Wednesday, June 08, 2022

SEETHARAM BENOY CASE No 18 (கன்னடம் -2021 ) - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 ஸ்பாய்லர்  அலெர்ட்



ஹீரோ ஒரு  போலீஸ்  ஆஃபீசர் , அவரு  ட்ரான்ஸ்ஃபர்  ஆகி  ஒரு ஏரியாவுக்கு  வர்றார். ட்யூட்டில  ஜாயின்  பண்ணதும்  அந்த  ஸ்டேஷன்ல  இருக்கற  பெண்டிங்  கேஸ்  எல்லாம்  பார்க்கறாரு.அந்த  ஊர்ல அடிக்கடி  திட்டமிட்ட  திருட்டு  நடக்குது. இதுல  வித்தியாசம்  என்னன்னா  திருட்டு  நடந்தது  என்பதே  திருட்டு  நடந்த 24  மணி நேரத்துக்குப்பின் தான் அந்த  வீட்டு  ஓனருக்கே  தெரிய  வருது


 எந்த  வித  தடயமும்  இல்லாம  நீட்டா  ஸ்கெட்ச்  போட்டு  தூக்கறாங்க . அப்போ  மக்களோடு  மக்களா  பழகின  எல்லாருக்கும்  அறிமுகம்  ஆன  ஆட்கள்  தான் திருடி  இருக்கனும், வெளி  ஆட்கள்  வந்து  இப்படி  பர்ஃபக்டா  திருட  வாய்ப்பில்லை . அந்த  கேசை  டீல்  பண்றார்


ரொம்ப  வருசத்துக்கு  முன்னால  பெண்டிங்ல  இருக்கற  சீரியல்  கில்லர்  கேஸ்  ஒண்ணு  இருக்கு , அதையும்  விசாரிக்கிறார். போலீஸ்  ஆஃபீசர்சோட  மனைவிகள்  கொல்லப்பட்டு  இருக்காங்க  ஆனா  கொலையாளி  பிடிபடலை


 திருட்டு  கேஸ்ல  சம்பந்தப்பட்டு  இருக்கற  3  ஆட்கள்  வேற  இந்த  சீரியல்  கில்லர்  வேற  ஆனா  இந்த  ரெண்டு  கேஸ்க்கும்  ஏதோ  தொடர்பு இருக்குனு  ஹீரோ  நினைக்கறாரு . இந்த  கேஸ்  நடக்கறப்போ  ஹீரோவோட  மனைவி  கொலை  செய்யப்படறாங்க 


 இப்போ  ஹீரோ  அந்த  சீரியல்  கில்லரை  , அந்த  3  திருடனுங்களை  கண்டு பிடிச்சாரா?  ரெண்டு  கேஸ்க்கும்  என்ன  லிங்க்  என்பதே  மிச்ச  மீதி  திரைக்க தை 


விஜ்ய ராகவேந்திரா  தான்  ஹீரோ  அவருக்கு  இது  50 வது  படம். போலீஸ்  மிடுக்கு , நடிப்பு  பாடி  லேங்க்வேஜ்  போலீஸ்    ஹேர்கட்  எல்லாம்  பக்கா.அவர்  கேசை  டீல்  செய்த  விதமு5ம்  பாராட்டு5ம்  வித்த்தில்  இருக்கு


அவ்ரோட  மனைவியா  வ5ர்றவர்5க்கு  அதிக  வாய்5ப்பில்லை  வந்த  வரை  ஓக்கே 


 அந்த  3  திரு5டங்களோட  நடிப்பு  குட் ஒன்.  சீரியல்  கில்லரா  வர்றவர்  வில்லத்தனம்   சரியா  ஒர்க் அவுட்   ஆகல. அது  இயக்குநரோட  கவனக்குறைவு 


ஒளிப்பதிவு  இசை  எடிட்டிங்  எல்லாம்  ஓக்கே  ரகம் 



  சபாஷ்  டைரக்டர்


1  சமீப  கால  மலையாளப்படங்களோட  திரைக்கதை  அமைப்பில்  இன்ஸ்பயர்  ஆகி   இதை  எடுத்திருக்காங்க , திரைக்கதை  அமைப்பில்  கேரளா  வாசம். உண்மைக்கு  நெருக்கமான  காட்சிகள். தீரன்  அதிகாரம்  ஒன்று  படத்தை  நினைவுபடுத்தும்  ஒன் லைன்  அண்ட்  மேக்கிங் 


2    க்ரைம்  த்ரில்லர்  படங்களுக்குத்தேவை  இல்லாத  மொக்கை  காமெடி , ஃபேமிலி  செண்ட்டிமெண்ட்  சீன்ஸ் , டூயட்  சின்ஸ்  படத்தின்  ஸ்பீடு  பிரேக்கர்கள்  எனப்தை  உணர்ந்த  இயக்குநருக்கு  ஒரு  ஷொட்டு 


3  திருட்டு  எப்படி  நடக்கப்போகுது  என  ஹீரோ  விளக்குவதும்  திருட்டு  எப்படி  பண்ணப்போறோம்  என  திருடர்கள்  டிஸ்கஸ்  செய்வதும்  கட் ஷாட்டில்  மேட்ச்  பண்ணுவது   நல்ல  உத்தி  


4  திருடர்களில்  ஒருவன்  இன்னொரு  திருடனை  யாருன்னே  தெரியாது  என  ஸ்டெட்மெண்ட்  கொடுப்பதும்  அந்த  இன்னொருவன்  அப்போ  அங்கே  வந்து  டவுட்னா  நாகுவைக்கேளுங்க  சார்  என  உளறி  மாட்டுவதும்  ஹீரோ  அப்போ  நீங்க  ஃபிரண்ட்ஸா?  என  மடக்குவதும்  அருமை 


திரைக்கதையின்  சில  நெருடல்கள் ,  லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  எந்திரன்2  பெரிய் வெற்றியைப்பெற  முடியாமல்  போனதற்கு  முக்கியக்காரணம்  வில்லன்  மேல்  நமக்கு  பரிதாபம்  வருவதும்  அவர்  என்ன  தப்பு  செஞ்சார்  என்ற  கேள்வியும்  தான். பொதுவா  வில்லன்  கேரக்டர்  மேல்  நமக்கு  கோபம்  வரனும், அவனை  ஹீரோ  ஜெயிக்கனும். அந்த  ஃபார்முலாதான்  சரி . இதில்  வில்லன்  மேல்  பரிதாபம்தான்  வருது 


2   வில்லனின்  ஃபிளாஸ்பேக்கில்  நடக்கும்  கதையில்  வரும்  போலீஸ் காரங்க  பண்ற  வில்லத்தனம்  சரியா  பிகசரைசேஷன்  செய்யப்படலை . வில்லனின்  மனைவி  கொலை  செய்யப்படுவது  எதேச்சையான  விபத்து  மாதிரி  தான்  தெரியுது. அது  கொடூரமான  திட்டமிட்ட  கொலை  மாதிரி காட்டி  இருக்கனும்


3   வில்லனின்  மனைவியை  கொலை  செய்யப்படுவதில்  இருந்து காப்பாற்ற  முடியாமல்  தடங்கல்  விதிக்கும்  3  போலீஸ்காரங்களைக்கொன்னாரா? இல்லையா?  என்ற  கேள்விக்கு  பதில்  இல்லை , ஆனா  சம்பந்தமே  இல்லாம  ஹீரோவின்  மனைவியைக்கொல்வதில்  லாஜிக்கே  இல்லை 


4   வில்லன்  3  திருடன்களை  கொலை கேசில்  சிக்க  வைக்க  படாத  பாடுபடுவது  எதுக்கு  என்ற  கேள்விக்கு  விடை  இல்லை . பழி  வாங்கனும்னா  கொலை  செஞ்சிருக்கலாம் 


5  போலீஸ்  ஆஃபிசர்ஸ்  ,மனைவிகள்  கொலை  செய்யப்படறாங்க  எனும்  கேசை  டீல்  செய்யும்  ஹீரோ  தன்  வீட்டுக்கு  போலிஸ்  செக்யூர்ட்டி  போடாமல்  தனியே  விட்டு  வருவது 

ரசித்த  வசனங்கள்


1  ஒரு  திருட்டைக்கண்டுபிடிக்கனும்னா  போலீஸ்  எப்போதும்  திருடன்  மாதிரியே  யோசிகனும்


2   குற்றவாளியா  இருக்க  முதல்  தகுதி  எந்த  வித  தடயங்களையும்  ஸ்பாட் ல  விட்டு  வராம  இருப்பது 


3  சைக்கோ  கொலையளிகள்  ரெண்டு  வகை , இன்ன  டைம்ல  இன்னாரைக்கொலை  பண்ணப்போறோம்னு  அறிவுச்சு  போலிஸ்க்கு  சவால்  விட்டு  ஜெயிப்பது .  எதுக்காக  கொலை  நடக்குதுன்னே  தெரியாம மக்களை  பயமுறுத்தி  அதில்  இன்பம்  காண்பது . இந்த  கேஸ்ல  கொலையாளி  சைக்கோ  இல்லை 


  சி பிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கன்னடத்தில்  ஹிட் ஆன  இந்தப்ப்டம் அடல்ட்  கண்டெண்ட்  எல்லாம்  இல்லாம  ஃபேமிலியோடு  பார்க்கும்  தரத்துல் தான்  இருக்கு ,அமேசான்  பிரைம்  ல  பார்க்கலாம்  டைம்  பாஸ்  மூவி   ரேட்டிங்  2.25 / 5 



0 comments: