதுல சாதனா கிளாமருக்கு என்று முடிவானதும் நீச்சல் டிரஸ்ல ஒரு டூயட் , சாதா டிரஸ் ல ஒரு டூயட்னு பாட விடறாங்க . குணச்சித்திர நடிப்புக்கு நளினி என்பதால் ஒரே ஒரு டீசண்ட்டான பாட்டு அவருக்கு
தேங்காய் சீனிவாசன் - மனோரமா காமெடி சின்ன பொருளை திருடி வெச்சுக்கும் கிளப்டோமேனியா வியாதியை வெச்சு கொண்டு போனது சுமாரா இருந்தாலும் வில்லன் காம்போ காமெடி டிராக் நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு
வில்லனா புது முகம் வினோத் . நல்லா தான் பண்ணி இருக்கார்
இசை இளைய ராஜா
1 ஏண்டி அம்மா கேலி சும்மா 2 ஒர்ய ஒரிய ஒரியாட்டடி வலையில் விழுந்த வனமோகினி 3 ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே 4 என் அன்பே என் அன்பே நீ என் வசம் 5 அனுராதாவோட கிளப் டேன்ஸ் பாட்டு அதை ஸ்கிப் பண்ணிட்டதால என்ன பாட்டுனு தெரில (அந்தக்காலங்களில் இது மாதிரி ஒரு கிளப் டேன்ஸ் சாங் அவசியமா அனாவசியமா இடம் பெறும் . சகிக்காது. ஆனா அதை ரசிக்கவும் ஒரு சி செண்ட்டர் ஆடியன்ஸ் க்ரூப் இருந்திருக்கு போல )
இதுல்; 5 பாட்டுல 3 பாட்டு செம ஹிட்டு
பின்னணி இசை வழக்கமா கலக்குவார் ராஜா இதில் சுமாராதான் பண்ணி இருக்கார்
சபாஷ் டைரக்டர் (ஸ்ரீதர்)
1 மெயின் கதையான வில்லன் கதை மொத்தமே 15 நிமிசம் தான் , ஆனா அதுக்கு சம்பந்தமே இல்லாத ஹிரோ - ஹீரோயின்கள் ரொமாண்டிக் போர்சன் தான் 2 மணி நேரம் அதை ஜாலியா கொண்டு போன விதம்
2 கதைக்கு சம்பந்தமே இல்லாம 2 ஹீரோயின்களும் குளிக்கற சீன்கள் எல்லாம் வெச்சிருக்காங்க
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பொதுவா அரசியல் பலம் மிக்க விஐபி யைக்கொலை பண்ணத்தான் உயரமான பில்டிங்க்ல இருந்து ரைபிள்ல குறி பார்த்து லாங்க் ஷாட்ல ஷூட் பண்ணுவாங்க . ஆனா ஒரு சாதா பொண்ணைக்கொலை பண்ண மேரேஜ் ஊர்வலக்கூட்டத்துல பண்றது ரொம்ப ரிஸ்க் ஆச்சே?
2 வில்லன் லவ் பண்ற பொண்ணுக்குக்கல்யாணம்கறதாலதான் கொலை பண்றான் , ஆனா டிஸ்கோ சாந்தி கிட்டே டயலாக் பேசும்போது உங்க கூட பல வருசம் வாழ்ந்திருக்கறதால உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்வது எப்படி ?
3 டிஸ்கோ சாந்தி வில்லன் கிட்டே இனிமே வீட்டுக்கு வர வேணாம், போலீஸ் கண்காணிக்குதுனு சொன்ன பின்னும் வில்லன் டூர் ஸ்பாட் மாதிரி வந்துட்டு தான் இருக்கான்
4 வில்லன் ஜெயில்ல இருந்து தப்பி ஹாயா சுத்திட்டு இருக்கான். பேப்பர் ல அவன் ஃபோட்டோ வருது ஆனா ஒரே ஒரு கூலிங் கிளாஸ் போட்டா அடையாளம் தெரியாதா?
5 தோழிகள் 2 பேரும் ஒண்னாதான் எப்போப்பாரு இருக்காங்க டக்னு வேலையை முடிக்காம ஒவ்வொருவரா கொலை பண்ண வில்லன் முடிவெடுப்பது ஏன்? படத்தை இழுக்கவா?
6 ஒரு சீன்ல நளினி குளிச்சுட்டு இருக்கும்போது மோதிரம் வழுக்கி சிங்க்ல விழுது . சுரேஷ் வந்து அதை எடுத்தது,ம் உங்க கையாலயே அதை போட்டு விடுங்க அப்டீங்கறார். சிங்க்ல ல விழுந்த மோதிரத்தைக்கழுவாமயே போட்டு விடறார். இது ஒரே ஷாடல் வேற எடுத்துத்தொலைச்சிருக்காங்க
7 வில்லன் டிஸ்கோ சாந்தி கிட்டே எனக்குப்பணம் தேவைப்படும்போது சொல்லி அனுப்றேன் நான் சொல்ற இடத்துல நீ பணம் கொண்டு வந்து தரனும்கறான் ஆனா ஒவ்வொரு டைமும் வீட்டுக்கு வந்து தான் வாங்கிட்டுப்போறான்
8 போலீஸ்க்கு ஃபோன் பண்ணும் டிஸ்கோ சாந்தியை வில்லன் பார்த்துடறான் அப்பவே டக்னு அதை தடுக்காம ஸ்லோ மோஷன்ல மெதுவா வந்து 10 நிமிசம் கழிச்சுக்கொலை பண்றான்
9 வில்லன் ஒரு கேனக்கிறுக்கனா இருப்பான் போல நளினி வீட்டுக்கு ஃபோன் பண்ணி இன்னும் 5 நிமிசத்துல உன் வீட்டுக்கு வர்றேன் என் கிட்டே இருந்து நீ தப்பிக்கவே முடியாதுனு டயலாக் பேசறான். அதுக்கு பேசாம போய் இருக்கலாம்
10 வில்லன் இருக்கும் வீட்டில் மனோரமா நுழைந்து கதவைத்தாழ் போடாமதான் இருக்காங்க ஹீரோ சும்மாவே உள்ளே வரலாம் பைக் ல வந்து கதவை எல்லாம் உடைச்சுக்கிட்டு எதுக்கு கஷ்டப்படனும் ?
ரசித்த வசனங்கள்
மொத்த ரெண்டே கால் மணி நேரபப்டத்துல ரசித்த வசனம்னு தேடுனா காமெடி டிராக் தான் சிக்குச்சு
1 என்னை வருத்தப்பட விடுங்களேன்
2 ஹாஸ்பிடல்ல என்னென்ன பலகாரம் கொடுத்தாங்க ?
3 ஏங்க ஏற்கனவே மூணு பொண்ணுங்களை அவன் கொன்னிருக்கான். என்னை ஏதாவது பண்ணிடுவானோ?
இது பயமா? எதுனா செய்யட்டும்னு ஏக்கமா?
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - இது காமெடிப்படம் இல்லை ஆனா இவங்க எடுத்து வெச்சிருகக்ற சீன்களை எல்லாம் பார்த்து ஜாலியா சிரிச்ட்டு வரலாம் ரொம்ப மொக்கை எல்லாம் இல்லை ரேட்டிங் - 1.75 / 5 . யூ ட்யூப்ல கிடைக்குது
0 comments:
Post a Comment