Wednesday, July 20, 2022

வீட்ல ராமன் வெளில கிருஷ்ணன் 1983 - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா)

 


டைட்டிலைப்பார்த்ததும்  இது  ரெண்டு  பொண்டாட்டிக்காரன்  கதை.காமெடியா  இருக்கும்னு  தானே  நினைச்சீங்க?  அதான்  இல்லை ., டைட்டில்  வில்லனுக்கு . எனக்கு  தெரிஞ்சு  நாயகியை  மையப்படுத்தி  நாயகனை  மையப்படுத்தி  டைட்டில்  வெச்சுப்பார்த்திருக்கேன்,  வில்லனை  முன்னிலைப்படுத்தி  டைட்டில்  வெச்சதை  இப்போதான்  கேள்விப்படறேன்


  ஸ்பாய்லர்  அலெர்ட் 


 ஹீரோ  ரோடு  போடற  ஆஃபீசர்  . ஒரு  கிராமத்துக்கு  ரோடு  போடபோறார்/. அங்கே  இந்நாள்  ப்ரசிடெண்ட்  முன்னாள்  பிரசிடெண்ட்னு  2  லூசுங்க  இருக்காங்க  அந்த  2  லூசுங்களுக்கும்  தலா  ஒர்  பொண்ணு  அதுல  ஒரு  பொண்ணு  அரை  லூசு  இன்னொண்ணு  முக்கா  லூசு  


ஹீரோவை  யார்  வீட்ல  தங்க  வைக்கறதுனு  ரெண்டு  பிரசிடெண்ட்ஸ்க்கும்  ஈகோ  போட்டி   எப்படியோ  ஹீரோ  ஒரு  வீட்ல  தங்கி  ஒரு  ஹீரோயினை  லவ்  பண்ணி  மேரேஜ்  பண்ணி  நகரத்துக்கு  கூட்டிட்டு   வந்துடறார்


 ஹீரோ   தங்கி  இருக்கும்  அபார்ட்மெண்ட்ல  வில்லன்  இருக்காப்டி ,  இவரு  தாலி  கட்ன  சம்சாரம்  முன்னால  ராமன்  மாதிரி  வேஷம்  போடறவர்  வெளீல  இவரு  ஒரு  சபலிஸ்ட்,பல  பெண்களை  வேட்டை    ஆடுபவர்


கிராமத்துல  இன்னொரு  ஹீரோயின்  இருந்துதே  அது  யாரையோ  லவ்  பண்ணி  ஏமாந்து  கர்ப்பம்  ஆகி    நகரத்துக்கு  வருது  ஹீரோ  அடைக்கலம்  தர்றார் .  ஹீரோவுக்கும்  இந்த  ரெண்டாவது  ஹீரோயினுக்கும்  இல்லீகல்  காண்டாக்ட  எல்லாம்  இல்லை  ஆனா  ஹிரோயின்  நெ1    அதாவ்து  ம்னைவி   சந்தேகப்படறா

 இருவருக்கும்  பிரிவு  வ்ருது  வில்லன்  இதுல  கேம்  ஆடறார் முடிவில்  தம்பதிகள்  சேர்ந்தாங்களா? பிரிஞ்சாங்களா? என்பதே  கதை 


  ஹீரோவா  சிவக்குமார்   ரோடு  ஆஃபீசராக  கிராமத்துல  இவர்  ச்ந்திக்கும்  காமெடிகள்  நல்லாருக்கு   வில்லன்  கூட  மோதும்போது  ஹீரோயிசம்  இவருக்கு  வர்லை 


 வில்லனாக    எம்  ஆர்   கிருஷ்ண  மூர்த்தி  அசால்ட்டா  நடிச்சிருக்கார்  .,   தட்  ஈஸ்  சுப்பாராவ்  என  அடிக்கடி  அவர்  பஞ்ச்  டயலாக்  பேசுவது  எரிச்சல்  அதுவே  அந்த  கேரக்டருக்கு  கிடைத்த  வெற்றி 


 ஹீரோயினா  மனைவியா  ராதிகா   பாந்தமான  நடிப்பு   முகத்தில்  ஏனோ  களை  இல்லை 


 இன்னொரு  ஹீரோயினா  கொஞ்சம்  லூஸ் தனமான  அல்லது  அப்பாவி  ஏமாளியாக  சுஹாசினி . இவர்  யார்கிட்டேயோ ஏமாறுவது  கற்பை  நகைகளைப்பறி  கொடுப்பது  நம்பும்படி  இல்லை . ஆனா  அவர்  நடிப்பு  ஓக்கே  ரகம் 


கல்லாப்பட்டி  சிங்காரம்  லூஸ்  மோகன்  இந்திரா  போன்றவர்கள்  கவனம்  பெறும்  நடிப்பு 


இசை இளையராஜா  4  பாட்டு  எல்லாம்  சுமார்  ரகம்  தான் பின்னணி  இசை  ஓக்கே  லெவல் 


சபாஷ்  டைரக்டர் ( மணி வண்ணன்)


 1   ஹீரோவை  விட  வில்லனுக்கு  முக்கியத்துவம்  கொடுத்திருப்பது ஆச்சரியம் . சத்யராஜ்  பிரகாஷ்  ராஜ்  ரகுவரன்  மாதிரி  அவர்  ஏன்  வளரவில்லைனு  தெரில 


2 முதல்  பாதி  டபுள்  ஹீரோயின்  லவ்  ஸ்டோரி  மாதிரி  போகும்  கதைக்களன்  பிறகு  வில்லன்  ரூட்டில்  மாறூவது  எதிர்பாராத  திருப்பம்


  லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1   வில்லன்  தன்  மனைவி  கிட்டே  நல்லவன்  மாதிரி  நடிக்கிறான்  ஓக்கே  ஆனா   மேல  மாடில  மனைவி  இருக்கு  கீழே  நைட்  10  மணிக்கு  ஒரு  பெண்ணை  வர  வைப்பது  எல்லாம்  எந்த  வீட்லயும்  நடக்காது .,   மனைவிக்கு  தெரியாம  தப்பு  செய்பவன்  வீட்டுக்கே  வர  வைப்பானா? 


2  பொதுவா  ஒரு  ஆஃபீஸ்  அல்லது  கம்பெனியின்  கேஷ்  பாக்ஸ்  சாவி  கேஷியரிடம்  1  இருக்கும்  மேனேஜர்  அல்லது  இன்சார்ஜ்  யாராவது  ஒருவரிடம்  1  இருக்கும்  ஓனரிடல்  1  இருக்கும்  அப்படி  இருக்கும்போது  வில்லன்  லேடி  கேஷியரை  அபாண்டமா  திருட்டுப்பட்டம்  கட்டும்போது  அவர்  அந்த  சாவி  மேட்டரை  சொல்லலாமே?  25000  ரூபா பணம்  காணாம  போய்டுச்சு  போலீஸ்ல  புகார்  ப்ண்ணாம  இருக்கனும்னா  எனக்கு  சின்ன  வீடா வரனும்  என  பணிய  வைப்பது  நம்பும்படி  இல்லை 


3   சுஹாசினியின்  காதலன் அவரது  நகைகளை  எடுத்துட்டு  ரயிலில்  எஸ்  ஆவது  நம்பும்படி  இல்லை  அவரே  லூஸ்  மாதிரிதான்  இருக்கார்  விபரமா  இருந்தா  தப்பிப்போகலாம், இலவச  இணைப்பா  பெண்ணும்  கிடைக்கும்போது  அவரை  விட்டு  ஏன்  போகனும் ? 


4   ஹீரோ  தனக்கும்  சுஹாசினிக்கும்  எந்த  தொடர்பும்   இல்லை  என  மாமனார்  மாமியார்க்கு  கடிதம்  எல்லாம்  எழுதறார் . ஆனா  அவர்  தன்  மனைவியிடம்  ஓப்பனாக  எதையும்  பேசவே  இல்லை 


5   ஹீரோ  தன்  மனைவி  ராதிகாவுக்கு  சுஹாசினி  இங்கே  இருப்பது  தெரியக்கூடாது  என  நினைக்கிறார்  அவரை  கண்காணாத  இடத்தில்  குடி  வைக்காம   அவங்க  குடி  இருக்கற  அதே  அபார்ட்மெண்ட்ல  வில்லன்  வீட்டில்  குடி  வைக்கிறார்


6  வில்லன்  சுஹாசினியை  பலாத்காரம்  பண்ண  முயலும்போது  ஹீரோ  அங்கே  வந்துடறார்  அப்பவே  போலீஸ்ல  புகார்  குடுத்து  வில்லனை  உள்ளே  தள்ளி  இருக்கலா,ம்  ஆனா  லூஸ்  மாதிரி  வில்லன்  கிட்டே  சரியான  சந்தர்ப்பம்  அமையும் போது  ஆதாரத்தோடு  உன்னை  பிடிப்பேன்கறார்


7  இந்த  மாதிரி  ரெண்டு  ஹீரோயின்  சப்ஜெக்ட்ல  சரியா  திரைக்கதை  எழுத  முடியலைன்னா  ஒரு    ஹிரோயினை  போட்டுத்தள்ளிடுவாங்க  சாதா டைரக்டர்ஸ்  யூ  டூ  மணி வண்ணன் ? 


சி பிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்ஸ் - அந்தக்காலத்தில்  ஹிட்  ஆன  படம்  இப்பவும்  ரசிக்கிற  மாதிரிதான்  இருக்கு  பார்க்கலாம்  ரேட்ட்ங்  2.5 / 5 

0 comments: