Sunday, July 03, 2022

ஒரு ஓடை நதியாகிறது (1983) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா)


 இந்தப்படத்தை  ரீமேக்  பண்ணா  இப்போ  ரிலிஸ்  ஆவது  சிரமம்  ஏன்னா  பாஜகவை  நக்கல்  அடிக்கும்  பாடல்  வரிகள் தலையைக்குனியும்  தாமரையே  செம  ஹிட்  மெலோடி  இதுலதான் .  அதுக்கு நேர்  எதிரான குமமாங்குத்துப்பாடலான  ராத்திரிப்பொழுது உன்னைப்பார்க்கிற பொழுது  அடி  வேர்த்துக்கொட்டுது  மூச்சு  முட்டுது    எழுந்து  ஆடவைக்கும்  உற்சாகப்பாடல். பின்  மீண்டும்  ஒரு மெலோடி   தென்றல்  என்னை  முத்தம் இட்டது . இந்த  மூன்று  பாடல்களுக்காகவே  படம்  பார்க்கலாம். பாட்டை  மட்டும்  பார்த்தாப்போதாதா? என  கேட்பவர்களுக்கு   என்ன  சிச்சுவேஷன்ல  அந்த  பாட்டு  உக்காருது  என்பதில் தான்  சுவராஸ்யமே 


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ ஒரு  மிடில்  கிளாஸ்  ஃபேமிலி  ஆனா  கார்ல  போய்க்கிட்டு  இருக்காரு, ஹீரோயின்  ஒரு  கோடீஸ்வரி. ஆனா  காரை  வீட்லயே  விட்டுட்டு   நடந்து  போய்க்கிட்டு  இருக்காப்டி ., திடீர்னு  மழை , இருட்டு .. ஹீரோயின்  நனைந்த  உடைகளோட  நிக்கறதை  ஹீரோ  பார்த்துடறாரு . ரெண்டு  பேருக்கும்  முன்னே  பின்னே  ப்ழக்கமே  இல்ல  ஆனா  விபரீதம்  நடந்துடுது. 


ஏதோ  ஒரு  மூடுல  ஹீரோ  அப்படிப்பண்ணிட்டாலும்  அவருக்கு  குற்ற  உணர்ச்சி . எப்படியாவது  ஹீரோயினைக்கண்டுபிடிச்சு மன்னிப்புக்கேட்கனும்னு  ஆனா  எப்படிக்கண்டுபிடிக்க ? 


பாதிக்கப்பட்ட  ஹீரோயின்  அப்பா  கிட்டே  உண்மையை  சொல்லிடறாப்டி . வயித்துல  குழந்தை  வளருது. நான்  இனி  மேரேஜே  பண்ணிக்க  மாட்டேன்னு  ஹீரோயின்  சொல்லிடறாரு.உள்ளூர்ல  இருந்தா  ஊரு  சனம்  கண்டபடி  பேசும்னு  வெளியூர்  போய்டறாங்க 


ஹீரோ வீட்ல  பார்த்த  பொண்ணை  பெண்  பார்க்கப்போறாரு. அவருக்கு  மனசு  சரி  இல்லை  பொண்ணை  வேணாம்னு  சொல்லிடறாரு. பிறகு  அதே  பொண்ணு  வழில்;அவரைப்பார்த்து  தகறாரு  செய்யுது. கலாட்டா  பண்ணி  ரெண்டு  பேரும்  ஃபிரண்ட்ஸ்  ஆகி  லவ்வர்  ஆகி  தம்பதிகள்  ஆகிடறாங்க அவங்களுக்கு  ஒரு  பையன்


இப்போ  கோடீஸ்வரரான  ஹீரோயின்  உடைய  அப்பா  ஷேர்  மார்க்கெட்ல  நடந்த  கரெக்சன்ல  எல்லா  பணமும்  போய்  லாஸ்  ஆன  சேதி  கேட்டு  ஹார்ட்  அட்டாக்ல  டிக்கெட்  வாங்கிடறார். ஹீரோயின்  அனாதை  ஆனது மட்டும்  இல்லை . ஏழைஆகவும்  ஆகிடறார்


இப்போ  ஹீரோ எம் டி  யாக  இருக்கும்  கம்பெனில  ஹீரோயின்  வேலைக்கு  வர்றாங்க . ஹீரோயினைப்பார்த்த  ஹீரோவுக்கு  ஷாக்  ஏன்னா  அவருக்கு  ஹீரோயினை  அடையாளம்  தெரியும் . ஆனா  ஹீரோயினுக்கு  அடையாளம்  தெரியாது. ( ஒரு  வேளை  ஹீரோயின்  குனிஞ்ச  தலை  நிமிராத  பொண்ணு  போல )


 இதுக்குப்பின்  திரைக்கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான்  கதை 


 ஹீரோவா  ரகுவரன் .   பூ  விழி  வாசலிலே  ,  பாட்ஷா   புரியாத  புதிர்  போன்ற  படங்களில்  எல்லாம்  மிரட்டின  வில்லனா  இவர்? என  கேட்கும்  விதமாக  சொம்ப  அப்பாவியான  தோற்றம் .   குறை  சொல்ல  முடியாத  நடிப்பு 


ஹீரோயினா  சுமலதா. பரிதாபத்தை  ஏற்படுத்தும்  கதாபாத்திரம்  சுமரியாதை  மிக்க  கேரக்டர்  ஸ்கெட்ச்  மனதைக்கவருது 


ஹீரோவின்  மனைவியா  மனோசித்ரா பெண்  பார்க்க  வர்றப்ப  குடும்பாப்பாங்கான  நடிப்பு  பின்  ஹீரோவைக்கலாய்க்கும்போது  குறும்புத்தனம் ,  துடுக்குத்தனம் , தன்  கணவருக்கு  இன்னொரு  மகன்  உண்டு  என்பது தெரிந்ததும்  இயலாமை ஆத்திரம்  என பல  உணர்ச்சிகளைக்காட்டுவது  தேர்ந்த  நடிப்பு 

இசை   இளையராஜா. 5  பாட்டுல  3  பாட்டு  செம  ஹிட்டு  2  பாட்டு  மீடியம்  ஹிட்டு  பிஜிஎம்  வழக்கம்  போல்  குட் 


திரைக்கதை  இயக்கம்  ஸ்ரீதர்  முன்பாதி  சுவராஸ்யமான  நாவலைப்படித்த  திருப்தி  பின்  பாதி   இழுவை  க்தை  சொல்லல்  என  போகுது  . 


 ச்பாஷ்  டைரக்டர் 


1   ஆனந்த  விகடன்ல  ஜெயல்காந்தன்  எழுதிய  அக்னி  பிரவேசம்   சிறுகதை  பின்  கங்கா  எங்கே  போகிறாள்  நாவல்  இவற்றை  மையமாக  வைத்து  ஜெயகாந்தனே  சில  நேரங்களில்  சில  மனிதர்கள்  படத்தை  எடுத்து  ஹிட்  அடிச்ச  பின்னும்  அதே  கதை  நாட்டை சாமார்த்தியமா  எடுத்து  பட்டி  டிங்கரிங்  பண்ணிய  விதம் 


2  ஹீரோ  வேல்யூ  இல்லாத  படத்துக்கு  இளையராஜா  நல்ல  நல்ல  பாட்டுக்களை  மனமுவந்து  போட்டுத்தந்து  தான் தான்  ஹீரோ  என  சொல்ல  வைப்பார்  என்பதைத்தெரிந்து  பாட்டுக்களை  ஹிட்  அடித்த  விதம்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1  திருமணமான  ஹீரோ  அவரால்  கெடுக்கப்பட்ட  நாயகி  இவர்கள்  சந்திப்புக்குப்பின்  என்ன  நடக்கும் என்ற  சுவராஸ்யத்தைக்காட்டி  இருந்தால்  செம  ஹிட்  ஆகி  இருக்கும் , அதை  விடுத்து  ஹீரோவின்  முதல்  குழந்தை  இரண்டாவது  குழந்தை  இவர்கள்  இருவரும்  எப்படி  பழக்றாங்க  அவங்க  பாசப்பிணைப்பு  அப்டினு  தடம்  மாறியதால் பின்  பாதி  டிவி  சீரியல்  ,மாதிரி  ஆகிடுச்சு


2  ஓப்பனிங் சீனில்  ஹீரோயின் கெடுக்கப்பட்டபின்  ஹீரோ  காரில்  ஏறிப்போகும்போது  ஹீரோயின்  கார்  நெம்பரை  நோட்  பண்ணி  இருக்கலாமே? 


3  கெடுக்கப்பட்ட  பெண்ணை  மீண்டும்  சந்திக்கும்  ஹீரோ கடைசி  வரை  அவரிடம்  மன்னிப்பே  கேட்கவில்லை  . இது  மிகப்பெரிய  சறுக்கல் 


4   எம் டி  ஆன  ஹீரோ  தன்னிடம்  பணிபுரியும்  பெண்ணிடம்  எத்தனையோ  சந்தர்ப்பங்களில்  பேசி  இருக்கலாம், ஆனா  கடைசி  வரை  உங்க  கிட்டே  ஒரு  விஷயம்  பேசனும்னு  மட்டும்  தான்  சொல்றார்  அந்த  விஷயத்தை  சொல்லவே  இல்லை 


5   க்ளைமாக்ஸ்  பயங்கர  இழுவை 


 சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  சூப்பர் ஹிட்  ஆன மூன்று  பாடல்களுமே  முதல்  பாதியிலேயே  வ்ந்து  விடுவதால்  யூ  ட்யூப்ல  முதல்  பாதியை  மட்டும்  பார்க்கலாம்  . ரேட்டிங்  2.25 / 5 


 

ஒரு ஓடை நதியாகிறது
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புசி.வி.ஸ்ரீதர்
கதைசி.வி.ஸ்ரீதர்
இசைஇளையராஜா
நடிப்புரகுவரன்
சுமலதா
மனோசித்ரா
பிரதாபசந்திரன்
கலையகம்சித்ராலயா மூவீஸ்
விநியோகம்சித்ராலயா மூவீஸ்
வெளியீடு1983
ஓட்டம்130 நிமிடங்கள்
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூ 35 இலட்சம்

0 comments: