ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர் ( சர்க்கிள் இன்ஸ்பெக்டர்) ஒரு கேஸ் வருது. ஒரு பைக் ஆக்சிடெண்ட். அதுல் பைக்கை ஓட்டி வந்தவன் , பின்னால் அமர்ந்து வந்தவன் என இருவரில் ஒரு ஆள் தான் இருக்கான், இன்னொரு ஆள் மிஸ்சிங்.இது ஒரு ஹிட் அண்ட் ரன் கேசா இருக்கும்னு முதல்ல ஹீரோ நினைக்கறார். அதாவது எதிர்பாராதவிதமா ஆன ஆக்சிடெண்ட், இடிச்சவன் கேஸ்க்கு பயந்து நிக்காம போய் இருப்பான்னு நினைக்கறார், ஆனா இன்னொரு ஆள் எங்கே? என்ற மர்மம் நீடிக்குது .அந்த பைக்கை இடிச்சது ஒரு மினிடோர் பிக்கப் வண்டி
இன்னொரு ஏரியா ஒரு ஸ்கூல் ஸ்டூடண்ட் மிஸ்சிங். வழக்கமா வர்ற ஸ்கூல் பஸ் ரிப்பேர்.ஒரு மினி டோர் பிக்கப்[ வண்டில லிஃப்ட் கேட்டு அந்தப்பையன் ஏறுகிறான். அந்த பையன் மிஸ்சிங்
அதே ஏரியாவில் இருக்கும் ஒரு லேடி . வீடு வீடா போய் கோயிலுக்குப்போக் அரிசி பிச்சை கேட்டு வாங்கிட்டு இருக்கறவ மிஸ்சிங். அந்தப்பொண்ணு கடைசியா போய் பிச்சை கேட்ட இடம் மினி டோர் பிக்கப் வண்டி உள்ள வீடு
மேலே சொன்ன 3 மிஸ்சிங் கேஸ்லயும் எந்த ஒரு தொடர்பும் இல்லை ., மூவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனவர் இல்லை . மூவ்ருக்கும் பொதுவான அம்சம் எதுவும் இல்லை
பொதுவா சீரியல் கில்லிங்னா கொலை செய்யப்படுபவர்கள் எல்லாருக்கும் ஒரு பொதுவான அம்சம் ஏதாவ்து இருக்கும். ஒரே வயசா இருக்கும், அல்லது ஒரே தொழிலா இருக்கும் ஆனா எந்த ஒற்றுமையும் இல்லாததால குற்றவாளியை நெருங்க சிரமமா இருக்கு
இந்த கேசை ஹீரோ எப்படி கண்டுபிடிக்கறார் என்பதே திரைக்கதை
ஹீரோவா ஜெயசூர்யா . நல்ல மிடுக்கான தோற்றம் தங்கை , மனைவி, அப்பா இவர்களிடம் காட்டும் பாசமும், டியூட்டியில் காட்டும் மிடுக்கும் பக்கா.சண்டைக்காட்சிகளில் நல்ல வேகம், ஹேர் ஸ்டைல் , பாடி ஃபிட்டிங் என போலிஸ் ஆஃபீசர் ரோலுக்கு மெனக்கெட்டிருக்கிறார்.மனைவியாக வரும் ஆத்மியா ராஜன், தங்கையாக வரும் த்ரிஷ்யா , அம்மாவாக வரும் ஸ்ரீலட்சுமி மூவருக்கும் அதிக வேலை இல்லை , சில காட்சிகள் தான். வந்த வரை ஓக்கே .
ஒரு முக்கியமான ரோலில் வரும் இளங்கோ குமாரவேல் ( அபியும் நானும் படத்தில் ரவிசாஸ்திரியாக வருபவர்) மிரட்டலான நடிப்பு கொலையாளி பற்றி இவர் கொடுக்கும் தகவல்கள் , கொலையாளியின் முன் கதை எல்லாம் சொல்லும் விதம் கலக்கல் ரகம் ., அவர் கேரக்டரில்; ஒரு சஸ்பென்சும் , ட்விஸ்ட்டும் உண்டு
இசை , பின்னணி இசை, ஒளிப்பதிவு எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் கனகச்சிதம்
சபாஷ் டைரக்டர் ( அபிசித் ஜோசஃப்-ன் முதல் படம் ))
1 டூயட் சீன், மொக்கை காமெடி டிராக் என தேவை இல்லாத காட்சிகள் இல்லாமல் எடுத்துக்கொண்ட கதைக்கு நேர்மையாக திரைக்க்தை அமைத்த விதம்
2 கடைசி 30 நிமிடங்கள் படமாக்கிய விதம் , பரபரப்பு திகில் எல்லாம் கலக்கல், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டும் செம
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஓப்பனிங் சீன்ல ஹீரோ கைல அடிபடுவது , அதுக்குக்கட்டுப்போடுவது , அடிபட்டது அப்பாவுக்கு தெரியாமல் மறைப்பது, பின் அப்பாவுக்கு தெரிவது போன்றவை படத்தில் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்,அதே போல படத்தின் இடைவேளை டைமில் ஹீரோவுக்கு காதில் அடிபடுவது ஒரு சைடு காது கேட்காது என்பதும் அதனால எதிராளி சொல்லும் ஒவ்வொரு ஸ்டேட்மெண்ட்டையும் ஹீரோ ரெண்டு முறை என்ன? என்ன? என திருப்பிக்கேட்பதும் எரிச்சல் ,இந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்கும், மெயின் கதைக்கும் என்ன சம்பந்தம்?
2 காதில் அடிபட்டு மெடிக்கல் ஃபிட்னெஸ் இல்லாத ஹீரோவை எப்படி டியூட்டியில் ஜாயின் பண்ணச்சொல்றாங்க?
3 ஓப்பனிங்கில் ஹீரோவின் தங்கைக்கு நடக்கும் நிச்சயதார்த்த விழா மெயின் கதைக்கு தேவை இல்லாத இடைச்செருகல் , ஃபேமிலி ஆடியன்சைக்கவர சேர்த்துட்டாங்க போல
ஃபைனல் கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் , இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் விரும்பிகளுக்கு பிடிக்கும். தாராள்மாகப்பார்க்கலாம். இப்போ 27/5/2022 தியேட்டர்ல் ரிலீஸ் ஆகி இருக்கு விரைவில் அமேசான் பிரைம்ல ரிலீஸ் ஆகப்போகுது. ரெண்டே கால் மணி நேரம் ஓடுது படம், இதை 2 மணி நேரப்படமா கட் பண்ணி ட்ரிம் பண்ணி இருந்தா இன்னும் செமயா இருந்திருக்கும் .. ரேட்டிங் 2.5 / 5 கோட்டயம் சங்கனாச்சேரி அபினயா வில் பார்த்தேன்
0 comments:
Post a Comment