Sunday, July 31, 2022

வட்டம் 2022 - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @ டிஸ்னி ஹாட் ஸ்டார்


 இயக்குநர்  விக்ரமன்  படத்துல  நம்பியாரோ , பி எஸ்  வீரப்பாவோ  நடிச்சாக்கூட அவங்க  நல்லவங்களாத்தான்  வருவாங்க  ஏன்னா  அவர்  எடுக்கற  படங்கள்  எல்லாமே  பாசிட்டிவ்  அப்ரோச்  கதை  அம்சம்  உள்ள  படங்கள். இவ்ளோ  நல்லவங்க  எங்கேப்பா  இருக்காங்க  என்ற  தேடுதல்  கேள்வி  இருக்கும். அப்படிப்பட்ட  இயக்குநர்  விக்ரமன்  ஒரு  த்ரில்லர்  படம்  எடுத்தா  எப்படி  இருக்கும் ?

ஸ்பாய்லர்  அலெர்ட்


 சம்பவம் 1 -  ஹீரோ  ஒரு  பொண்ணைப்பார்க்கறாரு  , காதல்  வசப்படறாரு . அந்தப்பொண்ணுக்கும்  இவர்  மேல  இஷ்டம் தான்  . இரண்டு  பேரும்  வெளிப்படையா  இன்னும்  லவ்வை  சொல்லிக்கலை , ஹீரோ  தன்  வீட்டுக்கு  ஹீரோயினை  இன்வைட்  பண்றாரு . பாப்பாவும்  வருது . ஆனா  ஹீரோவோட  வீடு  பேக்கிரவுண்ட்  இதெல்லாம்  அவருக்கு  பிடிக்கலை . என்  வீட்டை  வந்து  பார்  என்னைப்பிடிக்கும்  என்பதெல்லாம்  கவிதை  எழுதத்தான்  கரெக்டா  இருக்கும், நிஜ வாழ்வில்  பொண்ணுங்க  வசதியைத்தானே  எதிர்பார்க்கறாங்க ? 


நேர்மையான , ஒழுக்கமான  ஏழை ஆண்   பெண்களுக்குத்தேவை  இல்லை . குடிகாரனாவோ  பொறுக்கியாவோ  இருந்தாலும்  பரவால்ல  அவங்களுக்குப்பணக்காரன்  தான்  தேவை . எல்லாப்பெண்களும்  அபப்டி  இல்லை ஒரு 90 %  அப்படித்தான் 


 ஹீரோயின் நைசா கழண்டுக்கறாரு  அதுக்குப்பின்  அவர்  கால்  பண்ணா  எடுக்கறதில்லை . ஒரு  நாள்  ஹீரோ  கண்  எதிரே  ஹீரோயின்  வேற  ஒரு  பாய் ஃப்ரண்டோட சுத்திட்டு  இருக்கறதைப்பார்க்கறாரு . வலியிலேயே  பெரிய  வலி  நம்  நேசத்துக்கு  உரியவங்க  நம்  கண்  முன்னால  வேற  ஒருவரோட  நேசமா  இருப்பதுதான். ஹீரோ  செம  காண்ட் ஆகறார். அவரோட  லவ்வருக்கு  மேரேஜூ,ம்  ஃபிக்ஸ்  ஆகுது . மேரேஜ்  அன்னைக்கு  மண்டபத்துக்கே  போய்  அவரைப்பழி  வாங்கனும்  அல்லது  பாடம்  கற்பிக்கனும்னு  துடிக்கறாரு 


சம்பவம் 2 -  தனியார்  பள்ளி  ஆசிரியர்கள்  ஆசிரியைகள்  வாழ்க்கை  எல்லாம்  கொடுமை ,  மாசம்  3000  ரூபா  சம்பளம் நல்லா சர்வீஸ்   பண்ணா  20  வருசம்  கழிச்சு  இன்க்ரீமெண்ட்  ஒரு  200  ரூபா  தருவாங்க  ஆனா  பாருங்க  இந்த  ஐ  டி ல  ஒர்க்  பண்றவங்களுக்கு  லட்சக்கணக்கில்  சம்பளம்.  அப்படிப்பட்ட வசதியான  வாழ்க்கை  வாழ்ந்த  4  ஐ டி  எம்ப்ளாயர்ஸ்க்கு  திடீனு  வேலை  போய்டுது. அவங்களுக்கு  ஏகப்பட்ட  கமிட்மெண்ட்.  


 குறுக்கு  வழில  சம்பாதிக்க  முடிவு  பண்றாங்க . ஒரு  கோடீஸ்வரன்  மகனைக்கடத்தி  ஒரு  கோடி  ரூபா  கேட்டு  பிளாக்மெயில்  பண்ணலாம்னு  முடிவு  பண்றாங்க   அவங்க  ஒர்க்  பண்ணுன  கம்பெனி  சீஇஓ  தான் அந்த  கோடீஸ்வரன்


சம்பவம் 3  =  ஒரு  சரக்கு  பார்ட்டி  ரோட்ல  நடந்து  போய்க்கிட்டு  இருக்கும்போது  ஆடி  கார்ல  ஒரு  ஆள்  அந்த  லைனை  கிராஸ்  பண்றப்போ  குடிகாரனை  லைட்டா  கார்  டச்  பண்ணிடுது.   கரை  நிறுத்தி  என்னனு  பார்க்கலாம்னு   அந்தக்குடிகாரன்  டக்னு  கார்ல  ஏறி  வண்டியை  எடுங்கறான் .   போகும்போது  திடீர்னு  துப்பாக்கியைக்காட்டி  எனக்கு  ஒண்ணேகால்  கோடி  பணம்  வேணும். உன்  சம்சாரத்துக்கு  ஃபோன்  போட்டு  வர  வை  பணம்  கொண்டு  வரச்சொல்லுனு  மிரட்றான்


  மேலே  சொன்ன  3  சம்பவங்களும்  ஒரு  புள்ளி ல  இணைவதுதான்  திரைக்கதை 


 ஹீரோவா  சிபிராஜ் .  வாரிசு  நடிகர்களான  கார்த்திக் ,பிரபு   , விக்ரம்  பிரபு , விஜய்  , சிம்பு ., சூர்யா  , கார்த்தி  உட்பட  அனைவருமே  அவரவர்க்கு  என   தனித்தனி  பாணி  உருவாக்கிக்கொண்டதால்  ஹிட்  ஆனாங்க , ஆனா  சிபிராஜ்  இன்னமும்  அப்பா  சத்யராஜின்  பாணி  நடிப்பை  நம்புவது  வருத்தம்தான் . காதல்  காட்சிகளில்  வேணா  நல்லா  பண்றார் 


படத்தில்  அதிக காட்சிகளில்  வருபவர்  ஆண்ட்ரியா . கொரோனா  காய்ச்சலில்  பெட்  ரெஸ்ட்  எடுத்தவர்  மாதிரி  பாவ,மா  இளைச்சு   இருக்கார் .  நடிப்பு  ஓக்கே  


ஆண்ட்ரியாவின்  கணவராக  வம்சி  கிருஷ்ணா  கச்சிதமான  நடிப்பு  இவரது    பாடி  லேங்க்வேஜ்  பக்கா . இவருடன்  குடிக்கும்  குடிகாரனாக  திரைக்கதைக்கு  சம்பந்தமே  இல்லாமல்  வரும்  அந்த  கேரக்டர்  நடிப்பில்  அசத்தல் 


அதுல்யா  ரவி  கொழுக்  மொழுக்  கன்னம்  அகண்ட  விழிகள்  என  கவனத்தைக்கவர்கிறார்


  கடத்தல்  காரர்களாக  வரும்  4  பேரில்  அந்த  குண்டான  நபர்  மற்றும்  ஒரு  பெண்  இருவரும்  நடிப்பில்  குட் 


 கே  பிரசன்னாவின்  இசையில்  2  பாட்டு  நல்லா  இருக்கு பாடல்  வரிக்ள்  எல்லாம்  தெளிவா  புரிய்ற  மாதிரி  இருக்கு . பிஜிஎம்  குட்  கோவை  நகரத்தை   இரவில்  இவ்ளோ அழகாகக்காட்டிய  ஒளிப்பதிவாளருக்கு  ஒரு  ஷொட்டு 

   மதுபானகக்டை  என்ற  வித்தியாசமான  படம்  கொடுத்த  இயக்குநர்  கமலக்கண்ணனின்  அடுத்த  படைப்பு  இது


வசனம்  எல்லாம்  பட்டாசா  இருக்கு


 ரசித்த  வசனங்கள்


1 பயத்துலயே  பெரிய  பயம்  இப்போ  நாம  வாழ்ந்துட்டு  இருக்கற  வாழ்க்கை    நம்ம  கையை  விட்டுப்போய்டுமோ  எனும்  பயம் தான் 


2  ஒரு  பெரிய  இரும்புக்கதவை  ஓப்பன்  பண்ண  பெரிய ஆயுதம்  எல்லாம்  தேவை  இல்லை . சின்ன  சாவி  போதும் 


3  வாய்ப்புங்கறது  தானா  தேடி  வராது  நாம  தான்  வர  வைக்கனும்


4  குடிச்சவனைக்கிளப்பறதும்  புதைச்சவனை  எழுப்பறதும்  முடியாத  காரியம் 

5  ஏழைகளை  ஏமாற்ற  ஒரே  வழி  அன்பு  தான் 

6   இவளா  ஃபோன்  பண்ணி  மிரட்டப்போரா?

பொண்ணுங்களால   மட்டும்தான்  இயல்பா  மிரட்ட  முடியும் 


7  டேய்  யார்றா  நீ ? நடு  ரோட்  ல  மிட்  நைட்ல  நீ  இங்கே  என்னடா  பண்ணிட்டு  இருக்கே? 


 யோவ்  போலீஸு  நான்  எப்பவாவது  உன்னை  இப்படிக்கேட்டிருக்கேனா?  நாட்டைக்காப்பாத்தற  குடிகாரனுக்கு    நாட்டையே  வழி  நடத்தறவனுக்கு  நடு  ரோட்ல  உலாத்த  உரிமை  இல்லையா? 


8  பொண்ணுங்களுக்கு  காதல்  ஒத்தை  வார்த்தைல  முடிஞ்சிடுது . ஒத்து  வர்லை  


9  இங்கே  வாழனும்னா  அதிகாரம்  பணம்  இரண்டும்  வேணும்


10  ஒரு  ஆணால்  தர  முடியாத  பாதுகாப்பை அதிகாரம்  பணம்  இரண்டும்  ஒரு  பொண்ணுக்கு  தரும் 


11    அவ  சாகனும்  இல்லைன்னா  சாகப்போறோம்னு  பயந்து  பயந்தே  வாழனும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  ஹீரோ  சிபிராஜ்  குடிச்ட்டு  போறப்ப  அவரை  வழி மறிச்சு  1000  ரூபா அலேக்  போடும்  போலீஸ்  ஆடி  காரில்  வருபவரை  நிறுத்தி  எதுவும்  கேட்காமல்  விட்டு  விடுவது  எப்படி ? 


2   நடு  ராத்திரில  டி வி எஸ்  50 ல  ஒரு  பேக்ல  ஒரு  கோடி  ரூபா  ஹாட்  கேஸ்  வெச்சுக்கிட்டு  சுத்தறாங்க  போலீஸ்  கண்டுக்கவே  இல்லை 


3  ஹீரோ  சிபிராஜ்  மிரட்டும்போது  வம்சி கிருஷ்ணாவோ  ஆண்ட்ரியாவோ  பெரிய  எதிர்ப்பெல்லாம்  காட்டலை  , சில  காட்சிகளில்  எங்கே  ஆண்ட்ரியா  சிபிராஜ்க்கு  ஜோடியா  மாறிடுவாரோனு  பயந்துட்டேன் 


4  வசனமா  நல்லாருக்கும்  படம்  திரைக்கதையா  திருப்தி தந்த  படம்  க்ளைமாக்ஸ்  முடிஞ்சதும்  பெரிய  திருப்தியைத்தரலை ., ஏன்னு  தெரியலை. ஒரு  வேளை  எல்லாரும்  நல்லவங்க  என்று  காட்டுனதாலயா? 


5  ஹீரோ  சிபிராஜ்  வில்லன்  டைப்  தாடி  கெட்டப்பில்  படம்  பூரா  இருப்பவர்  ஹீரோயின்  அருகே  இருக்கும்போது  மட்டும்  டீசண்ட்  ட்ரிம் தாடில  மாறுவது  எப்படி ? 


6    ஆடி  கார்  நெம்பரை  போலீஸ்க்கு  ஃபோன்  பண்ணி  சொன்னாலே  ஜிபிஎஸ்  வெச்சு  காரை  ட்ரேஸ்  பண்ணிடலாமே  போலீஸ்? ஏன்  அதை  செய்யலை ? 

 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாமூல்  மசாலா  படங்கள்  பார்ப்பவர்களுக்கு  இது  பிடிக்காது . பிரமாதமான  படம்னு  சொல்லிட  முடியாது  அதே  சமயம்  மொக்கைப்படமும்  இல்லை  பார்க்கலாம்  லெவல்  விகடன்  ,மார்க்  40   ரேட்டிங்  2.25  / 5   அடல்ட்  கண்ட்டெண்ட்  இருக்கா?னு  யாரும் கவலைபட   வேணாம்  படத்துல  கண்டெண்ட்டே  இல்லை அடல்ட்  கண்டண்ட்  மட்டும்  இருக்கவா  போகுது ?


குற்றப்பத்திரிக்கை (1991) ( 2007) - சினிமா விமர்சனம் ( ராஜீவ் காந்தி கொலை வழக்கு)


1990 ல  புரட்சிக்கலைஞரின் புலன் விசாரணை  என  போஸ்டர்  பார்த்த  போது  அது  அவ்ளோ  பெரிய  ஹிட்  ஆகும்  என  யாருக்கும்  தெரியாது. ஆட்டோ சங்கரின்   வாழ்க்கையை  வைத்து  திரைக்கதை  எழுதப்பட்டிருக்கும். ரிலீஸ்  ஆனபின்  அதன் விளம்பரங்களில்  வசூல்  மழையில்  நனைகிறார்  ஹானஸ்ட் ராஜ்  என  குறிப்பிடப்பட்டது , ஈரோடு ராயலில் 85  நாட்கள்  ஓடியது


1991 ல  கேப்டன்  பிரபாகரன், கேப்டனின் 100வது படம். ரஜினியின் 100வது  படம்  ஸ்ரீராகவேந்திரர்  ஃபிளாப்  கமலின் 100வது படம்.   ராஜபார்வை அடிவாங்கியது , சத்யராஜின்  வாத்தியார்  வீட்டுப்பிள்ளை  அட்டர் ஃபிளாப், ஆனால்  இது  பிரம்மாண்டமான  வெற்றி  ஈரோடு  ஸ்ரீ கிருஷ்ணாவில் 140  நாட்கள்  ஓடியது


குற்றப்பத்திரிக்கை 1992 ல் ரிலீஸ்  ஆகவேண்டிய  படம் சென்சார்  பிரச்சனையால்  தாமதம்  ஆகி 2007ல்  ரிலீஸ்  ஆகி சென்சாரால்;  அதிக  காலம்  இழுக்கடிக்கப்பட்ட  படம் என  பெருமை  பெற்றது. லேட்  ரிலிஸ்  என்பதால்  சென்சாரால்  கொத்து  புரோட்டா  போடப்பட்ட  பட்ம்  என்பதால்   ரெண்டே  முக்கால்  மணி  நேரப்படம்  ஒண்ணே  முக்கால்  நேரப்படமாக  சுருக்கப்பட்டதால்  கண்ட்டிநியூட்டி  மிஸ்சிங்  பிராப்ளத்தால்  படம்  ஓடலை   ஈரோடு ரவி  தியேட்டரில்  ஒரு  வாரம் மட்டுமே  ஓடியது


புலன் விசாரணை  படத்துக்கு   ஆர்  கே  செல்வமணி  சம்பளம்  வெறும்  40,000  ரூபாய். கேப்டன்  பிரபாகரன்  படத்துக்கு 70,000 ரூபாய். முதல் 2 படங்களுமே  செம  ஹிட்  என்பதால் ஆர்  கே  செல்வமணிக்கு  மவுசு  கூடியது   ரோஜாவை  அறிமுகப்படுத்தி  செம்பருத்தி  செம  ஹிட்  ஆன  லவ்  ஸ்டோரி . விஜயகாந்த்தை  வைத்து  த  மே  டே  என  ஆங்கிலப்படம்  எடுப்பதாக  விளம்பரம் வந்தது  ஆனா  அது  டம்மி  விளம்பரம்  சும்மா  பில்டப்புக்காகவும்  அடுத்த  படத்துக்கு  ஃபைனான்ஸ்  ரெடி  பண்ணவும்  செஞ்ச  டெக்னிக்  1995ல்  மம்முட்டி  நடித்த   மக்கள்  ஆட்சி  1997 ல்  அரசியல்  ஹிட்  ஆனது


இவரது  ஓடாத  படங்கள்   அதிரடிப்படை 1994 , கண்மணி 1994  ராஜமுத்திரை 1995  அடிமைசங்கிலி 1997  ராஜஸ்தான்  1999  புலன் விசாரனை  பாகம் 2    2015

ஸ்பாய்லர்  அலெர்ட் 


படம்  போட்டு  முதல் 40  நிமிடங்கள்  வேஸ்ட்  இரண்டு  ஹீரோக்கள்  பர்சனல்  லைஃப்ல  நடந்த  லவ்  போர்சன்ஸ்  மேரேஜ்  என  சம்பந்தம்  இல்லாம  கதை  நகருது. 42 வது  நிமிசம்  கதைக்கு  வருது. பெரும்பாலும்  நாம்  கேட்ட  படித்த  சம்பவங்கள்  தான்  புதுசா  எதுவும்  இல்லை 


 ஹீரோக்களா  ராம்கி  அண்ட்  ரகுமான் . இதுல  ரகுமான்  கேரக்டர்  டம்மி  தான்   ராம்கிதான்  மெயின்  ஹீரோ  அவரது  கேரகட்ர்  ஸ்கெட் ஆரம்பத்தில்   ஜெனிலியாத்தனமாக  இருந்தாலும்   42 வது  நிமிசத்தில்  இருந்து  மெச்சூரிட்டியா  காட்டப்படுது . கெத்தான  தோற்றம் 


 +ரகுமானுக்கு  ஜோடி   ரோஜா  ராம்கிக்கு  ஜோடி  ரம்யா  கிருஷ்ணன், இருவருக்கும்  அதிக  வேலை  இல்லை 


 மன்சூர்  அலிகான்  சிவராசன்  கேரக்டர்   செம  கெட்டப்  அண்ட்  பாடி  லேங்க்வேஜ்  டயலாக்  டெலிவரி


விஜயகுமார்  டெல்லில  இருந்து  வரும்  ஆஃபீசராக  கெத்து  ஆக்டிங் 


நளினி  , முருகன்  கேரக்டர்களாக  வருபவர்கள்  உருவத்தோற்றத்தில்  அருமையான  பொருத்தம் .  ராஜிவ்  காந்தி  வேடத்தில்  அனுபம் கெர் கச்சிதாமன்  முக  சாயல்  ஹைட் தான்  பத்தலை 


நம்பியார்  போலீஸ்  கமிஷனராக  வருகிறார். தணுவாக  நடித்தவர்  சிரிச்ச  முகமா  இருப்பது  உறுத்தல்


வாகை  சந்திர  சேகர்  திமுக  கொடிக்கம்பம்  சாய்க்கபட்டதுக்கு  10  நிமிசம்  பேசும்  உனர்ச்சிகரமான  டயலாக்  எடுபடலை 


இசை  இளையராஜா  சொல்லிக்கற  மாதிரி  எதுவும்  இல்லை 

 ஆர்  கே  செல்வமணி யின்  டச்  ஏதும்,  இல்லை  . அதுதான்  பெரிய  ஆச்சரியம்


ரசித்த  வசனங்கள் 



1  நான்  ஒண்ணு  சொன்னா  தப்பா  நினைக்க  மாட்டீங்களே?  நீங்க  அழும்போது  கூட  அழகா  இருக்கீங்க 


2   நாம  ராஜீவ்  காந்தியை  கொலைபண்ணப்போற  விஷயம்  நமக்கு  உதவி  வரும்  தமிழர்களுக்கு  தெரியக்கூடாது  என்னதான்  நம்ம  இயக்கம்  மேல  அவங்களுக்கு  பற்றிருந்தாலும் தமிழர்கள்  இந்தக்கொலைக்கு  ஆதரவு  தர  மாட்டாங்க 

3  ராஜீவ்  காந்தி  கொலை  நடந்தப்போ  கூடவே  இறந்தது  போலீஸ்காரங்களும்  பொதுமக்களும் தான்  ஒரு  அரசியல்வாதி  கூட  உயிர்  இழக்கலையே? அது  ஏன்? எப்படி? 


4  குண்டு  வெடிப்பது  உங்க  கட்சிக்காரங்களுக்கு  முன்  கூட்டியே தெரியுமா?  ஒரு  ஆளைக்கூட  அந்த  ந்ந்ரியாவில்  பார்க்க  முடியலையே? 


5 [பிரச்சனையை  எப்படி தீர்ப்பது?னு  போலீஸ்  பார்க்கும்  பிரச்சனையை  எப்படி  உண்டாக்கலாம்னு  அரசியல்வாதிங்க  பார்ப்பானுங்க 


4   எதிர்க்கட்சியா  இருக்கும்போது  போலீஸை  எதிரியா  நினைக்கறிங்க  ஆளும்  கட்சி  ஆகிட்டா  அடிமையா  நடத்தறீங்க 


5  போலீஸ்காரங்க  சாப்பிடறது  சாதா  அரிசி  இல்லை  வாய்க்கரிசி   எந்த  நேரத்துல  சாவோம்னு  அவங்களுக்கு  தெரியாது 


6   உன்  முதலாளி  எங்கே?


 வெளீல  போய்  இருக்காரு  சார்


 ஓஹோ, நீ  உள்ளே  போகனுமா? 


7  உன்  புருசனுக்கு  ஹேப்பி  பர்த் டே  சொன்னியா?


அவரும்  ஹேப்பியா  இல்லை , நானும்  ஹேப்பியா  இல்லை, எதுக்கு  ஹேப்பி  பர்த் டே ?


8  நாம  போராளிங்க நாம  மரணம்  அடைஞ்சாக்கூட  அது  வீரமரணமாத்தான் இருக்கனும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1  ஓப்பனிங்  சீன்ல  நைட்  டைம்ல  ஒரு  கும்பல்  வேன்ல  வந்து  மிஷின்கன்னால  65  தடவை  சுடுது . பெரிய  பட்ஜெட் படம்கறதுக்காக  லூஸ்தனமா  ஒரு  டம்மி  பீசைக்கொல்ல இத்தனை  புல்லட்சை  வேஸ்ட்  பண்ணுவாங்களா? அது  போக  நைட்   டைம்  சத்தம்  கேட்டு  ஆட்கள்  கூடிட  மாட்டாங்களா?


2   ஹீரோ  ரகுமான்  அசிஸ்டெண்ட்  கமிசனரா  இருக்காரு. அவர்  வீட்டுக்கு  வரும்போது  பெட்ரூம் ல  எல்லாம்  கலைஞ்சிருக்கு. எவனோ  வீணாப்போனவன்  அவர்  வீட்டு  பின்  வாசல்  வழியா  ஓடறான்  அதைப்பார்த்து  உடனே  அவர்  மனைவி  ரோஜா  நடத்தைல  சந்தேகபப்டுவது  மடத்தனமா  இருக்கு  அப்பவே  நான்  உன்னை  டைவர்ஸ்  பண்றேன்னு  சொல்றாரு, சந்தேகப்பிராணி  ரகுவரன்  கூட  புரியாத  புதிர்ல   மனைவி  ரேகா  மேல  இவ்ளோ  குயிக்கா  சந்தேகபப்டலை 


3  போலிஸ்   டிபார்ட்மெண்ட்ல  உய்ர்  பதவில  இருக்கற  ராம்கி  ரகுமான்  இருவரும்  ஃபங்க்  கட்டிங்ல  ஹேர் ஸ்டைல்  வெச்சிருப்பது  சகிக்கலை ,  ட்யூட்டி  டைம்ல  யூனிஃபார்ம்  போட்டுக்கிட்டு  படம்  பூரா  தம்  அடிச்சுட்டே  இருக்காங்க 


4   டைரக்டர்  ஆர் கே  செல்வமணி யின்  லவ்வர்  என்பதால்  நாயகி  ரோஜாவை  கண்ணியமான  சேலை க்ளோஸ்  நெக்  ஜாக்கெட்  காஸ்ட்யூம்ல   காட்டிட்டு  ரம்யா  கிருஷ்ணனை  மிடி  ஸ்லீவ்  லெஸ்  டாப்ல  கிளாமரா காட்டலாமா? 


5   ராம்கி - ரம்யா  கிருஷ்ணன்  லவ்  போர்சன்  மகா  மட்டம் . போலீஸ்  ஆஃபீசர்ஸ்  இவ்ளோ   தர  லோக்கலா  இறங்குவாங்களா? 


6   எட்டு  மாச  கர்ப்பிணியா  இருக்கற  ரம்யா  கிருச்ஷ்ணன்  வலி  இருக்குனு  டாக்டர்  ரோஜாவைப்பார்க்க  வர்றார். அவங்களை  படுக்கைல  படுக்க   வெச்சு  பிளட்  பிரஷர்  செக்  பண்றார்.  சாதா  ஆளையே  உக்கார  வெச்சுதான்  பி பி  செக்  பண்ணுவாங்க., மாசமா  இருக்கற  பொண்ணை  இப்படியா  படுக்க  வெச்சு  பிபி  செக்  பண்ணுவாங்க ?

7   சிவராசன்  பங்களாவை  சுற்றி  போலீஸ்  ரவுண்ட்  அப்  பண்ணிடுச்சு  . சிவராசன்  அடியாளுங்க  கை  வெடி  குண்டுகளை  கரெக்டா  போலீஸ்  இருக்கற    ஏரியாவுக்கு  அரை  பர்லாங்க்  தூரம்  கேப்  விட்டு  போடறாங்க


8  நிஜ  சம்பவத்தில்  ஜீப்பை  ,மறைவா  நிறுத்திட்டுதான்  போலிஸ்  ரவுண்ட்  அப்  பண்ணி இருப்பாங்க  ஆனா  படத்துல  செஸ்  காயின் ல  பான்  முன்னால  இருக்கற  மாதிரி  ஜீப்கள்  எல்லாம்  அணி  வகுத்து  நிக்குது  ( இது  ஏன்  ஆபத்துன்னா  அவங்க  வெடி  குண்டு  வீசி  ஜீப்ல  பட்டா  பெட்ரோல்  டேங்க்  வெடிச்சு  போலீஸ்க்கு  ஆபத்து ) 


9  விடுதலைப்புலி  இயக்கத்தின்  முக்கிய  ஆளான  நடிகர்  ராஜேஷ்  ஒரு  சீன்ல  தன்  அடியாளுங்களைப்பார்த்து  நீங்க  என்ன   பண்ணுவீங்களோ  எனக்குத்தெரியாது  இன்னும் 10  நிமிசத்துல  அசிஸ்டண்ட்  கமிஷனர்  இங்கே  வந்தாகனும்கறார் , ஏம்பா  தலைவன்  உமக்கே  தெரியலைன்னா  அடியாளுங்களுக்கு  எப்படி  தெரியும்?> 


10  விடுதலைப்புலிகள்  ஜெ  வைக்கொலை  செய்ய  திட்டம்  போட்டதை  போலீஸ்  முறியடிச்சுதுனு  வசனமும்  காட்சியும்  வருது  எனக்குத்தெரிஞ்சு  நிஜத்துல  அப்படி  எல்லாம்  நடக்கலை 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - உணமை  சம்பவத்தை  அடிப்படையா  வெச்சு  படம்  எடுத்தாலே  ஹிட்  ஆகிடும்  என  நினைக்கக்கூடாது  திரைக்கதையில் சுவராஸ்யம்  தேவை . யூ  ட்யூப  ல  கிடைக்குது  பார்க்கறவங்க  பார்க்கலாம் ஒரு  மணி  நேரம்  52  நிமிசம்  ஓடுது  படம் . ரேட்டிங் 2 / 5 

Saturday, July 30, 2022

HEY SINAMIKA ( 2022) ஹே சினாமிகா - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா)


நான்  11 வது  படிக்கும்போது  பக்கத்து  வீட்டுல  ஒரு  பொண்ணைப்பார்த்தேன். அது  நம்மைப்பார்க்குதா? இல்லையா?னு  12  வருசமா  செக்  பண்றேன்  ,12* 365* 3 வேளை = 13,140    தடவை நான்  பார்த்தென், ஆனா  அது  பாக்கல  நம்மை  எல்லாம்   மனுசனாவே  மதிக்கலைனுஅப்றம் தான்  தெரிஞ்சுது . ஆனா  இந்த  சினிமாவில்  மட்டும்  தான்  ஒரே  ஒரு  டைம்  தான்  பார்க்கறாங்க, உடனே   லவ்  ஆகிடுது 


Spoiler alert


ஹீரோ  ஹீரோயின் ரெண்டு  பேரும்   நேர்ல  சந்திக்கறாங்க . முதல்  பார்வைலயே  காதல்  அடுத்த  சீன்ல யே  கல்யாணம். எனக்குத்தெரிஞ்சு  லவ்  ஸ்டோரில  ஓப்பனிங்க்லயே   இவ்ளோ க்யுக்கா  மேரேஜ்  ஆவது  மணிரத்னம்  இயக்கிய  பம்பாய்  படத்துக்குப்பின்  இதுதான்னு  நினைக்கிறேன் 


ஹீரோயினுக்கு   திறமை  இருக்கு . லட்சக்கணக்கில்  சம்பளம்  வாங்கும்  வேலை. ஹீரோ  வீட்டோட  புருசனா  இருக்கார். லொட  லொடனு பேசிக்கிட்டே  இருப்பார் .  வீட்டை  க்ளீன்  பணணுவார்   ச,மைப்பார் . ஒரு  சம்சாரத்துக்கு  இதை  விட  சிறந்த  அடிமை  சாரி  புருசன்  கிடைக்க  குடுத்து  வெச்சிருக்கனும்


ஆனா  ஒரு  கட்டத்துல  அவருக்கு  ஹீரோ  போர்  அடிச்சுடுது. பொதுவாவே  பொண்ணுங்க  புருசனைப்பிடிக்கலை  டைவர்ஸ்  வேணும்னு  கேட்க  நான்  கேள்விப்பட்டவரை  1  துரோகம்  செய்து  எக்ஸ்ட்ரா  மேரிட்டல்  லைஃப்  அல்லது  சின்ன  வீடு  வெச்சிருப்பது  2   ஓவர்  சரக்கு  தம்  3    சந்தேகப்பிராணி 

4  சைக்கோ  5  தண்டச்சோறு


 மேலே  சொன்ன  காரணங்கள்  எல்லாம்  இல்லாம   ரொம்ப  நல்லவனா  இருந்தும்  அவன்  தொணதொண  கேரக்டர்  என்பதாலாயே  பிடிக்காம  போய்டுது பிரேக்கப்  பண்ணிக்கலாம்னு  ஹீரோயின்  முடிவெடுப்பது  ஆச்சரியமா  இருக்கு  நம்பகத்தன்மை  இல்லாமலும்  இருக்கு 


ஹீரோயின் குடி  இருக்கற  அபார்ட்மெண்ட்க்கு  பக்கத்துல  ஒரு  லேடி  சைக்யாட்ரிஸ்ட்  இருக்காங்க. அவரு   பர்சனல்  லைஃப்ல  ஆணால்  பாதிக்கப்பட்டவர் . ஆண்கள்  எல்லாருமே  கேப்மாரிங்கதான்  என்ற  எண்ணத்தில்  அசையா  நம்பிக்கை  உள்ளவர். டைவர்ஸ்  க்கு  கவுன்சிலிங்க் கு  யார்  வந்தாலும்  பிரிச்சு  விட்டுட்டுதான்  அடுத்த  வேலை


அந்த  லேடி  கிட்டே  ஹீரோயின்  ஒரு  உதவி  கேட்கறாங்க .  என்  புருசனை  லவ்  பண்ற  மாதிரி  நடி ., அதை  சாக்கா  வெச்சு  நான்  டைவர்ஸ்  பண்ணிடறேன்கறா


இந்த  டிராமா ல  நிஜமாவே  அவங்க  2  பேரும்  லவ்   பண்ண  ஆரம்பிச்சிடறாங்க  இதைக்கண்டு  காண்டு  ஆகும்  ஹீரோயின்  தூ  தூ  மாறாட்டம்  தொட்ட  கை  நட்டம்  எல்லாம் வாபஸ்  அப்டிங்கறா  இதுக்குப்பின்  என்ன  ஆச்சு  ? என்பதுதான்  க்ளைமாக்ஸ் 


ஹீரோவா  துல்கர்  சல்மான்.  மம்முட்டி  மகன்  என்பதால்  அவரது  ரசிகர்கள்  எல்லாம் இவருக்கு  ஷிஃப்ட்  ஆவது  பிளஸ்.  மலையாளத்தில்  சார்லி   தமிழில்  வாயை  மூடிப்பேசவும்  இவரது  அடையாளம்,  இவருக்கு  ஏராளமான  ரசிகைகள் . நம்ம  ஊர்ல  கமல்  ,மோகன்,  சுரேஷ் ,கார்த்திக் , விஜய் , அஜித்   மாதிரி  கேரளாவில் அதிக  ரசிகைகள்  டோவினோதாமஸ், துல்கர்  இருவருக்கும்தான்.  ஹேர்ஸ்டைல்  பாடி லேங்க்வேஜ்  எல்லாம்  அழகு . ஆர்  ஜே ஜே  வாகப்பணி  ஆற்றும்ப்போது  அசத்துகிறார்


 ஹீரோயினா  அதிதி ராவ் ஹைத்ரி  செம  ஹைட்  ஜி. இவரோட  டிரஸிங்   ஸ்டெட்ஸ்  வளையல்  எல்லாம்  பிரமாதமான  கலெக்சன்ஸ் . வேகமா  நடக்கும்போது  குதிரை  மாதிரி இருக்கிறார்  நடிப்பும்  அருமை .கண்ணியமான  கிளாமர் ஒரு  பிளஸ்


 இன்னொரு  ஹீரோயினாக  காஜல் ஜில்  ஜில்  அகர்வால் . . குளிர்ச்சியாக  இருக்கிறார். நிஜவாழ்வில்  மேரேஜ்  ஆனவர்  மேலும்  முதல்  ஹீரோயின்  அதிதியை விட  சீனியர்  என்றாலும்  அவரை  இவர்  அக்கா  அக்கா  என  அழைப்பது  செம  காமெடி . க்ளைமாக்ஸில்  நல்ல  நடிப்பு  காட்டும்  வாய்ப்பு  அது  போக   படம்  முழுக்க  கிளாமர்  காட்டும்  வாய்ப்பு 


பிருந்தா  மாஸ்டர்  டான்ஸ்  மாஸ்டராக  இருந்து  டைரக்டராக  பிரமோஷன் . நல்ல  முயற்சி 


 பாடல்கள்  சுமார்  தான்  இசையும்  டிட்டோ  இதுமாதிரி  லவ்  சப்ஜெக்டில்  பாட்டு  ஹிட்  ஆனால்  கூடுதல்  பலம் 


 ஒளிப்பதிவு  எடிட்டிங்  லொக்கேஷன்ஸ்  ஆர்ட்  டைரக்சன்  எல்லாம்  அழகு 



சபாஷ்  டைரக்டர் (  பிருந்தா  மாஸ்டர்) 


1    சேரன்  எடுத்த  ஆட்டோகிராஃப் ( ஒரு  ஆணுக்கு  ஏற்படும்  பல  காதல்கள்)   செம  ஹிட்  ஆனா   இயக்குநர்  சசி  இயக்கிய  பூ (  ஒரு  பெண்ணுக்கு  ஏற்படும்  ஒரு  காதல்  ஒரு  குடும்ப  வாழ்க்கை ) சரியாப்போகலை . காரணம்  ஒரு  பெண்   இரு ஆண்களை  பேலன்ஸ்  பண்ணுவதை  தமிழ்  ஆடியன்ஸ்  ஏத்துக்கறதில்லை. இதை  உணர்ந்து   எ  பாய்  ஃபிரண்ட்  ஃபார்  மை  ஒயிஃப்   படத்தை  பட்டி  டிங்கரிங்  பண்ணி  ஹீரோ  இடத்தில்  ஹீரோயினை  போட்டு  எடுத்த  ஐடியா  குட் 


2   முக்கிய  கேரக்டர்களுக்கு  தூய  தமிழ்ப்பெயர்  வைத்தது  பாரதியார் கவிதைகளை  கேப்  கிடைக்கும்  இடங்களில்  பயன்படுத்துவது 


3   மதன்  கார்க்கியின்  வசனங்கள்  பலம்  , ஹீரோ  லொட  லொட  கேரக்டர்  என்பதால்  ஏகப்பட்ட  தத்துவங்கள்  சொல்ல  வேண்டிய  கட்டாயம்  ( இதுக்கு  முன்  இதே  மாதிரி  ஹீரோ  ஓவர் தத்துவம்  சொன்ன  படம்  யூத்   ஷாஜகான்


 4  ஒளிப்பதிவு  ப்ரீத்தா ஜெயராமன்   எடிட்டிங்  ராதா ஸ்ரீராம் என  தொழில்  நுட்பக்கலைஞர்கள்   பலர்  பெண்கள்  வெரிகுட்  அட்டெம்ப்ட் 

 ரசித்த  வசனங்கள்  ( மதன்  கார்க்கி )


1 எல்லாராலயு,ம்  எல்லா  நேரமும்  ஏமாத்திட்டு  இருக்க  முடியாது  , உண்மை  எப்படியும்  தேடி  வரும்


2  கோபத்தை  அடக்காதே  வெளிப்படுத்திடு


3 ஆம்பளைங்கள்ல  நல்லவன்  இருக்க  வாய்ப்பே  இல்லை , நீங்க  இன்னும்  கண்டுபிடிக்கலைன்னு  வேணா  சொல்லுங்க


4 நமக்குப்பிடிக்காத  எதையும்  வீட்டுல  வெச்சுக்கக்கூடாது


5   அறிவின்  உச்சம்  தொட்டு  விட்டோம்  என  எண்ணும்போது  எறும்பளவு  ஏமாற்றம்  கூட  யானையைப்போல்  நம்மை  மிதித்து  நசுக்கும்


6  மழையை  யாராவது  உள்ளே  இருந்துட்டே  ரசிப்[பாங்களா?  நனைஞ்சுட்டே  ரசிக்கனும்


7  பிரியறதுக்கு  1000  காரணங்கள்  கிடைக்கலாம்  ஆனா  சேர்வதற்கு ஒரே  காரணம்  போதும்  காதல் 


8  தப்பு  யார்  வேணா  செய்யலாம் , ஆண்  என்ன ? பெண்  என்ன?


9  இந்த  உலகத்துல  எந்த  ஆணும்  நல்லவன்  இல்லை  என்பதை  நிரூபிக்க  விரும்பறேன்


10   நீ  நீயா  இரு  நான்  நானா  இருக்கேன்  எனக்காக  நீ  உன்னை  மாத்திக்க  வேணாம் , நீயாவே  இருப்பியா?


11   ஆண்கள்  போடும்  டிரசை  பெண்கள்  போடலாம், ஆனா பெண்கள்  போடும்  டிஎரசை  ஆண்கள்  போட்டா  கேவலமா?


12  ஒயிஃப்னா  எனக்கு  பயம்  இல்லை  அவ்ளோ  பிடிக்கும் 


13  குழந்தையா  இருக்கும்போதுதான்  கேள்வி  கேட்கறோம்  பெரியவங்க  ஆனதும்  கேட்கறோமா? 


14  பேச்சு  எனக்கு  ரத்த  ஓட்டம்  மாதிரி 


லாஜிக்  மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் ஆலோசனை


1    காஜர்  அகர்வால்  ஒரு  சீன்ல  தன்  கழுத்துல  இருக்கற  6  பவுன்  டாலர்  செயினை  கழட்டி  ரோட்ல  தூக்கிப்போடறாங்க . எந்தப்பொண்ணாவது  அப்டி  செய்வாங்களா? டிசைன்  பிடிக்கலைன்னா  அழிச்ட்டு  புது  மாடல்  ரெடி  பண்ணிக்கலாமே?  ரெண்டரை  லட்சம்  அசால்ட்டா   போகுது 


2  எந்த  முடிவையும்  நாம தான்  எடுக்கனும் அடுத்தவங்க  கைப்பாவையா  இருக்கக்கூடாதுனு  கொள்கை  உள்ள  ஹீரோ  க்ளைமாக்ஸ் ல  மனைவியை  டைவர்ஸ்  பண்ணலாமா?? மன்னிக்கலாமா? என  பொதுமக்கள்  கிட்டே  கருத்து  கேட்பது பின்னடைவு 


3  காஜர்  அகர்வால்   ஹீரோ  கிட்டே  காதலிக்கற  மாதிரி  நடிக்கத்தான்  வந்தேன்  ஆனா  நிஜமாவே  லவ்  ஆகிடுச்சு  என்பதை  டயலாக்கா  மட்டும்  தான்  சொல்றார்  அதை  விஷூவலாக  காட்டனும் 


4 அதே  போல  ஹீரோ  ஹீரோய்னிடம்  ஒரு  கட்டத்தில்  அவளை  லவ்  பண்ணலாமா? என  யோசித்தேன்  என்கிறார்    இன்னொரு  இடத்தில் உன்னைத்தவிர  வேறு  யாருக்கும்  இடம்  இல்லை  என்கிறார்  குழப்பம்  அவருக்கு 


5  ஒரு  பெண்ணைக்கவர  ஆண்  1008  முயற்சிகள்  , ஐடியாக்கள்  ட்ரை  பண்ணனும்  ஆனா  ஒரு ஆணைக்கவர  ஒரு  பெண்  எந்த  முயற்சியும்  எடுக்கத்தேவை  இல்லை   பெண்  தயார்  என்றாலே  போதும்  ஒரு  பெண்  இயக்குநருக்கு  இந்த  உண்மை  புரியாமல்  என்னென்னமோ  தகிடுதித்தம்    எல்லாம்  பண்ணனுமா? 


6  படத்தில்  பெரிய  ட்விஸ்ட்  ஏதும்  இல்லை  நான்  இயக்குநராக  இருந்தால்  அல்லது  திரைக்கதை  எழுதி  இருந்தால்  அந்த  சக  ரேடியோ  ஜாக்கி  ஹீரோவை  லவ்வுவது  போல  ஒரு  ட்விஸ்ட்  கொடுத்திருப்பேன் ( அதான்  தம்பி  நீ  இல்லை) 


7  ஹீரோ  ஹீரோயின்  கிட்டே  தான்  லொட  லொடனு பேசறார்  ஆனா  காஜல் கிட்டே  கம்மியாதான்  பேசறார் ஒரு  கேரக்டர்னா  எல்லார்  கிட்டேயும்  ஒரே  மாதிரிதானே  பேசனும் ?

சி பி எஸ்  ஃபைனல்க் கமெண்ட் -     நம்பகத்தன்மை  இல்லாத  ஆனா  அழகான  காதல்  கதை  பெண்கள்  துல்கரை  சைட்  அடிக்க  ஆண்கள்  அதிதி  , காஜல்,  திவ்யா  என  பலரை  சைட்  அடிக்க  ஆண்கள்  பார்க்கலாம் . ஃப்ரேம்  பை  ஃப்ரேம்  அழகியல்  கொஞ்சும்  ஒளிப்பதிவு    ரேட்டிங் 2. 5/5   இது  நெட்  ஃபிளிக்ச்டிலும்  ஜியோ  விலும்  கிடைக்குது  ஒரே ஒரு  டவுட்  அனாமிகான்னா  பேர்  இல்லாதவர்  சினாமிகான்னா  என்ன  அர்த்தம் ? ஏன்னா  படத்துல  வர்ற  எந்த  பெண்  கேரக்டருக்கும்  அந்தப்பேரு  இல்லை  ஒரு  வேளை  குத்துமதிப்பா  சினேகிதினு  அர்த்தமா  இருக்குமோ? 

Friday, July 29, 2022

ஆத்மா (1993) - சினிமா விமர்சனம் ( மிஸ்ட்ரி த்ரில்லர் )


1   கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாளே எனக்காக  

கண்ணாளன்  ஆசை  மனதைத்தந்தானே  அதற்காக 

கல்லூரி  வந்து  போகும்  வானவில் நீ


2  விளக்கு  வைப்போம்  விளக்கு  வைப்போம்   குலம்  விளங்க விளக்கு  வைப்போம் 


3  நினைக்கின்ற  பாதையில்  நடக்கின்ற  தென்றலே 

நடக்கின்ற  தென்றலை  அணைக்கின்ற  நாணலே!


போன்ற  சூப்பர்  ஹிட்  பாட்டுக்களுக்காகவே  இந்தப்படத்தைப்பார்க்கலாம். இளையராஜா  விளையாடி இருப்பாரு 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஹீரோ ஒரு  தொல் பொருள்  ஆராய்ச்சியாளர்  அவருக்கு  பழங்கால  ஓலைச்சுவடி  ஒண்ணு  கிடைக்குது .. அதுல  சொல்லப்பட்டிருக்கும்  விஷயம்  என்னான்னா  குறிப்பிட்ட  ஒரு  இடத்துல  நாக  காளி  அம்மன்  கோவில்  இருக்கு  அதை  ஒட்டி  ஒரு  அருவி  இருக்கு . பவுர்ணமி  அன்னைக்கு  அந்த  அருவில  குளிச்சா  கீராத  வியாதி  எல்லாம்  தீரும்  அது  போக  போனசா  கடவுள்  அன்னைக்கு  எழுந்தருளப்போறாரு  என்ற  விஷய்ம்  தெரிய  வருது 

 இது  மீடியாவில்  பரபரப்பா  வைரல்  ஆகுது . அப்போ  நாத்திகம்  பேசிட்டு  சுத்திட்டு  இருக்கும்  ஒரு  வெட்டிக்கும்பல்  அந்தக்கோயிலை  வெடிகுண்டு  வெச்சு  தகர்த்துட்டா   கடவுள்  இல்லை . அப்டி  ஒரு  சக்தி  இல்லைனு  ஜன்ங்களுக்கு  நிரூபிக்கலாம்னு  லூஸ்  தனமா  நினைக்குது 


இப்போ  போலீஸ்க்கு  ரெண்டு  வேலை  1  அந்தக்கோயிலுக்கு  வரும்  பக்தர்களுக்கு  பாதுகாப்பு  அளிக்கனும்.2  இந்த  நாத்திகம்  பேசிட்டு  சுத்திட்டு  இருக்கும்  தண்டக்கும்பலைப்பிடிக்கனும், இது தான்  மெயின்  கதை 


 கிளைக்கதைகள் 


1  ஹீரோவோட  அப்பா  அவரோட  வளர்ப்பு  அப்பா . அவரு  போன  ஜென்மத்துல  பெரிய  சித்தரா  இருந்தவரு. அவரு  கடவுளை   தரிசிச்சு  வரம் வாங்கிட்டா  பெரிய  ஆள்  ஆகிடுவார்னு  சாத்தான்  தன்னோட  தங்கச்சியை  அனுப்பி  அவரோட்  தவத்தை  கலைக்க  ஐடியா பண்றாரு. அந்த  தங்கச்சி  நிஜமாவே  அந்த  சித்தர்  மேல  ஆசைப்பட்டு  அவரை  அடைய  முடியாம  தற்கொலை  பண்ணிக்குது. எத்தனை  ஜென்மம்  எடுத்தாலும்  உன்னை  விட  மாட்டேன்னு  சபதம்  போடுது


2  தீவிரவாத  தலைவன்  காலேஜ்  படிக்கறப்ப  ஒரு  காதலி. அவளுக்கு  விபத்துல  கண்  பார்வை  போய்டுது.அந்தக்காதலி  அந்த  அருவில  வந்து  குளிச்சா  தன்  கண்  பார்வை  திரும்பக்கிடைச்சிடும்னு  நம்பி  வருது .


ஹீரோவா  ரகு  என்கிற  ரகுமான்  இவருக்கு  அதிக  வேலை  இல்லை 

இன்னொரு  ஹீரோவா  தீவிரவாத  தலைவனா  ராம்கி . இவரு  சிரிச்ச  முகமா  இருந்தாதான்  பார்க்க  நல்லாருக்கும்  ஆனா  டெரரிஸ்ட்  என்பதால்  உர்ருனே  இருக்காரு. 


ராம்கிக்கு  ஜோடியா  கவுதமி  அழகுப்பெண் .  போலீஸ்  ஆஃபிசரா  நாசர்  இவரும்  டம்மி  தான்  போலீஸ்  கான்ஸ்டபிளாக  வெண்ணிற  ஆட  மூர்த்தி  ஹோட்டல்  ரூம்  பாய்  ஆக  செந்தில்   அது  போக  வினோதினி  ரியாஸ்கான்  எல்லாரும்  உண்டு 


ஒளிப்படிவு  மது  அம்பாட்  பட்டாசா  இருக்கு  ஃபோட்டோ  கிராஃபி 


கிளாமருக்கு  விசித்ரா  ஒரு  டான்ஸ்  கஸ்தூரி  ஒரு  அருவிக்குளியல்  டான்ஸ் 

சின்னி  ஜெய்ந்த்  , வெ  ஆ  மூர்த்தி ,  செந்தில்  காமெடி  பரவால்லை 

 

பிரதாப்  போத்தன்  தான்  டைரக்சன் . படம்  ரிலீஸ்  டைம்ல  நல்லா  போச்சு  விமர்சன  ரீதியாவும்  பாராட்டுப்பெற்றது



த  மிராக்கிள்  எனும்  நாவலின்  அஃபிசியல்  தழுவல்  தான்  இந்தப்படம் 



ரசித்த  வசனங்கள் 


1  வாழ்க்கைல  கடைசி  நம்பிக்கையும்  போனபின்  மக்கள்  வாழ்ந்துட்டு  இருக்கறதே  கடைசில  கடவுளாவது  வந்து  காப்பாத்த  மாட்டாரா?ங்கற  நம்பிக்கைலதான்


2 கடவுள்  உண்மையா  இருந்தா  அவரோட  உண்மையான  பக்தன்  யார்?னு  கண்டுபிடிச்சு  அவருக்கு  தரிசன்ம் தரலாமே? 


3  இந்த  உலகத்துல  கடவுளை  நம்பறவங்க தான் அதிக எண்ணிக்கைல  இருக்காங்க 


4 ஜனங்க  ஜாஸ்தியா  ஏமாறும்  இடமே  கோவில் தான்


5 போலீஸான  நாம  கடவுளுக்கே  பாதுகாப்பு  கொடுக்கனும்? ம்ம் 


6  யாருப்பா  நீ?


பாய்  சார்


  நெத்தில  விபூதி  குங்குமம்  வெச்சிருக்கான்  ஆனா  முஸ்லிம்  பாய்னு  சொல்றான் இவனை  தரோவா  செக்  பண்ணனும்


 அய்யோ  நான்  ரூம்  பாய்  சார் 


7  மனப்பூர்வமான  பிரார்த்தனையை விட  பெரிய  படிப்பு  எதுவும் இல்லைனு  நம்பறவன்  நான் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  கடவுள்  தோன்றப்போகும்  கோவிலை  வெடி  வெச்சு  தகர்க்கலாமா?னு  ராம்கி  அண்ட்  கோ  அப்போதான்   பேசவே  ஆரம்பிக்கறாங்க  டக்னு  கேட்டைத்திறந்து  ஒரு  தாடிக்காரன்  ஒரு  சூட்கேசோட  வந்து  நீங்க  பேசறதை எல்லாம்  கேட்டுட்டு  இருந்தேன்  இந்தாங்க  நீங்க  எதிர்பார்க்கும் பணம்னு  கொடுத்துட்டுப்போறான். அடேய்.. உங்க  அக்கிரமத்துக்கு  அளவே  இல்லையா? 


2  பொதுவா  நம்ம  மேனேஜரோ  எம்  டி யோ   கேவலமான  மொக்கை  ஜோக்  சொல்லும்போது  நாம  ஈரோடு  மகேஷ்  மாதிரி  சிரிப்போம், ஆனா  ஒரு  ஹையர்  ஆஃபீசர்  நாசர்  கிட்டே  நீங்க  கடவுளைப்பார்த்தீங்கன்னா  அவர்  கிட்டே  பிரமோஷன்  பற்றிக்கேளுங்க  அப்டினு  கடி  ஜோக்  சொல்லும்போது முறைச்சுப்பார்க்கறார்.. இது  நடக்குமா?


3   நாளைக்குக்காலைல  ஆபரேஷன்னு  ரியாஸ்கான்  ஹாஸ்பிடல்ல  படுத்திருக்கார். கேன்சர்  பேஷண்ட் . பக்கத்துல  க்ளுக்கோஸ்  பாட்டில்   ட்ரிப்ஸ்  ஏறிக்கிட்டு   இருக்கு. அடுத்த  ஷாட்ல  சங்கீதா  அவரைக்கோயிலுக்குக்கூட்டிட்டு  வந்து  தாலி  கட்ட  வைக்கிறார். நேரம்  கெட்ட  அந்த  நேரத்துல  டாக்டர்  அதே  கோயிலுக்கு  வர்றார். செண்ட்டிமெண்ட்  டயலாக்  வேற  ,, முடியல 


4  மேல் மருவத்தூர்  அம்மன்  திருக்குழுனு  பேனர்  வெச்ச  வேன்ல  இருந்து  இறங்கும்  பக்தர்கள்  மஞ்சள்  அண்ட்  மஞ்சள்  யூனிஃபார்ம்ல  வர்றாங்க , எனக்கு  தெரிஞ்சு  அவங்க  யூனிஃபார்ம்  சிவப்புனு  நினைக்கறேன். மாரியம்மன்  பக்தர்கள்  தான்  அந்த  காம்போல  வருவாங்க 


5  போலீஸ்  ஆஃபீசரான  நாசர்  தன்  தங்கை  விழி  ஒளி  இழந்தவர்  என்பதால்  அவருக்கு  துணையா  வழிகாட்டியா  ஒரு  ஆம்பளையை  அப்பாயிண்ட்  பண்றார்  அவரு   ஹீரோவும்  கிடையாது. யாராவது  இப்படி  ஒத்துக்குவாங்களா?  அதே  நாசர்  அந்த  கைடை  ஒரு  டைம்  கவுதமியோட  பார்க்கும்போது  கவுதமி நாசருக்கு  இண்ட்ரோ  பண்றாங்க  நீங்க  என்னைப்பார்த்துக்க  அப்பாயிண்ட்  பண்ணீங்களே ஒரு  கைடு  அது   இவர்தான். நேர்லயே  பார்க்காம  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  தன்  தங்கைக்கு  ஒரு  ஆளை  அப்பாயிண்ட்  பண்றார் 

6  போலீஸ்  ஆஃபிசரான  நாசர்  லாட்ஜ்  ரூம்  கதவை  தட்றார்  அப்றம் தான்  ரூம் கதவு  பூட்டி  இருக்குன்னே அவருக்கு  தெரியுது , தமிழ்  நாடு  போலீஸ்  ராக்ஸ் 


7 போலீஸ்  ஆஃபீசர்  யூஸ்  பண்ற  ஒவ்வொரு  துப்பாக்கிக்குண்டுக்கும்  மேலிடத்துல  பதில்  சொல்லனும், ஹேர்பின்  போட்டாலே  ஓபன்  ஆகும்  பாடாவதி  பூட்டை  உடைக்க  போலீஸ்  துப்பாக்கியால  சுடுது எதுக்கு   இந்த  பில்டப் ? 


8 ஒரு  எஸ் டி டி  பூத் க்கு  முன்னே பின்னே  அறிமுகமே இல்லாத  ஒரு  ஆள்  வந்து  ஒரு  எஸ் டி டி  கால்  பண்ணனும்னு  கேட்கறான். ஓக்கே  சொன்ன  அந்த  பூத்  ஓனர்  சார்   இந்த  பூத்தை  கொஞ்சம்  பார்த்துக்குங்க  நான்  போய்  டீ  குடிச்ட்டு  வற்றேன்னு  போய்டறான்  எங்கிருந்துதான்  இபடி  சீன்  எல்லாம்  யோசிக்கறாங்களோ ? அவன்  பாட்டுக்கு  100  ரூபாய்க்கு  கால்  பேசிட்டு  கம்பி  நீட்டிட்டா  என்ன  செய்வான்? 


10  தீவிரவாதியைப்பார்த்த  ஒரே  சாட்சியான  செந்தில்  கிட்டே  போலீஸ்  ஆஃபீசர்  நாசர்  அடுத்த  டை,ம்  அவனைப்பார்த்தா  உடனே  எனக்கு  தகவல்  தரனும்கறார் அதன்படி  ஒரு  டீக்கடைல  ராம்கியைப்பார்த்த  செந்தில்  போலீஸ்  ஸ்டேஷனுக்கு  ஒரு   ஃபோன்  பண்ணி  தகவல்  சொல்லி  அவரை  அவரோட  கண்  பார்வைலதானே  வெச்சிருக்ஜ்கனும்? 4  கிமீ  நடந்து  போலீஸ்  ஸ்டேஷனுக்கு   போய்  நாசரைக்கூட்டிட்டு  வர்றார். அப்  அண்ட்  டவுன்  எப்படியும்  40  நிம்சம்  ஆகி  இருக்கும் . ஒரு  ஆள்  முக்கா  மணி  நேரமா  டீ  குடிச்ட்டா  இருப்பான் ?  


11  பிரமாதமான  மெலோடி  சாங்கான கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாளே எனக்காக    பாடலை  படமாக்கும்போது  கவித்துவமா  எடுக்க  வேணாமா? ஹீரோ  டிராயர்  போட்டுட்டு  வர்றார்  ஹீரோயின்  மிடி  போட்டுட்டு  விரகதாபத்துல  படுத்துட்டு  இருக்கு . 


12  இந்த  கதைக்கும்  கஸ்தூரிக்கும்  என்ன  சம்பந்தம்? அவரு  எதுக்கு அருவில  குளிச்சுட்டே ஒரு  பாட்டு  பாடறாரு ?


 13  காலேஜ்  படிக்கும்போது   கவுதமி உயிருக்கு  உயிரா 3    வருசம்  நேசிச்சவர்   விழி  ஒளி  இழந்து  சில  வருசம்  கழிச்சு  ராம்கியை  சந்திக்கும்போது  குரலை  வெச்சு   அடையாளம்  காண  முடியாதா?  


14  அவ்ளோ  பெரிய  சித்தர்  ஒரு  அழகியைக்கண்டு  மயங்கற  மாதிரி  காட்றாங்க  அந்த  பாப்பாவைப்பார்த்தா  எங்க  ஊர்  தேர்க்கடைல  கரகாட்டம்  ஆடற  பொண்ணு  மாதிரி  இருக்கு 


15   சாத்தான்  வீரபாகு  வடிவேல்  ரசிகன்  போல . சித்தரை  மயக்க  ஆள்  அனுப்பாம  தன்  தங்கச்சியை  ஏன்  அனுப்பறார்னு  விளக்கம்  இல்லை 


16  தீவிரவாதி  ராம்கியை  நேரில்  பார்த்த  ஒரே  சாட்சி  ரூம்  பாய்  செந்தில்தான்னு  சொல்றாங்க  ஆனா  ரூம்  எடுக்கும்போது  லாட்ஜ்  ரிசப்ஷ்கனிஸ்ட்  லாட்ஜ்  மேனேஜர்  எல்லாம்  பார்க்கறாங்க 



  சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  படம்  ஜாலியாதான்  போகுது . லாஜிக்   மிஸ்டேக்ஸ்  ஒரு  60  தேறும், நான்  16  தான்  சொல்லி  இருக்கேன் , பதிவு  ரொம்ப  நீளமாப்போயிடும்  நீலமாவும்  ஆகிடும்னு  சென்சார்  பண்ணிட்டேன் .  ரேட்டிங்  2.25 /5   யூ  ட்யூஒப்ல  ராஜ்  டி வி யின் ஹெச்  டி  பிரிண்ட்  கிடைக்குது 


ஆத்மா
இயக்கம்பிரதாப் கே. போத்தன்
தயாரிப்புஅஜிதா ஹரி
மூலக்கதைThe Miracle
படைத்தவர் Irving Wallace
திரைக்கதைபிரதாப் கே. போத்தன்
இசைஇளையராஜா
நடிப்புராம்கி
ரஹ்மான்
நாசர்
கௌதமி
கஸ்தூரி
வினோதினி
வாணி
விஜயகுமாரி
ரியாஸ் கான்
செந்தில்
ஒளிப்பதிவுமது அம்பத்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
தயாரிப்புசுப்ரியா இன்டெர்நேஷனல்
வெளியீடுசூலை 30, 1993
நேரம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Thursday, July 28, 2022

SAMRAT PRITHVIRAJ ( ஹிந்தி) -சாம்ராட் பிருத்விராஜ் 2022 - சினிமா விமர்சனம் ( அமேசான் பிரைம் )


 இந்தப்படத்துல சில வரலாற்றுப்பிழைகள்  இருக்கறதா  படிச்சவங்க  சொல்றாங்க . நான் ஸ்கூல்ல  படிக்கும்போது  ஹிஸ்டரி  டீச்சரா  இருந்த  வனசுதா  டீச்சர்  மேல  சத்தியமா  சொல்றேன், எனக்கு   இந்த மன்னர்  வரலாறு சரியாத்தெரியாது . குத்துமதிப்பா  பட  இயக்குநர்  திரைக்கதைல  என்ன  அடிச்சு  விட்டிருக்காரோ  அதுக்கான  விமர்சனம்தான்  இது . எதுக்காக  இந்த  முன்  ஜாமீன்னா  விமர்சனம்  படிச்ட்டு  யாரும்  உனக்கு  வரலாறு  தெரியுமா? சரித்திரம்  தெரியாத  தரித்திரமே!  அப்டினு  எல்லாம்  வசை  பாட  வேண்டாம் 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


எனக்குத்தெரிந்த  பிருத்விராஜ்னா  ஒரு  தாயின்  சபதம்  படத்துல  டி ஆரால்  அறிமுகப்படுத்தப்பட்ட  பப்லு  எனும்  பிருத்விராஜ்தான். அம்மாடியோவ்  ஆத்தாடியோவ்  அவ  மேனிதான்  கண்ணாடியோவ் (  அது  எதுக்கு  ஒவ்வொரு வார்த்தைக்கடைசிலயும்  யோவ்  வருது? )  பாட்டுக்கு  டான்ஸ்  ஆடுனவர் .மன்னர் பிருத்விராஜ். அந்தக்காலத்துலயே  லவ்  மேரேஜ்  பண்ணுனவர்னு  வேணா  அரசல்  புரசலா  தெரியும்.  மணப்பெண்ணைக்கடத்திட்டுப்போய்  மேரேஜ்  பண்றவங்களை  இவரு  பெரிய   பிருத்விராஜ்  அப்டினு  சொல்வோம்


 12ம்  நூற்றாண்டில்  வாழ்ந்த  மன்னர்  இவர் . இவரோட  வாழ்க்கையை  அடிப்படையா  வெச்சு  கொஞ்சம்  பட்டி  டிங்கர்ங்  பண்ணி  சொந்த  சரக்கை  அள்ளி  விட்டு  எடுத்த  படம்  தான்  இது . 


பிருத்விராஜ்  டெல்லிக்கு  ராஜா .  கன்னூஜின்  ராஜா  மகள்   சம்யுக்தாவுக்கும்  இவ்ருக்கும்  லவ்வு  இது  சம்யுக்தா வோட  அப்பாவுக்குப்பிடிக்கலை ,  எந்த  அப்பாவுக்குதான்  மகளோட  காதல் பிடிச்சிருக்கு ? 


அப்பாவோட  தடையை  மீறி  சம்யுக்தா பிருத்விராஜ்  மேரேஜ்  நடக்குது. இதனால  கடுப்பான  மாமனார்   மாப்ளை  பிருத்விராஜ்  உடைய  எதிரியான  முகமது  கோரியுடன்  இணைந்து  அவரை  வீழ்த்தப்பார்க்கிறார். அவரோட  எண்ணம்  நிறைவேறுச்சா?   இல்லையா? என்பதே  கதை 


ஹீரோவா  பிருத்விராஜா  நடிகர்  அக்சய் குமார்  , இவரு  போலீஸா  மிலிட்ரி  ஆஃபீசரா  நடிக்கத் தகுதியான  உயரமான  ஆள்தான்  ஆனா  மன்னரா  நடிக்க  கெத்து  பத்தலை . குறிப்பா  அந்த  ஒட்டு  மீசை  எடுபடலை 


ஹீரோயினா  சம்யுக்தாவா   மனுஷி  சில்லர் . இவர் 2017 ஆம்  ஆண்டின்  உலக  அழகியாம் .  1000ம்தான்  இருந்தாலும்  ஐஸ்வர்யாராய்  மாதிரி    வருமா? நம்மால  சுஷ்மிதா  சென்னையே  ஏத்துக்க  முடியல, ஆனா  நடிப்பைப்பொறுத்தவரை  ஓக்கே 


  சோனு சூட்  சமூக  வலைத்தளமான  ட்விட்டரில்  ஏராளமான  ரசிகர்களைப்பெற்றவர்  காரணம்  அவரது  நல்ல  உள்ளம் . நற்பணிகள்  இதுல அவரு  அரசவைக்கவிஞர்  கம்  ஜோதிடராக  வருகிறார்.  வர்ற  நேரத்துல  பாதி நேரம்  ஜால்ரா  அடிக்கற  வேலைதான்  ஓவரா  புகழ்ந்துட்டே  இருக்காரு  ஹீரோவை  முடியலை 


சஞ்சய் தத்  ஒரு  கேரக்டரில்  வர்றார்  கம்பீரமான  நடிப்பு , 

பாடல்கள்  இசை  பரவாயில்லை  ஒளிப்பதிவு  ஆர்ட்  டைரக்சன்  அருமை . லொக்கேஷன்கள்  எல்லாமே  நல்லாருக்கு 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1   பொதுவா  மன்னர்னா  மக்கள்  நன்மைக்காக  சண்டை  போடனும்.,  போர்னு  வந்தா  ஏதாவது  தகுந்த  காரணம்  இருக்கனும்.,  ஏதோ  ராஜாவோட  13  வது  சம்சாரத்தை  இன்னொரு  ராஜ்யத்தில்  இருக்கும்  சிற்றரசன்  சின்ன  வீடா  வெச்சுக்க  ஆசைப்பட்டான்  அவன்  அடைக்கலம்  புகுந்தான்  என்பதற்காக  நாடுகளுக்கிடையே  போர்  புரிவது  லூஸ்  தனமா  இருக்கு  , அதுக்கு  ஒரு  வியாக்கியானம்  வேற  ஹீரோ  பேசறாரு . என்னை  அடைக்கலமா  நாடி  வந்தவரை  விட்டுக்கொடுக்க  மாட்டேன்   அப்டினு  பஞ்ச்  டயலாக்  வேற  கடுப்பா  இருக்கு 


2   பிருத்விராஜை  நேர்மையான    முறையில்  போர்  புரிந்து  ஜெயிக்க  முடியாத  வில்லன்  நைட் எல்லாரும்  தூங்கிட்டு  இருக்கும்போது  ஊடுருவி  தாக்கறாங்க,  எந்த  மன்னராவது  நைட்  செக்யூரிட்டி  இல்லாம  போர்க்களத்தில்  தூங்கிட்டு  இருப்பாரா?  அந்தப்புரத்துக்கே  ஆறடுக்கு  பாதுகாப்பு  இருக்கும் 


3  கதைக்கு  சம்பந்தமே  இல்லாம  ஹீரோவான  பிருத்விராஜ்  மன்னர்  தன்  மனைவி  ராணிக்கும்   அதிகாரம்  தர்றதா  சொல்றார். ஆனா  ராணி  அதை  ஏற்க  மறுக்கிறார்  (  12ம்  நூற்றாண்டிலேயே  பொண்ணுங்க  அது  ராணியா  இருந்தாலும்   ரத்னமா  இருந்தாலும்  புருசன்  பேச்சைக்கேட்பதில்லை  என்ற    தகவல்  மனசுக்கு  திருப்தியா  இருக்கு  ஏன்னா  நம்ம  சம்சாரம்  மட்டும்  தான்  நம்ம  பேச்சைக்கேட்பதில்லைனு  நாம  வருத்தப்படவேண்டியதில்லை ) அப்படி  அதிகாரம்  பெற்ற  ராணி  ஒரு   போரில்  ராஜா  சிறை  பிடிக்கப்பட்டதும் அக்னி  குண்டம்  மூட்டி அதில்  தீக்குளிக்க  ரெடி  ஆகறார். எப்படியும்  போகப்போற  உயிர்  போர்க்களம்  இறங்கி  10  பேரைக்கொன்னுட்டு  போலாமில்ல? அவரு  சாகறதும்  இல்லாம  அந்த  நாட்டு  வீரர்கள்  மனைவிகள்  எல்லாரும்  அப்படியே  வீணா  சாகறாங்க 


4  க்ளைமாக்ஸ்  மகா  சொதப்பல் . கைதியா  இருக்கும்  ஹீரோ  எதிரி  மன்னரைப்பார்த்து  ஒத்தைக்கு  ஒத்தை  வர்றியா?னு  கேட்க  அவரும்  லூஸ்  மாதிரி  போய்  மாட்டிக்கறார்.  தெலுங்கு  டப்பிங்  படம்  பார்த்த  ராஜ  வம்சம்  போல 


5  க்ளைமாக்ஸ்ல  சிங்கங்களை  கொன்னுட்டு  ஹீரோ  எதிரியைப்பார்த்து  அப்பாவி  சிங்கத்தை  கொல்ல  வெச்சுட்டியே  பாவினு  டயலாக்  பேசறாரு . ஏன்  இவரு  கொல்லாம  நான்  அப்பாவி  சிங்கத்தைக்கொல்ல  மாட்டேன்னு  சொல்லலாமில்ல? 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  வசூல்  ரீதியா  தோல்விப்படம்  ஆனா  விமர்சன  ரீதியா  வட  இந்தியாவில்  பாராட்டுப்பெற்ற  பட,ம்  அதனால  சும்மா  பொழுது  போகலைனா  அமேசான்  பிரைம்ல  கணக்கு  இருந்தா  பார்க்கலாம். ஹிந்திப்படம்  தான்  ஆனா  தமிழ்  வெர்சனும்  இருக்கு   ரேட்டிங்  2/.25  5  இது  வார்  டிராமாதான்  ஆனா  கொஞ்சம்  போர் (அடிக்கும்)  டிராமா 

Tuesday, July 26, 2022

நான் உங்கள் ரசிகன் 1985 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )


 மதர்லேண்ட் பிக்சர்ஸ்  கோவைத்தம்பியின் பெரும்பாலான  படங்களில்  பாடகனாக  நடித்து  செம  ஹிட்  அடித்து  மைக்  மோகன்  என்ற  பட்டப்பெயரை  வாங்கிய  மோகன்   நெகடிவ்  ரோலில்  நடித்த  மூன்று  படங்களூம்  ஹிட்  1  நூறாவது  நாள்  2  விதி  3 நான் உங்கள் ரசிகன். அபப்டி  இருந்தும்  அவர்  ஏன்  தொடர்ந்து  அதே  மாதிரி  நடிக்கலைனு  தெரியலை 


ஸ்பாய்லர்  அலெர்ட்  


 ஹீரோ  கிராமத்துல  இருக்கறவர்  வெட்டி  ஆஃபீஸ்., இவரு  நடிகை  ரஞ்சனியோட தீவிர  ரசிகன்  அல்லது  வெறியன்னு  சொல்லலாம், ஒரு  நாள்  இவரது  ஊருக்கே  அந்த  நடிகை  வர்றாங்க  ஏதோ  ஷூட்டிங்


  நடிகையை  தப்பாப்பேசுன  ஊர்ப்பெரிய  மனுசனை  தாக்கறார். ஷூட்டிங் ல  கதைப்படி  நடிகைக்கு  வில்லனா  நடிச்ச  ஆளை  இவரு  தாக்கறாரு 


 ஷூட்டிங்  முடிஞ்சு  நடிகை   சென்னைக்கு  கிளம்பவும்  ஹீரோ  நடிகை  வீட்டுக்கே  வர்றார். அங்கே  அவர்  கிட்டே  ஏதாவது  வேலை  இருந்தா  போட்டுக்குடுங்க  என்கிறார் \\ 


 அந்த  நேரம்  பார்த்து  நடிகையோட  கார்  டிரைவர்   திடீர்  லீவ்  போட  லக்கி  பிரைஸ்  ஹீரோவுக்கு  நடிகையோட  பர்சனல்  கார்  டிரைவர்  ஆகறார் .  நடிகையை  பக்கத்துலயே  இருந்து  ரசிக்கிறார்.  அவர்  குளிக்கும்போது  பார்த்து  ரசிக்கிறார்


நடிகைக்கு  இந்த  விஷயம்  தெரிய  வர   அவரை  விரட்ட  முயல்கிறார்


 இந்த  களேபரத்தில்  நடிகை  திடீர்னு  இறந்து  விடுகிறார். அந்த  டைம்  அங்கே  வந்த  நிருபர்  ஹீரோ நடிகையின்  டெட் பாடி  அருகே  இருப்பதை   ஃபோட்டோ  எடுத்து  விடுகிறார்.


 நான்  நடிகையை  கொலை  செய்யலை  என கதறும்  ஹீரோ அதை  நிருபர்    சட்டை  செய்யாததால்  நிருபரைக்கொலை  செய்கிறார்.  நடிகையின்  மேனேஜரும்  அவுட்  

\ நடிகைக்கு  ஒரு  தங்கை  அவருக்கு  ஒரு  கணவர்  அவர்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்   அவர்  வந்து  இந்த  கேசை   டீல்  பண்ணி  நடிகையைக்கொன்றது  யார்  என  கண்டு பிடிக்கிறார் 


  ஹீரோவா  மோகன் . நடிகை  மீது  அதீத  அன்பு  அல்லது  பாசம்  வைக்கும்  கிராமத்து  ஆள்  வேடம்  கச்சிதமான  நடிப்பு  எந்த  அளவு  பாடகன்  ரோல்  செட்  ஆகுதோ  அதே  அளவு  அப்பாவி  வேடமும்  நகைச்சுவை  வேடமும்  கொலைகாரன்  ரோலும் செட்  ஆகுது . நல்ல  முக  பாவனைகள் 


  நடிகையாக  ராதிகா ,  அவரது  நடை  உடௌ  பாவனைகள்  எல்லாம்  கச்சிதம் . நடிகைக்கு  மனநிம்மதி  இல்லை  என  அவர்  புலம்புவது  டச்சிங் 


 நடிகையின்  தங்கையாக  நளினி. யார் ? என்ற  படத்துக்குப்பின்  நளினியின்   பய  முகம்  வியர்வை  சிந்தும்  திகில்  முகம்  செம  ஃபேமஸ் . ஆனா  இந்தப்படத்துல  அவர்  ஹேர்  ஸ்டைல்  நல்லாலை . 


நளீனியின்  கணவரா  போலீஸ்  ஆஃபீசரா  ராஜீவ். அந்தக்காலத்துல  ஒரு  நல்ல  வில்லன்  கரெக்டா  பண்ணி  இருக்கார் 


இசை  கங்கை  அமரன்  3  பாடல்கள்   எல்லாமே  சுமார்  ரகம் தான்  .  க்ரைம்  படத்துக்கு  பாடல்  பெரிய  ஹிட்  ஆக  தேவை  இல்லை 


 பிஜிஎம்  பக்கா \  



 சபாஷ்  டைரக்டர்\\( மனோபாலா) 


1   முதல்  பாதியில்  நடிகையை  ஹீரோ  லவ்  பிரப்போஸ்  பண்ணப்போகிறார்  இது  ஒரு  ஒன்  சைடு லவ்  ஸ்டோரி  என  யூகிக்க  வைக்கும்  கதையாகக்கொண்டு  போய்  க்ரைம் த்ரில்லராக  டோன்  அப்  ஆவது  குட்  ஒன் 


2  நளினியின்  பய  முகம்  நளீனியின்  குழந்தையாக  நடித்த  பேபியின்  நடிப்பு  குட் 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1   பிரபல  நடிகை  வீட்டில்  வாட்ச்மேன்  செக்யூரிட்டி  யாரும்  இருக்க  மாட்டாங்களா? 


2  பிரபல  நடிகை  வீட்டில்  ஆல்ட்டர்நேட்டிவ்  டிரைவர்  இருப்பார்கள் 


3 பொதுவா  சினிமாவில்  மட்டும்  தான்  பெண்கள்  பாத்ரூமில்  குளிக்கும்போது  வீட்டு  வாசல்  கதவு  மெயின்  கேட்  பாத்ரூம்  கதவு  எல்லாத்தையும்  தாழ்  போடாமல்  பெப்பெரப்பேனு  திறந்து  வெச்ட்டு  குளிக்கறாங்க 


4   வீட்டில்  யாருமே  இல்லை  பாத்ரூமில்  குளிக்கும்  நடிகை  ஏன்  டர்க்கி  டவல்  கட்டிட்டு  தனிமைல  அவ்ளோ  டீசண்ட்டா  குளிக்கறாங்க ?   அதே  நடிகை  ஷூட்டிங்  ஸ்பாட்ல  250  பேர்  முன்னிலைல  ஃப்ரீயா  குளிக்கறாங்க . ஒரு  வேளை  தனிமைல  குளிக்கும்போதுதான்  கூச்சமா  இருக்கும்  போல 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  திகில்  பட  ரசிகர்கள்  பார்க்கலாம், இப்போதும்  விறு விறுப்பாதான்  இருக்கு  முதல்  பாதி  மட்டும்  ஸ்லோ  . ரேட்டிங்  2.25 / 5 






தேஜாவு 2022 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )


யாரிடமும்  உதவி இயக்குநராகப்பணி  ஆற்றாமல்  சுயம்புவாக  இயக்குநர்  ஆனவர்கள்  தமிழ்  சினிமாவில்  குறைவே!  எம் ஜி ஆர் , , விஜயகாந்த் , கமல் , மணிரத்னம் ,  லோகேஷ் கனகராஜ்   வரிசைல  சினிமாப்பட விமர்சகர்   அர்விந்த்  சீனிவாசனும்  இணைவதில்  மகிழ்ச்சி .இதுவரை 3000  படங்களுக்கு  விமர்சனம்  எழுதி  இருக்காராம் . தினமும்  ஒரு  படம் என  கணக்கில்  வெச்சாலும்  8  வருசம்  இடைவிடாம  உழைச்சாதான்  இந்த  சாதனை  நிகழ்த்த  முடியும். அவரது  முதல்  படம் க்ரைம் த்ரில்லராக  அமைந்ததில்  மகிழ்ச்சி . 


 பல  படங்கள்  பார்த்தவர்  என்பதால்  மற்ற  படங்களில்  இருந்து  மாறுபட்டு  கதை  சொன்னாரா? பார்த்த  நல்ல  படங்களில்  இருந்து  காட்சிகளை  உருவி  பட்டி  டிங்கரிங்    பண்ணி  அட்லீ  ஒர்க்  செஞ்சாரா  என்பதை  கடைசில  சொல்றேன் 


சம்பவம் 1 - ஒரு ராத்திரி  நேரம் . டாக்சில ஒரு  பொண்ணு  போகுது . வழில அந்த  டாக்சியை  இடிச்ட்டு சாரி  கூட  கேட்காம  ஒரு  கார்  கிராஸ்  ஆகுது. ஓவர்டேக்  பண்ணிப்போன  அந்தக்காரை  மறுபடி  ஆன்  த  வே ல  பார்த்த  டாக்சி  டிரைவர்  வண்டியை  நிறுத்தி  அவங்க கிட்டே  நியாயம்  கேட்கறான். குடி  போதைல  தகறாரு  ஆகி  அந்த  டாக்சி  டிரைவரை  அடிச்சுப்போட்டுட்டு  டாக்சில  வந்த  பெண்ணை  பாலியல்  வன்முறை  செஞ்சுடறாங்க  அந்த  4  பேர் .  டாக்சி  டிரைவர்  போலீஸ்  ஸ்டேஷன்ல  புகார்  தர்றார் . அந்தப்பொண்ணு  ஹாஸ்பிடலில்  அட்மிட்  ஆகுது . இந்த  கேசை  விசாரிக்கும்  போலீஸ்  ஆஃபீசர்  குற்றம்  செஞ்ச  நாலு  பேரில்  ஒரு  ஆள்  வசதியானவன்  என்பதால்  அவன்  கிட்டே  பணம்  லஞ்சமா  வாங்கிக்கிட்டு   மீதி  3  குற்றவாளிகளையும் , அநத  டாக்சி  டிரைவரையும்  என்கவுண்ட்டர்ல  போட்டுத்தள்ளிடறார். பாதிக்கப்பட்ட  பொண்ணு  உயிரோட  இருந்தா 4வது  ஆள்  எஸ்  ஆகிட்டான்    என்பது  தெரிஞ்சுடும்னு  நல்லவனான  டாக்சி  டிரைவரையே  போலீஸ்  போட்டுத்தள்ளீடுச்சு  என்ற  உண்மை  மீடியாவில்  வந்துடும்னு  போலீசே  டாக்டரை  கரெக்ட்  பண்ணி  அந்த  பொண்ணையும்  போட்டுத்தள்ளிடுது


  சம்பவம்2  =  ஒரு  பார்ட்டில  3  பொண்ணுங்க  கலந்துக்கறாங்க  பார்ட்டி  நடந்துட்டு  இருக்கும்போதே  ஒரு  பொண்ணு  பாதிலயே  கிளம்புது  அந்தப்பொண்ணு  போலீஸ்  டிஜிபியோட  பொண்ணு .அந்தப்பொண்ணு  மிஸ்  ஆகுது . பொது  மக்கள்க்கு  பாதுகாப்பு  தரும்  போலீஸ்  பொண்ணையே  ஒருத்தன்  கடத்தி  இருக்கான்னா  ஊர்  உலகம்  கேவலமா  பேசும்னு  அந்த  கேசை  டீல்  பண்ண  ஒரு  அண்டர்  கவர்  ஆஃபீசரை  அன்  அஃபிசியலா  நியமிக்கறாங்க 


 சம்பவம்  3  -  ஒரு    நாவல்  ரைட்டர். அவர்  ஒரு  நாவல்  மட்டுமல்ல  பல  நாவல்கள்  எழுதி  இருக்கார்   ., இதுல  என்ன  விசேசம்னா  இவர்  நாவலில்  வரும்  சம்பவங்கள்   நிஜத்திலும் நடக்குது . ஒரு  நாள்  இவர்  போலீஸ்  ஸ்டேஷன்  வந்து  ஒரு  புகார்  தர்றார். என்  நாவலில்  வரும்  கேரக்டர்  என்னையே  மிரட்டுதுங்கறார். முதல்ல  அவர்  குடி  போதைல  சொல்றார்  என  அசால்ட்டா  இருந்த  போலீஸ்  அவர்  நாவலில்  எழுதும்  சம்பவங்கள்  ஒவ்வொண்னா  நடப்பதைப்பார்த்து  அரண்டு  போகுது 


சம்பவம் 4 -  சம்பவம்  1ல்  புகார்  தந்த  டிரைவர்  என்கவுண்ட்டரில்  போட்டுத்தள்ளப்பட்டாரே? அவர்  சம்பவம்  நடந்து  ஒரு  வருடம்  கழித்து  அதே  மாதிரி  வேற  ஒரு  புகார்  தர  போலீஸ்  ஸ்டேஷன்  வர்றார் 


  மேலே  சொன்ன   4  சம்பவங்கள்  தனித்தனியா?  எல்லாவற்றுக்கும்  ஒரு  தொடர்பு  இருக்கா?  என்பது  க்ளைமாக்ஸ் \\


ஹீரோவா  அருள்  நிதி . மாறுபட்ட  கதைக்கருக்களை  தேர்வு  செய்து  நடிப்பவர்  என்ற  நல்ல  பெயர் இவருக்கு  உண்டு  . இவரது  முந்தைய  படமான  டி  பிளாக்  நான்  பார்க்கலை  சுமார்தான்னு  சொன்னாங்க  இந்தப்படம்  இவரது  இமேஜைக்காப்பாத்தும் 


 அண்டர்  கவர்  ஆஃபீசரா  கெத்து  காட்றார்  அவரது  பாடி  லேங்க்வேஜ்  டயலாக்  டெலிவரி  எல்லாம்  அருமை .  


  போலீஸ்  டிஜிபி  ஆக  ரோஜா  புகழ்  மது  பாலா ,. அப்போ  பார்த்த  மாதிரி  இப்போவும்  இளமையா  இருக்கார்னு  பல  விமர்சகர்கள்  புகழ்ந்த  அளவு  எல்லாம்   இல்லை .  ஓவர்  மேக்கப்  உறுத்துது  போலீஸ்  ஆஃபிசர்க்கான  கம்பீரம்  மிஸ்சிங் . வைஜயந்தி  ஐபிஎஸ்  விஜயசாந்தி   டெல்லி  கிரைம்  வெப்சீரிஸ்   நாயகி , த்ரிஷ்யம்  போலீஸ்  ஆஃபீசர்  ஆஷா  சரத்  ,  படையப்பா  நீலாம்பரி  ரம்யா  கிருஷ்ணன்  இவங்க  கம்பீரத்துல  10 %  கூட  இவர்  காட்டலை   அதுதான்  இந்த  படத்தின்  மிகப்ப்பெரிய  மைனஸ் 


ரைட்டராக  அச்யுத்      குமார்  பொருத்தமான  தேர்வு  . அவரது  கேரக்டர்  ஸ்கெட்சில் ஒரு  டவுட் . ரைட்டர்  என்றாலே  சரக்கு  தண்ணி  வண்டியாத்தான்  இருக்கனுமா? நம்  கண்  முன்னே  டீசண்ட்டா  இருக்கும்  ராஜேஷ்  குமார்  , பிகேபி , சுபா  மாதிரி  முன்னோடிகளை  உதராணமா  எடுத்துட்டு  அந்த  கேரக்டரை  வடிவமைத்து  இருக்கலாம்,  படம்  பூரா  அவர்  தண்ணி  அடிச்ட்டே  இருப்பது  எரிச்சல் 


 போலீஸ்  டிஜிபி  மதுபாலா  மகளாக  ஸ்முருதி கச்சிதமான  நடிப்பு .   டிஜிபி யின்  அசிஸ்டெண்ட்   ஆக  வரும்  சேத்தன்  பாடி  லேங்க்வேஜில்  பணிவு  இல்லை  ஃபிரண்ட்  மாதிரி  அசால்ட்டா  இருக்கார் .  போலீஸ்  கான்ஸ்டபிளாக   வரும்  காளி வெங்கட்   கேர்க்டர்  ஸ்கெட்ச்சும்  சுமார் தான் 


படத்தின்  மிகப்பெரிய  பலம்  ஜிப்ரான்  பிஜிஎம்  பட்டாசா  இருக்கு /  ஒளிப்பதிவு  பிஜி  முத்தையா  பக்கா உழைப்பு 


  சபாஷ்  டைரக்டர்  

1    முதல்  ஒரு  மணி  நேரம்  செம  விறுவிறுப்பு  டைம்  போனதே  தெரியல .  தேஜாவு  என்ற  டைட்டிலுக்கான  விளக்கம்  இஎஸ்பி  பவரா  இருக்குமோ  என்ற  சந்தேகம்  எல்லாம்  கச்சிதம்,


2  படத்தை  மிகச்சரியாக   2  மணி  நேரத்தில்  கட்  பண்ணின  எடிட்டிங்  சாமார்த்தியம்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் \\


1  அண்டர்  கவர்  ஆஃபீசராக  வருபவர்  ஃபோட்டோவை  போலீஸ்  டிஜிபி  வாட்சப்  நெம்பருக்கு  ஏன்  அனுப்பவில்லை ? 


2   தமிழ்நாட்டின்  போலீஸ்  டிஜிபியாக  வரும்  ஆஃபீசரையே  சாதாரண  அண்டர்  கவர்  ஆஃபீசர்  ஆர்டர்  போடுவது  எப்படி?


3 எந்தஃ  வித  பின்புலமோ  உடல்  பலமோ  இல்லாத  டாக்சி  டிரைவர்  4  பேர்  கொண்ட  கும்பலை  நள்ளிரவில்  நடுரோட்டில்  எதிர்ப்பது  எந்த  தைரியத்தில்?  டாக்சியில்  இளம்பெண்  இருக்கிறார்  என்ற  பொறுப்பு  இருக்காதா?


4 பொதுவாக  வில்லன்  கேரக்டர்  மேல்  நமக்கு  வெறுப்பு  வரனும்  பரிதாபம்  வரக்கூடாது  . க்ளைமாக்ஸில்  வில்லன்  மேல்  நமக்கு  பரிதாபம்  வருது   


5  முதல்  பாதி  எந்த  ஃஅளவு  சுவராஸ்யமா  இருந்ததோ  அதுக்கு  நேர்  எதிர்  பின்  பாதி .  இன்னும்  கொஞ்சம்  டைம்  எடுத்து  திரைக்கதை  அமைத்திருக்கலாம், அவசர  அவசரமாக  கதையை  முடிக்கறாங்க


6  ஹையர்  ஆஃபிச்ர் ஃபோனில்  போலீஸ்  காளீயிடம்  ரைட்டர்  காதில்  செக்  பண்ணு  என்றதும்  என்னது? காதை  செக்  பண்ணனுமா? என  வாய்  விட்டுக்கேட்டு  கொஸ்டீன்  பேப்பரை  அவுட்  பண்றார். எந்த  முட்டாள்  போலீசும்  அப்படி  கேட்காது (  ஆராரோ  ஆரிராரோ  படத்தில்  அதிர்ச்சிப்பைத்தியம்  ஒண்ணு  வரும்  என்னது? ஆஃபீஸ்  கிளம்பிட்டாரா?    என்னது  அவருக்கு  மேரேஜ்  ஆகிடுச்சா?  என  ஒவ்வொரு  செய்திக்கும்  ஒரு  ஜெர்க்  கொடுக்கும்  அது  மாதிரி  மடத்தனமான  கேரக்டர்  ஸ்கெட்ச்


7    ஒட்டுக்கேட்கும்  கருவியை  காதில்  வைத்திருக்கும்  ஆள்  போலீஸ்  செக்  பண்ண  வரும்போது  அதை  காதுக்குள்  தள்ளி  விடுகிறார். டார்ச்  அடிச்சுப்பார்க்கும்போது  அது  கண்ணுக்குத்தெரில  இதுக்கு  பாசிபிலிட்டியே  இல்லை 


8  ஒரு  போலீஸ்  டிஜிபி  இந்த  அளவு  மாங்கா  மடையரா  இருப்பாரா?  தன்னிடம்  பணி  புரிய  வரும்  நபரிடம்  ஐடி  கார்டு  கூட  கேட்க  மாட்டாரா? 


9   அண்டர்  கவர்  ஆபரேஷன்  ஆஃபீசராக  வருபவரிடம்  டெக்னிக்கலாக  சிம்  கார்டை  ஹேக்  பண்ணி  ரெண்டுநாட்கள்  கழிச்சு  ட்யூட்டில  ஜாயின்  பண்ணுனா  போதும்கறாங்க  ஆனா  மேலே  சொல்லும்  பல  சம்பவங்கள்  நடக்க  10  நாட்கள்  ஆகுது  அதுவரை  அவர்  என்ன  பண்ணிட்டு  இருந்தார் ?


10   பின்  பாதி  திரைக்கதை  சாமான்ய  ரசிகர்களுக்கு  புரிவது  சிரமம் . ஒரிஜினல்  படமான  இன் விசிபிள்  கெஸ்ட்  அல்லது  அதன்  ரீமேக்கான  பதலா  ஹிந்தி   பட்டி  டிங்கரிங்  ரீமேக்கான  எவரு  தெலுங்கு  படம்  பார்த்தவர்களுக்கு  மட்டும்தான்  புரியும்  ,. இது  ஒரு  பின்னடைவு  

சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் தேஜாவு 2022 = 25% த இன்விசிபிள் கெஸ்ட் 2016 + 10% எவரு(telugu)(2019) ÷ 5 % Badla(hindi)2019.. + 10 % நவம்பர் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் + 15 % இறுதி அத்தியாயம் எல்லாம் கலந்த கலவை . போஸ்டர் டிசைன் கூட சொந்தமா யோசிக்கலை,த இன்விசிபிள் கெஸ்ட் போஸ்டர் காப்பிதான் ஜிப்ரான் பிஜிஎம் செம. விகடன் 42 ரேட்டிங் 2.75/5

Wednesday, July 20, 2022

சட்டம் 1983 - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ்)








 இந்திய  சினிமாக்களில்  முதல்  முறையாக  போலீஸ்  ஆஃபீசராக  வரும்  ஒருவர்  14  ரீல்  படத்தில்  ஒரு  சீன்ல  கூட  போலீஸ்  யூனிஃபார்மே  போடாத  கின்னஸ்  சாதனையை  அன்றே  நிகழ்த்திய  உலக  நாயகன்  கமல்  அவர்களை  வாழ்த்தி  வணங்கி  வணக்கி  விமர்சனத்தை  துவங்குவோம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ ஒரு  போலீஸ் இன்ஸ்பெக்டர் இவரு  நோகாம  நோம்பி  கும்பிடுபவர் . வில்லனால்  பாதிக்கப்பட்ட  ஒருவர்  போலீஸ்  இன்ஃபார்மராக  அப்பப்ப  கடத்தல்  கேஸ்  பற்றி  தகவல்  கொடுக்க  அதை   நூல் பிடிச்சு   ஆள் பிடிச்சு  இவர்  பேர்  வாங்கிக்குவார். பெண்களை  மட்டம்  தட்டுவார். இதுல  காமெடி  என்னான்னா  இவர்  மட்டம்  தட்டும்  பெண்ணே  இவரை  லவ்  பண்ணும், ஆனா  நிஜ  வாழ்வில்  நாம  1008  பொய்  சொல்லி  பொய்யாப்புகழ்ந்து  பொண்ணுங்களை  ( !!)  லவ்  பண்ண  வேண்டியதா  இருக்கு  


ஹீரோவுக்கு  ஒரு  ஃபிரண்டு  இருக்கார்   இவர்  ஒரு  வக்கீல். கோர்ட்ல  திறமையா  வாதிடுபவர்னு  சொல்லிக்கறாங்க. இரண்டு  பேரும்  திக்  ஃபிரண்ட்ஸ் 


இப்போதான்  ஹீரோயின்  எண்ட்ரி பொதுவாவே  ஆண்களின்   நட்பு  என்ப்து  மே மு  மே பி  என  இரண்டு  வகையாப்பிரியும்., அதாவது  மேரேஜூக்கு  முன்  மேரேஜூக்குப்பின் . அது  மாதிரி  ஹீரோயின்  வந்த  பிறகு  இவங்க  நட்புக்கு  பங்கம்  வருது 


ஹீரோயினைப்பார்த்ததுமே  ஹீரோவின்  ஃபிரண்ட்  ஒருதலைக்காதல்  கொள்கிறார்.  தன்  சொத்து  பத்து  எல்லாத்தையும்  போட்டு  ஒரு  வச்ந்த  மாளிகையைக்கட்டறார்.  மேஸ்திரிக்கு  அட்வான்ஸ்  கொடுக்கும்  முன் அந்த  ஸ்த்ரீ  கிட்ட்டே  விஷயத்தை  சொல்லி    இருக்கலாம்  ஆனா  சொல்லலை 


ஹீரோயின்  மாடர்ன்  கேர்ள்  அதனால  ஓப்பன்  யுனிவர்சிட்டில  படிச்சேன்கறதைகாட்டிக்க   தன்  டிரஸ்சிங்  சென்ஸை  யூஸ்  பண்ணிக்கறார்  ஹீரோ  ஹீரோயினைப்பார்க்கும்போதெல்லாம்  எவ்ளோ  கேவலமா  மட்டம்  தட்ட  முடியுமோ  அவ்ளோ  கேவலமா  மட்டம்  தட்றார். ஹீரோயினும் ஹீரோ ,மேல செம  காண்டுல  இருக்கார் 


ஹீரோவோட  ஃபிரண்ட்  ரொம்ப  ஜெண்டில்மேனா  ஹீரொயின்  கிட்டே  பழகறார். ஹீரோவை  விட  இவருக்குதான்  வசதி  அந்தஸ்து  எல்லாம்  அதிகம்.


  ஆனா  ஷாக்கிங்கா  ஹீரோயின்  ஹீரோவை  லவ்  பண்ணறார்.இருவர்  லவ்வும்  டூயட்  எல்லாம்  முடிச்சு ஒரு  லெவலுக்கு  வந்தபின்  ஹீரோவோட  ஃபிரண்ட்  ஹீரோ  கிட்டே  தன்  லவ்  பற்றி  சொல்றார். ஷாக்  ஆன  ஹீரோ  அதை  வெளிக்காட்டிக்காம  இருக்கார் 


 ஹீரோயின்  கிட்டே  வந்து  என்னை  விட  என்  ஃபிரண்ட்  தா  உனக்கு  சரியான  ஜோடி  அதனால  அவனையே  மேரேஜ்  பண்ணிக்கனு  ரெக்கமெண்டேஷன்  பண்றார்


வில்லன்  க்ரூப்  ஹீரோ  ஹீரோயின்  டூயட்  பாடுனப்ப  எடுத்த  ஸ்டில்ஸை  ஹீரோ  ஃபிரண்ட்  கிட்டே  காட்டி  உசுப்பேத்தறாங்க ஹீரோவோட  ஃபிரண்டுக்கு   ஹீரோ  தனக்கு  துரோகம்  பண்ணீட்டான். லவ்  மேட்டரை  சொல்லலை  தான்  சொன்னப்பவும்  அது  பத்தி  மூச்சு  விடலை   அப்டினு  ஃபிரண்ட்ஷிப்பை  பிரேக்கப்  பண்ணிக்கறார்


 இப்போ  நண்பர்கள்  இருவரும்  எதிரிகள்  ஆகிட்டாங்க .இப்போ  ஹீரோ  ஒரு  சிக்கல்ல  மாட்டிக்கறார்  போலிஸ்  விசாரணைல  ஒரு  கைதியை  அடிக்கும்போது   வில்லன்  க்ரூப்  சதியால  குடிதண்ணீர்ல  எதையோ கலந்து  குடுத்து  ஆளைக்கொன்னுடறாங்க கொலைபப்ழி  ஹீரோ  மேல  விழுது 


 இந்த  கேசை  எடுத்து  வாதாட  ஹீரோவோட  ஃபிர்ண்டை  விட்டா  உலகத்துல  வேற  ஆளே  இல்லைனு  ஹீரோயின்  முடிவு  பண்ணி  உதவி  கேட்கறார்  அப்போதான்  ஹீரோவின்  ஃபிரண்ட்  ஒரு  கண்டிஷன்  போடறார். நான்   உன்  லவ்வரை  காப்பாத்தறேன்  பதிலுக்கு  நீ  என்  கூட  ஒரே  ஒரு  நாள் என் கூட  வந்து  தங்கனும்கறார் 


ஹீரோயின்  அதுக்கு  ஒத்துக்கிட்டாரா?  அந்த  கேஸ்  என்னாச்சு  என்பது  க்ளைமாக்ஸ் 


ஹீரோவா  கமல் . ஹேர்ஸ்டைல்  பார்த்தாலும்  போலீஸ்  மாதிரி  இல்லை  ( டிஸ்கோ  கட்டிங் ) பாடி லேங்க்வேஜிலயும்  அப்டி  இல்லை போலீஸ்  ஸ்டேஷன்ல  இருக்கற  நேரத்தை  விட  ஹீரோயின்  கூடதான்  அதிக  நேரம்  இருக்கார்   டான்ஸ்  காட்ச்களில்  கலக்கறார்  ஒரு  ஆச்சரியமான  விஷயம்    ஹீரோயினுக்கு  லிப்  கிஸ்  தர்லை 


  ஹீரோயினா  மாதவி  அந்த  கால  கட்டத்தில்  டூ  பிஸ்  டிரஸ்  அல்லது  ஸ்விம்மிங்  டிரஸ்  போட்டா  அழகா  இருக்கும்  ஒரே  ஒரு  நாயகி  மாதவிதான் கண்ணழகி  இடை  அழகி  புருவ  அழகி  இபடி  சொல்லிக்கே  போகலாம்.,  கேமரா  மேதை இ ஈகரீணைன்  இயக்கத்தி;ல்  ஜான்சி  ராணி  படத்தில்  மட்டும்  நடிக்காம  இருந்திருந்தா  இவருக்கு  மரியாதையான  இடம்  கிடைச்சிருக்கு,ம்


ஹீரோவின்  ஃபிர்ண்டா   சரத்  பாபு ஜெண்டில்,மேன்  ரோல்  ஸ்பெஷலிஸ்ட் . நல்லா  பண்ணி  இருக்கார்  அந்தக்காலத்தில்  இவருக்கு  ஏகப்பட்ட  ரசிகைகள்  உண்டு 


   இசை  கங்கை  அமரன்   பாடல்கள்  5 ல  3  பாட்டி  செம  ஹிட்டு 


1  வா  வா  என்  வீணையே  ஹா  விரல்  மீது  கோபமா?\

2   தேகம்  பட்டு  சிரிக்கும்  மொட்டு 

3  அம்மம்மா சரணம்  சரணம்  உன்  பாதங்கள் 

 ரெண்டு  பாட்டு  சுமார்

 4   நண்பனே  எனது  உயிர்  நண்பனே


5  ஒரு  நண்பனின்..


சபாஷ்  டைரக்டர்  ( கே  விஜயன் )


1  இது  1980ல் ஹிந்தியில்  ரிலிஸ்  ஆன  தோஸ்தானா  என்ற  படத்தின்  அஃபிஷியல்  ரீமேக் , இது  தமிழில்  ஹிட்  ஆனதும்  மலையாளத்தில்  டப் பண்ணி  காசு  பார்த்துட்டாங்க . ஹிந்தி  ஒரிஜினலில்  கை  வைக்காம  அப்படியே  ஃபாலோ  பண்ணது  குட் 


2  இந்தப்படத்தில்  கிளாமர்  காட்ட்னது  மூணு  பேர்  `1  சில்க்  ஸ்மிதா  2  மாதவி  3  கமல்   மூணு  பேருக்கும்  சம  வாய்ப்பு  கொடுத்த  இயக்குநருக்கு  ஒரு  சபாஷ் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1    ஹீரோயின்  அரைகுறையா  டிரஸ்  பண்றதா  ஹீரோ  எப்போப்பாரு  ஹீரோயினை  மட்டம்  தட்டிட்டே  இருக்கார்  ஆனா  அவரை  விட  அரைகுறையா  சில்க்  ஸ்மிதா  ஒரு  கிளப்ல  ஆடும்போது  அவரை  எதும்  சொல்லலை  அவர்  கூட  இவரும்   சேர்ந்து  ஆடறார்  ஹீரோயினும்   அது  ப்ற்றிக்கேட்கலை 


2  ஹீரோயினுக்கு  ஹீரோ  மேல  லவ்   எப்போ  ஏன்  வந்துச்சுனு  காட்டவே  இல்லை  கோபமாதான்  பேசிட்டு இருக்கார்    


3  சரத்பாபு  மாதவியை  ஒரு  காலத்துல  லவ்  பண்ணவர்  அப்டி  டீசண்ட்டா  இருந்தவர்  மாதவி  கிட்டே  கண்டிஷன்  போடும்போது  மேரேஜ்  பண்ணிக்குவியா?னு  கேட்கவே  இல்லையே??  அப்டி  கேட்டு  அதுக்கு  ஒத்துக்கலைன்னா  அட்லீஸ்ட்  ஒரு  நாளாவது  மனைவியா   இருனு  சொல்லலாம் , மரியாதையா  இருந்திருக்கும் . எடுத்ததும்  ஒரு நாள்  மனைவி  என  கேட்பது  கேவலமா  இருக்கு 


4   போலீஸ்  ஸ்டேஷன்ல மஃப்டில்  ஹீரோ  இருக்கார்  ஓக்கே  ஆனா  கோர்ட்ல  கூட  அப்டிதான்  வர்றார்  ஆனா  கோர்ட்ல  யூனிஃபார்ம்  கம்ப்பல்சரி 


5  ஒரு  கேஸ்ல  ஹீரோ  போலீஸ்  யூனிஃபார்ம்ல  இல்லாததால்  அவர்  போலீஸ்னு  கட்சிக்காரர்க்கு  தெரியலை  என  ஒரு  வாதம்  வருது  அப்போக்கூட  ஜட்ஜ்  ஏன்  கோர்ட்டுக்கும்  யூனிஃபார்ம்  போடாம  வந்திருக்கீங்கனு  கேட்கலை

6  ஹீரோ  ஹீரோயினுக்கு  எழுதுன  லெட்டர்  எப்படி  கவரே  பிரிக்காம  சரத்பாபு  வசந்த  மாளிகைக்கு  போச்சு? அந்தக்கடிதத்துல  என்ன  எழுதி  இருந்ததோ  அதை  நேர்லயே  சந்திச்சுப்பேசியாச்சே?? எதுக்கு  லெட்டர் ? 


7  போஸ்ட்  ,மார்ட்டம்  ரிப்போர்ட்ல விசாரனைக்கைதி  வயிற்றில்  விஷம்  இருக்குனு  வந்திருக்குமே?  அதைப்பற்றி  பேச்சு  மூச்சே  இல்லை  அந்த  பாயிண்ட்டைப்பிடிச்சா  வக்கீலே  தேவை  இல்லையே? 


  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இது  தமிழ்  ஹிந்தி  மலையாளம்  மூணு  மொழிகளிலும்  ஹிட்  ஆன  படம்   பார்க்கலாம்  டைம்  பாஸ்  மூவி   ரேட்டிங்  2.5  / 5 


சட்டம்
இயக்கம்கே. விசயன்
தயாரிப்புஆனந்தவல்லி பாலாஜி
வசனம்ஏ. எல். நாராயணன்
இசைகங்கை அமரன்
நடிப்புகமல்ஹாசன்
மாதவி
சரத்பாபு
ஒய். ஜி. மகேந்திரன்
ஜெய்சங்கர்
ஒளிப்பதிவுதிவாரி
படத்தொகுப்புவி. சக்ரபாணி
வெளியீடுமே 211983
நாடுஇந்தியா
மொழிதமிழ்