இந்தப்படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகல . படம் எடுக்கும்போது தியேட்டர் ரிலீஸ் ஐடியாதான் ஆனா எடுத்து முடிச்ச பின் போதிய நிதி இல்லாததால ரிலீஸ் பண்ண முடியல அதனால யூ ட்யூப்ல ரூ 25 கட்டி பார்க்கற மாதிரி ரிலீஸ் பண்ணாங்க . இப்போ அமேசான் பிரைம்ல ரிலீஸ் ஆகி இருக்கு
நல்ல ஸ்க்ரிப்ட் இருந்தா குறைந்த பட்ஜெட்டில் குறைந்த கேரக்டர்களில் ஒரு படம் பண்ணலாம்கறதுக்கு இது நல்ல உதாரணம்,. ஆல்ரெடி இரா பார்த்திபன் ஒத்தை செருப்பு படத்தில் இந்த மாதிரி ஒரு புது முயற்சி பண்ணீட்டார் அந்த அளவு குவாலிட்டி இல்லைன்னாலும் இது ஓக்கே ரகம் தான். க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜர்னரில் எடுக்கப்பட்ட 70 நிமிடப்படம்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோ ஒரு க்ரைம் நாவல் ரைட்டர் . அவருக்கு ஒரு மனைவி . மனைவி ஒரு நாள் இரவு கொலை செய்யப்படறாங்க . கொலை நடந்த டைம் ஹீரோ ஊர்ல இல்லை . இப்போ போலீஸ் விசாரணையை ஆரம்பிக்குது
சந்தேகப்பட்டியலில் வருபவர்கள் 1 கணவன் 2 கணவனின் நண்பன் 3 மனைவியின் கசின்
மனை விக்கு அறிமுகமானவங்கதான் கொலையாளியா இருக்கனும்னு டவுட் வர காணங்கள்
1 வீட்ல ஃபோர்ஸ்டு எண்ட்ரி இல்லை
2 பணம் , நகை எதும் திருடு போகலை ( அங்கே திருட எதுவும் இல்லை )
3 ரேப் நடக்கலை அதுக்கான முயற்சிகளும் நடக்கலை
கணவன் ஏன் கொலை செஞ்சிருக்கலாம்னா வீட்டில் ஏழ்மை வருமானம் இல்லை .பொதுவா சம்பாத்யம் புருச லட்சணம் , வருமானமே இல்லாத புருசனை எந்த பொண்டாட்டி மதிப்பா. எதுனா விவாதம் வந்து சண்டைல போட்டுத்தள்ளி இருக்கலாம்
க்ணவனின் நண்பன் ச்ந்தோஷ் அடிக்கடி வீட்டுக்கு வருபவன் . கள்ளத்தொட்ர்பு ஏற்பட்டிருக்கலாம். அதை கணவனிடம் சொல்லிட்டா நாம மாட்டிக்குவோம்னு நண்பன் போட்டுத்தள்ளி இருக்கலாம்
மனைவியின் கசின் அடிகக்டி செலவுக்குப்பணம் கொடுனு நச்சரிப்பவன் அவன் எதுனா கோபத்துல பணம் தர்லைனு போட்டிருக்கலாம்
இப்படி 3 பேர் மேல போலீஸ் சந்தேகப்படுது . இந்த விசாரணையின் இறுதியில் உண்மை வெளில வந்துதா?இல்லையா? என்பதே க்ளைமாக்ஸ்
சபாஷ் டைரக்டர் ( அரவிந்த் ராம்லிங்கம்)
1 கால்ஷிட் சொதப்பல் நடக்குமே என்ற கவலையே இல்லாம ஒரே ஒரு கேரக்டரை வெச்சு திரைகக்தை அமைத்தது / அந்த ஒரு கேரக்டரும் அவர் தான் சம்பளசெலவு இல்லை
2 படத்துல் ஒருவர் தான் நடிச்சிருக்கார் , ஆனா ரெண்டு கேரக்டர்ஸ் விஷுவலா வர்றாங்க. ஆனா ஹீரோ டூயல் ரோல் இல்லை இந்தப்புதிருக்கான விடை க்ளைமாசில் தெரியும்
3 கொலை நடந்ததா தான் போலீஸ் விசாரணையே ஓப்பனிங்கில் ஆரம்பிக்குது , ஆனா படத்தோட க்ளைமாக்சில் தான் கொலையே நடக்குது. அது எப்படி ? அந்த சஸ்பென்சும் க்ளைமாக்சில் தெரியும்
4 ஒளிப்பதிவு இசை ஓக்கே ரகம், லொக்கேஷன் செலவும் இல்லை . முழுப்படமும் ஒரே ரூமில்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஒரு முக்கியமான சந்திப்பு மெசேஜை கள்ளக்காதலி காதலனுக்கு அனுப்பினா ஃபோன் பண்ணி கன்ஃபர்ம் பண்ண மாட்டானா? ரிப்ளை அனுப்பறான். அது காதலி அனுப்புனதா? கணவன் அனுப்புனதா?னு சந்தேகம் வராதா?
2 கால் ஹிஸ்டரி அல்லது மெசேஜ் களை ஒருவர் ஃபோன்ல எரேஸ் பண்ணிட்டா சைபர் க்ரைம் போலீஸ் அதை கண்டுபிடிக்காதா?
3 கொலை செய்யப்பட்ட டெட் பாடி தண்ணீர்ல் நனைஞ்சபடி இருந்தா போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ல இறந்த நேரம் எக்சாக்ட்டா தெரியாது அதை வெச்சு கிம்மிக்ஸ் வேலைகள் செய்யலாம் என்பதே படத்தின் மெயின் கரு விஞ்ஞானம் இவ்ளோ முன்னேறி இருக்கு அதுக்கு ஒரு சொல்யூஷன் இல்லாமயா இருக்கும் ? எல்லா குற்றவாளிகளும் கொலை பண்ணிட்டு டெட் பாடியை ஆத்துலயோ குளத்துலயோ போட்டுட்டுப்போய்ட்டா என்ன ப்ண்ண?
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட்= மொத்தமே 70 நிமிடப்படம்தான் பொழுது போகலைன்னா பார்க்கலாம்/. மோசம் இல்லை . பிரமாதமும் இல்லை , ஓக்கே ரகம் அமேசான் பிரைம் ல கிடைக்குது ரேட்டிங் 2.25 / 5
0 comments:
Post a Comment