Sunday, June 19, 2022

O2 - ஓ2 - 2022 - சினிமா விமர்சனம் ( சர்வைவல் த்ரில்லர் ),@ டிஸ்னி ஹாட்ஸ்டார்


நயன்  தார  நடிச்ச  அறம்  ஹிட்  ஆனதும்  அதே  மாதிரி  ஒரு  சர்வைவல்  த்ரில்லரை  அதே  நாயகியை  வைத்து   எடுத்து  கல்லா  கட்ட  ஆசைப்பட்ட  டைரக்டர்  எடுத்த  படம்,தான்  இது

ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஹீரோயின்  ஒரு  விதவை .,  அவளுக்கு  ஒரு  பையன். அவனுக்கு  ஒரு  மெடிக்கல்  கம்ப்ளைண்ட்  இருக்கு . நாம  சுவாசிக்கற  மாதிரி  நார்மலா  சுவாசிக்க  முடியாது . ஆக்சிஜன் சிலிண்டர்  எப்போதும்  கூட  இருக்கனும். கொரோனா  காலத்துக்குப்பின்  ஆக்சிஜன்  சிலிண்டர்  மகிமையை  நாம்  எல்லாரும்  உணர்ந்திருக்கோம். அவனுக்கு  ஒரு  ஆபரேஷன்  பண்ண  டேட்  ஃபிக்ஸ்  ஆகி  இருக்கு . கொச்சின்ல  நடக்கற  அந்த  ஆபரேசனுக்காக  கோவைல  இருந்து  ஒரு  ஆம்னி  பஸ்ல  நாயகி  போறா


    மழை  யின்  காரணமா  வழில    டிராஃபிக்  ஜாம்  ஆனதால  பஸ்  வேற  ரூட்ல  போகுது . அங்கே  ஒரு  இக்கட்டான  சூழலில்  பஸ்  நிலத்துக்குள்ளே  புதையுது 

 உள்ளே  இருக்கும்  பயணிகள்  எல்லாம்  இன்னும்  10  மணி  நேரம் தான்  உயிரோட  இருக்க  முடியும் அதுக்குள்ளே  ஆக்சிஜன்  தீர்ந்துடும் 


பையனுக்கான  ஆக்சிஜன்  சிலிண்டரைக்கைப்பற்ற  மியூசிக்கல்  சேர்  போட்டி  நடக்குது.  நாயகி  தப்பிச்சாங்களா?  பையனைக்காப்பாத்துனாங்களா? என்பதை  திரையில்  காண்க 


ஹீரோயினா  நயன்  தாரா. மேரேஜ்க்குப்பின்  ரிலீஸ்  ஆகும்  முதல்  படம்.  நடிப்பில்  குறை  வைக்கவில்லை  ஆனா  கதையின்  தன்மை  கருதி  கதைக்கள்ம்  நிலச்சரிவில்  மூழ்கிய  பஸ்சின்  தன்மை  கருதி  மேக்கப்ல கொஞ்சமாவது  குறை  வெச்சிருக்கலாம்


 பஸ்ல  இருக்கற  எல்லாரும்  அழுக்கு , புழுதி  ரத்தம்  வடிய   வாடிய  முகத்தோட  இருக்க  இவர்  மட்டும்  ஃபிரிட்ஜ்ல  வெச்ச  டேபிள்  ரோஸ்  மாதிரி  ஃபிரெஷா  இருக்கார் 


 அந்தப்பையன்  நல்லா  பண்ணி  இருக்கான். வில்லனா  வரும்  அந்த  போலீஸ்  ஆஃபீசர்  மிரட்டி  இருக்கார் ,. டிரைவராக  வருபவர்   உணர்ச்சி  பொங்கும்  நடிப்பு


இந்த  மாதிரி  கதையில்  விஎஃப் எக்ஸ் ஒர்க்  கிராஃபிகஸ்  எல்லாம்  பக்காவா  இருக்கனும்,  பிசிறு  தட்டுது. ஒளிப்பதிவு   எடிட்டிங்   ஓக்கே  ரகம் .  முழுக்கதையும்  பஸ்ல  தான்  அதை  வடிவமைத்த  ஆர்ட்  டைரக்டருக்கு  ஒரு  ஷொட்டு


  சபாஷ்  டைரக்டர் (  விக்னேஷ் ) 


1   பேருந்தில்  பயணிக்கும்  பயணிகள்  ஒவ்வொருவருக்கும்  ஒரு  பின்  புலம்  காட்டி  இருப்பதும்  அவர்களுக்கான  ஸ்பேசும்  கச்சிதம் 


2  ரொம்ப  இழுக்காமல்  ரெண்டு  மணி  நேரத்தில்  கட்  பண்ணிய  எடிட்டிங்  சாமார்த்தியம்  குட் 



ரசித்த  வசனங்கள் 


1  இந்தக்காலத்துல  போலீஸ்க்கும், திருடனுக்கும்  வித்தியாசம்  இல்லாம  போச்சு 


2  குழந்தைக்கு  கடவுள்  ஏதாவது குறை  வெச்சாலும்  ஒரு  தாய்  நினைச்சா  அதை சரி  ஆக்க  முடியும் 




 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   கோவை  டூ  கொச்சின்  ட்ரிப்    ஆம்னி  பஸ்சில் 75%      சீட்ஸ்  கொச்சின்  டிக்கெட்ஸ் தான் புக்  பண்ணுவாங்க , மீதி 25%  தான்  பாலக்காடு  திருச்சூர்  டிக்கெட்ஸ். டிராஃபிக்  ஜாம்  ஆனதும்  வேறு  பஸ்  மாத்தி  விடுறோம்னு  சொன்னதும்  பாலக்காடு , திருச்சூர்  பயணிகள்  எல்லாம்  இறங்கிய  பின்  பார்த்தா  பஸ் 60%  காலி.  எப்படி  கட்டுபடி  ஆகும்?


2  பஸ்  ஓனர்  ஃபோன் பண்ணும்போது  நீ  ரிட்டர்ன்  வந்துடு, வேற  பஸ்  அனுப்பறேன்னு தான்  சொல்றார் , ஆனா  டிரைவர்  மாற்று  வழில   அவ்ளோ  குறைவான  பேசஞ்சர்சை  வெச்சுக்கிட்டு  போறாரே? 


3  தவளை  தன்  வாயால்  கெடும்   என்பது   மாதிரி ஒரு  படிச்ச  பொண்ணு  லூஸ்  மாதிரி  தானே  பஸ்  பயணிகளிடம்  இப்போ  ஆக்சிஜன்  தேவை  இருக்கு , இன்னும்  10  மணி  நேரம்தான்  தாங்கும்  என  ஏன்  சொல்லனும்>?  பையன்  கிட்டே  ஆக்சிஜன்  சிலிண்டர்  இருக்கு  அதைக்கைப்பற்றப்பார்ப்பாங்கனு  தெரியாதா? அந்த  கேரக்டர்  மேல்  பரிதாபம்  வராமல்  எரிச்சல்  தான் வருது   ஏம்மா  கம்முனுதான் இரேம்மா  என  தியேட்டரா  இருந்தா  ஜனங்க  கத்தி இருப்பாங்க 


4   ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  பார்க்க  ஜைஜாண்டிக்கா  இருக்கார்  அவரால்  பஸ்  டிரைவரை  அல்லது  ஒரு  பெண்ணை  சமாளிக்க  முடியல  தடுமாறிட்டு  இருக்கார் 


5   வில்லனை  கட்டிப்போடும்  நாயகி  அப்படித்தான்  லூசா  கட்டிப்போடுவாரா ?  ஏதாவது  கை  அல்லது  காலை  சிதைச்சு  இருக்கலாமே? நமக்கு  ஒருவரால  ஆபத்து  வரும்னு  தெரிஞ்சா  நாமதானே  ஜாக்கிரதையா  இருக்கனும் ? 

6     6  மணி  நேர  ட்ரிப்பை 4  மணி  நேரத்தில்  போகச்சொன்னா  எப்படி?


 அவனவன்  3  மணி  நேரத்தில்  போய்டறான்


 இப்படி  ஒரு  டயலாக்  வருது . கோவை  டூ கொச்சின் தூரம்  180  கிமீ . ரயிலில்  போனா   மூணே கால்  மணி  நேரம், ஆம்னி  பஸ்ல  போனா  3.30  மணி  நேரம்,  இதை  எபடி  6  மணி  நேர  ட்ரிப்ங்கறாங்க ?


7    பேரிடர்  மீட்புக்குழு  ஹையர்  ஆஃபீசரா  வரும்  லேடி  தேவை  இல்லாம  சின்ன  விஷயத்துக்கு  அவ்ளோ  டென்சன் ஆகறாங்க  அது  கொஞ்சம் ஓவர்  ஆக்டிங்கா  தோணுச்சு . இந்த  மாதிரி இக்கட்டான  சூழலில்  பணியாற்ர  ட்ரெய்னிங்  குடுத்திருப்பாங்களே? 


    சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அறம்  அளவுக்கு  சூப்பர்  படம்னு  சொல்ல  முடியாது  அதே  சமயம்  ஆண் லைன்  விமர்சகர்கள்  கழுவி  ஊத்தும்  அளவுக்கு  மொக்கை  படமும்  இல்லை  பார்க்கலாம்,  லேடீசுக்கு  பிடிக்கும்  ரேட்டிங் 2.25 / 5 



0 comments: